இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஜீவ விருட்சத்தை சுதந்தரிப்பதர்க்கான பாதை.


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
ஜீவ விருட்சத்தை சுதந்தரிப்பதர்க்கான பாதை.
Permalink  
 


ஜீவவிருட்சம் என்பது எங்கோ எழுமலைக்கும்  கடலுக்கு  அப்பால் ஒரு இடத்தில் இருக்கிறது என்று கருதவேண்டாம்.  அது நமக்கு  அருகிலேயேதான் இருக்கிறது. ஆனால் அதைநமது மாமிசகண்ணால் காணமுடியாதபடிக்கு  மறைவாய் இருக்கிறது. தேவன் ஆகாரின் கண்களை திறந்ததுபோல் நமது கண்களை திறந்தால் மட்டுமே நமது கண்களுக்கு அவ்விருட்சம் தெரியும். அதை அடைவதற்கு நாம் பிரயாணிக்க வேண்டிய ஒரே வழி தேவனின் வார்த்தைகள் படி வாழ்வதுதான். தேவனின் வார்த்தைகளை மீறியதால் இழந்ததை அவர் வார்த்தைகளுக்கு கீழ்படிவதன் மூலமே ஒருவர் அடையமுடியும்.

ஆனால் நமது மாமிசமானது தேவனின் வார்த்தைக்கு கீழ்படிய கூடாததாக இருந்தது. எனவே பழை ஏற்பாட்டு பரிசுத்தவான்களால் தேவனின் வார்த்தைகளை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. இப்பொழுதோ  ஆண்டவராகிய இயேசு பாவத்துக்காக மரித்து நமக்கு பரிசுத்த ஆவி என்னும் கூடுதல் பெலனை பெற்று தந்ததன் மூலம்,  நாம் பாவத்தை எதிர்த்து  ஜெயம்கொண்டு தேவனின் வார்த்தைப்படி வாழும் தகுதியை பெற்றிருக்கிறோம். எனவே 
அதை பயன்படுத்தி அவரது கற்பனைகள்படி வாழ்ந்து ஜெயம்கொள்ள வேண்டியது நம்மேல் விழுந்த கடமையாக இருக்கிறது.    

 
வெளி 22:14 ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.

நாம் இப்பொழுது எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில் எசேக்கியேல் தீர்க்கதரிசி புத்தகத்துக்கு வருவோம். இது 48 அதிகாரம் உள்ள பெரிய புத்தகம்.  இதில் உள்ள எல்லா வார்த்தைகளுமே கர்த்தரால் நேரடியாக எசேக்கியேலுக்கு சொல்லப்பட்டு அல்லது  வெளிப்படுத்தபட்டு மனிதர்களுக்கு  போதிக்கப்பட்டுள்ளது. 
 
அதில் 18ஆம் அதிகாரத்தில் 5ஆம் வசனத்திலிருந்து நாம் இப்பொழுது பார்க்கலாம். அங்குதான் ஜீவ விருட்ச்த்துக்கான பாதை இருக்கிறது அதாவது சாகவே சாவாய் என்ற சாபத்தின் விமோச்ச்னமான அல்லது  அதன்  எதிர் நிலையான  பிழைக்கவே பிழைப்பாய் என்ற ஜீவன் உள்ளது.
 
யார் பிழைக்கவே பிழைப்பார்?     நீதிமான் பிழைக்கவே பிழைப்பான்என்று இவ்வசனம் பதில் தருகிறது
 
அவனே நீதிமான் அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்கிறார். (எசேக்கியேல் 18 :9)

யார் அந்த நீதிமான்?
 
கீழ்கண்ட 18 காரியங்களை கைகொண்டு நடபபவனே நீதிமான் அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று  கர்த்தர் சொல்லுகிறார்.

  1. ஒருவன் நீதிமானாயிருந்து
  2. நியாயத்தையும் நீதியையும் செய்து
  3. மலைகளின் மேல் சாப்பிடாமலும்
  4. இஸ்ரவேல் வம்சத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேராக தன் கண்களை எறேடுக்காமலும்
  5. தன் அயலானுடைய மனைவியை தீட்டுபடுத்தாமலும்
  6. தூரஸ்திரியோடே சேராமலும்
  7. ஒருவனையும் ஒடுக்காமலும்
  8. கொள்ளையிடாமலும் இருந்து
  9. கடன் வாங்கியவனுக்கு அடமானத்தை திரும்ப கொடுத்து
  10. தன் அப்பத்தை பசித்தவனுக்கு பங்கிட்டு
  11. வஸ்த்திரம் இல்லாதவனுக்கு வஸ்த்திரம் தரிப்பித்து
  12. வட்டிக்கு கொடாமலும்
  13. பொலிசை வாங்காமலும்
  14. அநியாயத்துக்கு தன் கைகளை விலக்கி
  15. மனிதனுக்குள்ள வழக்கை உண்மையாய் தீர்த்து
  16. என் கட்டளைகளின் படி நடந்து
  17. என் நியாயங்களை கை கொண்டு
  18. உண்மையாயிருப்பானாகில்
அவனே நீதிமான் (எசேக்கியேல் 18:9)

தேவனின் இவ்வார்த்தைகளை கைகொண்டு  வாழஆரம்பித்த உடன் ஒருவர் ஜீவ விருட்சத்தை நோக்கிய தன்  பிரயாணத்தை துவங்கிவிடலாம். தேவனின் பார்வையில் ஒருவர்  சரியான
நிலைக்கு  வரும்போது அவரது கண்கள் திறக்கப் பட்டு ஜீவவிருட்சத்தின் கனியை கண்டடைய முடியும் அதை சுதந்த்ரிப்பதன்மூலம் அவன் மரணத்தை ஜெயித்து பிழைக்கவே பிழைப்பான்!  
 


-- Edited by SUNDAR on Saturday 22nd of May 2010 05:03:32 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

1. ஒருவன் நீதிமானாய் இருந்து:
 
ஜீவ  விருட்சத்தின்  பாதையில்  ஒருவர் முதல் அடி எடுத்து வைக்கவேண்டும் என்றார்  அவர்  " நீதிமானாய்  இருக்கவேண்டும்" என்று வசனம் சொல்கிறது.
 
நீதிமானாவதர்க்கு நீதிமானாக இருக்கவேண்டுமா?  இவ்வாறு வசனம் சொல்வதன் பொருள்  நீண்டநாளாக எனக்கு  புரியவில்லை. ஒருநாள் இறைவன் அதை எனக்கு வெளிப்படுத்தினார். அதாவது ஒருவன் நீதிமானாக ஆக வேண்டு மென்றால் அவன் முதன் முதலில் இயேசுவின் பரிசுத்த இரத்தத்தால் கழுவப்பட்டு நீதிமானாக வேண்டும். இந்த முதல் ஸ்டெப்பை எடுத்து வைக்காமல்  வேறு என்ன பெரிய காரியம்  செய்தாலும் அதில் எந்த பயனும்  இல்லை என்பதுதான்.
 
இதை தான் எசாயா தீர்க்கன் மூலம் ஆண்டவர் 53:11ல் "என் தாசனாகிய நீதிபரர் தன்னை பற்றும் அறிவினால் அநேகரை நீதிமானாக்குவார்" என கூறுகிறார். .
 
இயேசுவை பற்றும் விசுவாசத்தால் நீதிமானான ஒருவர் மட்டுமே ஜீவவிருட்சத்தை
நோக்கி பயணக்க முடியும். இதை நாம் சற்று விளக்கமாக பார்ப்பது நல்லது என நினைக்கிறேன். ஏனெனில் இது சம்பந்தமாக பல உபதேசம் அநேகரை துணிந்து பாவம் செய்யவைக்கிறது.  இயேசு என்னை நீதிமானாக்கிவிட்டார் இனி பாவம் என்னை ஒன்றும் செய்யாது என்று பலர் இறைவனின் கட்டளைகளை துணிகரமாக மீறி பாவம் செய்து தண்டனையை அனுபவித்து வருகின்றனர். நீங்கள் எந்த காலத்தில் இருந்தாலும் எவ்வளவு பரிசுத்த இரத்தத்தால் கழுவப்பட்டாலும் பாவம் செய்தால் கண்டிப்பாக தண்டனை உண்டு. மனிதன் எதை விதைக்கிரானோ அதன் பலனை அறுத்தே தீருவான் ஏனென்றால் இந்த பூமியின் தன்மை அதுதான்.  பூமியில் விதை விதைத்தால் சில விதைகள் ஓரிரண்டு வாரங்களில் பலன் தரும், சில விதைகள் ஓரிரண்டு மதங்களில் பலன் தரும் சில விதைகள் சில வருடங்கள் கழித்தும், சில விதைகள் (பனை போன்றவை) சில தலைமுறைகள் கழித்தும் பலன் தரும். கோதுமையை விதைத்து நெல்லை அறுக்க முடியாது அதுபோல் எதை விதைக்கிறோமோ அது வட்டியும் முதலுமாக திரும்ப கிடைத்தே ஆகும். நன்மையை விதைத்தால் நன்மையும் தீமையை விதைத்தால் தீமையும் கண்டிப்பாக கிடைக்கும்.

அகவேதான் எரேமியா தீர்க்கன்:
 
புலம்பல் 3:39 உயிருள்ள மனுஷன் முறையிடுவானேன்? அவன் தன் பாவத்துக்கு வரும் தண்டனையைக்குறித்து முறையிடுகிறதென்ன? நம் வழிகளை சோதித்து பார்த்து கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்
 
என்று  புலம்புகிறான்.
 
தவறு இல்லாமல் தண்டனை இல்லை: தவறு செய்யாத பிள்ளையை எந்த ஒரு நல்ல புத்தியுள்ள தகப்பனும் தண்டிப்பது இல்லை அல்லது பிறன் கையில் தண்டனைக்கு ஒப்புகொடுப்பது இல்லை. இந்த உலக தகப்பனே இப்படி இருக்கும் போது, மகா நீதியுள்ள நமது பரமதகப்பன் யாரையும் தவறு இல்லாமல் தண்டிப்பதும் இல்லை சாத்தான் கையில் தண்டனைக்கு ஒப்பு கொடுப்பதும் இல்லை.
 
ஆனால் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு நீதிமானாகிய ஒருவரை  எந்த பாவமும் மேற்கொள்ளவே  முடியாது. அதாவது ஒருவர் இயேசுவினை ஏற்றுக் கொண்டு தேவனின் பிள்ளையானபின்பு அவர் செய்யும் எந்த பாவமும் அவரை மேற்கொண்டு  சாத்தானின் பிள்ளை ஆக்கமுடியவே  முடியாது.  அனால் செய்யும் பாவத்துக்கு இந்த உலகில்  நிச்சயம் தண்டனை உண்டு. ( புரஜாதியான ஒருவர் பாவம் செய்துவிட்டு தண்டனை அனுபவிக்கால் மரித்தால் அவர் ஐஸ்வர்யன்வானைபோல் பாதாளத்தில் போய் வேதனை அனுபவிப்பார்) 
 
இவ்வாறு இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்ட ஒருவர் நான் மரித்தபின் நித்ய ஜீவனை பெற்று  பரலோகம் போகவேண்டும் என்றும், தன்போல் பலரை சேர்த்து பரலோகம் அழைத்து சென்றால் போதும் என்றும் கருதுவாரானால் அவர் புதிய ஏற்பாட்டின் வழியில் நடந்து அதை நிறைவேற முடியும். ஆனால் அவர் இவ்வுலகில் மரித்தபின்னரே அது முடியும்  அதற்க்கு நிச்சயம் வழி  உண்டு.  
 
ஆனால் இவர்கள் ஜீவவிருட்சத்தின் பாதையை நோக்கு திரும்பவேண்டும் என்றால் இயேசுவின் பிரதான கட்டளைகளை தங்கள் வாழ்வில் கைகொண்டு அதில் வெற்றி பெற்றால் மட்டுமே ஜீவவிருட்சத்தின் பாதையை நோக்கி ஒருவர் திரும்பமுடியும். 
 
 
இயேசுவின்  பிரதான  முதல் கற்பனையை கைகொள்வதுபற்றி இங்கு வாசிக்கவும்  
உன்னை நீ நேசிப்பதுபோல........ (Preview)

 

-- Edited by SUNDAR on Thursday 19th of August 2010 09:34:13 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard