இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எப்பொழுதும் சாவையே தேடும் ஒரு பெண்மணி!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
எப்பொழுதும் சாவையே தேடும் ஒரு பெண்மணி!
Permalink  
 


நான் அறிந்த ஒரு கிறிஸ்த்தவ பெண்மணி எப்பொழுது பார்த்தாலும் "நான் சாக விரும்புகிறேன் எனக்கு சாவு
வரமாட்டேன்என்கிறதே,  தற்கொலை செய்து கொள்ளவும் பயமாக இருக்கிறது.  உலகத்தில் யார் யார்எல்லாமா செத்து போகிறார்கள், ஆனால் சாவு வேண்டும் என்று எதிர்பார்க்கும் எனக்கு சாவு வரவே இல்லையே." என்று பல வருடமாக புலம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
 
அவர்களது கணவனின் ஆதங்கமாக வார்த்தைகள் இதோ:
" என்னக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது! யாருக்கும் பெரிய உடல்நல கோளாறுகளும் கிடையாது! கர்த்தர் எங்களுக்கு போதுமான அளவு அளந்து போஷிக்கிறார்.  எங்கள் வீட்டில் பெரிய  பற்றாகுறை என்று சொல்ல எதுவும்
இல்லை. இரண்டு ஆண் பிள்ளைகள் மற்றும் ஒரு பெண்பிள்ளையும் உண்டு.  அதிகமான பணம் கிடையாதேயன்றி உணவு மற்றும் அடிப்படை தேவைகள் சந்திக்கபடுவதில் எந்த பஞ்சமும் இல்லை. நன்றாகவே இருக்கிறோம். ஆனாலும் என் மனைவியோ கடந்த 8 வருடங்களுக்கு மேலாக உலகத்தில் உள்ள எந்த ஒரு காரியத்திலும் அதிகம் ஈடுபாடு இல்லாதவளாக சாவு வேண்டும், சாவு வேண்டும் என்று சொல்லி புலம்புகிறாள்" என்பதுதான்.            
 
இந்த காரியத்தை மனதில் போட்டு யோசனை செய்த எனக்கு ஆணடவர் மேல்தான்  சற்று மன தாங்கல்  ஏற்ப்பட்டது. காரணம்  ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் குடிகார கணவனுடன் வாழ்நாள் முழுவதும் போராடி ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்து விடாதா என்று எண்ணி வாழ ஏங்கும் பெண்மணிகளும், கல்யாண வயதை கடந்து  கட்டிக்கொள்ள கணவன் அமையாமல் கனவுகளுடன் வாழ்க்கையை  கடத்தும் கன்னிகளும் ஒருபுறம் இருக்க, எல்லாமே நன்றாக அமைந்தும் "எனக்கு வாழ்க்கை வேண்டாம் சாவுதான் வேண்டும்" என்று ஏங்கும் பெண் இன்னொருபுறமும்  இருக்கிறார்களே! இது ஏன்? 
 
இது என்ன படைப்பு ஆண்டவரே?  சாவு வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு சாவை கொடுத்துவிட்டு, வாழ துடிக்கும் யாராவது ஒருவருக்கு அந்த இடத்தில் வாழ்வை கொடுக்க வேண்டியதுதான்? ஒரு சாதாரண மனுஷன் கூட செய்து முடித்துவிடும் இந்த காரியத்தை சர்வவல்லவரான நீங்கள் இதைகூட  செய்யாமல் வேடிக்கை பார்ப்பது என்ன என்று மிகுந்த மன பாரத்துடன்  ஆண்டவரை நோக்கி புலம்பிக்கொண்டே வந்தேன்.
 
அப்பழுது ஆண்டவர் என் மனதில் இடைபட்டு "மகனே நீ சரியான உண்மையை அறியாமல் இப்படி புலம்புகிறாய் ஆதியில் பாவம் செய்துவிட்ட ஒரு ஆதாமை  அன்றே அழித்துவிட்டு அவன் இடத்தில் வேறொரு ஆதாமை படைத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்ற நிலை இருந்தால் நான் அதை அன்றே செய்திருக்க மாட்டேனா?
      
இத்தனை வேதனை  போராட்டம் நிறைந்த இந்த உலகம் எதற்கு? பூர்வத்தில் ஒரு உலகமே கூண்டோடு நீரில் ஏன் அழியவேண்டும்? என்னுடைய குமரனின் பலி எதற்கு? தேவ குமாரனான அவருக்கு அத்தனை பாடுகள் எதற்கு? எல்லாம் அந்த ஒரே ஆதாமின் அழிவோடு  முடிந்திருக்குமே! நீ நினைக்கிரபடியல்ல! இங்கு   நடப்பதர்க்கெல்லாம் மாற்ற கூடாத /மறுக்க முடியாத சரியான காரணம் இருக்கிறது!  என்று சொன்னார்!    
 
அந்த சரியான காரணம் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் தயவுசெய்து தெரிவிக்கவும்! 


-- Edited by SUNDAR on Tuesday 16th of April 2013 10:59:27 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard