இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பணியிடத்தில் அரசியல் தேவையா?!
பணியிடத்தில் அரசியல் தேவையா?! [5 vote(s)]

நமக்கு மட்டும் சாதகம் என்றால் ஓகே தான்
0.0%
அடுத்தவருக்கு பாதகம் வரும் என்றால் செய்யாமல் இருபது தான் நல்லது
0.0%
பணியிடத்திற்கு எதிரான சிந்தனைகள் தவறு
0.0%
ஆரோக்கியமான பின்விளைவுகளை தரும் என்றால் இடுபடலாம்
80.0%
அரசியல் என்பது வேததிற்கேதிரான சூழ்ச்சி
20.0%
தற்காலத்தில் அரசியல் இல்லை என்றால் வேலைக்காகாது!!
0.0%
அடுத்தவர் நமக்கு குழி வெட்டுகிற வேளையில் அரசியல் தேவை
0.0%


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
பணியிடத்தில் அரசியல் தேவையா?!
Permalink  
 


அன்பு சகோதரர,சகோதரிகளே!!


பணியிடங்களில் கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் முன்னேற்றத்திற்காக அரசியல் (politics) செய்யலாமா? செய்வது சரியா?
இத்தகையவைகள் தேவனை மகிமைபடுத்துமா? 

ருவேளை வேதத்தில் உள்ள பின்வரும் சம்பவத்தை போல் கர்த்தரும் அரசியல் செய்யும் ஊழியகாரனை இறுதி நாளில் மெச்சிகொள்வாரா?!

லூக்கா 16:8 அநீதியுள்ள உக்கிராணக்காரன் புத்தியாய்ச் செய்தான் என்று எஜமான் கண்டு, அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாய் ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள்.

அறிந்த சகோதரர்கள் தங்கள் அனுபவங்களையும்,வேத வசனங்களையும் பகிர்ந்து கொள்ளலாமே!!
தேவனுக்கு மகிமை உண்டாகுக!!


-- Edited by JOHN12 on Thursday 2nd of August 2012 04:20:27 PM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

இழிவான ஆதாயத்துக்காக அல்லாமலும் ஒருபக்க சார்பில்லாமலும்  நீதியின் பக்கம் சார்பாக இருந்தால் அலுவலகத்தில் மட்டுமல்ல எங்கு வேண்டுமானாலும் அரசியல் செய்யலாம்.
 
நம் தேவன் நம்மை நீதியாய் நடக்க சொல்வதோடு மட்டுமல்லாது நியாயமும் நீதியும் செய்ய சொல்லியிருக்கிறார்  
 
எரேமியா 22:3 நீங்கள் நியாயமும் நீதியும்செய்து, பறிகொடுத்தவனை ஒடுக்குகிறவனுடைய கைக்குத் தப்புவியுங்கள்;
 
எனவே சுயநல நோக்கமில்லாது, ஒடுக்கபட்டவர்கள் வஞ்சிக்கப்படுகிரவ்ர்கள் போன்றவர்களின் பொது நலனுக்காக அரசியல் செய்வதில் எந்த தவறும் இல்லை என்றே நான் கருதுகிறேன்.
    


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

தாங்களின் கேள்வியிலேயே தவறு இருப்பதுபோல் தெரிகிறது சகோதரரே. உண்மையான ஒரு கிறிஸ்த்தவன் கிறிஸ்துவுக்காகதான் எதையும் செய்யவேண்டுமேயன்றி "நம்முடைய முன்னேற்றம்" என்ற எண்ணமே தவரானதுபோலவே தெரிகிறது.
.
யோவான் 3:30 அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.    என்பதே நமது நோக்கமாக இருப்பது நல்லது.
.
அதாவது நம்மில் கிறிஸ்த்துவின் குணங்கள் பெருகவேண்டும். நம்மிடம் இருப்பதைக்கூட இழந்து போகுதலும் இழக்க துணிதலுமே கிறிஸ்த்தவனுக்கு வேண்டுமேயன்றி இந்த உலகத்தில் முன்னேற்றம் என்பது நம்மை ஆவிக்குரிய வாழ்வில் பின்னுக்கு தள்ளிவிடும். 
.
லுக்கா 17:33 தன் ஜீவனை இரட்சிக்க வகைதேடுகிறவன் அதை இழந்துபோவான்; இழந்துபோகிறவன் அதை உயிர்ப்பித்துக்கொள்ளுவான்.
.
மேலும் கிறிஸ்த்துவானவர் பாவிகளாகிய நமக்காக தன்  ஜீவனையே கொடுத்தவர். அவர்போல அவர் வழிகளில் வாழ அழைக்கபட்ட நாமும் பிறருக்காக எதையும் இழக்க தயாராக இருப்பதே  சிறந்ததேயன்றி, நம்முடய முன்னேற்றத்துக்காக அரசியல் செய்வது ஏற்றதல்ல  என்றே நானும் கருதுகிறேன். 
 


__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

சகோ.நேசன் அவர்களே,

            
            நிச்சயம் தங்கள் கருத்துகளை மதிக்கிறேன்..நாம் உலகத்தில் வேலை செய்யவேண்டியவர்களே  அல்லாது, உலகத்திற்காக வேலைசெய்ய வேண்டியவர்கள் அல்ல. ஆனால் ஏறத்தாழ வேலை செய்யும் அணைத்து  இடங்களிலும் இன்றைக்கு அரசியல் உள்ளது..
அதை குறித்த நம் கிறிஸ்துவ  சகோதரர்களின் கருத்துகளை அறிய வேண்டி கேள்வியை பதிந்தேன்.. இத்தகைய அரசியல் அனேகரது பணி ஈடுபாடுகளையும்,பதவி உயர்வுகளையும் கெடுத்து போடுகிறது.. இவ்விசயத்தில், புறஜாதிகளுக்கு நான் கண்ட சில கிறிஸ்தவர்கள் என கூறி கொள்கிறவர்களும் சளைத்தவர்களாக இல்லை!!

              ஆகவே இத்தகைய அரசியல்களை  நேர்மையான அரசியல் அல்லது தந்திரம் கொண்டு எதிர்கலாமா? அல்லது கர்த்தர் என்பணியில் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும் என்று விட்டு விடலாமா என்பதை தலத்தில் அறிய தோன்றியது.. கர்த்தர் அருளிய உலக பணியிலும் ஞானத்தோடு நடக்க வேண்டும் என்றும், நம் எஜமான்(ஏசுவானவர்) பதவி உயர்வுகளை புத்தி,ஞானம் இவைகளை கொண்டே அருளுகிறார் என்பதினை சகோதரர் இயேசு கூறிய உவமைகளில் இருந்து அறிவீர்களே..

             வேதத்தில் தேவசித்தங்கள் தந்திரங்கள்  மூலமாக நிறைவேறியிருக்கிற காரியங்களை அடியேன் அறிந்திருகிறதினால் எனக்கு இப்படி கேள்வி கேட்க தோன்றியது..confuse

எப்போதும் தேவனுக்கே மகிமை உண்டாகுக!! 


__________________


இளையவர்

Status: Offline
Posts: 35
Date:
Permalink  
 

Nesan wrote:
தாங்களின் கேள்வியிலேயே தவறு இருப்பதுபோல் தெரிகிறது சகோதரரே. உண்மையான ஒரு கிறிஸ்த்தவன் கிறிஸ்துவுக்காகதான் எதையும் செய்யவேண்டுமேயன்றி "நம்முடைய முன்னேற்றம்" என்ற எண்ணமே தவரானதுபோலவே தெரிகிறது.
.
யோவான் 3:30 அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.    என்பதே நமது நோக்கமாக இருப்பது நல்லது.
.
அதாவது நம்மில் கிறிஸ்த்துவின் குணங்கள் பெருகவேண்டும். நம்மிடம் இருப்பதைக்கூட இழந்து போகுதலும் இழக்க துணிதலுமே கிறிஸ்த்தவனுக்கு வேண்டுமேயன்றி இந்த உலகத்தில் முன்னேற்றம் என்பது நம்மை ஆவிக்குரிய வாழ்வில் பின்னுக்கு தள்ளிவிடும். 
.
லுக்கா 17:33 தன் ஜீவனை இரட்சிக்க வகைதேடுகிறவன் அதை இழந்துபோவான்; இழந்துபோகிறவன் அதை உயிர்ப்பித்துக்கொள்ளுவான்.
.
மேலும் கிறிஸ்த்துவானவர் பாவிகளாகிய நமக்காக தன்  ஜீவனையே கொடுத்தவர். அவர்போல அவர் வழிகளில் வாழ அழைக்கபட்ட நாமும் பிறருக்காக எதையும் இழக்க தயாராக இருப்பதே  சிறந்ததேயன்றி, நம்முடய முன்னேற்றத்துக்காக அரசியல் செய்வது ஏற்றதல்ல  என்றே நானும் கருதுகிறேன். 
 

 ஆமென்
போதுமென்ற மனதுடனே கூடிய தேவ பக்த்தியே மிகுந்த ஆதாயம்  (1தீமோ 6:6)

 கர்த்தாவே, என் இருதயம் இறுமாப்புள்ளதல்ல, என் கண்கள் மேட்டிமையுள்ளவைகளுமல்ல; பெரிய காரியங்களிலும், எனக்கு மிஞ்சின கருமங்களிலும் நான் தலையிடுகிறதுமில்லை (சங் 131:1)

மிஞ்சின நீதிமானாயிராதே, உன்னை அதிக ஞானியுமாக்காதே; உன்னை நீ ஏன் கெடுத்துக்கொள்ளவேண்டும்? (பிர 7:16 )



__________________


இளையவர்

Status: Offline
Posts: 35
Date:
Permalink  
 

நம் நம்பிக்கை அரசியல் செய்வதில் இல்லாமல்  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துமீது இருக்கட்டும் "உமக்கு சித்தமானால் எனக்கு அந்த பதவியை தாரும் ஆண்டவரே என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து விடம் கேட்போம் " அவர் நமக்கு உதவுவார் அதை விட்டுவிட்டு  அரசியல் செய்து மனிதனை பிரியப்படுத்தி , தந்திரங்கள் செய்து இது தேவையா ?ஆண்டவர் நம்மை பார்த்து மெச்சிக்கொள்வாரா? நகைப்பார். ஆரோக்கியமான பின்விளைவு தானே என்றாலும் அப்போஸ்தலர் பவுல் என்னகூறுகிறார்

ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்கு நஷ்டமென்று எண்ணினேன்.(பிலி 3:7 )

யார் எப்படி வேணுமென்றாலும் இருந்துட்டு போகட்டும் நியாயம் விசாரிப்பவர் ஒருவர் உண்டு அவர் நியாயம் விசாரிப்பார் ஆனால் உண்மையான கிறிஸ்தவர் என்பவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது என் கருத்து

அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர்.(தானி 2:21 )

 



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

சகோதரரே,


நீங்கள் கூறுகிறபடி பார்த்தால், அரசியல் மற்றும் தந்திரம் என்பவைகள்  கர்த்தரை பிரியபடுதாது ,மனிதர்களை மாத்திரம் பிரியப்படுத்த பார்க்கும் காரியங்கள் மற்றும் இவைகள் சாட்சியான வாழ்க்கை வாழ உதவாது என தாங்கள் நினைபதாக எனக்கு தெரிகிறது . 

///நம்பிக்கை அரசியல் செய்வதில் இல்லாமல்  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துமீது இருக்கட்டும் "உமக்கு சித்தமானால் எனக்கு அந்த பதவியை தாரும் ஆண்டவரே என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து விடம் கேட்போம் " அவர் நமக்கு உதவுவார் அதை விட்டுவிட்டு  அரசியல் செய்து மனிதனை பிரியப்படுத்தி , தந்திரங்கள் செய்து இது தேவையா ?ஆண்டவர் நம்மை பார்த்து மெச்சிக்கொள்வாரா? நகைப்பார். ஆரோக்கியமான பின்விளைவு தானே என்றாலும் அப்போஸ்தலர் பவுல் என்னகூறுகிறார்

ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்கு நஷ்டமென்று எண்ணினேன்.(பிலி 3:7 )

யார் எப்படி வேணுமென்றாலும் இருந்துட்டு போகட்டும் நியாயம் விசாரிப்பவர் ஒருவர் உண்டு அவர் நியாயம் விசாரிப்பார் ஆனால் உண்மையான கிறிஸ்தவர் என்பவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது என் கருத்து///
ற்றபடி நமக்கு லாபம் எல்லாம் கர்த்தருக்குள் அடங்கி இருப்பதே என்கிற தங்களின் ஆணித்தனமான பதில் தவிர வேறொரு பதில் இத்திரியின் கேள்விகளுக்கு மிக சரியாய் இருக்காது...
வேதத்தை ஆராய்ந்து பார்க்கும் பொது யெகூ என்கிற ராஜா தந்திரமாய் தேவ காரியத்தை முடித்தது குறித்து எழுதபட்டுள்ளது..
I இராஜாக்கள் 19:17 சம்பவிப்பதாவது: ஆசகேலின் பட்டயத்திற்குத் தப்பினவனை யெகூ கொன்றுபோடுவான்; யெகூவின் பட்டயத்திற்குத் தப்பினவனை எலிசா கொன்று போடுவான்.

ஆகாபின் குடும்பத்திற்கு விரோதமாய் கர்த்தர் எழுப்பினவர் தான் யெகூ. இவரை கர்த்தர் தீர்க்கதரிசியின் புதிரரனை கொண்டு ராஜாவாய் அபிஷேகம் பண்ணுகிறார்..

இவர் தனக்கு ராஜ்யபாரம் நிலைபட்டபோது கர்த்தருக்காக பக்திவைராக்கியம் கொண்டு ஒரு தந்திரம் செய்தார்.. 

I இராஜாக்கள் 10:18 பின்பு யெகூ ஜனங்களையெல்லாம் கூட்டி, அவர்களை நோக்கி: ஆகாப் பாகாலைச் சேவித்தது கொஞ்சம், யெகூஅவனைச் சேவிப்பது மிகுதி.

எனகூறி மக்கள் அனைவரையும் திரட்டினார்.

II இராஜாக்கள் 10:19 இப்போதும் பாகாலின் சகல தீர்க்கதரிசிகளையும், அவனுடைய சகல பணிவிடைக் காரரையும், அவனுடைய சகல ஆசாரியரையும் என்னிடத்தில் அழைப்பியுங்கள்; ஒருவனும் குறையலாகாது; நான் பாகாலுக்குப் பெரிய பலியிடப்போகிறேன்; வராதவன் எவனோ அவன் உயிரோடிருப்பதில்லை என்றான்; பாகாலின் பணிவிடைக்காரரை அழிக்கும்படி யெகூ இதைத் தந்திரமாய்ச் செய்தான்.

II இராஜாக்கள் 10:11
 யெஸ்ரயேலிலும் ஆகாபின் குடும்பத்தாரில் மீதியான யாவரையும், அவனுக்கு இருந்த எல்லா மந்திரிகளையும், அவனைச்சேர்ந்த மனுஷரையும், அவனுடைய ஆசாரியர்களையும், அவனுக்கு ஒருவரையும் மீதியாக வைக்காதபடிக்கு யெகூகொன்றுபோட்டான்.

இது கர்த்தரின் மனது நினைத்த காரியம் என வேதமும் கூறுகிறது..யெகூ இவ்வாறு செய்ததன் பலன் அபரிமிதமானது.. தாவீதின் சிங்காசனம் யெகூவின் தலைமுறைக்கு நான்காம் தலைமுறைமட்டும் அருளப்பட்டது...

II இராஜாக்கள் 10:30 கர்த்தர் யெகூவை நோக்கி: என் பார்வைக்குச் செம்மையானதை நீ நன்றாய்ச் செய்து, என் இருதயத்தில் இருந்தபடியெல்லாம் ஆகாபின் குடும்பத்துக்குச் செய்தபடியினால், உன் குமாரர் இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் நாலு தலைமுறையாக வீற்றிருப்பார்கள் என்றார்.

ஆக., இப்போது தந்திரம் என்ற வார்த்தையே தேவனுக்கு புறம்பானது என நாம் கருத தேவை இல்லை என்பது இந்த வேத சாட்சியின் மூலம் தெளிவாகிறது..

மேலும் யெகூ இந்த தந்திரத்தை பக்தி வைராக்கியத்துடன் அபரிமிதமான பக்தியுடன் கர்த்தருக்காக செய்தார்..அவர் தாம் அழைக்கப்பட்ட காரியத்தை துல்லியாமாய் அறிந்திருந்தார். அவர் சேனாதிபதியை இருந்தும் தம் அண்டவனான ராஜாவையும், அவன் வீட்டாரையும் அழிக்க தயங்கவில்லை. கவனித்தீர்களேன்றால் யெகூ தேவ வெளிபாடு பெறும்வரை ராஜாவிற்கு கீழ்பட்டவராய் தான் இருந்தார். அபிஷேகித்த  தேவனின் காரியத்தையும் அறிந்தபோது கிரியை செய்து பக்தி வைராக்கியம் பாராட்டினார்.. 

பணியிடத்தில் தாழ்மையாய் இருப்பதாக எண்ணி நமக்கு நாமே எண்ணிக்கொண்டு அநியாயமாய் நடக்கும் உயர் அதிகாரிகளுக்கு சாந்தமாய் துணை போவதது கர்த்தரை திருப்தி படுத்தும் என எண்ணிகொள்ளுதல்  தவறு.. கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் புதிஈனதிர்க்கு அடிமைகளாய் இருப்பதை தேவன் விரும்புகிறதும் இல்லை . 

சரியாய் ஜெபித்து தேவ வெளிபாடு பெற்று செய்ய வேண்டிய காரியத்தை கர்த்தர் மனதின்படியே செய்தால்  நம் சந்ததி வரைக்கும் நிலைநிற்கும் ஆசிர்வாதங்களை பெறமுடியும் என்பதை சகோதரர்கள் அறிய வேண்டியது!!!


தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாகுக!!


-- Edited by JOHN12 on Monday 13th of August 2012 04:39:57 PM

__________________


இளையவர்

Status: Offline
Posts: 35
Date:
Permalink  
 

சகோதரரே நல்ல தகவல் சொல்லியிருக்கிறீர்கள் கட்டாயம் ஆண்டவருக்காக தந்திரம் செய்யாலாம் பவுல் கூட இப்படி கூறியுள்ளார்

நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள். (லூக் 16:9)
நன்றி முதலில் உங்களுடைய கேள்வி என்ன

\\பணியிடங்களில் கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் முன்னேற்றத்திற்காக அரசியல் (பொலிடிcச்) செய்யலாமா? செய்வது சரியா?
இத்தகையவைகள் தேவனை மகிமைபடுத்துமா? //



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

அன்பு சகோதரரே,

கிறிஸ்துவர்கள்  பணியிடத்தில் தங்கள் முன்னேற்றத்திற்காக  அரசியல்  செய்யலாமா?  என்பது  தான்  திரியின்  தலைப்பு... 

இதற்கான எனது பதிலையும் தருகிறேன்.. 
           1 . கிறிஸ்துவினுடையவர்கள், தங்கள் முன்னேற்றமாக ஆவிக்குரிய வளர்ச்சியை கருதுபவர்களானால் அவர்கள் அரசியல் செய்ய தகுதி உடையவர்கள். இவர்கள் செய்யும் தந்திரம் தேவனுக்கு மகிமை உண்டாக்கும்..
          2 . கிறிஸ்துவினுடையவர்கள் என கூறிக்கொண்டு , தங்கள் முன்னேற்றமாக உலபிரகரமான வளர்ச்சியை பிரதானமாக கருதுபவர்களானால் அவர்கள் உலகத்தை திருப்தி படுத்தும் அரசியலை செய்கிறவர்கள்.இது துன்மார்க்கம்.பாவமாய் ஆரம்பித்து பாவமாய் தான் முடியும்..இவர்கள் வேதம் குறிப்பிடும் தந்திரக்காரர் என்னும் சாராரில் ஒருவராய் என்னபடுவர். வளர்ச்சி அடைபவர்கள் போல அவர்கள் காணபட்டாலும்,முடிவில் அவர்கள் கைகொண்ட அனைத்து யோசனைகளும் அவமாகும்.


///ஆண்டவருக்காக தந்திரம் செய்யாலாம் பவுல் கூட இப்படி கூறியுள்ளார் ///

பவுல் இவைகளை குறித்து என்ன பேசி இருக்கிறார் என சகோதரர் கூறினால் பிரயோஜனமாய் இருக்கும்..தனிப்பட்ட கருத்துகள் இருந்தாலும் சகோதரர் பதியலாம்..
கர்த்தருக்கு மகிமை உண்டாகுக!!
---------------------------------------------------------------------------------
நீதிமொழிகள் 28:7 வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள புத்திரன்;


__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard