இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனும் இல்லையா?


இளையவர்

Status: Offline
Posts: 22
Date:
பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனும் இல்லையா?
Permalink  
 


இஏயசு சொன்ன வார்த்தை இது

யோவான் 3:13 பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன்ஒருவனுமில்லை.

இங்கே “மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன்ஒருவனுமில்லை” என்று இயேசு கூறுகிறார்.

அனால் வேதத்தில் நாம் எலியாவைக் குறித்து வாசிக்கும் போது எலியா பரலோகத்திற்கு ஏறிப் போனார் என்று வாசிக்கிறோமே.

II இராஜாக்கள் 2:11 அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகையில், இதோ, அக்கினிரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான்.

அது மட்டுமன்றி எலியா பரலோகத்திலிருக்கிறார். அத்துடன் பரலோகத்திலிருந்து இறங்கி வந்துமிருக்கிறார் (இயேசுவின் மறுரூப மலையில்) பரலோகத்துக்கு ஏறியுமிருக்கிறார். இந்நிலையில் இயேசு விஷேடமாக இங்கு கூறவரும் விடயம் என்ன?

தெரிந்தவர்கள் விளக்கவும்.



__________________

.................................................. எப்போதும் நான் ஒரு வேதாகம மாணவனே  ...............................................



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

தேவனுக்கு மகிமை

எலியா தானாக பரலோகத்திட்கு ஏறிப்போகவில்லை மாறாக தேவனே அவரை சுழட்க்காற்றினால் எடுத்து கொண்டார்.

2 இராஜாக்கள் 2:1
கர்த்தர் எலியாவைச் சுழல்காற்றிலே பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப் போகிறபோது, எலியா எலிசாவோடேகூடக் கில்காலிலிருந்து புறப்பட்டுப்போனான்

ஆனால் மனுஷ குமாரனுக்கோ சகல அதிகாரமும் உண்டு. அவருக்கு மாத்திரமே தானாக பரலோகத்திட்கு ஏறி போக கூடிய வல்லமை உண்டு என்பதையும் தான் வல்லமையில் பெரியவர் என்பதை காட்டுவதட்கும் இயேசு அதை குறிப்பிட்டிருக்கலாம்

__________________


இளையவர்

Status: Offline
Posts: 22
Date:
Permalink  
 

நீங்கள் சொல்வது சரி சகோதரி.

///////ஆனால் மனுஷ குமாரனுக்கோ சகல அதிகாரமும் உண்டு. அவருக்கு மாத்திரமே தானாக பரலோகத்திட்கு ஏறி போக கூடிய வல்லமை உண்டு என்பதையும் தான் வல்லமையில் பெரியவர் என்பதை காட்டுவதட்கும் இயேசு அதை குறிப்பிட்டிருக்கலாம் ////////


இதைத்தான் நானும் நினைத்திருந்தேன். ஆனால் இயேசு “மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன்ஒருவனுமில்லை”. என்று குறிப்பிட்டுள்ளார். “தானாக பரலோகத்துக்கு ஏறினவன்ஒருவனுமில்லை” என்று கூறவில்லை. அதனால்தான் இந்த கேள்வி வந்தது.



__________________

.................................................. எப்போதும் நான் ஒரு வேதாகம மாணவனே  ...............................................



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

அதாவது இயேசுவை தவிர பரலோகத்திட்கு ஏறினவர் ஒருவருமில்லை   மாறாக எடுத்து கொள்ளப்பட்டவரே இருக்கிறார்

இயேசு பரலோகத்திட்கு ஏறினவர் ஆனால் எலியா பரலோகத்திட்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்

//////////ஆனால் இயேசு “மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன்ஒருவனுமில்லை”. என்று குறிப்பிட்டுள்ளார். “தானாக பரலோகத்துக்கு /////ஏறினவன்ஒருவனுமில்லை” என்று கூறவில்லை. அதனால்தான் இந்த கேள்வி வந்தது.////////////////


இயேசு மாத்திரமே பரலோகத்திட்கு ஏறினவர் எலியா அல்ல மாறாக அவர் எடுத்து கொள்ளப்பட்டார்



-- Edited by Debora on Saturday 6th of August 2016 12:11:16 PM

__________________


இளையவர்

Status: Offline
Posts: 22
Date:
Permalink  
 

யோவான் 3:13 பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன்ஒருவனுமில்லை.


மேலும் இவ்வசனத்தில் “ பரலோகத்திலிருக்கிறவருமான ” என்னும் சொல் நிகழ் கால சொல்லாக இருக்கிறது என்றும் கருதலாம் என்று நினைக்கிறேன். அதாவது இயேசு இவ்வார்த்தைகளை சொல்லும் போது மனுஷகுமாரனாக இருந்தார் அதே நேரம் பரலோகத்தில் உள்ள பிதாவிலும் இருந்தார் என்று கூற வருகிறாரோ என்னவோ. இயேசுவின் சர்வ வியாபித்த தன்மையை இது காட்டுவதாக இருக்கலாம்.



__________________

.................................................. எப்போதும் நான் ஒரு வேதாகம மாணவனே  ...............................................



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

சரி தற்போது தங்களுடைய குழப்பம் தீர்ந்து விட்டதா சகோதரா? அல்லாவிடின் தற்போது எதையாவது முன் வைக்க விரும்புகிறீர்களா?

ஆம் தங்கள் குறிப்பிட்டது போல அவர் குமாரனாகவும் இருந்தார் தேவனாகவும் இருந்தார்

அவர் நிகழ்காலத்திட்கும் தேவன், இறந்த காலத்திட்கும் தேவன், எதிர்காலத்திற்கும் தேவன்

__________________


இளையவர்

Status: Offline
Posts: 22
Date:
Permalink  
 

தங்கச்சி இந்த தளத்தில் எழுதுவதற்கு நீங்கள் மட்டும்தான் இருக்கிறீர்கள் என்று எண்ணிக் கொள்ள வேண்டாம் அம்மா. நீங்கள் எழுதி முடிந்து விட்டால், அல்லது எழுத உங்களுக்கு ஒன்றும் இல்லை என்றால் பேசாமல் விட்டு விடுங்கள்.

என் ஒருவனுடைய சிற்றறிவால் வேதாகமத்தை முழுதும் விளங்கிக் கொள்ள முடியாது என்பதை நன்கு அறிந்தவன் நான். உங்களுடைய சிற்றறிவாலும் அதை முழுதும் விளக்க முடியாது.

சுந்தர் அண்ணாவைப் போன்ற விஷேட கிருபை பெற்ற நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்களால் கூட முழுதும் விளக்க முடியாவிட்டாலும் ஓரளவாவது விளக்கம் தருவார்கள்.

ஒருவருக்கொருவர் விளக்கம் கொடுக்க தேவையில்லை தேவனிடமிருந்தே கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறுவதானால் இந்த தளம் பிரயோஜனமற்றதாகி விடும். 5 வகை ஊழியங்களில் போதக ஊழியம் என்று ஒன்றே தேவைப்பட்டிருக்காது. 

நான் இங்கே பதிவிட்ட வசனத்தை நான் ஒரு கோணத்திலிருந்தே பார்க்கிறேன். பலருக்கு தேவன் அவர்களுடைய சூழ்நிலை மற்றும் தன்மைகளுக்கேற்ப பல கோணங்களிலிருந்து விளங்கப்படுத்தியிருப்பார்.

மேலும் அவ்வசனத்தை முதலில் நான் பதிவிட்ட போது அந்த வசனத்திற்கு விளக்கம் ஏதும் இல்லாமலே பதிவிட்டேன். ஆனால் மீண்டும் மீண்டும் அதை வாசிக்கும் போது புதிய எண்ணங்கள் தோன்றியது. அதுதான் மீண்டும் அந்த வசனத்தை பற்றிய இன்னொரு கருத்தாக இருக்கலாம் என்று தோன்றியதை பதிவிட்டேன். யாரையும் மடக்கும் எனக்கில்லை.

நீங்கள் சொல்லியது மட்டுமே முழு விளக்கம் ஆகி விடாது.

பொறுத்திருங்கள் வேறு யாராவது தங்கள் கருத்துகளையும் முன்வைக்கட்டும்.



__________________

.................................................. எப்போதும் நான் ஒரு வேதாகம மாணவனே  ...............................................



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

அன்பான சகோதரரே

தாங்கள் கோபப்படுவதட்கான காரணம் என்ன என்று எனக்கு புரியவில்லை.

எப்படியோ நான் ஞானவான் என்று சொல்ல வில்லை மனிதனின் ஞானம் தேவனுக்கு முன்பாக பைத்தியமாயிருக்கிறது என்பது எனக்கு நன்றாக தெரியும். எனவே எனக்கு ஆண்டவர் வெளிப்படுத்தியத்தையே நான் குறிப்பிட்டேன்.

நீங்கள் பேசுவது எனக்கு எவ்வாறு இருக்கிறது என்றால் (புதிதாக தளத்திட்கு வந்த நீங்கள் இவ்வாறு பதிலளிக்க முடியாது அதில் தவறு இருக்கும் என்பது போல் உள்ளது ) இது என்னை காயப்படுத்துவதாக உள்ளது ஆனால் பரவாயில்லை சகோதரரே

நான் குறிப்பிட்ட ஒவ்வொரு பதிலில் நீங்கள் தவறு கண்டு பிடிக்க முயல்கிறீர்கள் எப்படியோ இனி உங்கள் பதிவுகளுக்கு பதில் அளிக்காமல் இருக்க முயல்கிறேன்.

தவறாயின் மன்னிக்கவும்

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

தேவனுடைய பிள்ளைகள் மத்தியில் விட்டுக்கொடுத்து போகும் மனப்பக்குவம் கண்டிப்பாக வேண்டும்.

சகோதரர் சொல்வதுபோல "இதுதான் முடிவு" என்று சொல்வதற்கு எதுவும் இல்லை என்பது எனது கருத்தும் கூட.

எனவே நாம் திரியை திறந்தே வைப்போம் தெரிந்தவர்கள் யார் வந்து பதில் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளலாம்.

இந்த கருத்தை குறித்தவரை நான் பலரிடம் வாதிட்டு ஒரு முடிவை எடடமுடியாத காரணத்தால் நான் பதில் போடவில்லை.

சகோதரி எந்த முடிவுக்கும் வரவேண்டாம். உங்கள் கருத்தை பதிவிட தயங்க வேண்டாம்.

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

இல்லை சுந்தர் அண்ணா நான் இது தான் முடிவு என்று சொல்ல வரவில்லை, யார் பதில் சொன்னாலும் அது சரியாயின் ஏற்றுக் கொள்பவள் நான், ஆனால் தினேஷ் அண்ணா என் மேல் கோபமாக பேசுகிறார் ஆனால் பரவாயில்லை அண்ணா என் மேல் தவறு இருக்குமாயின் தயவு செய்து தினேஷ் அண்ணா மற்றும் சுந்தர் அண்ணா மன்னித்துக் கொள்ளுங்கள்.

__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 136
Date:
Permalink  
 

iam very sorry சகோதரி . நான் உங்கள் மேல் கோபப்படவில்லை.

///////////சரி தற்போது தங்களுடைய குழப்பம் தீர்ந்து விட்டதா சகோதரா? அல்லாவிடின் தற்போது எதையாவது முன் வைக்க விரும்புகிறீர்களா?

ஆம் தங்கள் குறிப்பிட்டது போல அவர் குமாரனாகவும் இருந்தார் தேவனாகவும் இருந்தார்

அவர் நிகழ்காலத்திட்கும் தேவன், இறந்த காலத்திட்கும் தேவன், எதிர்காலத்திற்கும் தேவன் //////////////

தாங்கள் இப்படி எழுதியது என்னை ஏசுவது போல் தோன்றியது. மன்னித்து கொள்ளுங்கள்.







////////நீங்கள் பேசுவது எனக்கு எவ்வாறு இருக்கிறது என்றால் (புதிதாக தளத்திட்கு வந்த நீங்கள் இவ்வாறு பதிலளிக்க முடியாது அதில் தவறு இருக்கும் என்பது போல் உள்ளது ) இது என்னை காயப்படுத்துவதாக உள்ளது ஆனால் பரவாயில்லை சகோதரரே
///////////

இப்படி நான் மனதிலும் எண்ணவில்லை. என்னை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். sorry sorry



__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

Its ok brother, but i am not scolding u.. if i anything hurt u sorry for that.

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard