இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பரிசுத்த தேவனின் பல்வேறு நிலைகள்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
பரிசுத்த தேவனின் பல்வேறு நிலைகள்!
Permalink  
 


(இந்த பதிவு முற்றிலும் இரண்டுபேர்களின் தரிசனத்தையும் வெளிப்பாட்டையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்படுகிறது. முடிந்த அளவு
வசன ஆதாரம் கொடுக்கப்படும்.  ஏற்ப்பவர் ஏற்க்கட்டும் ஏற்காதவர் விட்டுவிடுங்கள்)
    
 
பரிசுத்த வேதாகமத்தில் ஆண்டவர்,   பிதா/ தேவன்/ தேவனாகிய கர்த்தர்/ கர்த்தராகிய இயேசு கிறிஸ்த்து/ பரிசுத்த ஆவியானார் என்று வெவேறு நிலைகளில் செயல் பட்டதை பற்றி அறியமுடியும்.  இவர்கள் அனைவரு ஒருவரே!  அனால் இவர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு நிலைக்கும் தாங்கள் தாங்கள் தனித்தன்மை வைத்தவர்களாக இருந்தனர். கூட்டாக சேர்ந்தும் தனித்தனியாகவும் பிரிந்து செயல்படும் வல்லமையுடைய  இவர்களை பற்றி  விவரிப்பது மனிதர்களாகிய நம்மால் முடியாத காரியம் என்றாலும்,  என்னால் முடிந்த அளவு நான் அறிந்துகொண்ட வரையில்  வசனஅடிப்படையில் விவரிக்க விரும்புகிறேன்.        
    
சோதிகளின் பிதா:
 
யாக்கோபு 1:17 நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.

I தீமோத்தேயு 6:16
ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; 

பரம்ப்பொருள்  எனப்படும் வல்லமை ஒன்றே ஒன்றுதான்! அது இவரே ஆகினும் உலகில் நடக்கும் தீமைக்கு எதிரான போராட்டத்தில் ஜெயம்கொள்வதற்க்காக் அவரே தன்னை பல வேறுபட்ட நிலைகளில் பிரித்துகொண்டு செயல்படுகிறார்
 
ஒருவரும் காணக்கூடாத ஒளியில் வாசம் செய்யும் இவரை இதுவரை யாரும் பார்த்ததே கிடையாது பார்க்கவும் முடியாது.  மூன்றாவது வானத்திலிருந்து பார்க்கும்போது மட்டுமே தெரியும் இந்த பிரகாசமான ஒளியில் இருந்து வெறும் வார்த்தைகள் மட்டுமே வரும். அந்த வார்த்தைகள் வல்லமை வாய்ந்ததாகவும் அனைவரையும் கீழ்படுத்த கூடியதாகவும் இருக்கும்.  இவர் வார்த்தைக்கு மிஞ்சியது ஒன்றுமே இல்லை. இவருக்கு உருவமோ சாயலோகூட கிடையாது, பேரொளியாய் இருக்கிறார்!  
 
இவருக்கு இந்து என்றோ கிறிஸ்தவன் என்றோ இஸ்லாமியன் என்றோ வேறுபாடு கிடையாது இவரிடம் எந்த ஒரு மாறுதலும் வேற்றுமையும் இல்லை.  தகுதி யுள்ளவர்களுக்கு வரங்களை கொடுப்பதும் இந்த சோதிகளின் பிதாவே!  ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்துகூட  தனக்கு வேண்டியவர்களுக்கு ஆவிக்குரிய வரம் கிடைக்க சோதிகளின் பிதாவை நோக்கியே  வேண்டுதல்  செய்கிறார். இவரை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து பரம பிதா என்று தனிப்பட்ட பெயரிட்டு அழைப்பதை பார்க்கமுடியும்  
 
மத்தேயு  அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?

இவர் ஒரு தனிப்பட்ட செயல்பாடு உள்ளவராக இருந்தாலும் அனைத்தையும் உள்ளடக்கிய அனைத்திலும் அனைத்துமாய் இருக்கும் இவரே பரப்ரம்மம் ஆவார்!
இவரை ஒருவரும் ஒருகாலும் கண்டதில்லை காணவும் கூடாது!   
 
அடுத்த நிலைகள் பற்றியும் பார்க்கலாம்....

 



-- Edited by SUNDAR on Thursday 21st of April 2011 10:51:17 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

பிதாவாகிய தேவன்:
 
I கொரிந்தியர் 8:6 பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம்.
 
உலகமும் அதில் உண்டான எல்லாம் உருவாவதற்கு அடிப்படையாய் இருந்த எலோஹீம் என்னும் தேவன் இவரே.  சோதிகளின்  பிதாவிலிருந்து வந்த இவர் ஆதியில் ஜலத்தின்மீது அசைவாடி தன்னுடன் இருந்த வார்த்தை என்னும் வல்லமை மூலம்  அனைத்தையும் சிருஷ்டித்தவர். சிருஷ்டிப்பின் போது  ஒன்றான மெய்தெய்வமாக இருந்த இவர் பின்னாளில்  மூன்று  நிலையில் பிரிந்து செயல்பட்டார். 
 
ஆதி 1: 
1. ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
 
இவரே நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்துவின் பிதா. அதாவது இந்த எலோஹீம் தேவன் தன்னுடைய வார்த்தை என்னும் வல்லமையால் உலகையும் அதில் உள்ள எல்லாவற்றையும் படைத்தார். பின்னர் தான் படைத்த  உலகினுள் தீமை புகுந்தபோது அதிலிருத்து தன்னுடைய படைப்புகளை மீட்க, அவரது வார்த்தையே மாமிசமாக்கி பலியாக பூமிக்கு அனுப்பினார் அவரே இயேசு! எனவே இயேசு இவரது குமாரன் எனப்பட்டார்.      
   
வேதத்தில் பல இடங்களில் ஜோதிகளின் பிதாவையும் பிதாவாகிய தேவனையும் ஒன்றுபோல காட்டியிருந்தாலும் இருவருக்கும் சில வேறுபாடுகள் உண்டு.
 
1.அதில் முக்கியமானது பிதாவாகிய தேவனுக்கு சாயல் உண்டு.
ஆதி:1:26. பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக
 
ஆனால் சோதிகளின் பிதாவுக்கு சாயல் கிடையாது அவர் பேரொளி.
 
2.பிதாவாகிய தேவனிடம் மனிதர்கள் பேசமுடியும்
 
எண்ணாகமம் 22:9 தேவன் பிலேயாமிடத்தில் வந்து: உன்னிடத்திலிருக்கிற இந்த மனிதர் யார் என்றார்.
 
ஆனால் சோதிகளின் பிதா மனிதர்களிடம் பேசமாட்டார்    (பரிசுதரான இயேசு ஒருவரே அவரிடம் பேசமுடியும்)
 
3.பிதாவாகிய  தேவனுக்கென்று  தனி  ராஜ்ஜியம்  உண்டு  
 
யோவான் 3:5 இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் 
 
சோதிகளின் பிதாவுக்கு தனி ராஜ்யம் கிடையாது அனைத்தும் அவருடையதே   
 
4.பிதாவாகிய தேவனின் ஆவி தனியாக மனிதனுள் வந்து  உலகில் கிரியை செய்ய முடியும்
 
ரோமர் 8:9 தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால்
எண்ணாகமம் 24:2 ; தேவ ஆவி அவன்மேல் வந்தது.
 
எங்கும் நடக்கும் எல்லா கிரியைகளும் சோதிகளின் பிதாவினுடயதே அவர் அனைத்திலும் அனைத்துமானவர்!  
  
இவ்விருவரும் ஒருவராக இருந்தாலும்  வேறுபட்டவர்கள் என்பதை தனித்தனியே பிரித்து காட்டும்  கீழ்க்கண்ட வசனம் நமக்கு ஆதாரமாகிறது.
 
யோவான் 20:17  நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.
 
இதில் என் பிதா என்று இயேசு குறிப்பிட்டது பிதாவாகிய தேவனை
இதில் என் தேவன் என்று இயேசு குறிப்பிட்டது சோதிகளின் பிதாவை
 
உங்கள் பிதா என்று இயேசு குறிப்பிட்டது சோதிகளின் பிதாவை
உங்கள் தேவன் என்று இயேசு குறிப்பிட்டது பிதாவாகிய தேவனை
 
அதாவது இயேசுவுக்கு தேவனானவர் நமக்கு  சோதிகளின் பிதா இயேசுவுக்கு பிதாவானவர் நமக்கு பிதாவாகிய தேவன். இயேசுவுக்கு பிதாவானவர் நமக்கு தேவன்.  
 
இதற்க்கு இணையாக  கீழ்க்கண்ட வசனத்தில் பவுல் மிக தெளிவாக இருவரையும் பற்றி தனித்தனியாக  குறிப்பிடுகிறார்  
 
எபேசியர் 1:3 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்;  (பிதாவாகிய தேவன்)
 
எபேசியர் 1:17 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் (சோதிகளின் பிதா)
 
(இதுபோல் அனேக வசனங்கள் வேதத்தில் இருந்து  எடுக்க முடியும் ஆனால் ரியான வெளிப்பாடு இல்லாதவர்களுக்கு இதை புரிவது கடினம்)
 


-- Edited by SUNDAR on Thursday 21st of April 2011 10:48:39 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink  
 

இது ஒரு தேவ மனிதர் எழுதிய கட்டுரையிலிருந்து வெட்டி ஒட்டினது


The Lord Jesus also told Mary, “Go to My brothers.” Here we come to one of the greatest points in the Gospel of John, a point which not many Christians have seen clearly. Prior to His resurrection, the Lord never called His disciples “brothers.” The most intimate term He used before that time was “friends.” In 15:14 and 15 He said, “You are My friends if you do what I command you. No longer do I call you slaves, for the slave does not know what his lord is doing; but I have called you friends, for all things which I have heard from My Father I have made known to you.” But now, after His resurrection, His “friends” have become His “brothers.” Through His resurrection, His disciples have been regenerated (1 Pet. 1:3) with the divine life released by His life-imparting death, as indicated in 12:24. All His disciples were regenerated in His resurrection. First Peter 1:3 says that we were regenerated through Christ’s resurrection. It was through His resurrection that the Lord imparted Himself as the Spirit into all His disciples. By receiving His life, they were all reborn, regenerated, and became His brothers. Remember that on the cross the Lord told His mother to take His disciple John as her son, and that He told His disciple to take her as his mother (19:26-27). On the day of His resurrection, the Lord’s word on the cross was fulfilled. At that time, John became a brother to the Lord; hence, the Lord’s mother became his mother.


G. Making His Father and God Theirs

In 20:17 the Lord Jesus also said to Mary, “I ascend to My Father and your Father, and My God and your God.” Through His life-imparting death and resurrection, the Lord has made His disciples one with Him. Therefore, His Father is also His disciples’ Father, and His God is also their God. Through His resurrection, they have received both the Father’s life and God’s divine nature. By making them His brothers, He has imparted the Father’s life and God’s divine nature into them. By making His Father and His God theirs, He has brought them into His position—the Son’s position—before the Father and God that they might participate in His Father and God in resurrection. Thus, in life and nature inwardly and in position outwardly, His brothers are the same as He is. Inwardly we have the reality, and outwardly we have the position. The Father is not only the Father of the Lord Himself; He is also the Father of the disciples. Henceforth, all the disciples are sons of God. We are the same as the Firstborn, and He is the same as we are. This is the church in His resurrection. Praise Him!

Why did the Lord tell Mary that He was ascending to the Father and to God? On the one hand, the Lord is the Son of God; therefore, He will see the Father in the person of the Son. On the other hand, He is still the Son of Man; therefore, He will see God in the person of man. We also are men on one hand and sons of God on the other. Since we are men, God is God to us; since we are the sons of God, God is also the Father to us. At this very moment, because we are both men and sons of God, we have both God and the Father. All the disciples, as human beings, have become brothers to the Lord and sons to the Father because they have received the same life as the Lord. This is the revelation which Mary brought to the Lord’s brothers.


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

chillsam wrote:
 ஐயா (ஆ...)சாமிங்களே,வேண்டாம் நிறுத்திடுங்கோ...
பரிசுத்த வேதாகமத்துக்கு மேலாகவும் இன்னும் வெளிப்பாடுகள் தொடருகிறது; .....பைபிளைப் பிரித்துப்போட்டு மேய வேண்டாம்..!


நான்  இந்த  வெளிப்பாடுகளை எழுதுவதற்கு ஒரு அடிப்படை காரணம் உண்டு. நான்
எழுதும் காரியம் தனித்தனியாக இருந்தாலும்  அதை எல்லாமே ஒருங்கிணைக்கும்
ஒரு பரமசெய்தியுண்டு அதைப்பற்றி முழுமையான விளக்கம் கொடுக்கும்முன்
சகோ. சில்சாம்  "குயோய் முறையோ" என்று புலம்புவதால் இந்ததிரி இனி வளராது!      
 
யோவான் 3:12 பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்?

என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப, எத்தனை  வசன ஆதாரம் தந்தாலும் நம்பமாட்டீர்கள் தராவிட்டாலும்  நம்பமாட்டீர்கள். மாறாக பைபிளுக்கு வெளியேயா அல்லது உள்ளேயே என்று 
கேள்விகளை மட்டும் கேட்பீர்கள். ஏனெனில் உங்கள் கிறிஸ்த்தவ  விசுவாசத்துக்கு மேலேவர உங்களால் முடியாது. அத்தோடு உங்கள் இருதயம் அடைபட்டு போய்விட்டது.       

யோவான் 16:12
இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்.

என்று சொன்ன இயேசு அந்த தாங்கமாட்டாத காரியங்களை  தனது சீடர்களுக்கு சொல்லவில்லை. ஆம்! பரம காரியங்கள் என்பது  தாங்கமுடியாத காரியங்களே அதை நினைத்தாலே நடுங்குகிறேன் அதை அறிந்த நான் தாங்கமுடியாமல் தவிப்பதால் அதை பிறருக்கு சொல்லிவிடலாம் என்று
எண்ணுகிறேன் ஆகினும் இங்கு அதை ஏற்றுக்கும் பக்குவம் வெளிப்பாடு யாருக்கும் இல்லை.
 
நான் இனி இதுபோல் குழப்பம் தரும்   செய்திகளை  எழுதக்கூடாது என்றுதான் நினைக்கிறேன், ஆகினும் ஆண்டவர், வெளிப்படுத்தப்படாத ரகசியம் எதுவும் இல்லை 
 
ஆபகூக் 2:2   நீ தரிசனத்தை எழுதி, அதைக் கடந்தோடுகிறவன் வாசிக்கும்படிப் பலகைகளிலே தீர்க்கமாக வரை.
 
என்று  எனக்கு திட்டமாக  கட்டளை இடுவதால், அதை தனியாக ஒரு இடத்தில் எழுதி "ப்ளாக்கரில்" பதிவிட்டுவிடலாம்  என்று கருதுகிறேன். ஏனெனில் ஆண்டவராகிய இயேசுவின் இரத்தபலியின் மேன்மையும்  சாத்தானின் சாவு மணியும் அங்குதான் இருக்கிறது.. பிதாவின் சித்தமாகிய அக்காரியங்கள் நிறைவேறாவிட்டால்  "ஐயோ" அதை நினைக்கவே எனது உடல் நடுங்குகிறது.
 
அனைத்தும்  பிதாவின் சித்தப்படி சரியாக நடக்கவேண்டும். அதற்காகவே இயேசு மத்தேயு 6:10  உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக. 
என்று பிதாவை நோக்கி ஜெபிக்க சொல்லியிருக்கிறார். எல்லோரும் அந்த ஜெபத்தை ஒருநாளில் ஒரு முறையாவது  ஏறெடுங்கள்
 
நன்றி!       
 


-- Edited by SUNDAR on Saturday 12th of June 2010 02:34:16 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

பரிசுத்த தேவனின் பல்வேறு நிலைகள்
 
sundar  wrote
__________________________________________________________________________________________________
பரிசுத்த வேதாகமத்தில் ஆண்டவர்,   பிதா/ தேவன்/ தேவனாகிய கர்த்தர்/ கர்த்தராகிய இயேசு கிறிஸ்த்து/ பரிசுத்த ஆவியானார் என்று வெவேறு நிலைகளில் செயல் பட்டதை பற்றி அறியமுடியும்.  இவர்கள் அனைவரு ஒருவரே!  அனால் இவர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு நிலைக்கும் தாங்கள் தாங்கள் தனித்தன்மை வைத்தவர்களாக இருந்தனர். கூட்டாக சேர்ந்தும் தனித்தனியாகவும் பிரிந்து செயல்படும் வல்லமையுடைய  இவர்களை பற்றி  விவரிப்பது மனிதர்களாகிய நம்மால் முடியாத காரியம் என்றாலும்,  என்னால் முடிந்த அளவு நான் அறிந்துகொண்ட வரையில்  வசனஅடிப்படையில் விவரிக்க விரும்புகிறேன் 
____________________________________________________________________________________________________
 
சகோதரர் சுந்தர் அவர்களே பரிசுத்த தேவனின் பல்வேறு நிலைகளில்
 
(1 ) ஜோதிகளின் பிதாவையும்
 
(2 ) பிதாவாகிய தேவனின்
 
நிலைகளை வசன ஆதாரத்துடன் பதிவிட்டு இருந்தீர்கள் மிக அருமை
 
சில வாக்குவாதங்கள் வந்ததால் இந்த கட்டுரையை பாதியிலே நிறுத்தி விட்டீர்கள்
தேவனுக்கு சித்தமானால் மீண்டும் தொடரும் படி உங்களை கேட்டுகொள்கிறேன்
 
புரிதலுக்கு நன்றி
எட்வின் சுதாகர்


__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



இளையவர்

Status: Offline
Posts: 29
Date:
Permalink  
 

" (இந்த பதிவு முற்றிலும் இரண்டுபேர்களின் தரிசனத்தையும் வெளிப்பாட்டையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்படுகிறது. முடிந்த அளவு
வசன ஆதாரம் கொடுக்கப்படும். ஏற்ப்பவர் ஏற்க்கட்டும் ஏற்காதவர் விட்டுவிடுங்கள்)
"



அன்பு சகோதரருக்கு வாழ்த்துக்கள்,

தங்களின் தரிசனத்தையும் வெளிப்பாடுகளையும் தயவு செய்து மூடி வைக்க வேண்டாம். தங்கள் ஏற்கனவே கூறியுள்ளபடி ஏற்பவர் ஏற்கட்டும் ஏற்றுக்கொள்ள மனது இல்லாதவர்கள் தங்கள் விருப்பம் போல் இருக்கட்டும். தேவனைக் குறித்த வெளிப்பாடுகளை தயவு கூர்ந்து தொடர்ந்து பதிவிட வேண்டுமாய் அன்புடன் கேட்கிறேன்.

மிகவும் ஆவலாய் ஒவ்வொரு நாளும் தேவனைக்குறித்து அறிந்து கொள்ள வாஞ்சிக்கிறேன்.



தேவன் உங்களையும் உங்கள் ஊழியங்களையும் ஆசிர்வதிப்பாராக. என்போன்ற அநேகர் பிரயோஜனமடைவார்களே.



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

Muthu wrote:
ங்களின் தரிசனத்தையும் வெளிப்பாடுகளையும் தயவு செய்து மூடி வைக்க வேண்டாம். தங்கள் ஏற்கனவே கூறியுள்ளபடி ஏற்பவர் ஏற்கட்டும் ஏற்றுக்கொள்ள மனது இல்லாதவர்கள் தங்கள் விருப்பம் போல் இருக்கட்டும். தேவனைக் குறித்த வெளிப்பாடுகளை தயவு கூர்ந்து தொடர்ந்து பதிவிட வேண்டுமாய் அன்புடன் கேட்கிறேன்.


சகோ. எட்வின் சுதாகர் மற்றும் சகோ. முத்து அவர்களின் வாஞ்சைக்கு மிக்க நன்றி.
தேவன்தாமே உங்கள் இருதயங்களை திறந்து வேதத்திலுள்ள  அனேக ரகசியங்களையும் உண்மைகளை அறிய தருவாராக. 
 
வேதத்தில் உள்ள அனேக தீர்க்கதரிசிகள் எந்த  ஒரு மனுஷருக்கோ அல்லது ராஜாக்களுக்கோ கூட துளியும் பயப்படாமல், தங்கள் அனுபவங்களையும் தாங்கள் அறிந்த காரியங்களையும் கர்த்தரின் வார்த்தைகளையும் எழுதிவைத்து சென்றுள்ளனர். அவைகளே இன்று நமக்கு பாடமாகவும் படிப்பினையாகவும் இருக்கிறது.
 
ஆண்டவரும்கூட  ஆபகூக் 2:2 அப்பொழுது கர்த்தர் எனக்குப் பிரதியுத்தரமாக: நீ தரிசனத்தை எழுதி, அதைக் கடந்தோடுகிறவன் வாசிக்கும்படிப் பலகைகளிலே தீர்க்கமாக வரை.
 
என்று கட்டளையை கொடுத்திருப்பதால், நாமும் நம்முடய தரிசனங்களையும் தேவன் நமக்கு தெரிவித்த காரியங்களையும் மனுஷனுகுமோ அல்லது சாத்தானுக்கோ  பயப்படாமல்  எழுதிவைப்பது என்பது அவசியமான ஓன்று என்றே கருதுகிறேன். அவ்விஷயங்கள் நாளைக்கு தங்கள் போன்ற பலருடைய விசுவாச வாழ்க்கைக்கு நிச்சயம் பயனுள்ளதாக அமையும்.
 
எனவே, கர்த்தர் எனக்குதெரிவித்த ஏதொன்றையும் நான் மறைத்துவைக்கவில்லை என்று துணித்து சொல்லும் அளவுக்கு என்னால் முடிந்த அளவு எனது அனுபவங்களையும் தேவன் தெரிவித்த காரியங்களையும் தொடர்ந்து  பதிவிட வாஞ்சிக்கிறேன். ஆண்டவர்தாமே நாம் பிரயாசங்களை வாய்க்க செய்வாராக!  


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 35
Date:
Permalink  
 

சகோதரரே ///நாமும் நம்முடய தரிசனங்களையும் தேவன் நமக்கு தெரிவித்த காரியங்களையும் மனுஷனுகுமோ அல்லது சாத்தானுக்கோ பயப்படாமல் எழுதிவைப்பது என்பது அவசியமான ஓன்று என்றே கருதுகிறேன். அவ்விஷயங்கள் நாளைக்கு தங்கள் போன்ற பலருடைய விசுவாச வாழ்க்கைக்கு நிச்சயம் பயனுள்ளதாக அமையும்.//

தங்கள் பதிவை இன்றுதான் பார்த்தேன் எனக்கு புரோஜினமாக இருந்தது ,தாகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீரை தந்திருக்கிறீர்கள் உங்கள் மீதம் உள்ள வெளிப்பாடுகளை தயவாக பதியுமாறும்படி தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன்.தாகம் தீர தண்ணீர் குடிக்க ஆசைப்படுகிறேன் .........

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

சுந்தர் அண்ணா அப்படியாயின் சோதிகளின் பிதாவும் பிதாவாகிய தேவனும் வேறு வேறா? ஒரே தெய்வத்தின் நிலைகளைகளில் ஒன்றா சோதிகளின் பிதா என்பது ?

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

மேலேயுள்ள விளக்கங்களை படித்து பார்த்து புரிந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள் சிஸ்டர்.மற்றபடி யாரையும் குழப்பிக்கொள்ள வேண்டாம்.  
இதை அறிவதற்கு ஒரு ஞானம் வேண்டும் அது இல்லாதவர்கள் இதை அறிவது கடினம்.  
 
பாவத்தில்தி வீழ்ந்த மனுஷனை மீடடெடுக்க தேவன் திரித்துவமாக செயல்படுகிறார் என்பது உண்மை.
 
ஆனால் சர்வ வல்ல தேவனை திரித்துவத்துக்குள் அடைக்க கூடாது. அந்த திரித்துவ தேவனுக்கும் மேலான ஒரு வல்லமையும் உண்டு அனைத்தும் ஒரே தேவனின் மகத்துவங்களே.   
 
 
யோபு 36:26 இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்; நாம் அவரை அறிய முடியாது


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

ஏன் அண்ணா? நான் தெரிந்து கொள்ள கூடாதா? எனக்கு ஞானம் இல்லை என்றே சொல்லுவோம் பரவாயில்லை அனால் ஆண்டவரின் ரகசியங்களை அறிந்து கொள்ள நினைப்பது தவறா?


நீங்கள் குறிப்பிடுவதட்கு வசன ஆதாரம் உண்டா அண்ணா ?

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

Debora wrote:

ஏன் அண்ணா? நான் தெரிந்து கொள்ள கூடாதா? எனக்கு ஞானம் இல்லை என்றே சொல்லுவோம் பரவாயில்லை அனால் ஆண்டவரின் ரகசியங்களை அறிந்து கொள்ள நினைப்பது தவறா?


நீங்கள் குறிப்பிடுவதட்கு வசன ஆதாரம் உண்டா அண்ணா ?


உங்களுக்கு ஞானம் இருக்கிறதா இல்லையா என்பது எனது  கேள்வி  அல்ல அதற்க்கு எனக்கு தகுதியும் இல்லை . அதற்குரிய ஞானம் இருப்பவர்களுக்கு தேவன் நிச்சயம் தெரிவிப்பார் என்பதே என் கருத்து.

 
நான் சொன்ன கருத்துக்களுக்கு ஆதாரமாக மேலே பல வசன ஆதாரங்களை தந்துள்ளேன் நிதானமாக வாசியுங்கள்.  தேவன் அதை மறைபொருளாக தெரிவித்திருப்பதால் இருக்கும் ஆதாரங்களை மட்டும்தான் தெரிவிக்க முடியும்.
 
அதை படிக்கும்போது  தேவன் விளக்கினால் மட்டுமே அதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியும்.  


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

திரித்துவ தேவனை தாங்கள் ஏற்று கொள்கிறீர்களா ?

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

Debora wrote:

திரித்துவ தேவனை தாங்கள் ஏற்று கொள்கிறீர்களா ?


பாவத்தில் வீழ்ந்த மனுஷனை மீட்க்க தேவன் "பிதா குமாரன் பரிசுத்த ஆவி" என்னும் திரித்துவ தேவனாக செயல்படுகிறார் என்பதை நான் விசுவாசிக்கிறேன். 

 
ஆனால் ஆராயமுடியாத மகத்துவம் நிறைந்த  தேவனை திரித்துவம் என்றோரு திடடத்துக்குள் அடைக்க நினைக்கும் மனுஷர்களை நான் எதிர்க்கிறேன்.
 
 
அவர் திரித்துவத்துக்கும் மேலானவர் என்பதே என் கருத்து.  

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

ஒரே தேவன் தானே

திரித்துவ தேவன் தானே தாங்கள் குறிப்பிடும் மகத்துவமுள்ள தேவன் ?????



__________________
1 2 3  >  Last»  | Page of 3  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard