இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கடவுள் மனிதனை ஏன் படைத்தார்?


நமது நண்பர்

Status: Offline
Posts: 136
Date:
கடவுள் மனிதனை ஏன் படைத்தார்?
Permalink  
 


hmm தன்னை துதிப்பதட்டு   அல்லது தன்னோடு உறவாடுவதர்க்கா?  அப்படியானால் அது கடவுளின் சுயநலமான  ஒரு செயலாகுமல்லவா? கடவுள் ஒரு சுயநலவாதியா? தன்னை துதிப்பதட்கு அல்லது தன்னோடு உறவாடுவதர்க்காக மனிதனை கடவுள் படைத்தார் என்றால் அவர் அவனை ஆசைகள், இச்சைகள், உணர்ச்சிகள் என்பவை இல்லாமல் அவரை துதிக்கும் அல்லது அவரோடு உறவாடும் குணத்தோடு மட்டும் அவனை படைத்திருக்கலாமல்லவா? அப்படி படைத்ததினால் தானே அவன் பாவம் செய்ய வேண்டி வந்தது? மனிதன் தன்னை படைக்கும் படி இறைவனிடம் கேட்கவில்லையே . தனது விருப்பப்படி மனிதனை கடவுள் படைத்துவிட்டு  ''இப்படித்தான் வாழ வேண்டும் இல்லாவிட்டால் நரக தண்டனை'' என்று கூறுவது அடிமைத்தனமல்லவா? மனிதன் விரும்பி பாவம் செய்வதில்லையே . அவனுக்குள் இருக்கும் ஆசை , இச்சை , உணர்ச்சி ,தானே பாவம் செய்ய தூண்டுகிறது? அதை படைத்தது  இறைவன்தானே? அவர் படைத்த ஆசை , உணர்ச்சி, இச்சை களை  பிசாசு தூண்டி விட நாம் பாவம் செய்கிறோம். ஆசை , உணர்ச்சி, இச்சை இல்லாவிட்டால் பிரச்சனை இல்லையே? ஏன் ஆண்டவரே இப்படி செய்தீர் என கடவுளை பார்த்து கேட்க முடியாது. அவர் குயவன் . நாம் களிமண். எனவேதான் உங்களிடம் இதை கேட்கிறேன். நாம் களிமண் என்றாலும் , இந்த களிமண் கள்  ஆசை , உணர்ச்சி, இச்சை இல்லாமல் இருந்தால் இந்த கேள்வி  கேட்க வேண்டியதில்லை. கடவுள் ஒரு போதும் தவறு செய்ய மாட்டார் என்பது  திண்ணம் . நிச்சயம் அவருடைய பக்கம் சரியான பதில் இருக்கும். ப்ளீஸ் அந்த பதிலை கூறுங்கள்.



__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

t dinesh wrote:

hmm தன்னை துதிப்பதட்டு   அல்லது தன்னோடு உறவாடுவதர்க்கா?  அப்படியானால் அது கடவுளின் சுயநலமான  ஒரு செயலாகுமல்லவா? கடவுள் ஒரு சுயநலவாதியா? தன்னை துதிப்பதட்கு அல்லது தன்னோடு உறவாடுவதர்க்காக மனிதனை கடவுள் படைத்தார் என்றால் அவர் அவனை ஆசைகள், இச்சைகள், உணர்ச்சிகள் என்பவை இல்லாமல் அவரை துதிக்கும் அல்லது அவரோடு உறவாடும் குணத்தோடு மட்டும் அவனை படைத்திருக்கலாமல்லவா? அப்படி படைத்ததினால் தானே அவன் பாவம் செய்ய வேண்டி வந்தது? மனிதன் தன்னை படைக்கும் படி இறைவனிடம் கேட்கவில்லையே . தனது விருப்பப்படி மனிதனை கடவுள் படைத்துவிட்டு  ''இப்படித்தான் வாழ வேண்டும் இல்லாவிட்டால் நரக தண்டனை'' என்று கூறுவது அடிமைத்தனமல்லவா? மனிதன் விரும்பி பாவம் செய்வதில்லையே . அவனுக்குள் இருக்கும் ஆசை , இச்சை , உணர்ச்சி ,தானே பாவம் செய்ய தூண்டுகிறது? அதை படைத்தது  இறைவன்தானே? அவர் படைத்த ஆசை , உணர்ச்சி, இச்சை களை  பிசாசு தூண்டி விட நாம் பாவம் செய்கிறோம். ஆசை , உணர்ச்சி, இச்சை இல்லாவிட்டால் பிரச்சனை இல்லையே? ஏன் ஆண்டவரே இப்படி செய்தீர் என கடவுளை பார்த்து கேட்க முடியாது. அவர் குயவன் . நாம் களிமண். எனவேதான் உங்களிடம் இதை கேட்கிறேன். நாம் களிமண் என்றாலும் , இந்த களிமண் கள்  ஆசை , உணர்ச்சி, இச்சை இல்லாமல் இருந்தால் இந்த கேள்வி  கேட்க வேண்டியதில்லை. கடவுள் ஒரு போதும் தவறு செய்ய மாட்டார் என்பது  திண்ணம் . நிச்சயம் அவருடைய பக்கம் சரியான பதில் இருக்கும். ப்ளீஸ் அந்த பதிலை கூறுங்கள்.


 Sooopper கேள்வி சகோதரரே, மனதில் இருக்கும் கேள்விகளை எல்லாம் கொட்டிவிட்டீர்கள்.

நிங்கள் எந்திரன் படம் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அந்த படத்தில் ஒரு விஞ்ஞானி  முதலில் தன்னுடைய கட்டுப்பாட்டில் மட்டுமே இயங்ககூடிய ஒரு ரோபோட்டை உருவாக்குவார். அந்த ரோபோ அவர் சொன்னதை அப்படியே செய்துகொண்டு வரும். பின்னர் அந்த ரோபோவுக்கு உணர்ச்சிகளை கொடுக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டு வெற்றியும் பெறுவார். அதன் மூலம் அந்த ரோபோ கோபம் /வெறுப்பு /இன்பம்/ துன்பம்/காதல் போன்ற பண்புகளை பெற்றுவிடும். பின்னர் அந்த ரோபோ அந்த விஞ்ஞானியின் காதலியே கடத்தி, வேண்டாத வேலைகள் எல்லாம் செய்ய ஆரம்பித்துவிடும். 
.
அதனால் மிகுந்த  கோபம் மூண்ட அந்த விஞ்ஞானி இறுதியில் அந்த ரோபோவை ஒவ்வொரு பாகமாக அழிப்பார். அப்பொழுது அந்த ரோபோ அந்த விஞ்ஞானியை பார்த்து "நானா டாக்டர் என்னை படையுங்கள்  என்று உங்களிடம் கேட்டேன்?" "நானா டாக்டர் எனக்கு உணர்ச்சிகளை கொடுங்கள என்று உங்களிடம் கேட்டேன்?" நீங்களாக  என்னை படைத்துவிட்டு நீங்களாக  எனக்கு உணர்ச்சிகளை கொடுத்துவிடடு இப்பொழுது என்மேல் கோபபட்டு என்னை அழிப்பதில் என்ன நியாயம்? என்பது போல் பல கேள்விகளை அந்த ரோபோ கேட்கும். அதை பார்க்க ரொம்ப பாவமாக இருக்கும். அந்த கேள்விக்கு ஒப்பாக இருக்கிறது உங்கள் கேள்விகள்.
.
விவிலியத்திலும் இதற்க்கு ஒப்பாகவே கருத்துக்கள் இருக்கிறது. 
.
இறைவன் மனுஷனை படைக்கிறார். அவனுக்கு உணர்ச்சிகளை கொடுக்கிறார். அவன் இருக்கும் இடத்தில் நன்மை தீமை அறியும் கனியையும் வைக்கிறார்.  ஒன்றுமே அறியாத ஆதாம் ஏவாளை தந்திரம் நிறைந்த சாத்தான் ஏமாற்றி பாவம் செய்ய வைக்கிறான். சாத்தான் அவனை ஏமாற்றி அந்த கனியை சாப்பிட வைக்கும்போது அவர் கண்டுகொள்ளவே இல்லை. கடைசியில் உலகில் பாவம் பெருத்தபோது மனுஷனை படைத்ததற்காக மனஸ்தாப படுகிறார். பின்னர் (நோவாவை தவிர) பெரியோர் குழந்தைகள் என்று பார்க்காமல் எல்லோரையும் கூண்டோடு நீரினால் அழிக்கிறார். 
.
அதன் பின்னரும் பாவம் தொடர்கிறது இறுதியில் தன சொந்த குமாரனையே  சித்திரவதைக்கு ஒப்புகொடுக்கிறார். ஆகினும் இன்னும் பாவம் செய்பவனுக்கு நித்திய நித்திய  நரகம் வேறு காத்திருக்கிறதாம். (இதற்க்கு அந்த டாக்டர் பரவாயில்லை என்பதுபோல் தெரிகிறது. அவர் அந்த ரோபோவை அழிக்கத்தான் செய்தார் ஆனால் இங்கோ நித்திய நரகம்)  
.
படத்தில் வரும் டாக்டர் ஒரு "மனுஷன்" ஆகையால் அந்த ரோபோவுக்கு உணர்சிகளை கொடுத்தால் என்ன ஆகும், அது எப்படி தன்னை பாதிக்கும் என்று அறியாமல் அவர்  செய்திருக்கலாம். ஆனால் இறைவன் அப்படிபட்டவர் அல்லவே. சர்வத்தையும் உண்டாக்கி ஆண்டு நடத்துபவர் அவர் செய்வதில் ஏதாவது முக்கிய காரணம் எதுவும் இல்லாமல் இருக்க வாய்ப்பே இல்லை என்பது உறுதி. அது நமக்கு மறைவாக இருக்கிறது. 
.
நமக்கு மறைவாக இருக்கும் அந்த முக்கிய காரணம் என்னவென்று எனக்கு சரியாக தெரியவில்லை. அறிந்த அன்பர்கள் வசன ஆதாரத்தோடு விரைவில் தங்களுக்கு பதில் தருவார்கள்     

 

 



-- Edited by Nesan on Monday 15th of October 2012 03:43:25 PM

__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 136
Date:
Permalink  
 

பதிலை எதிர் பார்த்திருக்கிறேன்

__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH



வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

ன்பான சகோதரரே,


இதே கேள்வியை தான் நானறிந்த கமயுனிஸ்டு நண்பர் என்னை கேட்டார். அப்போது அவருக்கு பதிலளித்ததை பார்க்கிலும் தற்போது இன்னும் தெளிவாக பதிலளிக்க இயலும் என நம்புகிறேன். 
 சகோ.தினேஷ்///ஏன் ஆண்டவரே இப்படி செய்தீர் என கடவுளை பார்த்து கேட்க முடியாது. அவர் குயவன் . நாம் களிமண். எனவேதான் உங்களிடம் இதை கேட்கிறேன். நாம் களிமண் என்றாலும் , இந்த களிமண் கள்  ஆசை , உணர்ச்சி, இச்சை இல்லாமல் இருந்தால் இந்த கேள்வி  கேட்க வேண்டியதில்லை. கடவுள் ஒரு போதும் தவறு செய்ய மாட்டார் என்பது  திண்ணம் . நிச்சயம் அவருடைய பக்கம் சரியான பதில் இருக்கும். ப்ளீஸ் அந்த பதிலை கூறுங்கள்.///
பொதுவாக தேவனாகிய குயவன் வெளிப்படுத்தாமல் அவரது திட்டங்களை குறித்தும்,அவரது வழிகளை குறித்தும் களிமண்ணாகிய நாம் அறிந்து கொள்ள இயலாது. மற்றெந்த களிமண்ணும் கர்த்தரிடத்தில் இருந்து காரியம் வெளிபடுத்தபடாமல் நீங்கள் கேட்ட இந்த 'ஆதி திட்டம்' குறித்த கேள்விக்கு பதிலையும் அளிக்க இயலாது.

ஆணவத்தோடு,லெளகீக துக்கத்தோடு, சலிப்போடு,தடுமாற்றத்தோடு,பதட்டத்தோடு  'தேவனே  ஏன் இவ்வாறு செய்கிறீர்' என ஒருவர் கேட்பாரேயானால் அது பாவம். அதே போல் தேவ  ஆவியினால் நடத்தபடுகிற மகன், தேவனாகிய தகப்பனிடத்தில் அவரது காரியத்தை குறித்து விவனவினால் தெரிவிக்காமல் இரார்.யாது பாவமல்ல.கேளுங்கள் கொடுக்கப்படும் என்கிற தேவனல்லவா அவர். தேவ மகிமைகாகவும், பக்தி விருத்தைகாகவும் இதைபோன்ற கேள்விகள் தேவனிடத்தில் முன்வைக்கப்படுமானால், அதற்கு தேவன் பதிலளிக்காமல் இரார். ஆபகூக், எரேமியா போன்றவர்கள் தேவனிடத்தில் புலம்பினபோது யதார்த்தத்தை போதிக்கும் கர்த்தர் அவர்களுக்கு தம்முடைய காரியத்தை அறிவித்தாரே..
பாருங்கள் இவர்களது கேள்வியும்,தேவனுடைய  பதிலும்...
எரேமியாவின் கேள்வி..
எரேமியா 12:1. கர்த்தாவே, உம்மோடே நான் வழக்காடப்போனால், தேவரீர் நீதியுள்ளவராமே; ஆகிலும் உம்முடைய நியாயங்களைக் குறித்து உம்மோடே நான் பேசும்படி வேண்டுகிறேன்; ஆகாதவர்களின் வழி வாய்க்கிறதென்ன? துரோகஞ்செய்துவருகிற அனைவரும் சுகித்திருக்கிறதென்ன?

தேவனுடைய பதில்..
எரேமியா 12:1. நீ காலாட்களோடே ஓடும்போதே உன்னை இளைக்கப்பண்ணினார்களானால், குதிரைகளோடே எப்படிச் சேர்ந்து ஓடுவாய்? சமாதானமுள்ள தேசத்திலேயே நீ அடைக்கலம் தேடினால், யோர்தான் பிரவாகித்து வரும்போது நீ என்னசெய்வாய்?

ஆபகூக்கின் கேள்வி.. 
ஆபகூக் 1:13. தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே; பின்னை துரோகிகளை நீர் நோக்கிக்கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப் பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மௌனமாயிருக்கிறதென்ன?

ஆபகூக் 1:14. மனுஷரைச் சமுத்திரத்து மச்சங்களுக்கும், அதிகாரியில்லாத ஊர்வனவற்றிற்கும் சமானமாக்குகிறதென்ன?
தேவனுடைய வெளிபடுத்தளுக்கு பின் ஆபகூகிடமிருந்து சங்கீதம் பிறக்கிறது!!!
ஆபகூக்3:2,17,18 கர்த்தாவே, நீர் வெளிப்படுத்தினதை நான் கேட்டேன், எனக்குப் பயமுண்டாயிற்று; கர்த்தாவே, வருஷங்களின் நடுவிலே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும், வருஷங்களின் நடுவிலே அதை விளங்கப்பண்ணும், கோபித்தாலும் இரக்கத்தை நினைத்தருளும்.
அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின்பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும்,
நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்.
ஆகவே நம்முடைய கேள்விகள் தேவ பக்தியோடும், விசுவாசத்தோடும் முன்வைக்கபடுமேயானால் பதில் நிச்சயம் உண்டு என சகோதரர் அவர்கள் விசுவாசியுங்கள். கர்த்தர் தங்களுக்கு காரியத்தை வெளிபடுத்த வல்லவராய் இருக்கிறார். ஆபகூக், எரேமியா போன்ற தம்முடைய தீர்க்கதரிச்களுக்கு பதில் சொன்ன தேவன் தங்களுக்கும் பதில் சொல்ல வல்லவராய் இருக்கிறார் என விசுவாசியுங்கள். ஊழியரான தாங்கள் தனிப்பட்ட வாழ்கையில் தேவனுடைய பதிலை காண தேடுவதே சால சிறந்தது!! 

தங்களுடைய கேள்விக்கு என்னுடைய பதிலையும் நான் அறிந்தவைகளில் இருந்து தருகிறேன்..

தேவனுக்கே மகிமை உண்டாகுக!!!


-- Edited by JOHN12 on Tuesday 16th of October 2012 05:08:44 PM

__________________


இனியவர்

Status: Offline
Posts: 52
Date:
Permalink  
 

*****கடவுள் மனிதனை ஏன் படைத்தார்?*****

======================================

என்னுடைய கருத்துபடி கடவுள் மனுஷனை படைத்து அவனை நல்லவனா கெட்டவனா சோதித்தரிகிரார்

சங்கீதம் 11:5 கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார்;

அவனை சோதிப்பதர்க்கு சாத்தானை அவர்தானே அனுமதிக்கிரார்

பின்னர் அவனவன் கிரியைக்கு தக்க பலனை அளிக்கிரார்

நேர்மையாக நடந்த நல்லவனுக்கு நித்திய ஜீவன் தீமையெ செய்த கெட்டவனுக்கு நித்திய  அழிவு.


முக்கியமாக கடவுள் மனுஷனை படைக்க காரணம் நித்திய ஜீவனுக்கு தகுதியுள்ள நல்லவர்கலை தேர்ந்து எடுப்பதர்க்குதான்.

எரேமியா 17:10 கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

நோக்கமற்ற படைப்பு என்று எதுவும் இல்லை. தேவனும் ஒரு நோக்கத்தோடு மனிதர்களை தமது சாயலாய் படைத்தார்.

மல்கியா 2:15 அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே. பின்னை ஏன் ஒருவனைப்படைத்தார்தேவபக்தியுள்ள, சந்ததியைப் பெறும்படிதானே...
அப்போஸ்தலர் 17:26 மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்;
தேவ சந்ததியை பெறுவதே மனிதனைக் குறித்த தேவனின் நோக்கமாய் இருந்தது. அதற்காகவே மனிதனுக்கு தேவையான அனைத்தையும் அவனைபடைக்கும் முன்னதாக படைத்து  முடித்தார். அவரது சாயலை படைக்கப்பட்ட விசேஷத்தை உடையவர்களும் நாம் தான்.

ஆதியாகமம் 1:27 தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.
சோதனை இல்லாமல் தேவ பக்தியுள்ள சந்ததியை பெறுவதெப்படி? ஒருவேளை படைக்கும்போதே கீழ்படிதலின் ஆவியோடு அவனை படித்திருந்தால் படைக்கப்பட்டவன் மனிதனாய் இராமல் தேவதூதனாய் இருந்திருப்பான்.
I கொரிந்தியர் 15:40 வானத்துக்குரிய மேனிகளுமுண்டு, பூமிக்குரிய மேனிகளுமுண்டு; வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே;

ஆனால் தேவன் தம்முடைய ஆவியை மனான மாம்சதிற்குள் அனுப்பி ஜீவாத்துமாவை ஏற்படுதினபடியினால் அவன் பணிவிடை ஆவியை பெறாமல் மனித ஆவியை பெற்றிருக்கிறான். தேவ தூதர்களை போல அல்லாமல் இவன் உண்டாகும்போதே சுயாதீனனாய் இருந்தான். பூமியும் கர்த்தரால் இவனுக்கு கொடுக்கப்பட்டது.

சங்கீதம் 115:16 வானங்கள் கர்த்தருடையவைகள்பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார்.
படைக்கப்பட்டவைகள் அனைத்தும் வானத்திலும்,பூமியிலும் அடங்கிவிடும்.. அவ்வாறிருக்க தேவன் பூமியை மனிதனுக்கு  தந்திருக்கிறார். தேவ தூதர்களுக்கோ பூமி கொடுக்கப்படவில்லை. அவர்களுக்கு பூமியின் மேல் ஆளுகையும் அளிக்கபடவில்லை.

தேவன் பூமியை மனிதருக்கு கொடுத்தார் என சொல்கிற அதே வேதம், படைக்கப்பட்டவைகள் அனைத்தும் குமாரனாகிய இயேசுவிற்காக படைக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது.
ரோமர் 11:36 சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.
இதிலிருந்து, இயேசுவானவர் துன்மார்க்கர் நிறைந்த உலகத்தில் மனுஷனாய் பிரக்கவேண்டுவதன் ஆதி தீர்மானத்தை அறிய முடிகிறது. தமது சாயலற்றவர்களாய் தேவன் மனிதனை படைக்காதிருந்தால் மனுஷ(மாம்ச) சாயலுள்ளவராய் அவரால் பிறக்க கூடுவதேப்படி?   
ரோமர் 8:3 அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.

ரோமர் 8:29 தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;
II தீமோத்தேயு 1:9 அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.

ஆகவே நியாயபிரமானத்தின்படியும்,அதின் நிறைவேருதலாகிய குமாரனனின் மூலமும் தேவ பக்தியுள்ள சந்ததியை அழைப்பது தேவனுடைய ஆதிதீர்மானம் என்பதை அறிய இயலுகிறது.இந்த தேவபக்தியுள்ள சந்ததியை பெற பிசாசு தேவதீர்மானத்தின் படி விழுந்தான்.அவனது விழுகை நம்மை சோதிப்பதற்கு எதுவாய் அமைந்தது.இதை எதற்கு ஒப்பிடலாம் என்றால்,புறஜாதிகளின் இரட்சிப்பு எவ்வாறு இஸ்ரவேலரின் விழுகையினால்  வந்ததோ அதைப்போல. ஆம் இஸ்ரவேலரின் விழுகை தேவ திட்டபடியானது என்றால் பிசாசின் விளுகையும் தேவ திட்டபடியானது தான்.பிச்சசிர்காக புலம்பும் தேவன் இஸ்ரவேலருகாகவும் புலம்புகிறாரே!! பிசாசின் விழுகை பூமியில் நன்மை தீமை பரிபூரணப்படவும், தேவபக்தியுள்ள ஜனம் பிரிக்கப்படவும் நிகழ்ந்தது.. ஆனால் இஸ்ரவேலர் மீண்டும் எழும்புவார்கள். பிசாசோ இல்லாமலே போவான்.

ரோமர்11 :11.12 இப்படியிருக்க, விழுந்துபோகும்படிக்கா இடறினார்கள் என்று கேட்கிறேன், அப்படியல்லவே; அவர்களுக்குள்ளே வைராக்கியத்தை எழுப்பத்தக்கதாக அவர்களுடைய தவறுதலினாலே புறஜாதிகளுக்கு இரட்சிப்பு கிடைத்தது. அவர்களுடைய தவறு உலகத்திற்கு ஐசுவரியமும், அவர்களுடைய குறைவு புறஜாதிகளுக்கு ஐசுவரியமுமாயிருக்க, அவர்களுடைய நிறைவு எவ்வளவு அதிகமாய் அப்படியிருக்கும்.

பிசாசு அழிந்து போக காரணம், போற்றுதலுக்குரிய ஆதி மேன்மையை இழந்து, இடருதலுக்கு வாய்ப்பில்லாத பரலோகத்தில் இடறி விழுந்ததற்காகவே!!! இதுவும் தேவ திட்டத்தில் அடக்கும்,.மனுமக்கள்  அனைவரையும் கீல்படியாமைக்குள் அடைத்து அவர்கள் மேல் இறங்கவேண்டி இப்படி ஆயிற்று.. 
ரோமர்11 :32. எல்லார்மேலும் இரக்கமாயிருக்கத்தக்கதாக, தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார்.
பிசாசில்லாமல் கீழ்படியாமை  உண்டாவதேப்படி. ஆகவே தான் பிசாசானவனை சோதனைக்காரன் என வேதம் சொல்லுகிறது.
மத்தேயு 4:3 அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்.

I தெசலோனிக்கேயர் 3:5 ஆகையால், நான் இனிப் பொறுத்திருக்கக்கூடாமல், எங்கள் வேலை வீணாய்ப் போகத்தக்கதாகச் சோதனைக்காரன் உங்களைச் சோதனைக்குட்படுத்தினதுண்டோவென்று, உங்கள் விசுவாசத்தை அறியும்படிக்கு, அவனை அனுப்பினேன்.
ஆகவே தேவபக்தயுள்ள ஜனமாய்  நாம் காணப்பட, பாடுகள் நிறைந்த இடுக்கலான வழியிலே வழியும், சத்தியமும்,ஜீவனுமான இயேசுவின் மாதிரியை பின்பற்றி பிரவேசிக்க வேண்டியுள்ளது. நாமும் பிரவேசிக்க பிரயாசப்படுவோம். 
   
யூதா1 :24.25 வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும், தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென். 
கர்த்தருக்கே மகிமை உண்டாகுக!!!


__________________


இளையவர்

Status: Offline
Posts: 29
Date:
Permalink  
 

கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக!

சுருக்கமாக சொல்வது என்றால்,

பரலோகத்தில் கேருபீன்கள், சேராபீன்கள் மற்றும் தூதர்கள் தேவனை ஆராதித்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா! அதைப்போலவே அவர் உண்டாக்கிய இப்பூமியிலும் அவரை ஆராதிக்கும்படியாய், அவருடைய சாயலாய் மனுக்குலத்தை உண்டாக்கினார்.

மனிதர்களுக்கு நன்மை தீமை அறிந்துகொள்ளும் அறிவு இருப்பதால், மனுக்குலம் முழுவதும் அவரை தேவன் என்று ஏற்றுக்கொள்ளாதபடி, விசுவாசிகளாகிய நாம் மட்டும்தான் அவரை ஆராதித்துக் கொண்டிருக்கிறோம். இதன் மூலம் தேவ சந்ததி இப்பூமியில் உண்டாக்கப்படும்.

தேவனுக்கு மகிமை உண்டாவதாக!



__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 136
Date:
Permalink  
 

சுந்தர் அண்ணா வின் மௌனம் கலையட்டும் . அண்ணா உங்கள் பதிலை எதிர் பார்க்கிறேன் .



-- Edited by t dinesh on Thursday 18th of October 2012 09:29:32 PM



-- Edited by t dinesh on Thursday 18th of October 2012 09:30:02 PM

__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

t dinesh wrote:

சுந்தர் அண்ணா வின் மௌனம் கலையட்டும் . அண்ணா உங்கள் பதிலை எதிர் பார்க்கிறேன் .


ன்னுடைய பதிலை எதிர்பாப்பதர்க்கு நன்றி சகோதரரே! ஆகினும் சகோதரர்கள் பல விதமான கருத்துக்கள் நம்பிக்கையில் இருக்கிறார்கள். அதது அவரவருக்கு சரியானதாகவும் திருப்தியை தருவதாகவும் இருக்கலாம். அதில் நான் தலையிட விரும்பவில்லை. என்னுடைய கருத்து சற்று மாறுபட்டது! பரிசுத்தராகிய தேவனை தீமையை உலகத்துக்குள் அனுமதித்தவராக என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை! எனவே மேலே சொல்லபட்டுள்ள கருத்துக்களை என்னால் ஏன் ஏற்க்க முடியவில்லை என்பதற்கான காரணத்தை இங்கு தருகிறேன்.

1. மல்கியா 2:15படி "தேவ பக்தியுள்ள சந்ததியை பெறவேண்டும்"என்பது மாத்திரமே தேவனின் பிரதான நோக்கமாக இருந்தால் தற்போதைய நிலைப்படி தேவன் தனது நோக்கத்தில் திட்டத்தில் தோல்வி அடைந்ததுபோல் தெரிகிறது. காரணம் இன்றைய உலகில் தேவபக்தியைவிட பிசாசின் பக்தி நிறைந்தவர்கள்தான் அதிகமதிகமாக கூட்டம் கூட்டமாக பெருகி போனார்கள். வேதாகமமே அந்த தோல்வியை ஒத்துகொள்வதுபோல்:
.
சங்கீதம் 14:3 எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை. என்று சொல்கிறது.
.
தேவன் தன சொந்த குமாரனை பலியாக கொடுத்து தேவ பக்தியுள்ள சந்ததியை உருவாக்கினாலும் இன்றைய உலகில் எந்த கூட்டம் அதிகமாக இருக்கிறது? தேவனின் சித்தபடி சரியாக வாழ்பவர் எத்தனை பேர்? சொற்ப மனுஷர்களே மிஞ்சுவார்கள்! அவ்வாறிருக்க 100 தேவ பக்தியுள்ள மனுஷனை தயார் செய்ய 1000 மனுஷர்களை நித்திய நகரத்தில் தள்ளுவாரகில் அதில் என்ன வெற்றி இருக்கிறது?
.
ஆண்டவராகிய இயேசு சொன்ன உவமைபடி
லூக்கா 14:30 அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப்பாராமலிருப்பானோ?
.
சாதாரண மனுஷனே வியாபாரம் செய்பவனே முன்னமே அமர்ந்து லாப நட்டத்தை கணக்கு பார்த்து தொழிலை ஆரம்பிக்கும்போது, மனுஷர்களுக்காகவும் மிருக ஜீவன்களுக்காகும் பரிதபிக்கும் தேவன் முன்னமே கணக்கு பார்க்காமல் இருப்பாரா? நிச்சயம் இருக்கவே மாட்டார்! எனவே இந்த கருத்தை என்னால் ஏற்க்க முடியவில்லை!
.
ஆகினும் "தேவ பக்தியுள்ள சந்ததியை பெறவேண்டும் என்ற நோக்கில் தேவன் மனுஷனை படைத்தார்" என்று வசனம் சொல்வதை யாரும் நிச்சயம் மறுக்க முடியாது. ஆனால் எதற்க்காக தேவ பக்தியுள்ள சந்ததியை பெறவேண்டும் என்று தேவன் எதிர்பார்த்தார்? என்ற காரணம்தான் வேறு! மேலும் தேவபக்தி என்பது இன்று அனேக பிற மத சகோதரர்களிடமும் காணப்படும் ஓன்று அவர்கள் தேவ பக்தியை அறிந்தாலும் அதன் ரகசியத்தை அறியாமல் போனார்கள் எனவே தேவனின் திட்டத்துக்கு வெளியிலேயே நிற்கிறார்கள்.
.
I தீமோத்தேயு 3:16 அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.
.
எனவே வெறும் தேவபக்தி மாத்திரம் போதாது மேலும் தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், என்பது போன்ற தேவ ரகசியங்களையும் அறியவேண்டும் என்று தேவன் எதிர்பாக்கிறார் என்பதை அறிய முடிகிறது! அந்த ரகசியங்களை வெளிப்படுத்தவே தேவபக்தி வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிராறேயன்றி வெறும் தேவ பக்தியுள்ளவர்களால் ஒன்றும் செய்துவிட முடியாது.
.
யோவான் 9:31 பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தியுள்ள வனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்.
.
பாவிகளால் தேவனின் திட்டத்தையோ அல்லது அவரது செயல்பாடுகளையோ அறிந்துகொள்ள முடியாது! எனவே "தேவபக்தி உள்ள சந்ததியை மனுஷன் உண்டாக்க வேண்டும்" என்று தேவன் எதிர்பார்ப்பது உண்மைதான்ஆனால் அது தேவன் ஒரு மனுஷனிடம் எதிர்பார்க்கும் குறைந்த பட்ச தகுதிதாநேயன்றி அதுவே மனுஷன் படைக்கபட்ட முக்கிய நோக்கம் அல்ல!


-- Edited by SUNDAR on Friday 19th of October 2012 08:10:44 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 136
Date:
Permalink  
 

சுந்தர் அண்ணா எனது முழுமையான கேள்விக்கு உங்களால் பதில் தர முடியும் என்று நம்புகிறேன்.



-- Edited by t dinesh on Saturday 20th of October 2012 12:38:14 AM

__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

மனிதன்  ஏன்   படைக்கபட்டான் அல்லது தேவன் மனுஷனை ஏன்  ஏற்படுத்தினார்  என்பதற்கு வேதாகமம் சொல்லும்  நேரடி வசனம்:   
 
ஏசாயா 43:21 இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியை சொல்லிவருவார்கள்.
இங்கு இரண்டு நோக்கங்கள் சொல்லப்படுகிறது: 
.
1."இந்த ஜனத்தை எனககென்று  ஏற்படுத்தினேன்
 
ஆம்! தேவன் மனிதர்களாகிய நம்மை அவருக்கென்றுதான் ஏற்ப்படுத்தினார். ஆகினும எவ்விதத்திலும் அவரது சுய லாபத்துக்காக அல்ல! அவரை நாம்  எவ்விதத்திலும் சிறு குறைகூட சொல்லிவிடமுடியாது. அந்த உண்மையை அறிய "எனககென்று ஏற்ப்படுத்தினேன்" என்பதன் சரியானபொருள் என்னவென்பதை நாம் ஆராயலாம்.
.
கிறிஸ்த்தவத்தை பொறுத்தவரை கடவுள் / மனிதனுக்கான உறவு முறையே தகப்பன் /மகனுக்கான உறவுக்கு ஒப்புமையாக கூறப்பட்டுள்ளது.  அந்தகருத்தை இயேசுவானவர் மனம் திருந்திய மைந்தன்  உவமையில் மிக அருமையாக விளக்கியுள்ளார். இவ்வாறிருக்க "என்னுடய மகனை நான் எனக்கென்று பெற்றேன்" என்று நான் சொல்வேனாகில் அந்த அனேக பொருட்கள் பொதிந்துள்ளது.
.
1. அவனை பெற்றதால் சிறு வயதில் கொஞ்சி மகிழும்/ பேசி மகிழும் சந்தோசம் எனக்கு உண்டு.    
2. எதிர்காலத்தில் அவன் எனக்கு ஏதாவது ஒரு விதத்தில் உதவுவான் என்ற நோக்கம் உண்டு.
3. எனக்கு எதிரியாக யாரும் இருந்தால் என் பட்சம் நின்று கரம் கொடுப்பான் என்று எதிர்பார்க்கலாம்.  
4. மேலும் பல சந்தோசங்களை எதிர்பார்த்து நான் அந்த மகனை பெற்றிருக்கலாம்.
.
ஆனால் இந்த காரியங்கள் எதற்கும் உத்திரவாதம் கிடையாது. இந்த சந்தோஷங்கள் கிடைக்கவும செய்யலாம் கிடைக்காமலும் போகலாம். எனினும்  இந்த் காரியத்தின் மறுபக்கத்தை ஆராய்ந்தால் இங்கு நான் எதிர்பார்க்கும் சந்தொஷத்தைவிட என்னுடைய கடமைகள் மிகவும் அதிகம:
.
1. பெற்ற பிள்ளையை அது தன சுய காலில் நிற்கும் வரை சுமக்க வேண்டும்.
2. இரவு பகல் விழித்திருந்து பார்த்து  கண்ணும் கருத்துமாக  வளர்க்க வேண்டும்.
3. நோய் நொடிகள் வந்தால் அதற்காக இரவில் கூட அங்கும் இங்கும் ஓடி  பரிதபிக்க வேண்டும்.
4. பிள்ளையின் உணவு உடை மற்றும் செலவுக்கு எல்லாம் பணம் சம்பாதிக்க வேண்டும்.
5. அதற்க்கு தேவையான நல்ல கல்வி மற்று நல்ல  வசதி செய்துகொடுக்க வேண்டும்.
6. திருமணம்/ நல்ல வாழ்க்கை இவற்றை அமைத்து கொடுக்கவேண்டும்.  
7. என்னதான் வசதிகளை செய்தாலும் நாம் வாழும் காலம் வரை அவனை பற்றிய கவலை நமக்கு உண்டு.
 
இதை எல்லாம் விட மேலாக, தன பிள்ளையின் சதோஷம் ஒன்றே முக்கியமாக கருதி  அதற்காக நமது சந்தொஷங்களை தியாகம் செய்கிறோம். வாழும் நாள் எல்லாம் நமது சந்தோஷங்களை  இழந்து அந்த பிள்ளைகள் நாளை நன்றாக இருப்பதற்கு பாடுபடுகிரோம். இறுதியாக எதுவுமே வழியில்லாத இக்கட்டான ஒரு சூழ்நிலையில் ஒரு நல்ல தகப்பன் தன பிள்ளைகளுக்காக ஜீவனை கொடுக்கவும தயங்க மாட்டான்.     
         
இப்பொழுது சொல்லுங்கள் நான் என் மகனை எனக்கேற்று பெற்றேனா அல்லது அவனுக்கென்று நான் வாழ்கிறேனா என்பதை?
 
இதே போன்ற ஒரு உறவு முறையே மனிதனுக்கும் தேவனுக்கும் இடையே இருக்கிறது.
 
தேவன் உண்மையில் அவருக்கென்று மனிதனை படைத்தாலும் உண்மையில் அவர் நமக்கென்றே இருக்கிறார். நமது சந்தோஷத்தில் அவர் சந்தோஷபடுகிறார், நமது துக்கத்தில் அவர் துக்கபட்டு வேதனைபட்டு நமக்காக பரிதபிக்கிறார் கண்ணீர் சிந்துகிறார், நம்மை நேர் வழியில் கொண்டு செல்லவே யுகயுகமாக போராடுகிறார்! இறுதியில் அதிகமதிகமாய் வழிதப்பி போனபோது  ஒர் முக்கியமான சூழ்நிலையில் நமக்காக நமது உருவில் பூமிக்கு வந்து அனேக பாடுகள்பட்டு கடைசி சொட்டு இரத்தம் வரை இழந்து நமக்காக  ஜீவனையும்  தந்தார்!           
.
இங்கு தேவன் அவருக்காகவே நம்மை உருவாக்கினார் எனபது உண்மை ஆனால் அதைவிட மேலான உண்மை நமக்காகவே அவர் இருக்கிறார் என்பதே இதில் சுயநலம் எதுவும் இல்லை!  
.
2. இவர்கள் என் துதியை சொல்லிவருவார்கள்.
.
அடுத்து தேவனது துதியை சொல்ல எத்தனையோ சேராபீன்கள் இருக்கும்போது மனிதர்களையும் அதற்காக மட்டுமே  படைத்தாரா? அவரை யாராவது புகழ்ந்து போன்றிகொண்டே இருக்கவேண்டும் என்ற சுய மேன்மை விரும்பியா நம் தேவன்? இல்லவே இல்லை!  மாறாக ஒரு மனிதன் தேவனை துதிதத கொண்டே இருந்தால் "துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் தேவன் அவன் அருகிலேயே இருந்து அவனை நடத்த முடியும் அவனை துன்பங்களில் இருந்து விடுவிக்க முடியும், ஏற்ற நேரத்தில் எச்சரிக்க முடியும் என்ற நோக்கிலேயே அவனை  துதிக்க சொல்கிறார்.  
கீழேயுள்ள தாவீதின் வார்த்தையை பாருங்கள் 

சங்கீதம் 35:28 என் நாவு உமது நீதியையும், நாள்முழுதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும்.
.
இவ்வாறு சொல்லும் தாவீது தன வாழ் நாளில் அவரை துதிதுகொண்டு மட்டுமா வாழ்ந்து முடித்தான்? இல்லையே அவன் தனது வாழ்க்கையில்  ஆடு மேய்ப்பவனாக, நல்ல மகனாக, நண்பனாக, கணவனாக, தகப்பனாக, அரசனாக எல்லா விதத்திலும் தேவனின் சித்தபடி வாழ்ந்தான் அதே நேரத்தில் தேவனையும் துதித்தான். அவன் வாழ்ந்த வாழ்க்கையை தேவன் அங்கீகரித்தார் அதை குறித்து சாட்சியும் கொடுத்தார்.  எனவே தேவன எதிர்பார்ப்பது வெறும் துதியை மட்டுமல்ல அத்தோடு கூட தேவனுக்கு ஏற்ற ஒரு வாழ்க்கையும் கூட என்பதை அறிய முடிகிறது.          
 
சுருக்கமாக பார்த்தால் தேவன் இந்த் உலகத்தில் மனிதனை ஒரு குழந்தையை போல் உருவாக்கி  அவனோடு உறவாடவும், அவனில் அன்புகூரவும், அவனை சந்தோஷமாக வைத்து தானும்  சந்தோஷப்படவும்  தேவையான
அனைத்தையும் படைத்து பின்னர் மனிதனையும் படைத்தார். அவன் எப்பொழுதும் தன்னை துதித்து தன்னுடைய  பிரசன்னத்தில் உலகில் உள்ள எல்லா இன்பத்தையும் அனுபவித்து வேண்டும் என்பதே தேவன் மனிதனை படைத்ததன் நோக்கம்! தேவனின் அந்த மேன்மையான நோக்கத்தில் எந்த தவறோ அல்லது சுயமேன்மையோ  அல்லது சுயநலமோ  இல்லை! ஆனால்  "தீமை" என்று ஓன்று உள்ளே புகுந்ததால்தான் எல்லாமே தலைகீழாக மாறிப்போனது எனவே இந்த
"தீமை"  எங்கிருந்து எப்படி தேவனின் படைப்புக்குள் புகுந்தது என்பதை சரியாக அறிந்து கொண்டால் "தேவன் சத்தியமுள்ளவர்" என்பதை நாம் சுலபமாக புரிந்துகொள்ள முடியும்.
 
யோவான் 3:33 அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்கிறவன் தேவன் சத்தியமுள்ளவரென்று முத்திரைபோட்டு நிச்சயப்படுத்துகிறான்.
 


-- Edited by SUNDAR on Monday 22nd of October 2012 09:48:49 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

அன்பு சகோ. தினேஷ் அவர்களே தங்கள்  தளத்துக்கு சென்று பார்த்தபோது பல பயனுள்ள கட்டுரைகள் மற்றும் தகவல்களை அறிய முடிந்தது. இவ்வளவு தகவல்களை அறிந்துள்ள தங்களுக்கு இந்த திரியில் கேட்டிருக்கும் தங்களுடைய கேள்விகளுக்கு எதோ சில பதில் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை என்று கருதுகிறேன்.  

"கடவுள் மனிதனை ஏன்  படைத்தார்" என்ற முக்கியமான  தங்கள் கேள்விக்கு வசன அடிப்படையில்  நான் அறிந்த அல்லது எனது அறிவுக்கு எட்டிய  பதிலை எழுதிவிட்டேன்.  
.
அந்த கேள்விக்கான தங்களின் மனதில் இருக்கும் பதில் என்னவென்பதை அறிய ஆவல்.  மற்ற சகோதரர்களும் அவரவர் மனதில் நிர்ணயித்திருக்கும் பதிலை வசன அடிப்படையில் இங்கு பதிவிட்டால் எனக்கும் மற்றவர்களுக்கும் பிரயோஜனமாக இருக்கும் என்று கருதுகிறேன்.      


-- Edited by SUNDAR on Tuesday 6th of November 2012 03:27:13 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 136
Date:
Permalink  
 

SUNDAR wrote:

அன்பு சகோ. தினேஷ் அவர்களே தங்கள்  தளத்துக்கு சென்று பார்த்தபோது பல பயனுள்ள கட்டுரைகள் மற்றும் தகவல்களை அறிய முடிந்தது.     


-- Edited by SUNDAR on Tuesday 6th of November 2012 03:27:13 PM


 தங்கள் உற்சாகப்படுத்தும் வார்த்தைகளுக்கு மிகவும் நன்றி சுந்தர் அண்ணா . இயேசுவுக்கே மகிமை.

//"கடவுள் மனிதனை ஏன்  படைத்தார்" என்ற முக்கியமான  தங்கள் கேள்விக்கு வசன அடிப்படையில்  நான் அறிந்த அல்லது எனது அறிவுக்கு எட்டிய  பதிலை எழுதிவிட்டேன்.  //

தங்கள் பெறுமதி மிக்க கருத்துகளுக்கு  மதிப்பளிக்கிறேன் .

//அந்த கேள்விக்கான தங்களின் மனதில் இருக்கும் பதில் என்னவென்பதை அறிய ஆவல்.//

உண்மையிலேயே  அந்த  கேள்விக்கு சரியான   பதில் எனக்கு  தெரியாது . ஆனால் இதைக்குறித்து ஜெப நேரங்களில் தேவனிடம் முறையிட்ட போது ,  இன்று எமது சபையில் போதகர் நிகழ்த்திய பிரசங்கத்தின் மூலம் வேறு  வகையில் தேவன் என்னோடு பேசினார்.அனால்  இப்போது எனக்கு நேரம் இல்லாததால் அதை  டைப் செய்யவில்லை . தருணம்  கிடைக்கும் போது சமர்ப்பிக்கிறேன் . நன்றி .

 



__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH



நமது நண்பர்

Status: Offline
Posts: 136
Date:
Permalink  
 

SUNDAR wrote:

கிறிஸ்த்தவத்தை பொறுத்தவரை கடவுள் / மனிதனுக்கான உறவு முறையே தகப்பன் /மகனுக்கான உறவுக்கு ஒப்புமையாக கூறப்பட்டுள்ளது.  அந்தகருத்தை இயேசுவானவர் மனம் திருந்திய மைந்தன்  உவமையில் மிக அருமையாக விளக்கியுள்ளார். இவ்வாறிருக்க "என்னுடய மகனை நான் எனக்கென்று பெற்றேன்" என்று நான் சொல்வேனாகில் அந்த அனேக பொருட்கள் பொதிந்துள்ளது.
.
1. அவனை பெற்றதால் சிறு வயதில் கொஞ்சி மகிழும்/ பேசி மகிழும் சந்தோசம் எனக்கு உண்டு.    
2. எதிர்காலத்தில் அவன் எனக்கு ஏதாவது ஒரு விதத்தில் உதவுவான் என்ற நோக்கம் உண்டு.
3. எனக்கு எதிரியாக யாரும் இருந்தால் என் பட்சம் நின்று கரம் கொடுப்பான் என்று எதிர்பார்க்கலாம்.  
4. மேலும் பல சந்தோசங்களை எதிர்பார்த்து நான் அந்த மகனை பெற்றிருக்கலாம்.
.
ஆனால் இந்த காரியங்கள் எதற்கும் உத்திரவாதம் கிடையாது. இந்த சந்தோஷங்கள் கிடைக்கவும செய்யலாம் கிடைக்காமலும் போகலாம். எனினும்  இந்த் காரியத்தின் மறுபக்கத்தை ஆராய்ந்தால் இங்கு நான் எதிர்பார்க்கும் சந்தொஷத்தைவிட என்னுடைய கடமைகள் மிகவும் அதிகம:
.
1. பெற்ற பிள்ளையை அது தன சுய காலில் நிற்கும் வரை சுமக்க வேண்டும்.
2. இரவு பகல் விழித்திருந்து பார்த்து  கண்ணும் கருத்துமாக  வளர்க்க வேண்டும்.
3. நோய் நொடிகள் வந்தால் அதற்காக இரவில் கூட அங்கும் இங்கும் ஓடி  பரிதபிக்க வேண்டும்.
4. பிள்ளையின் உணவு உடை மற்றும் செலவுக்கு எல்லாம் பணம் சம்பாதிக்க வேண்டும்.
5. அதற்க்கு தேவையான நல்ல கல்வி மற்று நல்ல  வசதி செய்துகொடுக்க வேண்டும்.
6. திருமணம்/ நல்ல வாழ்க்கை இவற்றை அமைத்து கொடுக்கவேண்டும்.  
7. என்னதான் வசதிகளை செய்தாலும் நாம் வாழும் காலம் வரை அவனை பற்றிய கவலை நமக்கு உண்டு.

  இந்த கருத்துக்கள் எனக்கு திருப்தியை தருகின்றன.
 
-- Edited by SUNDAR on Monday 22nd of October 2012 09:48:49 PM

 



__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

இந் நாட்களில் கிறிஸ்த்தவர்களின் கழுத்துக்கள் அறுக்கப்பட்டு கொல்லப்படுவதையும் உயிரோடு தீயிட்டு கொளுத்தப்படுவதையும் அறிந்து மனது மிகுந்த மன வேதனையடைகிறது. 
 
இப்படி கொடூரமாக சாவதர்க்கா கடவுள் மனுஷனை படைத்தார்   என்று தவிக்கிறேன். 
 
கடவுள் ஏன் என்னை படைத்தார் என்ற கேள்வி எனக்குள் மீண்டும் எழுந்தது.
 
திரியில்  உள்ள கருத்துக்களின்  முக்கியத்துவம் கருதி திரி மீண்டும் பார்வைக்கு வைக்கப்படுகிறது.
   


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

1 2  >  Last»  | Page of 2  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard