இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு துரத்திய அசுத்த ஆவி என்பவை எவை?


இளையவர்

Status: Offline
Posts: 19
Date:
இயேசு துரத்திய அசுத்த ஆவி என்பவை எவை?
Permalink  
 


சுந்தர் ஐயா 

 

நீங்கள் ஆவி + சரீரம் சேரும்போது உருவாவது ஆத்துமா என்றீர்கள்  

 

இயேசு ஊழியம் செய்த காலத்தில் துரத்திய ஆவிகள் என்ன?

 

" அசுத்த ஆவி துரத்தப்பட்டபின் ஊமை பேசினான்

 

.....வனாந்திரத்திலே அலைந்து இளைபாருதல்...நான் விட்டு ... போவேன் கண்டடையாமல் தன்னிலும் பொல்லாத 7 அசுத்த ஆவிகளோடு ....?

 

 

இங்கு அசுத்த ஆவி என குறிக்கப்பட்டிருப்பது என்ன?

தயவு செய்து விளக்குங்கள் ஐயா 



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

சகோதரர் அவர்களே!
 
சுத்தமான ஒரு கிளாஸ் பாலுடன் ஒருதுளி கூவம் சாக்கடை  தண்ணீரை சேர்த்தால் எப்படி மொத்த கிளாஸ் பாலும் அசுத்தமானதாகுமோ   
அதுபோல் 
தேவனால் கொடுக்கபட்ட சுத்தமான ஆவியோடு பிசாசாகிய சாத்தானின் ஒரு துளி அசுத்தம் சேரும்போது அது அசுத்த ஆவியாகிறது.  
 
முதல் மனுஷன் ஆதாம் சாத்தனின் கட்டளைக்கு கீழ்படித்து கனியை புசித்ததும் பிசாசு தன்னுடைய ஆவியை மனுஷனோடு இணைக்கும் வல்லமையை பெற்றுவிட்டான். 
 
அதுமுதல் அவன் மனுஷனுக்குள் புகுந்து அவனை பல்வேறு விதத்தில் துன்புறுத்தி வருகிறார். அனேக சரீர நோய்கள், மன நோய்கள்  பிறவி குறைபாடுகள் போன்றவை சாத்தானின் அசுத்த ஆவிகளால் உருவாகின்றன.  
 
மேலும் நல்லவனாகவே இயேசுவின் பின்னால் சுற்றி திரிந்த இயேசுவின் சீஷனாகிய யூதாசுக்குள் பிசாசு புகுந்ததும் அவன் இயேசுவை காட்டிகொடுக்க துணிந்தானோ,

அதுபோல் உலகில் நடக்கும் ஏறக்குறைய எல்லா தீய செயல்களும் சாத்தான் மனுஷனுக்குள் புகுந்து நடப்பிக்கும் காரியங்களே. சாத்தனுக்கு எதிர்த்து நிற்காமல் அதற்க்கு மனுஷன்  இடம் கொடுப்பதே மனுஷன் மேல் தேவ கோபத்துக்கு ஏதுவாகிறது. அவ்வாறு பிசாசுக்கு இடம் கொடுத்து பாவம் செய்பவன் பிசாசினால் உண்டானவன் என்றே வேதம் சொல்கிறது.  
 
ஆண்டவராகிய இயேசு மனுஷ குமாரனாக வரும்வரை அசுத்த ஆவிகளை மனுஷனுக்குள் இருந்து பிரித்து விரட்டுவது கூடாத காரியமாக இருந்தது. 
 
I யோவான் 3:8  பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். 
 
தேவன் ஒருவரே பிசாசின் கிரியைகளை அழிக்க முடியும் அத்தோடு மனுஷனுக்குள் இணைந்திர்க்கும் பிசாசின் ஆவிகளை பிரித்து வெளியில்  முடியும். அதையே இயேசு செய்தார்.   
 
அப்போஸ்தலர் 10:38 தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும்சுற்றித்திரிந்தார்.
 

(அன்பான சகோதரரே என்னுடைய எழுத்துக்களுக்கு அதிகம் எதிர்ப்பு இருப்பதால் நான் பல கேள்விகளுக்கு பதில் எழுதியும் சரியான அறிவுறுத்துதல் கிடைக்கும் வரை அதை பதிவிடுவது இல்லை. இன்னும் இந்த கேள்வியில் தங்களுக்கு விளக்கம் தேவைப்படுமாயின் பதிவிட்டுங்கள் பதில் எழுதும் வரை சற்று பொறுமை காக்கவும்) 

 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 19
Date:
Permalink  
 

ஐயா நான் கேட்டது

அசுத்த ஆவி என்பது என்ன? ஆன்மாவா? ஆவியா?

நீங்க மனிதன் ஆவி ஆத்துமா சரிரமானவன் என்றீர்
மரணத்திற்க்குபின்

ஆவி - தேவன் தந்த தீபமாகும் அது தேவனிடமே திரும்பிவிடும் என்றீர்
ஆத்துமாவே வேதனையை அனுபவிக்கும் என்று கூறினீர்
இயேசு துரத்திய அசுத்த ஆவிகள்
விழுந்து போன தூதர்களா? அப்படி இருந்தால்
தூதர்களின் சரீரம் ஒரு இடத்தில் வைத்துவிட்டு அதன் ஆன்மா தான் மனிதனுக்குள் ஊடுருவுகிறதா


அழிக்கப்பட்ட ஊயிரினங்களா ? (மனிதபடைப்புக்கு முன் அல்லது பின்)
ஆம் எனில் அதனின் ஆவியும் தேவனிடத்தில் சென்றுவிடுமே அவைகளின் ஆன்மா தான் அவைகளா ஆம் எனில் ஏன் (அசுத்த) ஆவி என குறிப்பிடபட்டுள்ளது .
அவை என்ன ஆன்மாவா ? ஆவியா? மனித உடலில் ஏன் வந்தன
ஒட்டுண்ணிபோல் வாழ இச்சைகளை தீர்க்க எனில் ஏன் மனிதனை துன்புறுத்தின
" அந்த மனிதன் கற்களால் உடலைகீறி கொண்டு ... அழுதான் " விளக்கவும்

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

அசுத்த ஆவிகளை பிசாசின் ஆவிகளோடு ஒப்பிட்டு சொல்லும் கீழ்கண்ட வசனத்தை சற்று கவனிக்கவும்: 
 
லூக்கா 9:42 வன் சமீபித்துவருகையில், பிசாசு அவனைக் கீழே தள்ளி, அலைக்கழித்தது. இயேசு அந்த அசுத்த ஆவியை அதட்டி, இளைஞனைக் குணமாக்கி, அவன் தகப்பனிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தார்.
 
 
வெளி 16:13. அப்பொழுது, வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டுவரக்கண்டேன்.
14 அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்; 
 
 
அசுத்த ஆவிகளும் பிசாசின் ஆவிகளும் ஏறக்குறைய சமமான  ஒன்றே.
 
இதன்படி தங்களின் கீழ்கண்ட கருத்துக்களே சரி என்று எடுத்து கொள்ளலாம் 
 
Bro. holyson wrote
///இயேசு துரத்திய அசுத்த ஆவிகள்  விழுந்து போன தூதர்களா?/// 
 
ஆம்! 
 
Bro. holyson wrote
///அப்படி இருந்தால் தூதர்களின் சரீரம் ஒரு இடத்தில் வைத்துவிட்டு அதன் ஆன்மா தான் மனிதனுக்குள் ஊடுருவுகிறதா///
 
பிசாசுகள் தேவ தூதர்களை போன்றது, அதற்க்கு  ஆவியும் ஆன்மாவும் உண்டு ஆனால் சரீரம் கிடையாது எனவே இன்னொரு சரீரத்துக்குள் சுலபமாக ஊடுருவ முடியும். 
 
Bro. holyson wrote
///மனித உடலில் ஏன் வந்தன 
ஒட்டுண்ணிபோல் வாழ இச்சைகளை தீர்க்க எனில் ஏன் மனிதனை துன்புறுத்தின " அந்த மனிதன் கற்களால் உடலைகீறி கொண்டு ... அழுதான் " விளக்கவும்/// 
 
தேவன் மனுஷனை படைத்து எல்லா வித இன்பங்களையும் அனுபவிக்க இந்த பூமியில் வைத்தார். இன்று இந்த சாத்தான்கள் 
மனுஷனுக்குள் வந்து தங்கி அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கிறது.
 
இன்னொருபக்கம் இந்த சாத்தான்களுக்கு   மாம்சம் இல்லாத காரணத்தால் அவைகளை எந்த மனுஷனும் துன்பபடுத்த முடியாது. ஆனால் மனுஷனுக்கு மாம்சம் இருப்பதால் அதை நோகடிப்பதன் மூலம் நம்மை படைத்த தேவனுக்கு மன வேதனையை ஏற்ப்படுத்தி அவனை கீழே தள்ளியதற்கு ஈடாக செயல்படுகிறது. 
 
நம்முடைய பிள்ளைகள் வேதனைபட்டால் நாம் எப்படி வேதனை படுகிறோமோ அதுபோல் நமது பரமதப்பனும் நாம் வேதனைகளை அனுபவிக்கும்போது அவர் வேதனை படுகிறார்      
 
எரேமியா 14:17 என் கண்களிலிருந்து இரவும்பகலும் ஓயாமல் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்; என் ஜனமென்கிற குமாரத்தியாகிய கன்னிகை மகா வேதனையுள்ள அடியினாலும் கொடிய காயத்தினாலும் சேதப்பட்டிருக்கிறாள்.
 
ஆம்! ஒருவன் தன்னை தானே துன்பபடுத்தினாலும் யார் மூலமாவது துன்பபடுத்தபட்டாலும் நம் தகப்பன் தேவன் வேதனையடைகிறார்  
 
சுருக்கமாக சொன்னால் தேவனால் ஆகாதவன் என்று தள்ளபட்ட பிசாசு சில மனுஷர்களுக்குள் இருந்து மனுஷர்களுக்காக தேவன் கொடுத்த சுகபோகத்தை அனுபவிக்கிறது. 
 
சில மனுஷர்களுக்கு தீராத வேதனை சோதனைகளை, நோய் நொடிகளை கொண்டுவந்து துன்பபடுத்தி அதன் மூலம் தேவனுக்கு மன கஷ்டத்தை  ஏற்ப்படுத்தி தான் இன்பம் காண்கிறது. 
 
தேவனுக்கு விரோதமான இவ்வித ஆவிகளையே இயேசு துரத்தினார்! 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 19
Date:
Permalink  
 

Bro. holyson wrote
///அப்படி இருந்தால் தூதர்களின் சரீரம் ஒரு இடத்தில் வைத்துவிட்டு அதன் ஆன்மா தான் மனிதனுக்குள் ஊடுருவுகிறதா///
 
பிசாசுகள் தேவ தூதர்களை போன்றது, அதற்க்கு  ஆவியும் ஆன்மாவும் உண்டு ஆனால் சரீரம் கிடையாது எனவே இன்னொரு சரீரத்துக்குள் சுலபமாக ஊடுருவ முடியும். ///


நீங்க கூறினீர்கள்
மனிதனுக்கு
ஆவி உண்டு
சரரீரமுண்டு
ஆவி+ சரீரம் சேரும்போது அங்கு ஆத்துமா தானாக உருவாகுது

என் கேள்வி

சாதானுக்கு

ஆவி உண்டா ( என் நம்பிக்கை உண்டு)

ஆத்துமா உண்டா ( எனக்கு தெரியல உண்டுஎன தோன்றுகிறது)

சரீரம் உண்டா ( சாத்தானுக்கு உண்டு எவனது தூதர்களுக்குமிருக்க வேண்டும் என நம்புகிறேன் ஆதாரம் கீழே )

ஆதாரம்

அவன் கேரூப்



__________________


இளையவர்

Status: Offline
Posts: 19
Date:
Permalink  
 

எசேக்கியேல் 28 : 14 நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணப்பட்ட கேருப்; தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் உன்னை வைத்தேன்; அக்கினிமயமான கற்களின் நடுவே உலாவினாய்.
15 நீ சிருஷ்டிக்கப்பட்ட நாள் துவக்கி உன்னில் அநியாயம் கண்டுபிடிக்கப்பட்டதுமட்டும், உன் வழிகளில் குறையற்றிருந்தாய்.
16 உன் வியாபாரத்தின் மிகுதியினால், உன் கொடுமை அதிகரித்து நீ பாவஞ்செய்தாய்; ஆகையால் நான் உன்னை தேவனுடைய பர்வதத்திலிருந்து ஆகாதவனென்று தள்ளி, காப்பாற்றுகிற கேருபாய் இருந்த உன்னை அக்கினிமயமான கற்களின் நடுவே இராதபடிக்கு அழித்துப்போடுவேன்.


எசேக்கியேல் 10 : 8 கேருபீன்களுடைய செட்டைகளின் கீழ் மனுஷர் கையின் சாயலானது காணப்பட்டது.


சரீரத்தை தூக்கிகொண்டு பறக்கவே சிறகுகள் என நினைகிறேன் நமது சரீரபோல் அல்லாமல் வேறுமாதிரியான சரீரம் என நம்புகிறேன்

என் கேள்விகள்
சாதானுக்கு சரீரமுண்டு
அவன் தூதர்களாகிய விழுந்திபோன தூதர்களுக்குமிருக்கா

2 பிசாசுகள் தூதர்கள் வடிவிலிருந்து தங்கள் சரீரத்தை கழட்டிவைத்து விட்டு மனிதனுக்குள் ஊடுருவுகின்றன , தூரத்தப்பட்டால் மீண்டும் தூதர் வடிவுக்கு சென்று அடுத்தது யாரிடம் நுழையலாம் என வகை தேடுகின்றன என்பது என் கருத்து இது சரி / தவறா

3 மனிதனுக்குள் நுழைவது பிசாசுக்களின் ஆத்துமாவா ஆவி ஆவி மனுசனுக்கு தேவனின் ஆவி/ தீபம் சாத்தான் மற்றும் தூதர்களுக்கு ஆவி என்பது என்ன

4 மனித சரீரத்துக்குள் பிசாசுகளின் ஆன்மா புகுகிறது என வைத்துக்கொண்டாலும் ஆவி என்ன வாகிறது

5 ஆவியும் ஆத்துமாவும் பிறிக்க முடியாததா ? பிசாசுகள் ஆவி+ ஆத்துமாவுடன் மனுசனுக்குள் புகுகிறதா

6 அசுத்த "ஆவி " என்பது பிசாசுகளின் ஆத்துமாவையா அல்லது ஆவியையா அல்லது மனிதன் போல ஜீவாத்மா ஆவி+ ஆத்துமாவை சேர்த்தே குறிக்கிறதா


( இதைதான் சுருக்கமாக முதலில் கேட்டேன் பிசாசுகள் ஆவியா ஆத்துமாவா )
தயவு கூர்ந்து விளக்கவும்

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

சகோதரர் அவர்களே தங்கள் கேள்விகள் குறித்து போதுமான விளக்கங்கள் வேதத்தில் இல்லை. நானும் அசுத்த ஆவிகள் பற்றி இவ்வளவு ஆராய்ந்து பார்த்ததில்லை  ஆகினும் நான் அறிந்தவரை பதிவிடுகிறேன். 

Bro. holyson wrote
///எசேக்கியேல் 10 : 8 கேருபீன்களுடைய செட்டைகளின் கீழ் மனுஷர் கையின் சாயலானது காணப்பட்டது/// 

"மனுஷ கையின் சாயல் காணபட்டது"  சாயல் என்பது வேறு சரீரம் என்பது வேறு.  தேவ தூதர்கள் மற்றும் கேருபீங்களுக்கு சாயல் உண்டு. தேவனுக்கு கூட சாயல்ல் உண்டு. ஆனால் மாம்ச  சரீரம் மண்ணால் படைக்கபட்ட உயிர்களுக்கு மாத்திரமே உண்டு. 
 
சாயல் என்பது ஒரு அவுட் லைன் உருவம்போல இருக்கும் ஆனால் அது புகையை போல திடமற்றதாக இருக்கும். அது பிசாசுகளுக்கு  ஒருவிதமாகவும் தூதர்களுக்கு சற்று வேறு விதமாகவும் இருக்கும். 
 
Bro. holyson wrote
//சரீரத்தை தூக்கிகொண்டு பறக்கவே சிறகுகள் என நினைகிறேன் நமது சரீரபோல் அல்லாமல் வேறுமாதிரியான சரீரம் என நம்புகிறேன்///

உங்கள் அனுமானம் ஓரளவுக்கு சரியே அனால் அது மண்ணால் படைக்கபட்ட சரீரம் போன்றது அல்ல என்பது மட்டும் நிச்சயம்.   அது வானத்துக்குரிய சரீரம். 

I கொரிந்தியர் 15:40 வானத்துக்குரிய மேனிகளுமுண்டு, பூமிக்குரிய மேனிகளுமுண்டு; வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே;
Bro. holyson wrote
என் கேள்விகள் 
//சாதானுக்கு சரீரமுண்டு அவன் தூதர்களாகிய விழுந்திபோன தூதர்களுக்குமிருக்கா ///

சாத்தனுக்கு மாம்ச சரீரம் இல்லை அவன் தூதர்களுக்கும் அப்படியே. அவன் மனுஷர்களுக்குள் புகுந்துதான் செயல்பட முடியும். அவர்கள் மனுஷனுக்குள் புகும்போது அந்த மனுஷன் மூலம் தங்கள் செயல்பாட்டை நடத்துகின்றன. 
 
Bro. holyson wrote
///2 பிசாசுகள் தூதர்கள் வடிவிலிருந்து தங்கள் சரீரத்தை கழட்டிவைத்து விட்டு மனிதனுக்குள் ஊடுருவுகின்றன , தூரத்தப்பட்டால் மீண்டும் தூதர் வடிவுக்கு சென்று அடுத்தது யாரிடம் நுழையலாம் என வகை தேடுகின்றன என்பது என் கருத்து இது சரி / தவறா ///

அப்படியல்ல பிசாசுக்கு நிலையான சரீரம் கிடையாது எனவேதான் அவைகள் துரத்தப்படும் பொது எங்கு சென்று தேடியும் இளைப்பாறுதல் அடையவில்லை என்று வேதம் சொல்கிறது. 

மத்தேயு 12:43 அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்:
 
அவைகள் இளைப்பாறுதல் அடைய ஒரு சரீரம் தேவை. 
 
அத்தோடு அவைகளுக்கு சொந்தமான சரீரம் இல்லாத காரணத்தால்தான் இயேசு அவைகளை துரத்தும்போது அவைகள் பன்றி கூட்டத்துக்குள் போக கூட உத்தரவு கேட்கின்றன 
 
என்னை பொறுத்தவரை நான் பார்த்த பேய்கள் எல்லாவற்றிலும் மோசமான பேய் பிசாசு புகுந்துள்ள மனுஷபேய்தான். 
 
மனுஷ சரீரம் கிடைக்காமல் அவைகள் வெளியில் அலையும்போது அவைகளை குறித்து பயப்பட வேண்டியதில்லை. ஆனால் மனுஷனுக்குள் புகுந்துவிட்டால் அவைகள் எவ்வளவு மோசமான தீமையையும் செய்யும் வல்லமையை பெறுகின்றன.   
 
பிசாசு புகுந்த யூதாஸ் தேவனையே கட்டிகொடுக்க துணிந்ததை நாம் பார்க்கிறோம்.  
 
பிசாசில் பலவகை உண்டு. நன்மை செய்வதைவிட தீமையையே செய்ய தூண்டும் நம் மாம்ச சரீரம் கூட ஒரு வகை பிசாசுதான். அதனால்தான் மாம்சமும் ரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்க முடியாது என்று வேதம் சொல்கிறது. 
 
தொடர்ந்து தங்கள் கேள்விகள் குறித்து தியானித்து வருகிறேன் கர்த்தருக்கு சித்தமானால் பதில் விரைவில் தருகிறேன். 
 
தொடர்ந்து விளக்கம் தெரிந்த சகோதரர்கள் தங்கள் கருத்தை முன்வைக்கலாம். 


-- Edited by SUNDAR on Tuesday 29th of April 2014 06:24:42 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 19
Date:
Permalink  
 

நான் என் கேள்வியை வாய் ரெக்காட் செய்து link அனுப்புகிறேன் அந்த link கின் மூலம் என் recorded voice சை நீங்க பதிவிறக்கம் செய்து கேட்க முடியும்

அவை மிக மிக சிறு file லாக தான் இருக்கும் எழுத்துமூலமாக கேட்பதை காட்டிலும் ிஇது தெளிவாக ிஇருக்கும

"" நான் சத்தியத்தில் வளர தயவுகூர்ந்து உதவுங்கள் ஐயா



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard