இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மேய்ப்பர்கள் எனக்குத் துரோகம்பண்ணினார்கள்- எரேமியா 2:8


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
மேய்ப்பர்கள் எனக்குத் துரோகம்பண்ணினார்கள்- எரேமியா 2:8
Permalink  
 


(1) மனிதர்களுக்கு பிரியமானவர்களா நடந்து கொள்ளுகின்றார்கள்

 

இன்றைய போதகர்கள் தேவனுக்கு ஊழியம் செய்வதாக நினைத்து கொண்டு மனிதர்களுக்கு ஊழியம் செய்கின்றார்கள் மனிதர்களை தன் பக்கம் வைத்துகொள்ள அவர்களுக்கு பிரியமான வார்த்தைகளை பேசி சபையை பெருக்க தேவ சித்தத்தை மறந்து ,  சபையை விட்டு ஒருவரும் போககூடாது என்று எண்ணி அவர்களுக்கு பிரியமானவர்களாய் இருக்க நினைக்கின்றார்கள்

 

மாற்கு 8:33 அவர் திரும்பித் தம்முடைய சீஷரைப் பார்த்து, பேதுருவை நோக்கி: எனக்குப் பின்னாகப்போசாத்தானே, நீ தேவனுக்கேற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்குஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்று சொல்லி அவனைக் கடிந்துகொண்டார்.

 

 

(2) மனித  அதிகாரங்களுக்கு பயப்படுகின்றார்கள்

அரசியல் வாதிகள் மற்றும் சபையில் அதிகார பதவியில் இருப்பவர்களுக்கு அவர்கள் நம்மை ஏதாவது செய்துவிடுவார்கள் என்று எண்ணி அவர்களுக்கு பயந்து தேவனுக்கு பிரியமாய் இருக்க விரும்பாமல் அரசியல் வாதிகளுக்கும், சபையில் அதிகாரம் உடையவர்களுக்கும்  விருப்பமாய் நடந்து கொள்கின்றார்கள் அவர்கள் தவறுகளை கடிந்துகொண்டு புத்திசொல்லாமல் அவர்களுக்கு பயந்து தேவ சித்தத்திற்கு விரோதமாய் நடக்கின்றார்கள்

 

உபாகமம் 1:17 - மனிதன் முகத்திற்குப் பயப்படாதீர்களாக; நியாயத்தீர்ப்பு தேவனுடையது;


உபாகமம் 7:21- அவர்களைப் பார்த்துப் பயப்படவேண்டாம்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன்.

 

II இராஜாக்கள் 6:16அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான்.

இப்படி அனேக தேவ வார்த்தைகளை மறந்து விட்டார்கள்

 

 

(3) பணத்துக்காகவும்  பொருட்களுக்காகவும் ஊழியம் செய்கின்றார்கள்

ஆரம்ப நிலையில் ஆண்டவர்மேல் உள்ள அன்பினால் ஊழியத்திற்கு வந்து உழியம் செய்த அவர்கள் பணம் பொருள் என்பவைகள் மீது ஈர்க்கப்பட்டு பணம் பொருட்களுக்காக ஊழியம் செய்ய ஆரம்பித்துவிட்டாரகள்

மீகா 3:11 ஆசாரியர்கள் கூலிக்கு உபதேசிக்கிறார்கள்; அதின் தீர்க்கதரிசிகள் பணத்துக்குக் குறிசொல்லுகிறார்கள்;

பணம் என்பது எல்லா மனிதனுக்கும் தேவையான ஒன்று இந்த பூமியில் பணமிருந்தால் மட்டும் தான் வாழ முடியும் என்ற சூழ்நிலை உண்டாகி விட்டதால் எல்லோரும் இப்பொழுது பண பிரியராகவும் பணக்காரன் ஆக பிரியராகவும்  ஆசை படுகின்றனர்

ஏசாயா 55:2நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும்திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்?

 

 

தேவனுடைய வார்த்தைகளை மனிதர்களுக்கு உபதேசிக்கும் போதர்களே

பிரசங்கி 5:10 பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே.

என்பதை  போதகர்கள் அறிந்து தேவனுக்கு உண்மையும் உத்தமுமாய் ஊழியம் செய்வீர்களாக, பணம் இல்லை பொருள் என்று கவலை கொள்ளாமால் தேவனாகிய கர்த்தரையே சார்ந்து அவருடைய கட்டளைக்கும் கற்பனைகளுக்கும் கீழ்படியுங்கள் அப்பொழுது

 

II இராஜாக்கள் 3:17 - நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள்; ஆனாலும் நீங்களும் உங்கள் ஆடு மாடுகளும் உங்கள் மிருகஜீவன்களும் குடிக்கும்படிக்கு, இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

 

எல்லா போதகர்களும் ஊழியர்களும் நல்லவர்களே ஆனாலும் சூழ்நிலைகள் தேவைகள் நிமித்தமும் இப்படியாகிவிடுமோ என்ற பயத்தின் நிமித்தமும் இப்படி மாறிவிடுகின்றார்கள்

நீதிமொழிகள் 24:16 - நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்;

சேனைகளுடைய கர்த்தரின் வைராக்கியம் இதைச் செய்யும்...



-- Edited by EDWIN SUDHAKAR on Thursday 17th of April 2014 02:26:45 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
RE: மேய்ப்பர்கள் எனக்குத் துரோகம்பண்ணினார்கள்- எரேமியா 2:8
Permalink  
 


எசேக்கியேல் 34:3 நீங்கள் நெய்யைச் சாப்பிட்டு, ஆட்டுமயிரை உடுப்பாக்கிக்கொள்கிறீர்கள்; கொழுத்ததை அடிக்கிறீர்கள்; மந்தையையோ மேய்க்காமற்போகிறீர்கள  

 

எசேக்கியேல் 34:8 கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; மேய்ப்பன் இல்லாததினால் என் ஆடுகள் சூறையாகி, என் ஆடுகள் காட்டுமிருகங்களுக்கெல்லாம் இரையாய்ப் போயின; என் மேய்ப்பர்கள் என் ஆடுகளை விசாரியாமற்போனார்கள், மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்காமல் தங்களையே மேய்த்தார்கள்.

 

எசேக்கியேல் 34:10 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; இதோ, நான் மேய்ப்பருக்கு விரோதமாக வந்து, என் ஆடுகளை அவர்கள் கையிலே கேட்டு, மேய்ப்பர் இனித் தங்களையே மேய்க்காதபடி மந்தையை மேய்க்கும் தொழிலைவிட்டு அவர்களை விலக்கி, என் ஆடுகள் அவர்களுக்கு ஆகாரமாயிராதபடி, அவைகளை அவர்கள் வாய்க்குத் தப்பப்பண்ணுவேன் என்று சொல்லு.



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard