இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கண்ணின் இச்சையும்,கள்ளகாதலும் ஒருமனிதனின் வீழ்ச்சியும்!


இளையவர்

Status: Offline
Posts: 35
Date:
கண்ணின் இச்சையும்,கள்ளகாதலும் ஒருமனிதனின் வீழ்ச்சியும்!
Permalink  
 


ஒரு ஸ்திரியை அல்லது ஒரு ஆடவனைப் இச்சையோடு பார்ப்பதை வேதம் மிக கடுமையாக எச்சரிக்கிறது!.அந்த பாவம் விபச்சாரம் என்பதை மத்தேயு 5:28 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று. என்று வேதவார்த்தை தெளிவுப்படுத்துகிறது. ஆனால் இன்று இதைக்குறித்து அநேகர் சத்தியத்தைப் பேசும்போதும் எழுதும்போதும் வைராக்கியமாக பேசுவார்கள் எழுதுவார்கள்.ஆனால் கிரியையில் பார்ப்போமானால் அநேகர் அதைக் குறித்த ஜாக்கிரதையில்லாதவர்களாய் காணப்படுவார்கள்.காரணம் அதைக் குறித்த பாதிப்பை உடனே அனுபவியாதிருப்பதே! அது ஒரு போதை! இச்சையானது கொஞ்சம் கொஞ்சமாய் இரங்கும் முடிவில் அது வெறிகொண்டு தன் சுயநிலையை மறக்கச்செய்து பாதக செயலில் இரங்கும்.அதுதான் கற்பழிப்பும்,கள்ளகாதலாய் மாறுகிறது.

 

பேதையர்களாகிய வாலிபருக்குள்ளே ஒரு புத்தியீன வாலிபனைக் கண்டு அவனைக் கவனித்தேன். அவன் மாலைமயங்கும் அஸ்தமனநேரத்திலும், இரவின் இருண்ட அந்தகாரத்திலும், அவள் இருக்கும் சந்துக்கடுத்த தெருவில் சென்று, அவள் வீட்டுவழியாய் நடந்துபோனான். அப்பொழுது இதோ, வேசியின் ஆடையாபரணந் தரித்த தந்திரமனமுள்ள ஒரு ஸ்திரீ அவனுக்கு எதிர்ப்பட்டாள். தன் மிகுதியான இனிய சொற்களால் அவனை வசப்படுத்தி, தன் உதடுகளின் மதுரவாக்கினால் அவனை இணங்கப்பண்ணினாள். உடனே அவன் அவள் பின்னே சென்றான்; ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டுத் தண்டனைக்குப் போவதுபோலும், ஒரு குருவி தன் பிராணனை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழத் தீவிரிக்கிறதுபோலும், அவளுக்குப் பின்னே போனான்; அம்பு அவன் ஈரலைப் பிளந்தது.(நீதி7:7-9,21-23)

 

மற்றொருவருடைய மனைவி தன்னுடன் அன்பாக இயல்பாய் பேசும்போது அதை தன் ஆசைக்கு ஏற்ப்ப மனதுக்குள் இச்சித்து “இவளுடன் நான்” என்ற கனவுடன் ஒவ்வொரு நாளும் யோசித்து அவளுடன் தவறான நோக்கத்துடன் பேசிக்கொண்டு அவளின் வீட்டுக்குப் போய் தானாக உதவிகள் செய்து கடைசியில் அவளின் அன்புக்கு பாத்திரமாய் நடந்துக்கொண்டு தன் இச்சையை தீர்க்க சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டு வாழும் கிறிஸ்தவர்கள் இந்த நாட்களில் ஏறாளம்.

 

அப்படியே அநேக ஸ்திரிகள் தன் கணவனை மற்ற ஆடவருடன் ஒப்பிட்டு மற்ற ஆடவரின் தோற்றமும்,பேச்சும்,செயல்பாடுகளை இச்சித்து அந்த ஆடவருடன் இனிமையாக பேசிக்கொண்டு தனிமையாக இருக்கும் போது அந்த ஆடவருடன் தான் இச்சையை தீர்ப்பதுப்போல தீவிர யோசனையில் மூழ்கிக்கொண்டு நாட்களைக் கடத்தும் ஸ்திரிகள் ஏறாளம்.

 

பிரியமான தேவ ஜனமே இங்கு இச்சை சிந்தையில் கர்பம் தறித்து அது நிறைவேற ஆசையுடன் அடைகாத்துக்கொண்டிருக்கிறது. ஆகையால்தான் நீதிமொழிகள் 14:22 தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ? நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமுமுண்டு.என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது!.

 

பிரியமான தேவ ஜனமே! நீ உன்னை ஞானியாக என்னாதே என்னில் இச்சையை அடக்கிவாழ பெலன் இருக்கிறது என்று என்னாதே! அது உன்னை ஏமாற்றி அதாள பாதாளத்துக்குள் இறங்கவைத்துவிடும் எச்சரிக்கை! “பாலியத்துக்குரிய இச்சைக்கு தூர விலகியோடு” II தீமோத்தேயு 2:22 அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடேகர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு. “நீ இல்லை அதை எதிர்த்துப்போராடுவேன் என்று அதனுடன் இடைபடுவாயென்றால் மன்னைக்கவ்வுவது நிச்சயம்” அநேகருடைய வாழ்கையில் இச்சையாயபார்வையால் தான் அனுதினம் சமாதானத்தை இழப்பதை ஒத்துக்கொள்கின்றனர்.

 

இச்சிக்கும் ஒவ்வொரு இமைப்பொழுதும் ஏன் நமக்குள் சமாதானம் போய்விட்டு சுயநல ஆசைகள் வருகிறது ஆனால் சிலர் உடனே அது தவறு என்று அதை தன் இருதயத்தில் ஒத்துக்கொண்டு தேவனிடம் மன்னிப்புக்கேட்டு உடனே தன் ஜீவியத்தை சரிசெய்துக்கொள்கின்றனர்.ஆனால் சிலர் தனக்குள் ஏற்படும் குற்ற உணர்வை அசட்டைசெய்து அதனுடன் இசைந்து அடுத்து ஆவலுடன் அதைத்தொடர்கின்றனர்.அப்போது இச்சை அவர்கள் சிந்தையில் நீங்காத இடத்தை பிடித்துக்கொள்கிறது பிற்பாடு இயல்பாகவே அவர்கள் கண்கள் பாலியத்திற்குரிய இச்சிக்கும் செயலுக்கு திரும்பும்! அது பல தந்திரத்துடன் காரியத்தில் இரங்கும்.

 

இச்சையானது சிந்தையில் இடம்பிடித்துவிட்டால் அது பெருகிக்கொண்டு கடைசியில் சுயநிலையை முற்றிலும் இழக்கச் செய்து இச்சையை தீர்த்துக்கொள்ள மனிதன் வேசித்தனத்திலும்,விபச்சாரத்திலும் தேவ பயம் இல்லாமல் ஈடுபடுகிறான். அன்று பரிசுத்தத்தைக் குறித்து வைராக்கியமாக பேசினவர்கள்,இச்சையை தன் பக்திவைராக்கியத்தால் வென்றுவிடுவேன் என்று தப்புக் கணக்குப்போட்டதின் விளைவாக ரகசிய பாவத்தில் மூழ்கி முன்னதாக வைராக்கியமாக பேசினதுப்போல பேசமுடியாமல் முடங்கிக்கிடக்கின்றனர்.

 

இச்சையை தூண்டும் விபச்சார ஆவி எத்தனை தேவனுடைய தாசர்களை வென்ற களிப்புடன் அது தந்திரமாய் அங்கும் இங்கும் சுதந்திரமாய் அலைந்துதிரிகிறது.

 

இச்சையடக்கம் என்பது இச்சையை அடக்குவது அல்ல!இச்சையனது உன் மனதில் உதிக்காததே!

 

இன்று அநேகர் இச்சித்து தன்னை அடக்கிக்கொண்டு வாழ்வார்கள் அது ஒருநாள் அவர்களை மீறச்செய்து அதை ஆவலுடன் கட்டுக்கடங்காதபடி சிந்தையில் அதை திரும்பதிரும்ப நினைக்கச்செய்து கடைசியில் சுயபுணர்ச்சியின்மூலம் சுய ஆறுதல் அடைகிறான் நாளடைவில் அது அவனை அடிமைப்படுத்துகிறது .அந்த அடிமைத்தனம் அவனை அல்லது அவளை குற்றவுணர்வுடன் நிலைநிற்க்கச்செய்கிறது.

 

அந்த இச்சை இன்னும் பெருகி விபச்சாரம் அல்லது வேசிதனத்தில் தாகத்தையும் மோகத்தையும் தீர்த்துக்கொண்டப் பிற்பாடு அது நிற்கும்.பிற்பாடு ஒவ்வொருநாளூம் பழக்கவலக்கமாக கள்ளக்காதலியைஅல்லது கள்ளக்காதனை ஆசையாய் வெறியாய் தொடர்கிறது.யாக்கோபு 1:15 பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.வேதம் கூறுகிறது நான் ஒன்றுக்கும் அடிமைப்படமாட்டேன்( கலா6:7) என்ற வார்த்தை இவர்களுக்கு தூரமாகிவிடும்!

 

சிலர் இச்சையை அடக்கிக்கொண்டு கடையிசில் அதை மிக ஆவலுடன் காண ஆசையுடன் பாலான வீடியோக்களைப் பார்க்க இண்டர்நெட்டில் தன் கண்களை அலையவிடுகின்றனர் .அது கடைசியில் சிந்தையை கறைபடுத்தி கண்களுக்கு முன்னால் வரும் அனைவரையும் இச்சையுடன் பார்க்கச்செய்யும்.இப்படிப்பட்ட பாவத்தில் தேவனுடைய பிள்ளைகள் வீழ்ந்து வெளியே வரமுடியாமல் தன் குற்றவுணர்வால் அலைகளிக்கப்பட்டு பரிசுத்த வாழ்கையில் இருந்து தவறி சுயபுணர்ச்சியில் வீழ்ந்து பெலவீனமான வேதனையுடன் வாழ்கையை நடத்துகின்றனர்.

 

விபச்சாரம் சரீரத்தின்படி செய்ய சூழ்நிலைகள் ஏற்பட்டால் இவர்கள் வாழ்கை சூனியமாகிவிடும்! ஆனால் தேவனுடைய கிருபையோ அந்த பெலவீனத்திலும் பாவம் செய்யவிடாதபடி சூழ்நிலையை மாற்றி குற்றவுணர்வில் இருக்கும் ஜனத்தை மனந்திரும்ப ஆதி நாட்களின் செயல்பாடுகளை நினைவுப்படுத்தி ஆ என் தேவனோடு நான் எவ்வளவாக சந்தோசமாய் உறவாடினேன் எத்தனையோ பாடுகள் மத்தியிலும் எனக்குள் தேவ சமாதானம் இருந்ததே! ஆனால் இன்றோ பாடுகள் இல்லாதிருந்தும் எனக்குள்ளோ சமாதானம் இல்லையே!என்று புலம்பலோடு தேவனிடத்தில் மனந்திரும்ப வழியை உண்டாக்கும்!

 

ஆனால் சிலரை இச்சை அடிமைப்படுத்திவைத்திருப்பதால் அதில் இருந்து வெளியே வரமுடியாமல் முனங்கிக்கொண்டு இருப்பார்கள் . இப்போது அவர்களுக்குத்தேவை தாழ்மை! ஓ தாழ்மையுள்ளவனே! உனக்குள் தேவ கிருபை பெருகி உன்னில் இருக்கும் இச்சையென்னும் விலங்கை இப்போதே முறித்துப்போடும் என்பதை விளங்கிக்கொள்வாயாக ! ஆனால் சிலர் தன் தோழ்வியை மறைத்து தான் முன்புப்போல பரிசுத்தமாய் வாழ்வதுப்போல மற்றவர்கள் முன்பு காட்டிக்கொண்டு பெலவீனர்களை குற்றப்படுத்துவார்கள் இப்படிப்பட்டவர்களுக்கு கிருபை தூரமாய் விலகிப்போகும்!

 

ஓ தாழ்மையை நான் பற்றிப்பிடிக்காததினால் இன்றோ பாதகர்களின் பங்கை நான் பெற்றுக்கொண்டேன் என்னை விடுவிப்பார் உண்டோ! நிந்தையும் அவமானமும் என்னை புடமிடுகிறதே! என் பெயர் எல்லோராலும் தூற்றப்பட்டு என் ஜீவியத்தில் நாற்றமெடுக்கிறதே! என்று புலம்புவார்கள் ஆனால் தேவனிடத்தில் எனக்கு மன்னிப்பு உண்டா? என்று தனக்குள்ளே யோசித்து சுயநீதியால் தங்களை நியாயந்தீர்த்து பாவத்தில் நிலைகொண்டு தேவனைவிட்டு விலகி அநியாயத்தில் சந்தோசமாய் வாழ பழகிக்கொள்வார்கள். இவர்கள்தான் பின்மாற்றக்காரர்கள்.

இவர்களுடன் பேசும் போதெல்லாம் அவர்கள் வேதத்தின்படியான பரிசுத்தம் நம்மில் நிறைவேறாது என்பார்கள் அந்த வார்த்தையைக் கேட்கும் இச்சையின் ஆரம்பநிலையில் இருக்கும் மனிதன் சோர்ந்துப்போய் அவனும் பின்மாற்றக்காரனாய் மாறிவிடுவான்.ஆகையால் உன்னோடு பேசும் மனிதர்களைக் குறித்து எச்சரிக்கையாக இரு!

 

ஒருவனிடம் விசுவாச வார்த்தைகள் வராமல் எப்போதும் மற்றவர்களை தூசிக்கும் வார்த்தைகளும் ,உலக சம்பாசனையில் ஆர்வத்தோடு வேதத்தின் கர்ப்பனையைக் குறித்து அசட்டையுடன் இருப்பானென்றால் அவனுடன் ஐக்கியம் கொள்ளாதே!

 

அப்படியானால் பாதகமான இச்சையின் செயலை எப்படித்தான் வெல்வது? நீ தேவனுடனான ஐக்கியத்தை விரும்புவாயானால் அதன் சிந்தையிலே இரு! தேவன் உனக்குச் செய்த அன்பு செயலை எப்போதும் நினைத்து அசைபோடு! மாயையான இவ்வுலக அலுவல்களில் இருக்கும்போதும் உன் தேவன் உன் அருகில் எப்போதும் இருந்து உன் நடவடிக்கைகளை கவனித்துக்கொண்டு இருக்கிறார் என்கிற உண்மையை எப்பொழுதும் நினைவில் கொண்டு அசைபோடு! தேவனின் அன்புக்கு முன்னால் எந்த சுக வாழ்வும் என்னைத் திருப்திப்படுத்தமுடியாது என்று உன் இருதயத்தில் எப்போதும் கூறிக்கொண்டு இரு! இச்சையானது ஒரு இமைப்பொழுதிலும் என்னை வீழ்த்திவிடும் அதனால் அதற்கு நான் விலகி ஓடுவேன் என்ற எச்சரிப்பின் சத்தம் உன் காதில் எப்போதும் ஒலிக்கும்படி நடந்துக்கொள். தேவனின் விருப்பமே என் சமாதானம் அவருடைய ஆசையே என் செய்ல் வடிவமாய் மாறவேண்டும் என்ற ஆவலுடன் ஒவ்வொரு இமைப்பொழுதும் நினைவில் கொள்! நன்மையும் நற்செயலையும் சிந்தித்துக்கொண்டிரு!மற்றும் தேவன் உனக்குச்செய்த காரியங்களைப் புகழ்ந்து அதையே சிந்தித்துக்கொண்டிரு! வேண்டாத சினிமாக்களை நான் பார்ப்பதில்லை ,மாயையான புத்தகங்கள் வாசிப்பதில்லை!பாலுறுவு எண்ணங்களை யோசிப்பதில்லை

உன்னைக்குறித்த தேவனுடைய நோக்கம்:- பிரியாமான தேவ ஜனமே! ரோ8:29ல் தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;

 

உனக்குக்கொடுத்த தேவ கட்டளை:- ரோ12:2 நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

 

நீ உனக்குள் தீர்மானிக்கும் திட்டம்:- பிலி4:13 என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு. பிரியமான தேவ ஜனமே! நீ முழுவதும் உன் சுயத்தை வெறுக்கும்வரை பூரண விடுதலையை பெற்றுக்கொள்ளமுடியாது! எல்லா சுயநலக்காரர்களும்,சுயநலனை நாடுபவர்களும் தங்கள் விருப்பம்,மற்றும் கவலையால்,எதிர்மறையான பாதிப்புகளால்,ஏமாற்றத்தால்,புறக்கணிப்பால்,இயேசுகிறிஸ்துவின் காரியத்தை சிந்திக்காமல் தங்களைப் பற்றியே,தங்கள் சுய ஆசைபற்றியே எப்போதும் தேடுகிறவர்களாக இருந்தால் இச்சை உன்னைப் பின் தொடரும் என்பதை நினைவில் கொள்!



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
RE: கண்ணின் இச்சையும்,கள்ளகாதலும் ஒருமனிதனின் வீழ்ச்சியும்!
Permalink  
 


மிகவும் அருமையான ஆவிக்குரிய எச்சரிப்பு பதிவுகளை தந்துள்ளீர்கள்.
 
நீதிமொழிகள் 6:29 பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத் தொடுகிற எவனும், ஆக்கினைக்குத் தப்பான்.
 
தேவனின் வார்த்தைகள் நேரடியாக இங்கு எழுதப்படுவதாக உணர்கிறேன். 
 
தங்கள் பதிவுகளை வாசிக்கும்போது என் மனம் ஆனதத்தால் நிறைகிறது அதேநேரம் எச்சரிக்கையால் உணர்வடைகிறது 
 
படிப்போருக்கு நிச்சயம் பயனுள்ளதாக அமையும். 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard