இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இன்றய என் சூழ்நிலைகளும் அர்த்தமுள்ள தேவனின் பதில்களும்!


இளையவர்

Status: Offline
Posts: 35
Date:
இன்றய என் சூழ்நிலைகளும் அர்த்தமுள்ள தேவனின் பதில்களும்!
Permalink  
 


இன்றய என் சூழ்நிலைகளும் அர்த்தமுள்ள தேவனின் பதில்களும்!

 

சகோதரர்களே! இதை வாசியுங்கள் உங்களுக்கு புரோஜினமாய் இருக்கும்! என்னைப்போல நீங்களும் ஆவிக்குரியப் போராட்டத்தில் இருக்கிரீர்களா?அப்படியானால் இதைக் கட்டாயம் வாசியுங்கள்!

 

நான் தேவனை அறியாதவனாய் இருந்திருந்தால் ………மற்றவர்கள் என்னை ஏமாற்றினதுக்கும்,எனக்கு நடந்த அநீதிகளுக்கும்,என்னைப் புறக்கனித்ததுக்கும்,என்னை அற்ப்பமாய் என்னி தூசித்ததுக்கும்,என்னை பரியாசப் பொருளாக்கி என்னை நிந்தித்து மகிழ்ந்ததுக்கும்,தற்கொலை என்ற கோழையான முடிவே!

 

ஏன் எனக்கு விரோதமாக இந்த சூழ்நிலைகள் ஓயாத புயலைப் போன்று அடிக்கவேண்டும்? நான் மற்றவர்கள் போல் சுகமாய் இவ்வுலகில் ஜீவனம் பன்னமுடியாதா?ஏன் மற்றவர்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் எனக்கு கிடைக்கக்கூடாதா?ஏன் மற்றவர்கள் குடும்பமாய் சந்தோசமாய் இருந்து சமாதானமாய் வாழுவதைப்போல் எனக்கும் நிகழக்கூடாதா?இவைகள் என் சுயத்தில் இருந்து எழுந்த வார்த்தைகள்.

 

நான் நம்பின மனிதர்கள் என்னை எப்படி ஏமாற்றவேண்டும் என்று படிக்கத்தக்க சோதனைக் கருவியாய் நான் மாறி இருக்கிறேன்.

 

மற்றவர்களுக்கு நன்மைகள் நடக்கவேண்டும் என்று நினைக்கிறேன்! ஆனால் அவர்களோ கடைசியில் என்னை விரோதியாய் நினைக்கிறார்கள்.

 

மற்றவர்களுக்கு வாய்ப்புகள் உண்டாக நான் என்னை விட்டுக்கொடுத்து வந்த நாட்களை எண்ணிப் பார்க்கிறேன்.அப்போது நான் தேவனுக்குள் சந்தோசப்படுகிறேன் ஆனால் வாய்ப்புகளை அடைந்த மனிதர்கள் என்னை பிழைக்கத்தெரியாதவன் என்று பட்டம் புகுத்தி பரியாசம் செய்கிறார்கள்.

 

நான் தியாகமாய் செய்த சில உதவிகளை ஆதயத்துக்காய் இதை செய்கிறாய் என்று சொல்லும் வார்த்தைகள் என் இதயத்தை குத்தி கிழிக்கும் போது! ஆ” இயேசுவே! என்ன இது என்றபோது அவரோ என்னை எனக்கும் அப்படியே செய்தார்கள்.ஆகையால் நீ செய்த நன்மைக்கு பலனாய் வரும் தீமையை சகித்து சந்தோசப்படு!என்றார்.

 

உலக ஆசைகளை வெறுத்து தள்ளுங்கள் என்று மற்றவர்களுக்கு ஆலோசனைகள் கொடுக்கும் போது என்னை குற்றம் கண்டுபிடிக்கும் விதமாக மற்றவர்கள் “அப்படியானால் நீ பரதேசியாய் உன் வீடு மனைவியை பிள்ளைகளை விட்டு பிளாட்பார வாழ்கை நடத்த வேண்டியதுதானே! என்று எள்ளிநகையாடுவதை நான் கேட்டப்போது! எனக்கு வேதனையாய் இருந்தது என்னைக் குறித்து வேதனை இல்லை அவர்கள் உலகத்தை பற்றிப்பிடித்துள்ளதால் என்னை விரோதியாய் நினைத்துப் பேசுகிறார்கள் என்று இருதயத்தில் சிந்தித்தேன்.தேவனோ! என்னிடம் எனக்கும் இப்படியே பேசினார்கள் ஆகையால் சோர்ந்துப்போகாதே! என்றார்.

 

தேவனுக்காய் சுயத்தை வெறுத்து வாழுங்கள் அதுவே தேவனுக்கு நீங்கள் கீழ்படிகிறவர்கள் என்ரு பொருள்படும் என்று மற்றவர்களுக்கு ஆலோசனைகள் கூறினேன்.சாத்தோனோ என் மீது மிகுந்த கோபம் கொண்டு என் சொத்து சுகங்களை மற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்கத்தக்கவிதத்தில் சோதித்து என்னை இவ்வுலகில் எனக்கு எனக்கு எந்த சொத்து சுகங்களும் இல்லாதவனாய் நீர்வானியாக்கிவிட்டுப் போய்விட்டான். எனக்கு வரக்கூடிய சொத்துக்களை நான் விட்டுக்கொடுக்க தேவனே கூறினார் நான் விட்டுக்கொடுத்தவுடன் எனக்குள் தேவ சமாதானத்தை உணர்ந்தேன் பகைஉணர்ச்சிகள் என்னிடம் இருந்து அகன்றுப்போய்விட்டது ஆனாலும் அதன் பிரதிபலிப்பு என்னைப் பாதிக்காமல் என் குடும்பத்தாரை அதிகமாய் பாதித்தது.

 

                           அப்போது பண தட்டுப்பாடுகள் என்னைச் சுற்றிலும் இருக்கும் என் சகோதரிகளுக்கும் என் தாய் தந்தையர்களுக்கும் ஏற்பட்டது ,நான் என்ன செய்வேன் என்னிடம் ஒன்றுமில்லையே! ஆனால் என் சகோதரிகளும் என் பெற்றோர்களும் என்னை வெறுக்கவில்லை அந்த சூழ்நிலையில் பொறுமைக் காத்தார்கள்.என் தகப்பனார் தனக்குள் புலம்பிக்கொண்டு இருந்தார்.நமக்கு நியாயமாய் வரக்கூடிய அந்த சொத்து இருந்திருந்தால் இன்று அதன் விலை 1.5 கோடி கிடைத்திருக்கும் அதை வைத்து உன் அம்மாவுக்கு வைத்தியமும்,உன்னுடைய சகோதரிகளின் குறைவுகள் சந்திக்கப் பட்டிருக்கும் என்று என் தந்தை மனதில் விம்மிக்கொண்டு ,டோணாவூர் பெல்லோசிப்பிற்கு தள்ளாடி வாட்ச்மேன் வேலைக்காய் பெலன் இல்லாமல் சைக்கிள் மிதித்துக்கொண்டு போவதை கண்டேன். நான் மிகுதியாய் மனதில் அழுதேன் .

 

              அப்போது தேவனே என்னை அநாதையாய் வைத்திருந்தால் என் நிமித்தம் யாரும் கஷ்டத்தை சந்திக்காமல் நான் மாத்திரம் இப்பாதையில் சந்தோசமாய் எனக்கு கஷ்டத்தை சகித்து முறுமுறுக்காமல் ஜீவித்திருப்பேனே! என்றேன்.தேவன் என்னோடு! கலங்காதே! திகையாதே! நானும் இப்படியே!கஷ்டத்தை சகித்தேன் இதில் உன் பொறுமை விளங்கும்படி உன்னை திடப்படுத்திக்கொள்.தாவீது கர்த்தருக்குள் தன்னை தான் திடப்படுத்திக்கொண்டான் என்பது என்ன என்பதை இன்று இப்போது உணரும்படியாக இதையே நீயும் செய்யும்படியாக இப்பாதையில் வழிநடத்தப்பட்டு இருக்கிறாய் என்றார்.

 

என் மனைவி மற்றவர்கள் சுக வாழ்வைக் காணும்போது என்னை அவ்வப்போது நச்சரித்து வெளிநாட்டுக்கு போய் நல்ல சம்பளத்தில் வேலைப் பாருங்கள்.அப்போது நம்முடைய வீட்டில் எந்த பிரச்சனையும் வராது என்று பேசுவதும்,என் மனைவியின் குடும்பத்தார் ஏன் இவர் தேவசித்தம்இல்லை என்று நல்ல வேலை வந்ததையெல்லாம் உதறி தள்ளிக்கொண்டு வருகிறாரே! என்ன பயித்தியமா? வேதத்துக்காய் வாழ்கிறேன் என்று நூதான சீசனாய் இருக்கிறார் என்ற ஏளனப் பேச்சுகள் வேற!

 

துபாயில் நல்ல வேலை ,CNC Wire Cut Programmer போஸ்ட் இருக்குது 60,000 சம்பளம் என்று என் உறவினர் கூற .நானும் சந்தோசத்தோடு என் குடும்ப கஷ்டம் நீங்கிவிடும் என்று ஆசையோடு ஓடி தேவசமுகத்தில் தேவனே நான் அங்கு போகலாமா என்றேன் உடனே தேவன் நீ போகக்கூடாது நீ போனால் மறுபடியும் இந்தியா திரும்பி வரமாட்டாய் என்று எச்சரித்தார்.இதை என் மனைவியிடம் கூறினேன் அவளோ என்னை அற்பமாய் பார்த்து பிச்சைக்காரனுக்கு வாக்கப்பட்டுவிட்டேன் என்று வசைபாடி தன்னைத்தானெ நொந்துக்கொண்டாள்! நான் தேவ சமுகத்தில் இருக்கும் போது தேவன் என்னிடம்  “இப்போது உனக்கு ஒன்றும் புரியாது இவற்றிற்கு எல்லாம் ஒருநாள் என்னோடு சந்தோசப்படுவாய்” என்றார்.நானும் தேவன் கூறின அந்த மகிமையான நாட்களை என்னி சந்தோசமாய் இருந்தேன்.

 

இந்த சூழ்நிலையில் இந்தியாவில் வந்த அநேக வாய்ப்புகளையும் என் சுய ஆசைகள் உருவாகும்போதெல்லாம் தேவன் தடுத்து அவருடைய விருப்பப்படியே நடத்துகிறார் .இவை எல்லாவற்றையும் சகிக்கப் பெலனையும்,கிருபையையும் தந்திருக்கிறார் தேவன் .

 

ஆனாலும் என்னிடம் இருக்கு ஒரு குறைவு உண்டு அவற்றில் நான் அவ்வப்போது கீழ்படியாமல் இருந்துவிடுகிறேன் அதுதான் என்னை அதிக துக்கத்தில் ஆழ்த்தும் காரியமாய் புலம்ப வைக்கிறது .

நான் ஏன் இவற்றில் ஜெயங்கொள்ளமுடியாமல் தவிக்கிறேன் .அதுதான் கண்ணின் இச்சை! தீர்மானம் எடுப்பேன் பல நாட்கள் சந்தோசமாய் என் கன்னுக்கு கலிக்கம் போட்டுக்கொண்டு நடப்பேன் தேவனோடு சஞ்சரிப்பேன்.அப்போது தேவனிடத்தில் சந்தோசமாகவும் மனதில்இன்பமாக இருக்கும் ஆனால் திடீரென கண்ணின் இச்சை என்ற பள்ளத்தில் விழுந்துவிடுவேன்.என்னைக்குறித்து நான் மிகுந்த வேதனை அடைவேன்! அப்போது.சாத்தான் என்னிடம் அவ்வவப்போது; “ நீ சரீரபிரகாரமாய் பாவம் செய்யாமல்,மனதில்தானே அழகாய் இருப்பதாய் நினைத்தாய்! அதுவும் இச்சையோடு பார்க்கவில்லையே!” என்பான் .ஆனால் நான் அவனுடைய வார்த்தையை நம்பாமல் எனக்குத் தெரியும் இவன் என்னை வலைக்குள் தள்ள முயற்சிக்கிறான் என்று அதை அப்போதே அசட்டை செய்துவிட்டு ,அப்போதே எந்த இடத்தில் இருந்தாலும் உடனே தேவ சமுகத்தில் கதறுவேன்.

 

ஒருநாள் தேவனிடம்;“தேவனே இவற்றில் என் சுயம் இருக்கிறது இதை ஜெயிக்க ஏன் எனக்கு கிருபை தரவில்லையே” என்றேன் உடனே தேவன்; “ உனக்கு நான் கிருபைகள் கொடுத்ததால்தான் சாத்தானின் வார்த்தைகளை உன்னால் பகுத்தரியமுடிகிறது.நீ எனக்காய் மரிக்கவும் ஆயத்தமாய் இருக்கிறாய் அவைகளும் எனக்குத் தெரியும் அநேக காரியத்தில் நீ ஜெயமெடுக்கக்கூடியவனாய் இருந்து இந்த ஒருகாரியத்தில் உன் உண்மை நிலவரத்தை நீ அவ்வவப்போது அறியக்கூடியவிதத்தில் அபாயகரமாய் இருக்கிறாய்” என்றார். மற்றும்  “நீ என்னை எவ்வளவாய் நேசிக்கிறாய் என்பதை இந்த சோதனையின் மூலமே தீர்மானிக்கப்படும் நீ எனக்காய் இவ்வுலகத்தில் இழந்த எத்தையோ காரியங்கள் இருந்தாலும் இந்த கண்ணின் இச்சையில் ஜெயித்து உன்னை ஜெயஜீவியம் செய்கிறவனாய் உன்னை நிலை நிறுத்த நான் கிருபைகளை தந்திருக்கிறேன் ஆகையால் இப்போதைய பாவத்துக்கு விரோதமான போராட்டத்தில் இருந்து ஒரு இளைப்பாறுதல் உனக்கு கொடுப்பேன் அந்த நாளில் நீ என்னைப்போல் இருப்பாய்”  மற்றும் “ஆனால் இந்த ஒரு சோதனையில் நீ தவறும் போதல்லாம் என் எல்லா சுபாவத்திலும் இருந்து விழுந்துப்போகிறாய்! என்பதை அறிந்துக்கொள்” என்றார்.

 

நான் தேவனிடம்  “நல்லப்போராட்டத்தை போராடின பவுல் போல நானும் போராடி உம்முடைய சுபாவத்தை என் அச்சு அடையாளமாய் தரித்துக்கொண்டு ஆவிக்குரிய யுத்தத்தில் ஜெயமெடுப்பேன் எனற வாஞ்சையில்…………………….தொடருகிறேன்” என்றேன் …

 

குறிப்பு இதை வாசிக்கும் சகோதரனே நீ எல்லா கற்பனைகளையும் கைக்கொண்டவனாய் இருந்தாலும் ஏதோ ஒன்றில் ஜெயமெடுக்காமல் தடுமாறுவாய் தடுமாறும் அந்த ஒரு காரியத்தில் நீ ஜெயிப்பதை வைத்து தேவன் மேல் எவ்வளவு அன்புள்ளவனாய் இருக்கிறாய் என்பது தீர்மானிக்கப்படும்!)



-- Edited by johnsondurai on Wednesday 17th of June 2015 10:52:05 PM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard