இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கர்த்தருக்கு எம் கெஞ்சுதலை கேக்காமல் இருக்கமுடியாது...


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
கர்த்தருக்கு எம் கெஞ்சுதலை கேக்காமல் இருக்கமுடியாது...
Permalink  
 


எம் கெஞ்சுதலை கேக்காமல் இருக்க கர்த்தருக்கு முடியாது

 

ஆம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு மகிமை உண்டாவதாக!

 

நமது ஆண்டவர் மனமிறங்கும் ஆண்டவர் என்பது மறுக்க முடியாத உண்மை..

 

எனது வாழ்விலும் சரி அநேகரின் வாழ்விலும் சரி உண்மையாய் அவரை நோக்கி மன்றாடும் போது அவர் எமக்கு இரங்கி பதில் தருகிறார் என்பதை நான் பார்த்திருக்கிறேன்.. 

 

இதே போல பல காரியங்கள் வேதத்தில்  இருக்கிறது,, அந்த வகையில் நான் வேதத்தில் 2 நாளாகமம் 33  ஆம் அதிகாரத்தை  தியானிக்கும் போது ஒரு காரியத்தை மீண்டும் கற்றுக் கொண்டேன்.. 

 

அதுதான் எம் கெஞ்சுதலை கேக்காமல் இருக்க கர்த்தருக்கு முடியாது என்பது.. 

 

மனசே என்ற ராஜா தன் தேவனுக்கு  முன்பதாக அநேக அட்டூழியங்களையும் அருவருப்புக்களையும் செய்தும் தன் இக்கட்டிலே அவன் உண்மையாய் மனந்திரும்பி  அதாவது தன்னை தேவனுக்கு முன்பாக தாழ்த்தி தேவனை நோக்கி கெஞ்சின போது தேவன் அவனுக்கு பதில்  கொடுத்தார்..

 

2 நாளாகமம் 33 :

 

1. மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்து வருஷம் எருசலேமில் அரசாண்டான்.

 

2. கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே, அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.

 

3. அவன் தன் தகப்பனாகிய எசேக்கியா தகர்த்துப்போட்ட மேடைகளைத் திரும்பவும் கட்டி, பாகால்களுக்குப் பலிபீடங்களை எடுப்பித்து, விக்கிரகத்தோப்புகளை உண்டாக்கி, வானத்தின் சேனையையெல்லாம் பணிந்துகொண்டு, அவைகளைச் சேவித்து,

 

6. அவன் இன்னோம் குமாரரின் பள்ளத்தாக்கிலே தன் குமாரரைத் தீமிதிக்கப்பண்ணி, நாளும் நிமித்தமும் பார்த்து, பில்லிசூனியங்களை அநுசரித்து, அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்கு மிகுதியும் பொல்லாப்பானதைச் செய்தான்.

 

8. நான் மோசேயைக்கொண்டு இஸ்ரவேலுக்குக் கொடுத்த சகல நியாயப்பிரமாணத்திற்கும் கட்டளைகளுக்கும் நியாயங்களுக்கும் ஒத்தபடியே அவர்களுக்கு நான் கற்பித்தவைகளையெல்லாம் அவர்கள் செய்யச் சாவதானமாய் இருந்தார்களேயாகில், நான் இனி அவர்கள் காலை அவர்கள் பிதாக்களுக்கு நிலைப்படுத்திவைத்த தேசத்திலிருந்து விலகப்பண்ணுவதில்லையென்றும், தேவன் தாவீதோடும் அவன் குமாரனாகிய சாலொமோனோடும் சொல்லியிருந்த தேவனுடைய ஆலயத்தில்தானே, அவன் தான் பண்ணுவித்த விக்கிரகமாகிய சிலையை ஸ்தாபித்தான்.

 

9. அப்படியே கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அழித்த ஜாதிகளைப் பார்க்கிலும், யூதாவும் எருசலேமின் குடிகளும் பொல்லாப்புச் செய்யத்தக்கதாய், மனாசே அவர்களை வழிதப்பிப்போகப்பண்ணினான்.

 

11. ஆகையால் கர்த்தர்: அசீரியா ராஜாவின் சேனாபதிகளை அவர்கள்மேல் வரப்பண்ணினார்; அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச் சங்கிலியால் அவனைக் கட்டிப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.

 

தான் நெருக்கப்படுகையில் நம் மனதுருகும்  தேவனை நோக்கி கெஞ்சினான். அப்போது தேவன் அவனுக்கு இரங்கினார்.. எத்தனை அன்பு நிறைந்த தெய்வம் நம் தெய்வம்..

 

2 நாளாகமம் 33 :

 

12. இப்படி அவன் நெருக்கப்படுகையில் தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கெஞ்சி, தன் பிதாக்களின் தேவனுக்கு முன்பாக மிகவும் தன்னைத் தாழ்த்தினான்.

 

13. அவரை நோக்கி, அவன் விண்ணப்பம்பண்ணிக்கொண்டிருக்கிறபோது, அவர் அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவன் ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப எருசலேமிலுள்ள தன்னுடைய ராஜ்யத்திற்கு வரப்பண்ணினார்; கர்த்தரே தேவன் என்று அப்பொழுது மனாசே அறிந்தான்.

 

இப்படியாக தேவன் மனாசே ராஜாவின் கூப்பிடுதலுக்கு இரங்கினார்.. 

 

உண்மையாக அவரை நோக்கி கெஞ்சும் போது அவர் எமது கெஞ்சுதலை கேட்டு எம்மை மன்னிக்க வல்லவராயிருக்கிறார்.. 

 

மனதுக்கும் தெய்வம் இயேசய்யா 

உம்மை மனதார துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்..

 

என்ற பாடல் எத்தனை உண்மையுள்ளது.. 

 

  • ஆனால் மாறாக அவரின் இரக்கத்தை தவறாக பயன்படுத்த நாம் நினைத்தால் அதற்கான தண்டனையை பெறுவோம் என்பதை யாரும் மறக்க கூடாது.. 

 

  • தேவன் மன்னிப்பார் தானே என்று துணிகரமாக பாவம் செய்யாதிருக்க கடவோம்.. 

கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக ................

 



-- Edited by Debora on Monday 23rd of January 2017 10:41:34 AM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard