இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு கிருஸ்துவும், யாவே தேவனும் ஒருவரா?


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
இயேசு கிருஸ்துவும், யாவே தேவனும் ஒருவரா?
Permalink  
 


இயேசு கிருஸ்துவும், யாவே தேவனும் ஒருவர் என்று கிருஸ்துவர்களில் சிலர் சொல்கின்றனர். இருவரும் ஒருவர் என்றால் கர்த்தர் என வரும் இடத்தில் எல்லாம் இயேசு கிருஸ்து என்று மாற்றினாலும் அது சரியாகவே இருக்கும். 

இதன் அடிப்படையில் இருவரும் ஒருவரா? என்பதை சகோதரர்கள் பதிவிட்டால் மிகவும் பிரயோஜனமாய் இருக்கும்.



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

SANDOSH wrote:

இயேசு கிருஸ்துவும், யாவே தேவனும் ஒருவர் என்று கிருஸ்துவர்களில் சிலர் சொல்கின்றனர். இருவரும் ஒருவர் என்றால் கர்த்தர் என வரும் இடத்தில் எல்லாம் இயேசு கிருஸ்து என்று மாற்றினாலும் அது சரியாகவே இருக்கும். 

இதன் அடிப்படையில் இருவரும் ஒருவரா? என்பதை சகோதரர்கள் பதிவிட்டால் மிகவும் பிரயோஜனமாய் இருக்கும்.


சங்கீத புத்தகத்த்தில் தாவீது இவ்வாறு சொல்கிறான்.  

சங்கீதம் 110:1 கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.

இந்த வசனம் குறித்து  இயேசு விளக்கம் கொடுக்கும்போது 

மத் 22: 42. கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்? என்று கேட்டார். அவர் தாவீதின் குமாரன் என்றார்கள்.

43. அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியினாலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி?

இந்த வசனத்தின் அடிப்படையில் கிறிஸ்த்துவைத்தான்  தாவீது "ஆண்டவர்" என்று சொல்லியிருக்கிறார் என்பதை அறிய முடியகிறது. இந்நிலையில்  தேவனாகிய "கர்த்தர்" ஆண்டவராகிய இயேசுவை நோக்கி சொன்னார் என்று வசனம் வருவதால் இருவரும்  ஒரே தேவனின்  தனித்தனி ஆள்த்துவங்கள் என்பது தெளிவாகிறது.     



-- Edited by SUNDAR on Friday 27th of January 2012 04:09:33 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

சகோதரர் சந்தோஷ் அவர்களே!!!!

யேகோவா என்ற நாமத்தில் தேவன் ஆபிரகாம்,ஈசாக்கு,யாக்கோபு என்பவர்களால் அறியப்படவில்லை..அவர் சர்வ வல்லமை உள்ள தேவன் என்ற நாமத்தில் மாத்திரம் அறியப்பட்டார்..

யாத்திராகமம் 6:3 சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை.

ஆனால் தேவன்,. நாம் யஹோவா என்ற நாமதிலும் தேவனை அறிய விரும்பி பிற்காலத்தில் வெளிபடுத்துகிறார்..

எரேமியா 16:21 ஆதலால், இதோ, இப்பொழுது நான் அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன்; என் கரத்தையும் என் பெலத்தையுமே அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன்; என் நாமம் யேகோவா என்று அறிந்துகொள்வார்கள்.

தேவன் யஹோவா என்ற நாமத்தை எவ்வாறு அறியசெய்கிறார் என பார்க்கும் போது...

இயேசுவின் மூலமாய் தான்...இயேசுவின் பெயர் யஹோவா என வேதத்தில் உள்ளது...

சங்கீதம் 68:4 தேவனைப்பாடி, அவருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; வனாந்தரங்களில் ஏறிவருகிறவருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருடைய நாமம் யேகோவா, அவருக்கு முன்பாகக் களிகூருங்கள்.

இயேசுவானவர் பிதாவின் நாமம் தரித்தவராய் வந்தார் என வசனம் உள்ளது..அவருக்கு வழியை ஆயதபடுத்தினவர் யோவான் என்பதை நாம் அனைவரும் அறிந்தததே..

யோவான் 5:43 நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை..

எனவே பிதா யஹோவா என வலியுறுத்த அவசியம் இல்லை..

இயேசுவானவர் யஹோவா என வேதம் சொல்லுவதால்.எந்த துதிக்கும்,கீர்த்தனைக்கும்,ஸ்தோதிரத்திரதிறதிற்கும்,ஆராதனைக்கும்,புத்தியுள்ள  ஆராதனைக்கும்,மகிமைபடுத்துதலுக்கும் பாத்திரமாய் இருக்கிறார்..

மகா தேவனுக்கு மகிமை உண்டாவதாகுக..

-----------------------------------------------------------------------------------------------

சங்கீதம் 95:3 கர்த்தரே மகா தேவனும், எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார்.



-- Edited by JOHN12 on Saturday 28th of January 2012 10:47:42 AM

__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink  
 

சகோதரர் ஜான்12 அவர்களே,

பழைய ஏற்பாட்டில் யாவே என வரும் இடங்களில் எல்லாம் கர்த்தர் என்னும் வார்த்தையாய் தமிழ் வேதாகமத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

யாவே தேவனும், இயேசு கிருஸ்துவும் ஒருவரே என வேத வசனத்தை வைத்து நீங்கள் கூறுகிறீர்கள்.

இவ்வாறு பார்க்கும் போது பழைய ஏற்பாட்டில் வரும் ஆசிர்வாத வார்த்தைகளினால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் கீழ் வரும் வசனம் போன்ற சில வசனங்களை இப்படியாக புரிந்து கொள்ளலாமா? இது சரி எனில் ஏன் எவரும் இதை இப்படியாக சொல்ல மாட்டேன் என்கிறார்கள்?

இயேசு கிருஸ்துவும் யேகோவா தேவனும் ஒருவரே என்றால், கர்த்தர் என வரும் பழைய ஏற்பாட்டு வசனங்களுக்கு இயேசு கிருஸ்து என பொருள் கொண்டு சில வசனங்களை பார்த்தால்,

"பூமியெங்கும் பாழ்க்கடிப்புகளை நடப்பிக்கிற கர்த்தரின் (இயேசு கிருஸ்துவின்) செய்கைகளை வந்து பாருங்கள். "

என்று வருகிறது. இவ்வாறு இயேசு கிருஸ்துவையும், யேகாவா தேவனையும் ஒன்றாக சொல்வது சரியா?



-- Edited by SANDOSH on Saturday 28th of January 2012 08:36:32 PM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

யகோவா தேவன் எரிச்சல் உள்ளவர்! 
 
யாத்திராகமம் 34:14 கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, அவர் எரிச்சலுள்ள தேவனே;
 
ஆண்டவராகிய இயேசு மனதாழ்மையின் ஆவியுடையவர்.  
 
மத் 11:29 நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்;
 
யகோவாதேவன் மன்னிக்க தயை பெருத்தவர் என்றாலும்  பாவங்களை தண்டிக்காமல் விடாதவர்.
 
யாத்திராகமம் 34:7 ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்று கூறினார்.
  
ஆண்டவராகிய இயேசு எந்த நிபந்தனையும் இன்றி விசுவாசத்தின்
அடிப்படையில் மன்னிக்க கூடியவர்.   
 
லூக்கா 5:20 அவர்களுடைய விசுவாசத்தை அவர் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மனுஷனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
 
இயேசுவுக்கு விரோதமான வார்த்தை மன்னிக்கப்படும்.
 
மத்தேயு 12:32 எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்
 
யகோவா தேவனை தூஷித்தவன் கொலை செய்யப்படவேண்டும்!
 
லேவியராகமம் 24:23 அப்படியே, தூஷித்தவனைப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், அவனைக் கல்லெறியும்படி மோசே இஸ்ரவேல் புத்திரரோடே சொன்னான்; கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்
 
ஆண்டவராகிய இயேசு யாரையும் நியாயம் தீர்க்கிறதில்லை!
 
யோவான் 8:15 நீங்கள் மாம்சத்துச்கேற்றபடி நியாயந்தீர்க்கிறீர்கள், நான் ஒருவனையும் நியாயந்தீர்க்கிறதில்லை;
யோவான் 12:47  நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன்.
 
யகோவா தேவன் பூமியை நியாயம்தீர்க்க கூடியவர்! 
 
I நாளாகமம் 16:14 அவரே நம்முடைய தேவனாகிய கர்த்தர்; அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும்.
எசேக்கியேல் 7:27  நான் அவர்கள் வழிகளின்படியே அவர்களுக்குச் செய்து, அவர்கள் நியாயங்களின்படியே அவர்களை நியாயந்தீர்ப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.
 
இதுபோல்  வேறுபாடுகள் உண்டு.

 



-- Edited by SUNDAR on Tuesday 31st of January 2012 11:03:13 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

யகோவா தேவனின்  செயல்பட்டுகளுக்கும் இயேசுவின் செயல் பாடுகளுக்கும் இடையில் பல்வேறு வேறுபாடுகள்  இருக்கிறது என்பதை நான் மேலே குறிப்பிட்டிருக்கிறேன் அதற்காக இருவரும் தனக்கு தானே விரோதமாக பிரிந்திருக்கிறார்கள் என்று கருதுவது அர்த்தமற்றது.   
 
ஆண்டவராகிய இயேசு அனுப்பபட்டதன் நோக்கம் வேறு தேவனாகிய கர்த்தர் என்ற  ஸ்தானத்தில் யகோவா தேவனின் செயல்பாடுகள் வேறு. இருவரும் ஒரே தேவனின் அளத்துவங்கள் என்றாலும் அவரவர் செயல்பாடுகளின் அடிப்படையில் வேறுபட்ட பணியை செய்பவர்கள் என்பதே என்னுடய கருத்து. தனித்துவம் வாய்ந்த பணியை செய்வதற்காகவே ஒரே தேவன்  பல்வேறு  ஆள்த்துவங்களாக செயல்படுகிறார்.
 
பூமியில் எல்லாவற்றையும் செய்து நியாயதீர்ப்புகளை நிறை வேற்றும் நிலையில் அவர் சர்வ வல்லமையுள்ள யகோவா தேவனாக இருக்கிறார்.
 
ஏசாயா 44:24  நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர், நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்.
I நாளாகமம் 16:14 அவரே நம்முடைய தேவனாகிய கர்த்தர்;
அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும்.
 
பாவத்துக்கான கிரயத்தை செலுத்துவதிலும், பாவத்தில்  இருந்து மனுஷனை மீட்கும் பணியில் அவர் ஆண்டவராகிய இயேசுவாக/ குமாரனாக செயல்படுகிறார்.
 
யோவான் 8:36  குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்,
I யோவான் 1:7 
அவருடைய
குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்
 
பாவங்களை கண்டித்து உணர்த்தி மனுஷனை சத்தியத்துக்குள்  நடத்தும் பணியில் அவர் பரிசுத்த ஆவியானவராக தேற்றவாளனாக இருக்கிறார்.  
 
யோவான் 16:13 சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்
 
யோவான் 16:8 அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.



-- Edited by SUNDAR on Wednesday 1st of February 2012 03:42:56 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

சகோ.சந்தோஷ் அவர்களே!!

நேரம் கிடைக்காததால் விரைவில் பதில் தர இயலவில்லை.மன்னிக்கவும். இயேசுவானவர்  யஹோவா என அழைக்கபடுகின்ற வசனத்தை முன்னமே தந்துள்ளேன்..

Bro.Sandosh////"பூமியெங்கும் பாழ்க்கடிப்புகளை நடப்பிக்கிற கர்த்தரின் (இயேசு கிருஸ்துவின்) செய்கைகளை வந்து பாருங்கள். " என்று வருகிறது. இவ்வாறு இயேசு கிருஸ்துவையும், யேகாவா தேவனையும் ஒன்றாக சொல்வது சரியா?///

யேஹோவாவயும்,ஏசுவையும் ஒன்றாக சொல்வது தவறில்லை.. தேவன் தனது எல்லா பிரஸ்தாபத்தை பார்க்கிலும் வார்த்தையை மகிமைபடுத்தி உள்ளார் என வசனம் கூறுகிறதே..யஹோவா என்பது இயேசுவின் பெயர் என வேதம் கூறும் போது, யஹோவா வேறு,இயேசு வேறு என பொருள் கொள்வது தவறு..

சங்கீதம் 138:2 உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது நாமத்தைத் துதிப்பேன்; உமது சகல பிரஸ்தாபத்தைப் பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்...

யேஹோவா என்ற பதம் நீங்கள் கூறியபடியே கர்த்தர் என மொழிபெயர்க்கபட்டுள்ளது என்பதற்கு மாற்று கருத்து இல்லை..

பிதா கர்த்தர் எனவும்,குமாரன் கர்த்தர் எனவும்,பரிசுத்த ஆவியானவர் நம் கர்த்தர்(யோவான் 4:24 தேவன் ஆவியாயிருக்கிறார்,) எனவும் வேதத்தை படித்து அறிந்துள்ளோம். யேஹோவா என்ற பதம் பிதா,குமாரன்,பரிசுத்த ஆவியானவர் என்ற ஆள்தத்துவங்களுக்கு பொதுவானது.

---------------------------------------------------------------------------------

II தீமோத்தேயு 4:22 கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உன் ஆவியுடனேகூட இருப்பாராக. கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்.



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

சகோ.சுந்தர் அவர்களே,

யஹோவா என்பது பிதாவை மாத்திரமோ ஒரு ஆள் தத்துவத்தை மாத்திரம் குறிகிரதில்லை.

அன்பே உருவான இயேசுவானவர் கோபப்படமாட்டார் என கூறி உள்ளீர்கள்.வசனம் பின்வருமாறு உள்ளதே..

சங்கீதம் 2:12 குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.

யஹோவா நியாயம் தீர்ப்பார் ஆனால் இயேசு நியாயம் தீர்க்கமாட்டார் என்கிறீர்கள் ..நியாயம் தீர்கிறதில்லை(நிகழ்காலம்) என்ற  வசனத்தை தான் முன் நிறுத்தி உள்ளீர்கள்.

மனுஷகுமாரன் நியாயம் தீர்க்க வரும் வசனங்களை படித்திருக்கிரோமே. இயேசுவின் வார்த்தை நம்மை நியாயம் தீர்க்கும் என வசனமும் உள்ளதே..இவ்வாறு இருக்க,

மாம்சத்தில் வெளிப்பட்ட அவரை இனி மாம்சத்தின் படி அறியமாட்டோம் என அப்போஸ்தலர் கூறுகிறாரே..

II கொரிந்தியர் 5:16 ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்.

குமாரனனது  மகிமை அவரது இரண்டாம் வருகையில் வெளிப்படும்போது(சத்ருவை பாதபடியாக்கி அழிக்க) நாம் அவரை மாம்சீகமாக அறிந்த எந்த அறிவும் உதவாது என்பது எனது தாழ்மையான கருத்து... 

யஹோவா எனும் பதத்தை பிதாவிற்கு மாத்திரம் ஒப்பிடுகிறீர்களா.. சகோதரர் விளக்கவும்.

-------------------------------------------------------

மத்தேயு 24:44 நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.



__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

திரித்துவ கொள்கையின்படி தேவனின்  ஆள்த்துவங்கள் பிதா / குமாரன் / பரிசுத்த ஆவி  எனப்படுகிறது.
 
இதில் குமாரன் என்பது ஆண்டவராகிய இயேசுவை  குறிக்கிறது.  
பரிசுத்த ஆவி என்பது பரிசுத்த ஆவியானவரை  குறிக்கிறது 
 
பிதா என்பது யாரை குறிக்கிறது? 
 
எலோஹிம் எனப்படும் தேவனையா? அல்லது யஹோவா எனப்படும் தேவனாகிய கர்த்தரையா?


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

நான்  அறிந்துள்ள  தேவனின்  ஆள்த்துவங்கள்  

எலோஹீம் - GOD - தேவன் - தேவ ஆவியானவர் (ஆதி 1:2, எண் 24:2, 1 சாமு 1:6, ரோமர் 8:9,14)

யகோவா - LORD - கர்த்தர் - கர்த்தருடைய ஆவியானவர் (நியா 6:34, ஏசா 11:2, II சாமு 23:2, அப் 8:39)

இயேசு - JESUS - கிறிஸ்த்து - கிறிஸ்துவின் ஆவியானவர் ( Iபேதுரு 1:11, ரோமர் 8:9, பிலிப் 1:19)

தேற்றவாளர் - HOLY SPIRIT -  சத்திய ஆவியானவர் - பரிசுத்த ஆவியானவர் (அப் 10௦:44, எபி 3:7, ரோமர் 5:5 , லுக் 12:12)



-- Edited by SUNDAR on Saturday 11th of February 2012 10:43:51 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இனியவர்

Status: Offline
Posts: 59
Date:
Permalink  
 

கிழே உள்ளவர்கள் எல்லாம் யார்?

எல்ரோயி
எல்சடாய்
எல்எலியோன்
அதோனாய்
Father


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

John wrote:

கிழே உள்ளவர்கள் எல்லாம் யார்?

எல்ரோயி
எல்சடாய்
எல்எலியோன்
அதோனாய்
Father


யோவான் 4:24 தேவன் ஆவியாயிருக்கிறார், என்று  வசனம் சொல்கிறது. 
 
தேவத்துவத்தின் எந்த நாமத்துக்கு பின்னால் தொடர்புடைய  ஆவியானவர் இருக்கிறாரோ அதெல்லாம் தேவனின் ஆள்த்துவங்கள் என்றே நான் கருதுகிறேன். 
 
தாங்கள் குறிப்பிட்டுள்ள ///எல்ரோயி, எல்சடாய்,எல்எலியோன், அதோனாய்/// போன்ற எந்த நாமத்துக்கும் தொடர்புடய ஆவியானவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை எனவே அவைகள் எல்லாம் ஒரே தேவனின் வேறு நாமங்கள் அல்லது வேறுமொழி பெயர்கள் என்று எடுத்துகொள்ளலாம்.
 
தாங்கள் FATHER என்று குறிப்பிட்டுள்ள பிதாவின் ஆவியானவரும்  இருக்கிறார். 
 
மத்தேயு 10:20 பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்.
 
அவரை பற்றி மனுஷர்கள் அதிகம் அறியமுடியாது நானும் அதிகம் அறியவில்லை எனவே  நான் அறிந்துள்ள என்னை அபிஷேகித்து  வழி நடத்திய ஆவியாகிய தேவனின் ஆள்த்துவங்கள் பற்றியே இங்கு எழுதியிருக்கிறேன்.
 
என்னுடய பதிலில் குறைகண்டுபிடிக்கும் முன்னர்  தாங்கள் கீழேயுள்ள திரியில் கேட்கபட்ட கேள்விக்கு சரியான பதில் தரமுடியுமா என்று பாருங்கள்.
 
 
சரியான பதில் கொடுக்கபட்டால் மட்டுமே  நான் அறிந்தவைகளில்  தவறு இருக்கிறதா என்பதை ஆராயமுடியும்.  இல்லை எனில், தேவனிடம் மூன்றுக்கு மேல்பட்ட ஆள்த்துவங்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் அல்லது தேவன் நாங்கள் மூவராக இருக்கிறோம் என்று சொல்வது போன்றோ வசனம் இருந்தால் தாருங்கள்.

 



-- Edited by SUNDAR on Thursday 9th of February 2012 03:06:05 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

சகோ ஜான் அவர்களே..

எலோஹிம் என்பதன் பொருள் எங்கும் நிறைந்தவர்..

எல்ஷேடோய் என்றால்  சர்வ வல்லமை உள்ள தேவன் என பொருள் வரும்..
 
ரௌஹி என்பதற்கு மேய்ப்பர் என்று பொருள்..

ஆள்ததுவங்களை ஆவியின் அடிப்படையில் சகோதரர்.சுந்தர்  பிரிகிறார்..

அவ்வாறு அவர் பிரிகின்ற வேளையில் என் பரிசுத்த ஆவியானவரையும்,நல்ல ஆவியானவரையும்,தேவனின் ஆவியானவரையும்,விண்ணப்பத்தின் ஆவியானவரையும்,வைராக்கிய வாஞ்சையானவரையும்,ஞானத்தின் ஆவியானவரையும்,வல்லமையின் ஆவியானவரையும்,அன்பின் ஆவியானவரையும்,பொறுமையையும்,ஆறுதலையும் அளிக்கும் ஆவியானவரையும்,பராகிரமம் செய்யும் ஆவியானவரையும்,உயர்பிக்கிற ஆவியானவரையும் விட்டுவிட்டார். ஏன் என தெரியவில்லை...

எனக்கு ஒரு சந்தேகம்.,

தளத்தின் விசுவாசம் என்பது தள நிர்வாகத்தினரின் விசுவாசமா அல்லது தள உருபினர்களால் ஏற்றுகொள்ளபட்ட விசுவாசமா?

நிர்வாகத்தினர் விளக்கவும்..

----------------------------------------------------------------------

 

கலாத்தியர்5 :13. சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள்.



-- Edited by JOHN12 on Friday 10th of February 2012 01:03:24 PM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

JOHN12 wrote:
ஆவியின் அடிப்படையில் சகோதரர்.சுந்தர்  பிரிகிறார்..

அவ்வாறு அவர் பிரிகின்ற வேளையில் என் பரிசுத்த ஆவியானவரையும்,நல்ல ஆவியானவரையும்,தேவனின் ஆவியானவரையும்,விண்ணப்பத்தின் ஆவியானவரையும்,வைராக்கிய வாஞ்சையானவரையும்,ஞானத்தின் ஆவியானவரையும்,வல்லமையின் ஆவியானவரையும்,அன்பின் ஆவியானவரையும்,பொறுமையையும்,ஆறுதலையும் அளிக்கும் ஆவியானவரையும்,பராகிரமம் செய்யும் ஆவியானவரையும்,உயர்பிக்கிற ஆவியானவரையும் விட்டுவிட்டார். ஏன் என தெரியவில்லை...


சகோதரரே  தாங்கள்  குறிப்பிட்டுள்ள இத்தனை ஆவியானவர்களில் "தேவ ஆவியானவர்" மற்றும் "பரிசுத்த ஆவியானவர்" குறித்து என்னுடய பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன். தாங்கள் குறிப்பிட்டுள்ள மற்ற ஆவியானவர்களாகிய:  

"நல்ல ஆவியானவரையும்,விண்ணப்பத்தின் ஆவியானவரையும்,வைராக்கிய வாஞ்சையானவரையும்,
ஞானத்தின் ஆவியானவரையும்,வல்லமையின் ஆவியானவரையும்,அன்பின் ஆவியானவரையும்,
பொறுமையையும்,ஆறுதலையும் அளிக்கும் ஆவியானவரையும்,பராகிரமம் செய்யும் ஆவியானவரையும்,உயர்பிக்கிற ஆவியானவரையும்"      
 
என்ற பெயருடைய ஆவியானவர்கள் வேதத்தில் எங்கு இருக்கிறது என்பதை தெரிவிக்கவும். வேத பண்டிதர்கள்  யாரை ஆவியானவர் என்று ஆள்த்துவத்துடன் மொழி பெயர்த்திருக்கிறதோ  அவர்களே  ஆள்தத்துவம்  உள்ளவர்கள். அதன்படி பார்த்தால் தாங்கள் குறிப்பிட்டுள்ள எந்த "ஆவியானவரும்"  நான் அறிந்து வேதத்தில் இருப்பதுபோல் இல்லை. அப்படி எந்த வசனமாவது இருந்தால் தெரிவியுங்கள் அது பற்றி ஆராயலாம்.   
 
பெயர் சொல்லுக்கும் வினை சொல்லுக்கும் வேறுபாடு உண்டல்லவா? சுறுசுறுப்பாய் இருக்கும் ஒருவரை "சுறுசுறுப்புகாரர்" என்று சொல்வார்கள். அது அவரது  உண்மை பெயரல்ல "தன்மை பெயர்" அல்லது "பண்புப்பெயர்". அதுபோல் தாங்கள் குறிப்பிட்டுள்ள பொறுமை/ உயிர்ப்பித்தல்/அன்பு/ பராக்கிரமம்/ விண்ணப்பம் போன்றவை  தேவனின் தன்மையை குறிக்கும் பண்பு பெயர்கள்.   


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

Bro.Sundar///பெயர் சொல்லுக்கும் வினை சொல்லுக்கும் வேறுபாடு உண்டல்லவா? சுறுசுறுப்பாய் இருக்கும் ஒருவரை "சுறுசுறுப்புகாரர்" என்று சொல்வார்கள். அது அவரது உண்மை பெயரல்ல "தன்மை பெயர்" அல்லது "பண்புப்பெயர்". அதுபோல் தாங்கள் குறிப்பிட்டுள்ள பொறுமை/ உயிர்ப்பித்தல்/அன்பு/ பராக்கிரமம்/ விண்ணப்பம் போன்றவை தேவனின் தன்மையை குறிக்கும் பண்பு பெயர்கள்.  ///

நான் காண்பித்த ஆவியானவரின் நாமங்களை பண்பு பெயர்கள் என்கிறீர்கள்..

உண்மை தான்..

பரிசுத்த ஆவியானவரும்,சத்திய ஆவியானவரும் நீங்கள் நிறுத்துகிரபடியே பார்த்தாலும் பண்பு பெயரின் கீழ் தானே வரும்!!

சகோதரர் விவாத்திற்கு  கேட்ட படி வசன ஆதாரங்களை இணைத்துள்ளேன்..

நல்ல ஆவி (சங்கீதம் 143 :10)

விண்ணப்பத்தின் ஆவியானவர் (சகரியா 12 :10)

உன்னதரின் ஆவியானவர் (லுக் 1 :35)

நியாயத்தின் ஆவியானவர் (ஏசா 4 :3 )

வைராக்கிய வாஞ்சையானவர் (யாக்கோபு 4 :5 )

ஞானத்தின் ஆவியானவர் (ஏசாயா 11 :2)

அன்பின் ஆவியானவர் (I கொரிந்தியர் 4:21),

பராகிரமம் செய்யும் ஆவியானவர்
(ஏசாயா 28:6) (மீகா 3:8)

உயர்பிக்கிற ஆவியானவர் (1 கொரி 11 :45 )

நித்திய ஆவியானவர் (எபி 9 :14) 

கிருபையின் ஆவியானவர் (சகரியா 12 :10)

உணர்வுள்ள ஆவியானவர் (ஏசா 11:10)

கர்த்தரின் ஆவியானவர் (2 கொரி 3 :12)

 

சகோதரரிடம் சில கேள்விகள் ..

1)மரியாள் பிதாவின் ஆவியால் நிழலிடபட்டாரா?
குமாரனது ஆவியால் நிழலிடபட்டாரா?
பரிசுத்த ஆவி(தேற்றரவாலரால்) நிழலிடபட்டாரா?

2)இயேசு பிதாவிற்கு மாத்திரம் குமாரனா? அல்லது பரிசுத்த ஆவிக்கும் குமாரனா?


3)இயேசு உயிர் நீத்துவதற்க்கு முன் பிதாவிடம் ஒப்படைத்த ஆவி பரிசுத்தஆவியா? அல்லது குமாரனின் ஆவியா?



4)இயேசு மரிபதற்க்கு  முன்னமே தேற்றரவாளன் நிலைவரமாய் நமக்கு அளிக்கபடாததன் காரணம் என்ன? (விவாதத்திற்கு தொடரபுடையதாய் தான் கேட்கிறேன்) 

--------------------------------------------------------------------------------

அவபக்தியை யாக்கோபை விட்டு விலக்குவார் (ரோமர்
11 :16)



-- Edited by JOHN12 on Monday 13th of February 2012 04:04:05 PM

__________________
1 2  >  Last»  | Page of 2  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard