இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவனுடைய திட்டத்தை நிறைவேற்ற போகும் அந்த ஒருவன் யார் ?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
தேவனுடைய திட்டத்தை நிறைவேற்ற போகும் அந்த ஒருவன் யார் ?
Permalink  
 


தேவன் இந்த உலகத்தை குறித்தும் அசுத்த ஆவிகளை குறித்தும் ஒரு திட்டத்தை  வைத்து இருக்கின்றார் அந்த திட்டம் என்னவெனில்  
தேசத்தில் இருந்து எல்லாம் அசுத்த ஆவிகளையும் துரத்தி விடுவது தான் அந்த திட்டம்   
 
 
 
சகரிய 13
 
2.அசுத்த ஆவியையும் தேசத்திலிருந்து போய்விடவும் பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்
 
 
 
 
சரி தேவன் இந்த திட்டத்தை எப்படி  நிறைவேற்றபோகின்றார் என்று பார்த்தல் ஒரு மனிதன் மூலம் ஆம் தேவன் ஒரு மனிதன் மூலம்
இந்த திட்டத்தை நிறைவேற்றபோகின்றார்
 
 
 
ஒரே ஆதாமினால் எப்படி பாவம் அனைவரையும் ஆட்கொண்டதோ
அதே போல ஒருவனுடைய கீழ்படிதலின் மூலம் தேவன் மொத்த அசுத்த ஆவிகளையும் மனிதர்களிடம் இருந்தும்
தேசத்திலும்  இருந்தும்  துரத்தி விடுவார்
 
 
 
ரோமர்   -5 
 
18. ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, 
 
 
19. அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல 
 
 
 
ஒரே  ஆதாமினால் எல்லோரையும் ஆட்கொண்ட பாவம்
ஒரே மனிதனுடைய கீழ் படிதளினால் எல்லோரையும் நிதிமானாக  
மாற்றும்
 
 
 
ரோமர்  : 5
 
19. ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.
 
 
 
 
கர்த்தர் குறிப்பிடும்  அந்த  ஒருவன் யார் :
 
 
 
ஏசாயா   : 46
 
11.என் ஆலோசனையை நிறைவேற்றும் மனுஷனைத் தூரதேசத்திலிருந்தும் வரவழைக்கிறவராயிருக்கிறேன்; அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்; அதைத் திட்டம்பண்ணினேன், அதைச் செய்து முடிப்பேன்
 
 
 
ஏசாயா   : 41 
 
25. நான் வடக்கேயிருந்து ஒருவனை எழும்பப்பண்ணுவேன், அவன் வருவான்; சூரியோதய திசையிலிருந்து என் நாமத்தைத் தொழுதுகொள்ளுவான்; அவன் வந்து அதிபதிகளைச் சேற்றைப்போலவும், குயவன் களிமண்ணை மிதிப்பதுபோலவும் மிதிப்பான்
 
 
 
ஏசாயா   : 41  
 
2.கிழக்கிலிருந்து நீதிமானை எழுப்பி, தமது பாதபடியிலே வரவழைத்தவர் யார்? ஜாதிகளை அவனுக்கு ஒப்புக்கொடுத்து, அவனை ராஜாக்களுக்கு ஆண்டவனாக்கி, அவர்களை அவன் பட்டயத்துக்குத் தூசியும், அவன் வில்லுக்குச் சிதறடிக்கப்பட்ட தாளடியுமாக்கி,
 
 
 
3.அவன் அவர்களைத் துரத்தவும், தன் கால்கள் நடவாதிருந்த பாதையிலே சமாதானத்தோடே நடக்கவும் பண்ணினவர் யார்?
 
 
4.அதைச் செய்து நிறைவேற்றி, ஆதிமுதற்கொண்டு தலைமுறைகளை வரவழைக்கிறவர் யார்? முந்தினவராயிருக்கிற கர்த்தராகிய நான்தானே; பிந்தினவர்களோடும் இருப்பவராகிய நான்தானே
 
 
 
 
சரி ஏன் இன்னும் கர்த்தருடைய திட்டம் நிறைவேறவில்லை
ஆம்  அந்த ஒருவன் இன்னும் தன்னை தயார் படுத்தி கொள்ளவில்லை என்பதால் தேவனுடைய சித்தம்  தாமதம் ஆகின்றது
 
 
அவன் எப்பொழுது தன்னை தயார் படுத்து கொள்கின்றானோ அதாவது அவன் எப்பொழுது  தன்னை முளுவதமாய் பரிசுத்த படுத்தி  கொள்கின்றானோ அப்பொழுது தான் சேனைகளில் 
கர்த்தருடைய  அசுத்த ஆவிகளை துரத்தும் திட்டம் நிறைவேறும்
 
 
மற்றும் ஆண்டவராகிய இயேசுவின் மணவாட்டியும்  இவன் தான் என்பதை இங்கு  தெரிவித்து கொள்கின்றேன் அந்த ஒருவன் தன்னை ஆயத்த படுத்திய பின்பு தான் மிருகத்திற்கும் கள்ளதீர்க்கதரிசிக்கும் ஒரு முடிவு வரும்
 
 
எல்லோரும் மனவாட்டிகள் அநேகர் என்று நினைத்து 
கொல்கின்றனர் அநேகர் தான் ஆனால் அவருக்கு என்று ஒருத்தி 
என்றும் வேதத்தில்  சொல்லபட்டுல்லத்தை கவனிக்க வேண்டும்       
சரி எல்லோரும் என்று எண்ணினால்  ஆட்டுகுட்டியனவரின் கல்யானதிருக்கு எதற்கு எல்லோரையும் அழைக்க வேண்டும்
எல்லோரும் தான் மனவாட்டிகள் அல்லவா ?
 
 
 
வெளிபடுத்தல் : 19
 
9.பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான். 
 
 
 
இங்கு குறிப்பிட்டுள்ள அழைக்க பட்டவர்கள் யார் ? என்று பார்த்தால் அவர்கள் தான் இயேசுவை ஏற்றுகொண்டவர்கள் ஆனால் எசுவுடைய உத்தமி என்பவள்   சேனைகளின் கர்த்தர்
திட்டம் பண்ணின அந்த ஒருவன் தான்
 
 
 
உன்னத பாட்டு : 6
 
9.என் உத்தமியோ ஒருத்தியே;
 
 

அந்த ஒருவன் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றி முடிப்பானா ?

அவன் தேவனுடைய திட்டத்தை நிறைவேற்றி முடிப்பான் என்று
கீழ் கண்ட வசனம் நமக்கு தெரியபடுதுகின்றது
 
 
வெளிபடித்தல் - 19  -7 
 
ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன்
 
 
 
ஆம் அவள் தன்னை  ஆயத்தம் பண்ணினவுடனே சேனைகளின் கர்த்தர் சொன்னது போலவே
 
 
 
சகரிய 13  - 2 
 
அசுத்த ஆவியையும் தேசத்திலிருந்து போய்விடவும் பண்ணுவேன்
 
 
என்ற கர்த்தருடைய  திட்டம்  அப்பொழுது  நிறைவேறும்
 
 
 
அதன் தொடர்ச்சியாக என்ன நடக்கின்றது என்று பார்த்தால்
அந்த ஒருவன் தன்னை ஆயத்த பண்ணி கொண்ட உடனே
 
 
 
 
வெளிபடுத்தால் : 19 
 
20. அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின்முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள்.
 
 
 
ஆம் சகோதர்களே பலத்தினாலும் அல்ல பராக்கிரமதினாலும் அல்ல என்னுடைய ஆவியினாலே ஆகும் என்று சொன்ன
சர்வ வல்லையுள்ள  சேனைகளின் கர்த்தர் நிச்சயம் அவருடைய திட்டத்தை நிறைவேற்றி முடிப்பார் ஆமென்..!!!
 
 
அவருக்கே சதா காலங்களிலும் மகிமை உண்டாவதாக ..


-- Edited by EDWIN SUDHAKAR on Thursday 29th of December 2011 05:16:02 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard