இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சிருஷ்டிகளுக்கெல்லாம் விடிவுகாலம் உண்டு!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
சிருஷ்டிகளுக்கெல்லாம் விடிவுகாலம் உண்டு!
Permalink  
 


சமீபத்தில்  சுமார் 14 வயது நிரம்பிய ஒரு இலங்கை தமிழ்  சிறுபெண்ணை அந்த சிறுமியின் தாய் தந்தையர் முன்னேயே சிங்கள ராணுவத்தினர் கெடுத்து பின்னர் அந்த தாய் தகப்பனை கொன்று விட்டுபோன ஒரு செய்தியை அறிந்து அதனால் மிகவும் வேதனைக்குள்ளானேன்.
 
"உன்னை நேசிப்பது போல் பிறரையும் நேசி" என்று சொல்லப்படும் வார்த்தைக்கு ஏற்ப,  அந்த தாய்தந்தையரின் கையாலாகாத நிலையில் நாம் நம்மைவைத்து சற்று யோசித்து பார்ப்போம். இதுபோன்ற காரியம் இறைவனின் பின்னணியில் நடக்கிறது என்று  அதாவது இறைவன் பின்னாளில் ஏதோ ஒரு ராஜ்யத்தை தருவதற்காக இன்று இதுபோன்ற தீமையை அனுமதிக்கிறார் என்று சொன்னால் அப்படியா? சரி!  என்று ஏற்றுக்கொள்வீர்களா?    
 
இதுவரை பெரிய துன்பமொன்ற்றையும்  அனுபவிக்காத  பலருக்கு  துன்பத்தின்/
வேதனையில் உச்சநிலை கொடூரத்தை சரிவர உணரமுடியவில்லை!  இன்ப/  துன்பமெல்லாம் பார்ப்பவர் கண்ணுக்குத்தான் என்றும் அதில் பெரிய துன்பம் என்ன சிறிய துன்பம் என்ன என்று இருதயமே இல்லாதவர்கள் போல பேசும் பலரையும் நான் பார்த்திருக்கிறேன்.

கீழ்க்கண்ட நிலைகளை சந்திப்பவர்கள் படும் நரகவேதனை  என்னவென்பதை சற்றேனும் நாம் கற்ப்பனை செய்து பார்த்தால் அல்லது அந்த இடத்தில் நாம் மாட்டினால்  உண்மையான   துன்பம் வேதனை என்றால் என்னவென்பதை ஓரளவு  உணரமுடியும். நமக்கு அதுவராதவரை நாம் என்ன வேண்டுமானலும் சட்டம் பேசலாம். அவ்வாறு நாம் யோசித்து பார்க்காதவரை தன்னை நேசிப்பதுபோல் பிறரை நேசிக்கவும் முடியாது!   

1. போலீசாரால் பிடிக்கப்பட்ட சித்ரவதை செய்யப்பட்டு லாகப்பிலேயே மரணித்துபோகும் ஒரு சாதரண மனிதனின் வேதனை. அதை தொடர்ந்து நிர்கதியாகிப்போன அந்த குடும்பத்தின் நிலை.  

2.நேற்று வரை நன்றாக இருந்த உடல் உறுப்புக்களை ஒரே ஒரு வெடிகுண்டில் ஒரு நிமிடத்தில் இழந்து, காலமெல்லாம் தவிக்கும் ஒரு சக மனிதனின் வேதனை. அவனையே நம்பியிருக்கும் அவன் குடும்பத்தின் எதிர்காலம்.  

3. எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதன் வலிதாங்க  முடியாமல்  கதறும் அதன் அகோர வேதனையில் நிலை.  

4. பூகம்பத்தின் இடிபாடுக்குள் மாட்டிக்கொண்டு உடலில் அனேக காயங்களுடன் சாவும் ஏற்படாமல் வெளியேவும் வரமுடியாமல் பல நாட்கள் கிடந்தது பரிதபித்து சிறிது சிறிதாக உயிர் பிரியும் நிலை.

5. பாக்கிஸ்தானியர் கையில் மாட்டிக்கொண்டு உடம்பின் ஒவ்வொரு உறுப்பாக அறுக்கப்பட்டு அணு  அணுவாக சித்ரவதை செய்து கொல்லபட்ட இந்தியர்களின் நிலை.

6. பச்சிளம் குழந்தைகள் பலரை பாலியல் பலாத்காரம் செய்து துடிக்க துடிக்க கொன்று சாக்கடையில் வீசினான்  ஒரு  மனித அரக்கன் அந்த சின்னஞ்சிறு பிள்ளைகள் பட்ட வேதனைகள்.

7. எல்லாவற்றிக்கும் மேலாக இலங்கை ராணுவத்தினரிடம் மாட்டிய இலங்கை தமிழர்கள்  அநேகர் அன்றாடம் அனுபவிக்கும் கொடும் சித்ரவதையின் வேதனைகள்.
 
அதுமட்டுமல்ல
 
பத்து குட்டிகளை போட்ட ஒரு எலி வெளியில் இறைதேடபோகும்போது பாம்பிடம் மாட்டி கொண்டால் ல் அந்த சிறு குட்டிகள் தாயும் இல்லாமல் பாலும் இல்லாமல் பரிதபிக்கும் நிலை கூட எனக்கு வேதனையை தருகிறது.

இதுபோல் வேதனைதரும்  கொடூரங்கள் நாம் கண்ணுக்கு தெரியாமல் அன்றாடம் அரங்கேறுகின்றன அவைகளெல்லாம்  நினைத்து நினைத்து  நான் மிகவும் கலங்குகிறேன். மனிதன் என்ற போர்வையில் பேய்களாக வாழ்ந்து தான் சொந்த இனத்தையே சித்ரவதை செய்து அதில் திருப்திப்படும் பேய்கூட்டங்கள் நிறைந்து விட்ட பூமி இது! 
 
இறைவனின்  குணம் சிறிதேனும் உள்ள எந்த மனிதனும் தன் சகமனிதனை கொல்ல துணியவேமாட்டான்.  ஆனால் இங்கு தன்போன்ற ஒரு மனிதனை சித்ரவதை செய்ய துணிகிறான் என்றால் அதற்க்கு காரணம் அவனுள் குடிகொண்டுள்ள மனுஷகொலை பாதகனான சாத்தானே!

இவற்றிலெல்லாம் இருந்து நான் தப்பித்துவிட்டேன், இதில் எதுவும் எனக்கு நேரவில்லை, இறைவன் ஏதோ உலகத்தை படைத்தார் அங்கு ஏதோ நடக்கிறது நான் நல்ல நிலையில் இருக்கிறேன்  இதுவே எனக்கு போதும் என்று ஓடிவிட எனக்கு விருப்பம் இல்லை. ஒவ்வொரு மனிதன்படும் அவஸ்தையான நிலையிலும் நான் இருந்தால் எப்படி துடிப்பேன் என்று எண்ணி எண்ணி தவிக்கிறேன் எனவே எல்லோரும் எந்த துன்பமும் அனுபவிக்காமல் தப்பிக்கவேண்டும் என்று ஏங்குகிறேன். 
 
ஒரு சாதாரண மனிதனாகிய நானே இப்படி இருந்தால் என்னை உருவாக்கிய தேவன் எல்லோருக்கும் தகப்பனாகிய தேவன் எவ்வளவு இரக்கம்  உள்ளவராக இருக்க வேண்டும்! அவரின் இரக்கத்தையும் அவரின் இருதயநிலையும் அநேகர் அறியாமல் இருப்பது  வேதனை தரும் விஷயமே!

எல்லோரும் இனபுற்றிருப்பதுவேயல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே என்று யாரோ ஒரு பக்தன் சொன்னான் அதையே நான் வாஞ்சிக்கிறேன்  ஆனால் வெறும் வார்த்தையை மட்டும்  சொல்லிவிட்டும் வாயை மூடிக்கொண்டு இருக்க விரும்பவில்லை. இது எப்படி சாத்தியம்   என்று இறைவனை ஏக்கத்தோடு வேண்டினேன். மன்றாடினேன் பல உண்மைகளை அறிந்தேன் இன்று அவர் காட்டிய பாதையில் துன்பத்தை கூண்டோடு ஒழிக்க போராடுகிறேன். அவரே என்னுள்இருந்து என்னை நெருக்கி ஏவுகிறார்!

மனிதன் தானே பேயாகமாறி சகமனிதர்களை வேதனைப்படுத்தி ரசிக்கும் நிலை முற்றிலும் ஒழியவேண்டும். மனிதனின் இரத்தத்தை உருஞ்சியே வாழும் தீய ஆவிகள் ஒழியவேண்டும் உயிரோடுள்ள கன்றுக்குட்டிய அதன் தாயின் முன்னமே பிடித்து உரித்து தின்னும் கொடூரநிலை மாறவேண்டும். தீமை என்பது முற்றிலும்  ஒழிக்கப்பட்டு உலகெங்கிலும் ஒரே குடும்பமாய் ஒருமித்து மகிழும் நிலை வரவேண்டும்! அதற்க்கு மனிதனுக்குள் புகுந்து மனிதத்தை கெடுத்து கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கும் வைரஸ் கிருமி போன்ற அந்த பொல்லாத தீயசக்திகள் ஒழியவேண்டும்!
 
அதை ஒழிக்க ஆண்டவர் அருளிய பெலத்துடன் எதிரியாகிய சாத்தானை  எதிர்த்து போராடி ஜெயம்பெறவேண்டும். அன்றுதான் இந்த மனித குலத்துக்கு விடிவுகாலம் பிறக்கும். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை என்றே நான் கருதுகிறேன்!    
 
(திருத்தபட்ட மீள்பதிவு)


-- Edited by SUNDAR on Wednesday 9th of June 2010 08:20:44 PM

-- Edited by SUNDAR on Thursday 10th of June 2010 09:57:15 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

கிராமங்களில் போரடித்தல் மற்றும்  சூடடித்தல் என்னும் ஒரு வேலை நடை பெறுவது பலருக்கு தெரியும் என்று நினைக்கிறேன். அதாவது வயல்களில் இருந்து அறுவடை செய்து எடுத்து வந்த நெற்செடிகளை ஒருமுறை அடித்து  நெல்மணிகளை  பிரித்த பிறகு, அந்த செடிகளை ஒரு பெரிய அம்பாரமாக சேர்த்து வைப்பார்கள். இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு மீண்டும் அதை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து ஒரு பெரிய வட்டமான இடத்தில் போட்டு அதன் மேல் அனேக மாடுகளை சுற்றி சுற்றி வரும்படி செய்வார்கள் அவ்வாறு மாடுகள் சுற்றி வருவதால் அந்த நெற்செடியில் ஒட்டியிருக்கும் சில நெல் மணிகளும் கீழே விழுந்துவிடும்.
 
மாடுகளுக்கு வைக்கோல்(நெற்செடிகள்)  ஒரு தீவனம் என்பதால் சிறிய பெரிய மாடுகள் அந்த வைக்கோல் மீது சுற்றி வரும்போது விரும்பிய அளவு அதை வாயில் எடுத்து  தின்றுகொண்டே சுற்றி வருவது வழக்கம். இவ்வாறு மாடுகள் வைக்கோலை தின்னுவதை பொருக்க முடியாத மனுஷர்கள் ஒரு சிறிய கூடை
போன்ற கவர் ஒன்றை செய்து, அதை மாடுகளின் வாயில் பொருத்திவிடுவார்கள். அதனால் மாடுகள் வாயைகூட திறக்க முடியாமல்  அந்த வேலையை செய்து  கஷ்டப்படும்.
 
இந்த காட்சியை நான் சிறுபிள்ளையாக இருக்கும்போது பார்த்து மிகவும் வருந்தியிருக்கிறேன். மிகப்பெரிய அம்பாரம் போன்ற அந்த வைக்கோலில் இந்த
மாடுகள் என்ன பெரிதாக தின்றுவிட போகிறது? நாள் முழுவதும் ஒரே இடத்தில் தன் உணவு மேலேயே  சுற்றி சுற்றி வரும் மாட்டுக்கு அதை பசியாற  தின்னகூட அனுமதி மனிதர்களால் மறுக்கப்படுகிறதே என்று எண்ணி வருந்தியதுண்டு.
 
நான் ஆண்டவரை அறிந்தபின் பரிசுத்த வேகாமத்தை படித்தபோது அதே கருத்தை
ஆண்டவரும் கட்டளையாக கொடுத்திருப்பதை  பார்த்து மிகவும் ஆச்சர்யம் அடைந்தேன்.  
 
உபாகமம் 25:4 போரடிக்கிற மாட்டை வாய் கட்டாயாக.
 
இதுபோல் எனக்கு பிடித்த அனேக கருத்துக்களை தேவன் கட்டளையாக கொடுத்திருக்கிறார். ஆம் நமது தேவன் மாடுகளுக்காகவும் கவலைப்படுகிறவர், அதுவும் அவரின் படைப்பினால் உருவான ஒரு பாவமறியா ஜீவன்தானே.  ஆகினும் மனிதனானவன் மட்டைவிட சற்று உயர்ந்த நிலையில் இருப்பதால் மனிதனின் பாவத்த்துக்கு ஈடாக அந்த பாவமற்ற பிராணியை பலியாக அனுமதித்து பாவம்செய்த மனிதனை மீட்டு வந்தார். தேவன் நிர்பந்தத்தின் அடிப்படையில் பலியை அனுமதிதாரேன்றி மனப்பூர்வமாக விரும்பி எந்த பலியையும் கேட்கவில்லை என்பதை அவரது கீழ்க்கண்ட வார்த்தை மெய்ப்பிக்கிறது.
 
ஏசாயா 66:3 மாட்டை வெட்டுகிறவன் மனுஷனைக் கொல்லுகிறவனாகவும், ஆட்டைப் பலியிடுகிறவன் நாயைக் கழுத்தறுக்கிறவனாகவும்,  ....... இவர்களுடைய ஆத்துமா தங்கள் அருவருப்புகளின்மேல் விருப்பமாயிருக்கிறது
 
ஓசியா 6:6 பலியை  அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப் பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புகிறேன்.
இதன் மூலம் தேவன் பலியைவிட

இரக்கம் நிறைந்த உள்ளத்தையே அதிகம் விரும்புகிறார் என்பதை அறியமுடியும்!

எனவே தேவனின் விருப்பம் இல்லாமல் அரங்கேறிவரும் மரணம் பலி வேதனை துன்பம் எல்லாவற்றிலிருந்தும் விரைவில் விடுதலைதரும் விடிவுகாலம் நிச்சயம் உண்டு!
  


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard