இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இனி (கிறிஸ்த்தவ) விசுவாசிகளுடன் விவாதம் வேண்டாம்.


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
இனி (கிறிஸ்த்தவ) விசுவாசிகளுடன் விவாதம் வேண்டாம்.
Permalink  
 


அன்பானவர்களே.
 
ஏற்கெனவே  இயேசுவை ஏற்றுக்கொண்டு விசுவாசி களாக இருக்கும் கிறிஸ்த்தவர்களுக்கு போதிப்பதற்கும்  வழி நடத்துவதற்கும் பல ஆவிக்குரிய சபைகளும் மேய்ப்பர்களும் எங்கும் இருக்கிறார்கள். எனவே நமது இந்த தளத்திலும் கிறிஸ்த்தவர்களுக்கு மேலும் போதனை சம்பந்தமான கட்டுரைகளையே எழுதுவதைவிட  பிற மதத்தை சார்ந்த அன்பர்கள் இறைவனை  ற்றுக்கொள்ளவும்,  "கிறிஸ்தவம் தான்  சரியான மார்க்கம்" "இயேசுவே மெய்யான இரட்சகர்" "விவிலியமே உண்மையான வேதம்" என்பதைமட்டும்
புரிய வைக்கும்  அளவுக்கு மாறுபட்ட கட்டுரைகள் சாட்சிகளை எழுதுவது  பலருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது  என்னுடைய தனிப்பட்ட கருத்து. 
.
காரணம் என்னவெனில், விவிலியத்தை ஆராய்ந்து அறிந்த அன்பர்களுக்கு இறைவன் அவரவருக்கு  தெரிவித்த காரியங்களுடன்  வசனத்தின் அடிப்படையில்  ஒவ்வொருவரும்  சில மாறுபட்ட  கருத்துக்கள் கொண்டிருக்க வாய்ப்பு உண்டு. ஒவ்வொருவருக்கும் அவரவர் தகுதியின் அடிப்படையில் தேவன் வேறுபட்ட பணியை கொடுத்திருக்கலாம் அப்படியிருக்க  ஒருவர் கருத்தை இன்னொருவரால் ஏற்றுக்கொள்ள முடியாது அதை  தவறு என்று நாமும் சொல்ல முடியாது. உண்மை இவ்வாறு இருக்க ஒருவர் கருத்தை ஒருவர் குறைகூறி விவாதித்து  யாருக்கும்  பயனில்லாமல் உள்ளுக்குள்ளே சண்டைபோட்டுக்கொண்டு  ஒரு தளம் நடத்துவதைவிட, இறைவனை அறியாத ஜனங்களுக்கு  இறைவனை அறிவிக்கும்  விதமான
உண்மை சாட்சிகள் மற்றும் நல்ல கருத்துக்களை  எழுதுவது நலம்.      
 
என்னுடய கருத்தை சுருக்கமாக சொன்னால் "ஒரு மனுஷனை இயேசுவை ஏற்றுக்கொள்ளசெய்து அவர் வழியாக இறைவனிடம் அழைத்துக் கொண்டு சேர்த்ததுவிட்டுவிட்டால் போதும்" மற்றதை தேவன் பார்த்துகொள்வார். மற்றபடி ஏற்கெனவே உள்ளே இருக்கும்  அன்பர்களோடு மீண்டும் மீண்டும் விவாதிப்பதிலும் சண்டைபோடுவதிலும் எந்த பயனும் இல்லை.
 
எனவே இனி நமது தளத்தில் பொதுவான ஜனங்களை அதிகம் கவரும் நல்ல பிறயோஜனமான கருத்துக்களை அதிகம்பதிவிட ஊக்கப்படுத்துகிறேன்.
.
ஓரிரு வசன ஆதாரத்தை தந்தால் போதும் அதிக வசன ஆதாரம் தரவேண்டிய அவசியம் எதுவும் இல்லை. 
 
இனி இந்த தளத்தின் முக்கிய இலக்கு "பொதுவான
அன்பர்களை இறைவனிடம் நடத்துவதே" "கிறிஸ்த்தவர்களிடம் விவாதம் வேண்டாம்"
 
என்னுடய இந்த முடிவை குறித்து கருத்துசொல்ல விரும்புகிறவர்கள் சொல்லலாம்.
    


__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
RE: இனி (கிறிஸ்த்தவ) விசுவாசிகளுடன் விவாதம் வேண்டாம்.
Permalink  
 


இப்போது தளத்தில் அனேக ஜனங்களை கிறிஸ்துவின் அண்டையில் நடத்தும் படி வலையானது (தளம்) அலசபடுகிறதை உணருகிறேன்.

வாழ்த்துக்கள் நேசன் அவர்களே..நிச்சயம் பலன் கிடைக்கும்..



__________________


இளையவர்

Status: Offline
Posts: 35
Date:
Permalink  
 

Nesan wrote:

 
 
ன்னுடய கருத்தை சுருக்கமாக சொன்னால் "ஒரு மனுஷனை இயேசுவை ஏற்றுக்கொள்ளசெய்து அவர் வழியாக இறைவனிடம் அழைத்துக் கொண்டு சேர்த்ததுவிட்டுவிட்டால் போதும்" மற்றதை தேவன் பார்த்துகொள்வார். மற்றபடி ஏற்கெனவே உள்ளே இருக்கும்  அன்பர்களோடு மீண்டும் மீண்டும் விவாதிப்பதிலும் சண்டைபோடுவதிலும் எந்த பயனும் இல்லை.
 
.
    

 ஆமென் இதனை நான் முற்றிலும் ஆமோதிக்கிறேன், நல்ல முயற்சி சகோதரரே என்னுடைய கருத்தை சொல்லுகிறேன் நம் ஜீவனுள்ள தேவனை பற்றி அறிந்து கொள்ளவும் , புறஜாதியாரையும் ஆண்டவர்குள் வழிநடத்தவும் இந்த தளம் உதவியா இருக்கட்டுமே கிறிஸ்தவர்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லை விவாதம் செய்துகொள்கிறார்கள் என்று பிறர் இடறல் அடையாதபடிக்கும் மாறாக ஜீவனுள்ள தேவனை ஏற்றுக்கொண்டால் அது தேவனுக்கும் சந்தோஷம் நமக்கும் சுவிஷேச ஊழியம் செய்த திருப்தி கிடைக்கும் நன்றி



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
இனி (கிறிஸ்த்தவ) விசுவாசிகளுடன் விவாதம் வேண்டாம்.
Permalink  
 


I am Follower of Jesus wrote:
 

 ஆமென் இதனை நான் முற்றிலும் ஆமோதிக்கிறேன், நல்ல முயற்சி சகோதரரே என்னுடைய கருத்தை சொல்லுகிறேன் நம் ஜீவனுள்ள தேவனை பற்றி அறிந்து கொள்ளவும் , புறஜாதியாரையும் ஆண்டவர்குள் வழிநடத்தவும் இந்த தளம் உதவியா இருக்கட்டுமே கிறிஸ்தவர்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லை விவாதம் செய்துகொள்கிறார்கள் என்று பிறர் இடறல் அடையாதபடிக்கும் மாறாக ஜீவனுள்ள தேவனை ஏற்றுக்கொண்டால் அது தேவனுக்கும் சந்தோஷம் நமக்கும் சுவிஷேச ஊழியம் செய்த திருப்தி கிடைக்கும் நன்றி


 

பல கிறிஸ்த்தவ சகோதர்களிடம் பல கருத்துக்கள் குறித்து விவாதித்து எந்த முடிவும் எட்டாமல் போன நிலையில் இருப்பதால் இந்த முடிவு ஒரு சரியான முடிவு என்றே நான் கருதுகிறேன். 
 
நம் தேவன் சிருமைப்படவர்களுக்கும் நெருக்கப்படுகிரவர்களுக்கும் ஆறுதல் அளிக்கும் தேவனாக இருக்கிறார். அவர் சிறுமையும் எளிமயுமானவர்களையே அதிகம் ஆதரிக்கிறார் என்பதை அனேக வசனங்கள் மூலம் அறியமுடிகிறது.   
 
சங்கீதம் 9:9 சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்.
 
ஏசாயா 25:4  , நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும் பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்.
.
இந்நிலையில்  மன கடினத்திநிமித்தம் நாம் செய்யும் எந்த ஒரு செயலையும் அவர் அங்கீகரிப்பது இல்லை என்றே நான் கருதுகிறேன். நாம் சொல்லும் சில கருத்துக்கள் உண்மையாகவே இருந்தாலும் விடாப்பிடியாக வாதிட்டால் நமக்கு மனகடினம் உண்டாகிறது அது தேவனக்கு உகந்தது  அல்ல! அதன்மூலம்  நமது நல்மனதை நாமே இழக்க நேரிடலாம்.

எனவே நாம் எந்நிலையிலும் மன தாழ்மையுடன் நடந்து 
கொள்வது நல்லது எனவே வி(தாண்ட)வாதங்களை தவிர்ப்பது நல்லதுதான்.     
 
எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையும் வசன அடிப்படை யிலான நல்ல கருத்துக்கள் மற்றும் நாம் தியானித்து அறிந்த பயனுள்ள உண்மைகள் மற்றும் நமது அனுபவ சாட்சிகளை  மாத்திரம் பதிவிடலாம்.   
  


-- Edited by SUNDAR on Friday 6th of July 2012 08:17:46 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 35
Date:
Permalink  
 

"எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையும் வசன அடிப்படை யிலான நல்ல கருத்துக்கள் மற்றும் நாம் தியானித்து அறிந்த பயனுள்ள உண்மைகள் மற்றும் நமது அனுபவ சாட்சிகளை மாத்திரம் பதிவிடலாம்"

 

ஆமென் எழுந்து கட்டுவோம் வாருங்கள் நன்றி சகோதரரே



-- Edited by I am Follower of Jesus on Saturday 7th of July 2012 05:48:58 PM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard