இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வாழ்க்கை துணை பற்றியது


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
வாழ்க்கை துணை பற்றியது
Permalink  
 


அன்பான சகோதரரே 

 

எனக்கு ஒரு சந்தேகம் பதிலளிக்க முடியுமா? 

 

எமது வாழ்க்கையில் ஆண்டவர் வைத்த சித்தம் மட்டுமே நடக்குமா?  இல்லாவிடின் நாம் கேட்பதன் நிமித்தம் ஆண்டவர் எமக்கு தருவாரா ? அதாவது வாழ்க்கை துணை விடயத்தில் ஆண்டவர் எமக்கு நியமித்தது தான் நடக்குமா அல்லது நாம் ஒரு விடயத்தை கேட்க்கும் போது அதை எமக்கு ஆசீர்வாதமாக மாற்றி தருவாரா? 



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

அன்பு சகோதரி, இந்த விஷயத்தில் பலருடைய கருத்து பலவேராக இருக்கலாம் ஆனால் நான் எனக்கு தேவன் அளித்த கிருபையின் அடிப்படையில் இந்த கருத்தை பதிவிடுகிறேன். "ஆண்டவர் சித்தம்தான் கண்டிப்பாக நடக்கும்" என்றால் "உம்முடைய சித்தம் பூமியில் செய்யப்படுவதாக" என்று நாம் ஜெபிக்க வேண்டும் என்று நம் ஆண்டவர் சொல்லியுருக்கமாடடார். தேவ சித்தத்தை நம் வாழ்வில் நிறைவேற விடாமல் தடுக்க நம் ஒருவரால் மட்டுமே முடியும். எனவே கண்டிப்பாக அவர் சித்தம் நம் வாழ்வில் நடக்கும் என்று சொல்லிவிட முடியாது. சிம்சோனை போல் இடுப்பு பண்ணி அதை கெடுத்துப்போட முடியும்.

உங்களுக்கு யார்மேலாவது ஈர்ப்பு இருக்குமானால் நான் சொல்லும் ஆலோசனை:

நம் கண்முன்னே வருபவர்கள் பெரும்பாலும் நம்மை சோதிக்கவும் நம்மை கண்ணியில் விழப்பண்ணவுமே முயற்சிக்கிறார்கள். எனவே அவர்களில் ஒருவரை நாம் தேர்ந்தெடுக்கும் முன் "தேவனே உமக்கு சித்தம் இல்லை என்றால் இந்த ஆளை என் கண் முன்னாள் இருந்து அகற்றி விடுங்கள்" என்று முழு மனதோடு முடித்த அளவு ஜெபித்தால் அவசியம். தேவனை முதலில் வைக்க வேண்டும் வேறு யாராக இருந்தாலும் இரண்டாவது இடத்தில் வைத்து தேவனுக்காக யாரையும் நிராகரிக்க தயங்காமல் முழு மனதோடு ஜெபிக்க வேண்டும்.

அநேக ஜெபங்களுக்கு பின்னும் அந்த ஆள் நம் கண் முன்னர் அனுமதிக்கப்படடால் அது தேவன் உங்களுக்காக கொண்டுவந்த ஆளாககூட இருக்க வாய்ப்பிருக்கிறது. அதன் பின்னே உங்கள் இருதய எண்ணங்களை எல்லாம் ஒரு தகப்பனிடம் சொல்வதுபோல் சொல்லி ஒரு வேளை உமக்கு பிடித்தம் இல்லை என்றால் நீங்கள் என்னை தடை பண்ணிவிடுங்கள் ஆண்டவரே என்று அவர் கையில் மொத்த பொறுப்பையும் ஒப்படைத்து விடுங்கள். மனதில் விருப்பம் இருந்தால் அவர் சமூகத்தில் அதையும் சொல்லி ஒப்புக்கொடுங்கள் ஆனால் தேவனை முன்னிருத்துங்கள் அவர் வேண்டாம் என்றால் விட்டுவிட தயாராக இருப்பதாக மனபூர்வமாக சொல்லுங்கள்.

பொதுவாக "நம் சுய விருப்பத்தின்படி சாயாமல் தேவனை சார்ந்துகொண்டு அவர் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து செய்லபடடால்" சகலத்தையும் தேவன் நன்மையாக முடித்து தருவார். தேவன் தம் பிள்ளைகளுக்கு மேன்மையானதையே தர விரும்புகிறார் என்பதை மறக்க வேண்டாம்.



-- Edited by SUNDAR on Monday 25th of July 2016 02:05:29 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

அது சரி அண்ணா

ஆனால் ஒருவருக்காக நாம் ஜெபிக்கும் போது அவரை எமது வாழ்க்கை துணையாக ஆண்டவர் தருவாரா? இல்லாவிடின் ஆண்டவரின் சித்தம் மட்டுமே எமது வாழ்க்கை துணை விடயத்தில் நிறைவேறுமா?

நாம் ஜெபிப்பதன் நிமித்தம் ஆண்டவரின் திட்டம் மாறுமா?

தயவு செய்து இதை விளக்கமாக சொல்லுங்கள் அண்ணா


__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

வாழ்க்கை துணை விடயத்தில் எப்படி அண்ணா ஆண்டவரின் சித்தத்தை அறிந்து கொள்வது ?

உதாரணமாக வீட்டில் வரன் பார்க்கிறார்கள் என்றால் எப்படி அறிந்து கொள்வது....ஆண்டவர் சித்தத்தை

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

Debora wrote
///ஒருவருக்காக நாம் ஜெபிக்கும் போது அவரை எமது வாழ்க்கை துணையாக ஆண்டவர் தருவாரா?///
 
வாழ்க்கை துணைக்காக ஜெபிக்க வேண்டியதுதான் நமது நிலையேயன்றி ஒருவரை தெரிந்துகொண்டு நம்முடைய விருப்பத்தை நிறைவேற்ற சொல்லி தேவனிடம் ஜெபிப்பது ஏற்றதன்று.
 
நம் தேவன் மிகுந்த இரக்கம் உள்ளவராக இருப்பதால் நீங்கள் மிகுந்த மனவிருப்பத்துடன் ஒரு காரியத்தை கேட்க்கும்போது தேவன் நீங்கள் விரும்பும் நபரை உங்களுக்கு தந்துவிடலாம் ஆனால் அது தேவனுக்கு 100% ஏற்ற ஒரு நிலை என்று சொல்ல முடியாது. (ஜனங்கள் ராஜா வேண்டும் என்று கேட்ட்டபோது தேவன் முழு விருப்பம் இல்லாமலேயே அப்படியே செய்தார்)  
 
தாவீது தவறான பாதையில் விரும்பி  எடுத்துக்கொண்ட பத்சேபாளையே தேவன் விட்டுவிடடார் அவள்  வழியில்தான் இயேசுவே பிறந்தார் ஆகினும் அதற்காக தாவீது கொடுத்த கிரையம் மிகப்பெரியது அதுபோன்ற காரியங்களை நம்மால் தாங்க முடியாது.
 
நான் சொல்ல வருவது என்னவெனில் நீங்கள் ஜெபத்தில் 
கேட்க்கும் யாரையும் தேவனே தரலாம் அல்லது நீங்களே முயன்று உங்களுக்கு பிடித்தமானவரை திருமணம் செய்துகொள்ளலாம் ஆனால் அது தேவ சித்தம் என்று சொல்ல முடியாது. யாரையும் உங்கள் மனதில் தெரிவு செய்யாமல் தேவன் கையில் விட்டு வரப்போகும் ஒருவர் நல்லவராக அமையவேண்டும் என்று ஜெபிப்பதுதான் மூன்றிலும் தேவ சித்தத்துக்கு ஏற்றது.  
 
  
Debora wrote
//இல்லாவிடின் ஆண்டவரின் சித்தம் மட்டுமே எமது வாழ்க்கை துணை விடயத்தில் நிறைவேறுமா? ///
 
மீண்டும் இந்த கேள்வியை கேட்பதன் நோக்கம் புரியவில்லை. 
நீங்கள் முற்றிலும் தேவன் செயல்பட  விட்டுக்கொடுத்ல்தா ல்  நிச்சயம் தேவ சித்தமே உங்கள் வாழ்க்கையில் நிறைவேறும்.  
 
தேவ சித்தத்தை நிறைவேற விட்டு கொடுப்பதும் அதை தடை செய்வதும் உங்கள் கையில்தான் இருக்கிறது என்று முன்னமே நான் சொல்லவிடடேன்.
 
 
 
Debora wrote
//உதாரணமாக வீட்டில் வரன் பார்க்கிறார்கள் என்றால் எப்படி அறிந்து கொள்வது....ஆண்டவர் சித்தத்தை ///
 
நீங்கள் செய்ய வேண்டியது.
 
1. ஆண்டவரே உமது சித்தப்படி நீர் எனக்கு அனாதியாய் நியமித்த உமக்கு பயந்து நடக்கும் ஒரு மகனை எனக்கு கொண்டு வாருங்கள்.
 
2. நான் யாருக்காவது என் இருதயத்தில் இடம் கொடுத்திருந்தால் என்னை மன்னித்து அந்த ஆள் என் இருதயத்தில் இருந்து முற்றிலும் நீக்கிவிட கிருபை செய்யும்.
   
3. என் இருதய எண்ணங்கள் எனது விருப்பங்கள் எல்லாமே உமக்கு தெரியும் அதை அறிந்து உணர்ந்து  நடந்து அவரோடு கூட உம்முடைய நித்திய வீடடை சுதந்தரிக்க ஏற்றபடி வரப்போகும் அந்த மகனை பக்குவப்படுத்துங்கள்.
 
இதே கருத்தில் வேறு என்ன ஜபம் வேண்டுமானாலும் பண்ணி கொள்ளலாம். 
 
மற்றபடி நான் இவரை விரும்புகிறேன் அவரையே எனக்கு கணவராக தாரும் என்று ஜெபிப்பாது தேவ சித்தத்துக்கு முரணாக அமையலாம்.
 
 

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

Ya Thank u anna

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard