இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்(எபி 10:38)


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்(எபி 10:38)
Permalink  
 


ஆபகூக் 2:4    தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்
 
மேல்கண்ட வசனங்களில் சொல்லப்படும் பிழைப்பான் என்ற வார்த்தை "சாவான்" என்ற வார்த்தைக்கு எதிர்பதமான "பிழைப்பான்" என்ற பொருளிலேயே கூறப்பட்டுள்ளது!   
 
வேதாகமத்தில் "சாதல்" அல்லது "மரணம்" என்பது இரண்டுவிதமாக உள்ளது. ஓன்று நமது சரீர மரணமாகிய முதல் மரணம். அடுத்து  உயிர்தெழுந்து நியாய தீர்ப்புக்கு பின்வரும் இரண்டாவது  மரணம்  அல்லது நித்திய மரணம்.  இந்த இரண்டு மரணத்தையும் சேர்த்துதான் ஆதியாகமத்தில் தேவன் ஆதாமிடம் "சாகவே சாவாய்" என்று அதாவது நீ பழத்தை உண்ணும் நாளில்  இரண்டு மரணத்தையும் சந்திக்க நேரும் என்று எச்சரித்தார்.
 
எப்படி மனிதனுக்கு  இரண்டு மரணமும் உருவானதை பற்றி வேதாகம் சொல்கிறதோ அதேபோல் இரண்டு மரணத்தையும் ஜெயிக்கவும் வழி வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ளது. அநேகர் இதை நம்பமறுப்பது தேவனின் வார்த்தைகளின் வல்லமையை குறைத்து மதிப்பிடுவதகவே எனக்கு தோன்றுகிறது. இரண்டு மரணம் எப்படி உருவானது என்பதற்கு காரணம்  சொல்லிவிட்டு ஒரே ஒரு மரணத்தை மட்டும் அதாவது இரண்டாம் மரணத்தை ஜெயிக்க மட்டும் வழி சொல்லப்பட்டிருக்குமாகின் வேதாகமம்
ஒரு முழுமையற்ற புத்தகமாகவே கருதப்படும். ஆனால் அப்படியல்ல! இரண்டு மரணத்தை ஜெயிக்கும் வழியும் வேதாகமத்தில் இருக்கிறது. அது பலருக்கு நம்பதான் கஷ்டமாக இருக்கிறது.
 
ஏனெனில் 
எபிரெயர் 9:27 அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,

என்ற வசனத்தை தவறாக பொருள்கொண்டு அது சாத்தியமல்ல என்று கருதுகின்றனர். இந்த வசனம் புதியஏற்பாட்டு காலம் கடைசி காலம் என்றும், இதற்க்கு பிறகு மறுபிறப்பு என்று எதுவும் இல்லை ஒரே ஒரு  தரம் மரித்தபின் மனிதன் நியாயதீர்ப்புக்கு சென்றுவிடுவான் என்பதையும் விளக்கவே கூறப்பட்டுள்ளது. "எல்லோருமே அவ்வாறு ஒரு தரம் நிச்சயம் மரிப்பார்கள்"என்று வசனம் சொல்லவில்லை  அப்படி இவ்வசனம் பொருள் கொள்ளப்ப்படுமாகின் கீழ்க்கண்ட வசனம் பொய்யாகிவிடும் 
 
I தெசலோனிக்கேயர் 4:17 பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.

இங்கு ஆண்டவர் வரும்போது சிலர் உயிரோடு மரணத்தை சந்திக்காமல் எடுத்துகொள்ளப் படுவார்கள் என்றும் சொல்கிறதே!
 
எனவே அன்பானவர்களே  வேதம் இரண்டு மரணங்களை பற்றி சொல்வதோடு இரண்டையும் ஜெயிக்க வழியையும் சொல்கிறது என்பதை நாம் விசுவசிக்க வேண்டும். இவ்வாறு விசுவாசிக்காமல் உலக நடப்பை பார்த்து மனிதனாக பிறந்தால் ஓர்நாள்  மரித்தே ஆகவேண்டும் என்று புரஜாதியாரைபோல் விசுவாசமற்ற வார்த்தைகளை பேசினால் அவர்கள் நிச்சயம் மரித்தே ஆவார்கள் ஏனெனில் உங்கள் விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம் என்றும்  அவர்கள் விசுவாசித்தபடிதான் அவர்களுக்கு ஆகும் என்றும் வேதம் போதிக்கிறது.    
 
கர்த்தருக்கு சித்தமானால் தொடரும்...........      
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 17
Date:
RE: விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்(எபி 10:38)
Permalink  
 


மரணம் என்பது மூன்று நிலைகளை உடையது. இந்தக் கனியை புசிக்கும் நாளிலே "சாகவே சாவாய்" என்று தேவன் கூறியிருந்தார். ஆதலால் அந்த நாளிலேதானே செத்தார்கள். அது அவர்கள் இருவரும் தங்கள் ஆவியில் அடைந்த மரணம். அவர்கள் இருவர் மட்டுமல்ல அவர்கள் மூலமாக தொடரப் போகும் சந்ததி முழுவதும் அந்த மரணத்தை அடைந்திருக்கிறது. எந்த மனிதனும் ஆவியில் மரித்தே பிறக்கிறான். 

இரண்டாவதாக மரணத்திற்கு, "பிரிவு" அல்லது "சாவு" என்ற சொல்லையும் உபயோகிக்கலாம். மனுக்குலம் பாவத்தில் விழுந்த பொழுது, அந்த பாவம் மனிதனை தன் சிருஷ்டி கர்த்தாவிடம் இருந்து பிரித்து விட்டது. அதாவது பவத்திக்கு பின் ஆதாம் தேவனிடம் கொண்ட உறவு "செத்த உறவே".

ஆதலால், இரட்சிப்பு என்பது; எந்த ஒரு மனிதனும் தன் ஆவியில் உயிர்பிக்கப் படுவதே ஆகும். ஒருவன் இயேசு கிறிஸ்துவை  தனது இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக் கொள்ளும் பொது, அவனுடைய உயிர் மீட்சி தன்னுடைய ஆவியில் ஆரம்பமாகிறது. அந்த நிலையில் அப்படிப் பட்டவன் ஆவிக்குரியவனாக மாறிவிடுகிறான்.

மேலும், "விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்" என்பது பழைய ஏற்பாட்டின் "சத்திய வாக்குகளில்" ஒன்று. அதை பவுல் தனது மூன்று நிருபங்களில் கையாண்டிருக்கிறார் (ரோமர், கலாத்தியர், எபிரேயர்). ஆதலால், ரோமரில் - எப்படி ஒருவன் விசுவாசத்தினால் நீதிமானாகிறான் என்றும், கலாத்தியரில் - அப்படி நீதிமான் ஆக்கப் பட்டவன் விசுவாசத்தினால் எப்படி வாழ்கிறான் என்றும்; எபிரெயரில் - அப்படிப் பட்ட விசுவாசம் என்ன என்றும் தெளிவாக கொடுக்கப் படிருக்கிறது.

எந்த ஒரு மனிதனும் பாவத்தில் மரித்தே பிறக்கிற படியால், இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறே எவனும் நீதிமானும் இல்லை, பரிசுத்தனும் இல்லை......................

ஆதலால்தான் எந்த ஒரு மனிதனும் ஆவிக்குரிய ரீதியில் "மறுபடியும் பிறந்தே" ஆக வேண்டும்.................


__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

arulmraj wrote:

மரணம் என்பது மூன்று நிலைகளை உடையது. இந்தக் கனியை புசிக்கும் நாளிலே "சாகவே சாவாய்" என்று தேவன் கூறியிருந்தார். ஆதலால் அந்த நாளிலேதானே செத்தார்கள். அது அவர்கள் இருவரும் தங்கள் ஆவியில் அடைந்த மரணம். அவர்கள் இருவர் மட்டுமல்ல அவர்கள் மூலமாக தொடரப் போகும் சந்ததி முழுவதும் அந்த மரணத்தை அடைந்திருக்கிறது. எந்த மனிதனும் ஆவியில் மரித்தே பிறக்கிறான். 


இரண்டாவதாக மரணத்திற்கு, "பிரிவு" அல்லது "சாவு" என்ற சொல்லையும் உபயோகிக்கலாம். மனுக்குலம் பாவத்தில் விழுந்த பொழுது, அந்த பாவம் மனிதனை தன் சிருஷ்டி கர்த்தாவிடம் இருந்து பிரித்து விட்டது. அதாவது பவத்திக்கு பின் ஆதாம் தேவனிடம் கொண்ட உறவு "செத்த உறவே".
 
மூன்றுவிதமான நிலைகளில்  மரணங்கள் உள்ளது என்று குறிப்பிட்டுள்ள சகோதரர் அருள்ராஜ் அவர்கள், அவைகளை சற்று விளக்கி சொல்லும்படி வேண்டுகிறேன்.
 
வேத புத்தகத்தில் "முதல் மரணம்" மற்றும் "இரண்டாம் மரணம்" என்ற பதங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன இந்த மூன்றாம்நிலை மரணம் என்பது எதை குறிக்கும்?
 

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard