இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நித்திய தேவன் திரித்துவரா? அத்தியாயம் 1


இளையவர்

Status: Offline
Posts: 21
Date:
நித்திய தேவன் திரித்துவரா? அத்தியாயம் 1
Permalink  
 


நம்மை சூழ இருக்கும் இயற்கையும் ஜீவனுள்ள சகல சிருஷ்டிகளும் வான ஜோதிகளான சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் இவை யாவும் எதை வெளிப்படுத்துகின்றன? இவைதானாகஉண்டாகவில்லையென்றாலும்,இவற்றை சிருஷ்டி கர்த்தர் ஒருவர் உண்டென்றும் இவை நமக்கு வெளிப்படுத்துகிறது அல்லவா? அவரே சர்வத்துக்கும் மேலான சர்வ வல்லமையுள்ள தேவன் “தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்படப்பட்டுருக்கிறது …..கானப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள் .உண்டாக்கப்பட்டிருக்கிரவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு தெளிவாய்க் காணப்படும்” (ரோமர் 1:19,20)  என்று பரி.பவுல் கூறியது இதை குறித்தேயாகும். சிருஷ்டியானது தேவனைக்குறித்து நமக்கு வெளிப்படுத்துவது மாத்திரமல்ல ,பரிசுத்த வேதகமமும் தேவனைப்பற்றிய இரகசியங்களை மனிதவர்க்கத்துக்குத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.தேவன் நித்தியரேன்றும், அவர் சர்வ வல்லமையும் சர்வ ஞானமும் உள்லவரென்றும்,அவர் சர்வ வியாபி என்றும் அது கூறுகிறது.அன்றியும் அவர் ஒருவரே என்றும் அவரில் மூன்று ஆள்தத்துவங்கள் உண்டென்றும் அது வெளிப்படுத்துகிறது.இதை நாம் அறிந்து விசுவாசிக்கிறோம்.இதுவே பளைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் ஜீவித்த நமதுமுற்பிதாக்களின்  விசுவாசமுமாய் இருந்தது.எத்தனையோ நூற்றாண்டுகளாய் நாம் விசுவாசித்து வருகிற இந்த சத்தியத்தை விசுவாசியாத ‘யெகோவா சாட்சிகள்; ஏழாம் நாள் ஓய்வுநாட்காரர்,இயேசுவின் நாமக்காரர் முதலியோர் எழும்பி தேவனை திரித்துவரல்ல என்று கூறிஜனங்களை வஞ்சிக்கிறதை நாம் காண்கிறோம். தேவன் திரித்துவர் என்பது புறஜாதியாரிலிருந்து வந்த போதனையென்றும்,ஆதி கால அப்போஸ்தல சபை விழுந்து போன பிற்பாடு ரோமன் கத்தோலிக்கர் இந்த திரித்துவ உபதேசத்தை அதனுள் நுழைத்தார்கள் என்றும் கூறி,அவர்கல் திரித்துவத்தை மறுதலிக்கிறார்கள்.

 

உலகத்தோற்றத்துக்கு முன் நித்திய தேவன் திரித்துவராய் இருந்தார்

திரித்துவத்தின் இரண்டாம் ஆளான தேவ குமாரனாகிய கிறிஸ்து ,இயேசு என்னும் நாமத்தில்  மனுசனாய் வந்த போது உலகதோற்றத்திற்கு முன்பு தாமும் பிதாவும் இருந்ததாக கூறுகிறார். “பிதாவே, உலகதோற்றத்த்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியால்”(யோவான்17:24) என்று அவர் சொல்லுவதன் அர்த்தம் என்ன? உலகதொற்றத்திற்கு முன் ஒரு பிதா இருந்தார் என்றும் ,அந்த பிதா தம்மிலே அன்பாயிருந்தாரென்றும் சொல்லுகிறாரல்லவா? அதாவது ஒரு அன்புள்ல பிதாவும் ,ஒரு அன்புள்ல குமாரனும் இருந்தார்கள் எனபதே!,இதில் யார் முந்தினவர்? பிதா முந்த்தினவர் என்று சிலர் சொல்லக்கூடும் .பிதா முந்த்தினவாராயிருந்தால் குமாரன் இல்லாத காலத்தில் அவர் பிதாவாயிருப்பதெப்படி? அப்படி இருக்கமுடியாது ஆனால் அவரோ அநாதி தேவன் (1திமோ6:15,:ரோம 16:25)நித்தியரான ஒரு பிதா இருப்பாரேயானால் அவரை வெளிப்படுத்துவதற்கு நித்தியரான ஒரு குமாரனும் இருக்காவேண்டியது அவசியமே!.அப்படியே பிதா எப்போது உண்டோ,அப்போதே குமாரனும் இருந்திருக்க வேண்டும். பிதா ,குமாரனை வெளிப்படுத்துகிறார். குமாரன் பிதாவை வெளிப்படுத்துகிறார். ஆதலால் இந்த இரண்டுபேரில் ஒருவரும் ஒருவருக்கொருவர் முந்தினவரல்ல ;பிந்தினவருமல்ல.இருவரும் ஒரே காலத்தில் உள்ளவர்களே. அது எப்படியாகும்? தேவன் ஒருவரே. அவர் அன்புள்ளவர் (1யோவான் 4:8) வல்லமையுள்ளவர் இரக்கமுள்ளவர் கிருபையுள்ளவர் என இப்படியெல்லாம் அவரைக் குறித்து வேதாகமம் தெளிவாய் போதிக்கிறது.இவ்வித சகல சற்குண்ங்களும் நிரம்பிய தேவன் கிரியை செய்யாவிட்டால் எப்படி அவரை நாம் விளங்கிக்கொள்ளக் கூடும்? எப்படி அவர் வெளிப்படக்கூடும்? அக்கினியானது எல்லாக் கற்களிலும் மரங்களிலும் உண்டு. ஆனால் அதைக் காண முடியாது . அது வெளிப்பட வேண்டுமேயானால் என்ன செய்யாப்பட வேண்டும்? இரண்டு தடிகளை ஒண்றோடொன்று தேய்ப்பதினால் அக்கினி கணப்படக்கூடும். அக்கினி வெளிப்படுவதற்கு இரண்டு தடிகள் உராய வேண்டுயதாயிருப்பாது போல தேவ அன்பு வெளிப்படுவதற்கும் ஒரு தேவன் இப்படி பிதாவாகவும் குமாரனுமாக ஒன்றிற்குமேற்பட்ட ஆள்தத்துவமாய் காணப்படவேண்டியது அவசியமாயிற்று. ஆதலால் தேவன் ஒரே ஆள்தத்துவமாய் இருக்கமுடியாது.

             அதுமாத்திரமல்ல முன்றாவது ஆள்தத்துவமாக இன்னொருவரும் இருந்ததாக வேதாகமம் கூருகிறது ‘மெல்கிசேதேக்’ என்ரு ஒருவரைக் குறித்து எபிரேய நிருபக்காரன் கூருகிறார். அவர் தேவனுடைய ஆசாரியன்,தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவர், தகப்பனும் தாயும் வம்ச வரலாறுமில்லாதவர்; நாட்கல் துவக்கமும் ஜீவனின் முடிவுமில்லாதவர்(எபிரே7:1-3) இவர் யார்? இவர் தேவனுடைய ஆசாரியன் என்று எழுதப்பட்டிருக்கிறபடியால் ,இவர் பிதாவாகிய தேவன் அல்ல; பிதாவாகிய தேவனுடைய கிரியையில் அவருக்கு ஆசாரியனாயிருந்தவரே இவர் . இவர் தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவர்; ஆனபடியால் இவர் தேவகுமாரனாகிய கிரிஸ்துவும் அல்ல தேவ குமாரனுக்கு ஒப்பான இன்னொரு ஆளே. இவர் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமில்லாதவர் என்று எழுதப்பட்டிருப்பதினாலும், பூமியில் எந்தகாலத்திலும் இருந்த மனுசன் அல்ல இவர் பிதாவையும் குமாரனைப்போல நித்தியரே! ஆனால் இந்த மெல்கிசேதேக்கு என்பவர் தேவனுடைய ஆசாரியனாய் ஆபிரகாமுக்கு எதிர் கொண்டு போய் அவனை ஆசிர்வதித்து அவனிடத்தில் தசம பாகத்தை ஏற்றுக்கொண்டார். அதனாலும் சாலேமின் இராஜா என்று எழுதப்பட்டிருப்பதாலும் ,அவர் பூமியிலிருந்த ஒரு இராஜா என்றும்,இயேசுகிறிஸ்துவுக்கு நிழலாட்டமாய் ஜீவித்த ஒரு மனுஷனென்றும் சிலர் கூறுவர்,நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமில்லாத ஒருவர் எப்படி ஒரு மனிதனாய் இருக்க கூடும்?

          சாலேமின் ராஜா என்பதற்குச் சமாதானத்தின் ராஜா என்று அருத்தமாம். என்று எபிரேய நிருபக்காரன் கூறுகிறாரே(எபி7:2) அப்படிக் கூறும் போது சாலேமின் ராஜா என்று குறிப்பிட்டவர் நித்தியரும் சமாதானத்தின் தேவனுமாகிய பரிசுத்தாவியானவரே. இப்படியே நித்தியரான ஒரே தேவன் உலக தோற்றத்துக்கு முன்பே பிதா ,குமாரன், பரிசுத்தாவியானவர் என்று மூண்று ஆள்தத்துவங்களாய் இருந்தார் ஆனபடியினாலே ஆதியாகமும் முதலாம் அதிகாரத்தில் தேவன் என்று கூறப்பட்டிருக்கிற ‘ஏலோகிம்’(ELOHIM)

என்ற பன்மை பெயர் தேவன் ஒன்றுக்கு மேற்பட்ட ஆள்தத்துவங்களுள்ளவர் (திரித்துவர்) என்பதை நமக்கு விளக்ககூடியதாய் இருக்கிறது.இவ்விதம் நித்தயமான முன்று ஆள்தத்துவங்கள் மாத்திரம் இருப்பதாலேயே ‘திரித்துவம்’ என்று அழைக்கிறோம். அவர் திரித்துவராய் இருக்க காரணம் என்ன? என்றும் இன்னும் அதிகமாய் விவரங்கள் அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம். –(தொடரும்)



-- Edited by johnson on Saturday 27th of April 2013 09:38:31 AM

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

சகோ : ஜான்சன் அவர்களே

நீங்கள் எழுதிய இந்த காரியங்கள்  ஒன்றைக்கூட என் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை 

தேவனுக்கு சித்தமானால் மிக விரைவில் நீங்கள் எழுதிய காரியத்தை குறித்து
என் கேள்விகளை பதிக்கின்றேன்....



-- Edited by EDWIN SUDHAKAR on Tuesday 30th of April 2013 08:08:41 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

நண்பர். ஜான்சன் அவர்களுக்கு வணக்கம்.
 
தங்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் அருமை!! வாழ்த்துக்கள். தேவன் தங்களை செம்மையாய் வழிநடத்துவாராக!! 
 
மேல்கிசேதேக்கை பற்றிய தங்களின் புரிதல் என் வெளிப்பாடுகளுக்கு சரியாய் இருக்கிறது!! கர்த்தருக்கே மகிமை உண்டாகுக!! 
தாங்கள் அந்த திரியில் பங்கேற்றால் இன்னும் சில விபரங்கள் வெளிப்பட வாய்ப்புண்டு!!smile


__________________


இளையவர்

Status: Offline
Posts: 11
Date:
Permalink  
 

nohello! john , neenga unga nambikkaya unmanu sollunga,no adtthavangala persolli,no janangala vanjikuranganu solli nogadikka kudaathuno



__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard