இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சுயநலமிக்கவர்கள் ஒரு நிமிசத்தில் நல்லவர்களாய் மாற ஒரு அறிய வாய்ப்பு! இதை கட்டாயம் வாசிங்க!


இளையவர்

Status: Offline
Posts: 35
Date:
சுயநலமிக்கவர்கள் ஒரு நிமிசத்தில் நல்லவர்களாய் மாற ஒரு அறிய வாய்ப்பு! இதை கட்டாயம் வாசிங்க!
Permalink  
 


சுயநலமிக்கவர்கள் ஒரு நிமிசத்தில் நல்லவர்களாய் மாற ஒரு அறிய வாய்ப்பு! இதை கட்டாயம் வாசிங்க! 

 

 

“படிப்பில் ஆர்வம் இல்லாமல் குறைந்த மதிப்பெண் வாங்கி பாஸ்பண்ணும் உலக ஆஸ்திப் படைத்தவனின் மகன் கல்லூரிகளுக்கு லஞ்சம் கொடுத்து டாக்டர்,ஆசிரியர் ஆகிவிடுகிறான்.ஆனால் நல்ல மதிப்பென் வாங்கி தேர்ச்சிப் பெற்ற ஏழையின் மகன் படிக்க வழியில்லாமல் கூலிவேலைக்குச் செல்கிறான்”.

 

“குறைந்த மதிப்பென் வாங்கும் உலகத்தின் செல்வந்தர்களின் மகன் மேற்படிப்பைத் தெடருகிறான்

 

அதிக மதிப்பெண் வாங்கின ஏழையும் சில நல்லவர்களால் உதவிகள் கிடைத்து மேற்படிப்பைத் தொடருகிறான் 

 

அதிக மதிப்பெண் இல்லாமல் சற்று குறைந்த மதிப்பெண் வாங்கிருக்கும் ஏழை மாணவன் மேலும் படிக்க ஆசைப்படும் போது யாரும் இவர்களுக்கு உதவி செய்ய முன் வருவதில்லை!”-------வேதனை 

 

இதுவே என் வாழ்வில் நடந்தது நான் 70% மதிப்பெண் +2 வில் பெற்று மேற்படிப்புக்காய் ஆசைப் பட்டு மே மாதம் முழுவதும் கூலி வேலை செய்து கிடைத்த 5000 ருபாயைக் கொண்டு நாசரேத் ஐ டிஐ யில் படிக்க விண்ணப்படிவம் நிறப்ப போனேன் ஆனால் அங்குள்ளவர்கள் ’தம்பி இங்கு பீஸ் 10,000 ருபாய் ஒருவேளை நீ கட்டிவிடலாம் ஆனால் மாசமாசம் 1500க்குள்ளாக வரும் சாப்பாடு காசை எங்கிருந்து கட்டுவாய் என்று கூறி விண்ணப்பபடிவத்தை வாங்க மறுத்துவிட்டார்கள் நான் டோனாவூர் குருவானவரின் ரெக்கமண்ட் லட்டர் வைத்திருந்தையும் பார்த்து இதுவெல்லாம் இங்கு நடக்காது! பணம்தான் வேண்டும் என்றார்கள் நான் வேதனையோடு வீடு வரை பஸ்ஸின் இருக்கைக்கு முன் தலை கவிழ்ந்து அழுதுக்கிட்டே திரும்பின நாட்கள் அவைகள் இப்படி இன்று இப்படி உதவியற்று அழுது புலம்பும் ஏழை மாணவர்களை நினைத்து வேதனையாக இருக்கிறது! 

 

இந்த வேதனை நிகழ்வுகள் தொடர்கதையாகிக்கொண்டேப் போகிறது .இவை இப்படி இருக்க ஏழையான ஒரு மாணவன் குறைந்த மார்க்க் வாங்கினால் அவனுடைய மேற்படிப்பு என்பது முடியாத ஒன்றே! இன்னும் மருத்தும் மற்றும் தொழித்துறைக்காய் அரசு கொடுக்கும் தகுதி நிலைத் தேர்வில் அதிக சதவிகிதம் பெறாத ஏழை மாணவனின் நிலமையோ மிக பரிதாபம் .

 

நான் சிறுவனாய் இருந்த நாட்களில் அநேகர் நன்றாய் படிக்கும் ஏழை மானவர்களை கல்லூரியில் பீஸ் கட்டி படிக்கவைத்ததைப் பார்த்திருக்கிறேன்.அப்போதுக்கூட குறைந்த மார்க் எடுக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவி செய்ய யாரும் முன் வருவதில்லை என்பது வேதனைக்குரியக் காரியம் .

 

கல்வி அனைவரையும் சென்றடைய வேண்டும் .ஒருவன் அறிவில் குறைந்தவனாய் இருந்தாலும் அவனுக்கும் எல்லா நண்மையும் வந்தடையவேண்டும் .இதைத்தான் கிறிஸ்தவம் போதிக்கிறது .

 

கிறிஸ்துவுக்குள் வரும் பேதைக்கூட திசைக் கெட்டுப்போவதில்லை என்று நம் தந்தைக் கூறுகிறார்.ஆகையால் குறைந்த மார்க் வாங்கி படிக்க ஆசைப்படும் ஏழை மாணவனுக்கு நீங்கள் உதவி செய்ய முன் வருவீர்கள்!!!

 

(குறிப்பு :-தயவு செய்து நீ முதலில் செய் என்று அப்புறம் நாங்கள் செய்கிறோம் என்று இருதயத்தில் எண்ணாதே! என் வியாகுலத்தில் இதை எழுதியிருக்கிறேன். இப்படிப்பட்டவர்களுக்கு உதவவே இதை எழுதினேன் ஆகையால் நீதி செய்யும் தேவன் உன்னை காண்கிறார் என்பதை அறிந்துக்கொள்!)

 



-- Edited by johnsondurai on Wednesday 17th of June 2015 11:19:40 PM



-- Edited by johnsondurai on Wednesday 17th of June 2015 11:20:01 PM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard