இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உன் விசுவாசத்தை நீ காத்துக்கொள்!


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
உன் விசுவாசத்தை நீ காத்துக்கொள்!
Permalink  
 


விசுவாசியே நீ விசுவாசி  திடமனதாய்  நீ  விசுவாசி
தேவனின் வார்த்தைகளையே நீ தேடித்தேடிவிசுவாசி
அவிசுவாசத்தினுள்ளேயே   நீ அமிழ்ந்து கிடந்தால்,   
ஆண்டவர்  செயல்பட முடியாதென்பதை   நீ யோசி
 
கடுகளவு விசுவாசம் உனக்கிருந்தால் போதும்
கன்மலையை புரட்டி நீயும்  கடலில்போட முடியும்
மலையளவு துன்பங்கள் உன்னை நெருக்கும் போதும்  
மகத்தான தேவ கிருபை உன்னை தாங்கி செல்லும்  
 
கடலில்கூட நடத்து சென்ற கன்மலையை நம்பு
காற்றுபுயலை அடக்கி வைக்கும் கர்த்தரையே நீ நம்பு 
நோயிலிருந்து விடுபட உன் நேசரை  நீ  நம்பு
பேய்களையும் கலங்க வைக்கும்  பேரொளியை நம்பு  
 
அவிசுவாசம் உனக்கிருந்தால் அற்ப்புதங்களில்லை
சந்தேகங்கள் உனக்கிருந்தால் சாகும்வரைத் தொல்லை  
பாவத்தின் நீ அமிழ்ந்திருதால்  பரிதாபம உனக்கில்லை 
சாபத்திலிருந்து நீ விடுபடவே தருவார் அவர் கிருபை.
 
அடைக்கலான் குருவிகள்கூட ஆண்டவரை நம்பும்போது  
ஆரறிவு மனிதன் உனக்கு கவலையென்பதெதற்கு?    
காட்டில் உள்ள புல்லுக்கெல்லாம் கர்த்தர் உடை தந்தார்
நாட்டில் உள்ள உன்னை அவர் கைவிடவே மாட்டார்
 
விசுவாசத்தால் நீதிமான் அவன்  என்றென்றுமே பிழைப்பான்
விண்ணக ராஜ்யத்தில் மகிழ்ச்சியிலே திளைப்பான்
உனக்கிருக்கும் விசுவாசத்தை உறுதியாக காத்துக்கொள்
நமக்கும் ஒரு கிரீடம் உண்டு நம்பி நீயும் பெற்றுக்கொள்!  


 

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard