இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கருத்துள்ள கதைகள்


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
கருத்துள்ள கதைகள்
Permalink  
 


ஒருவர் தன் வீட்டில் பூனையொன்ற வளர்த்துவந்தார். ஒரு நாள் எலியை பிடித்து கொன்ற தின்ற போது மிகமகிழ்ச்சியடைந்தார்
 
அடுத்தநாள் அவர் அன்பாய் வளர்த்து வந்த கிளியை திடீர் என பூனை கவ்வி கொன்றது. காப்பாற்வதற்குள் அக்கிளி இறந்துவிட்டதுமிகவும வேதனைப்பட்டு பூனையை திட்டிதீர்த்தார்.
 
என்னொரு நாள் முற்றத்தில் நின்ற சிட்டுகுருவியை பாய்ந்து கவ்விகொன்றதை கண்டார். அப்போது பூனை எதையாவது கவ்விகொன்று தின்னும் என்பதை உணர்ந்தார்.

இங்கே இவரை கவனித்தீர்களா..!  தனக்கு எதிரியான எலியை கொன்ற போது மகிழ்ந்தும். தனக்கு அன்பான கிளியை கொன்ற போது வேதனையடைந்தும். தனக்கு வேண்டாத சிட்டு குருவியை கொன்றபோது
அது பூனையின் இயல்பு என்று கவலையோ மகிழவோ இல்லை.
 
இது தான் நாம்..! எமக்கு வேண்டாதவைக்கும் வேண்டியவைக்கும் இழக்கும் போது மகிழ்ச்சியும் வேதனையும் அடைகிறோம்.
 
இது உலக இயல்பு என்பதை உணர்ந்து கொண்டால நாம் இன்பத்துக்கு இன்பபடாமலும் துன்பத்துக்கு துன்பபடாமலும் சமநிலையை அடையமுடியும்.

(
உபநிஷதகதைகளில்ஒன்று.)


-- Edited by EDWIN SUDHAKAR on Monday 21st of April 2014 01:27:51 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
பொய்யே இல்லாத பொய்யினால் வந்த கேடு!
Permalink  
 


மகாபாரத கதை: 

/////குருஷேத்திரப் போர் மிகவும் கடுமையாக நடந்து கொண்டிருந்தது. துரோணாச்சாரியாரின் அம்பு மழையால், பாண்டவப் படைகள் பலத்த சேதத்துக்கு உள்ளாயின. கவுரவர்களின் கை ஓங்கி நின்றது. மாலை ஆவதற்குள், துரோணர் ஒருவர் மட்டுமே, பாண்டவப் படைகளின் பாதி பலத்தைக் குறைத்துவிடுவார் என்ற மோசமான நிலை. இது, அர்ஜுனனுக்குத் தேரோட்டிக் கொண்டிருந்த கிருஷ்ணனுக்குப் புலப்பட்டது

இந்நிலை நீடித்தால், பாண்டவர்கள் தோல்வியடைவது நிச்சயம் என்று யூகித்த கிருஷ்ணன், ஏதாவது ஒரு உபாயத்தைக் கையாண்டு, போரின் போக்கைத் திசை திருப்ப வேண்டுமென்று நினைத்து, தன் கதாயுதத்தால், கவுரவப் படைகளை துவம்சம் செய்து கொண்டிருந்த பீமனிடம் சென்றார்.

""பீமா! நம் படைகளை அசுவத்தாமன் என்ற கவுரவர்களின் யானை அடித்து நொறுக்குகிறது பார். அதன் தலையை உன் கதையால் பிள,'' எனக் கட்டளையிட்டார்.
இவ்வளவு சொன்னால் போதாதா, பராக்கிரமசாலியான பீமனுக்கு. யானையின் மேல் பாய்ந்தான். யானையின் தலையில் தன் கதையால் பறந்து, பறந்து அடித்தான். பாவம்! அசுவத்தாமன் சுருண்டு விழுந்து உயிரைவிட்டது.
சாரதியாகிய கிருஷ்ணன், இப்போது தர்மரிடம் வந்தார்.
""நம் படைகளை வதம் செய்த அசுவத்தாமன் என்ற யானையை பீமன் கொன்றுவிட்டான். "அசுவத்தாமன் இறந்தான்' என்று துரோணருக்குச் சொல்லுங்கள்.''
தர்மத்தின் காவலரான யுதிஷ்டிரர், கிருஷ்ணனின் பேச்சைக் கேட்டுத் தயங்கினார்.
""இதிலென்ன தயக்கம்?''
""அசுவத்தாமன் என்ற யானை இறந்துவிட்டது என்பதற்குப் பதிலாக, அசுவத்தாமன் என்ற தனது மகன் தான் போர்க்களத்தில் இறந்துவிட்டான் என்று துரோணர் நினைத்துக் கொண்டால் என்ன செய்வது?''
""அப்படி அவர் மாறுபாடாக எடுத்துக் கொள்வது உங்கள் தவறு என்று எப்படிச் சொல்ல முடியும்?''
சற்றுத் தயங்கிய தர்மர், ""துரோணாச்சாரியரே! அசுவத்தாம யானையை பீமன் கொன்றுவிட்டான்,'' என்று துரோணரை நோக்கி உரக்கக் கூவினார்.
அவ்வமயம் கிருஷ்ணன் சங்கநாதம் எழுப்பினார்.
""தருமரே! என்ன சொல்கீறிர்கள்? சரியாகக் கேட்கவில்லை,'' என துரோணர் திருப்பிக் கேட்டார்.
""அசுவத்தாமனை, பீமன் கொன்று விட்டானாம்.''
சரியான நேரத்தில் இடையில் புகுந்து பேசினார் கிருஷ்ணன்.
""இது உண்மையா தருமரே!'' பதைபதைப்புடன் கேட்டார் துரோணர்.
தருமர் மவுனமாக நின்றார்.
"தன் நேசத்திற்குரிய அருமை மகன் போர்க்களத்தில் இறந்துவிட்டதாகக் கூறியதற்கு தருமர் மவுனம் சாதிக்கிறாரே. மவுனம், சம்மதத்தின் அறிகுறிதானே,'' என்று நினைத்த துரோணர் நிலை குலைந்தார். போர்க்களத்தை விட்டு அப்போதே வெளியேறிவிட்டார். வெற்றி, திசை மாறியது.
கிருஷ்ணர் கூறிய பொய்யை தருமர் மறுத்திருக்க வேண்டும். அப்படி அவர் மறுக்காததால், பொய் சொன்ன குற்றத்திற்கு அவரும் உள்ளானார். மிக உயர்ந்த தெய்வீக நிலையில் இருந்த தருமர், சாதாரண மனிதனின் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இதுகாறும், தர்மரின் தேர்ச் சக்கரங்களைத் தரையில் படாமல் அந்தரத்தில் நிறுத்திக் கொண்டிருந்த தர்ம தேவதைகள், தர்மரின் தேரைத் தரையில், "பொத்'தென்று போட்டன.////
 
 
ஆம்! பொய் என்பது தீமையின் ஆயுதம் என்பதால்தான் நம் ஆண்டவர் 
 
மத்தேயு 5:37 உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.
 
என்று  சொல்லி சென்றுள்ளார்.
 
ஆனால் நாமோ எந்த பயமும் மன உருத்துதலும் இல்லாமல் சைதாபேட்டையில் நின்று கொண்டு சரவணா ஸ்டோரில் நிற்கிறேன் என்றும் ஆழ்வார் பேட்டையில் நின்றுகொண்டு அடையாரில் இருக்கிறோம் என்றும் சாதாரணமாக பொய் சொல்வதோடு யாரும் ஒரு அதட்டு அதட்டிவிட்டால் நம்மை காத்துக்கொள்ள எப்படி வேண்டுமானாலும் பொய் சொல்ல தயாராக இருக்கிறோம்.
 
தேவனுடைய பிள்ளைகளாகிய நாம்  ஒவ்வொரு முறை பொய் சொல்லும்போது நாம் தேவனின் தொடர்பு நிலையில் ஒரு படி இறங்குகிறோம் என்பதை அறிந்து பொய் சொல்வதை தவிர்ப்போமாக.
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard