இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அழுக்கு மூடடையை சுமக்க சொன்ன ஆண்டவர்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
அழுக்கு மூடடையை சுமக்க சொன்ன ஆண்டவர்!
Permalink  
 


கடவுளை மிகவும்  அதிகமாக நேசிக்கும் பக்தர்  ஒருவர் ஒரு நாள் இறைவனின் ஆலயத்துக்கு சென்று  சென்று, "ஆண்டவரே  உம சொல்லக்கேட்டு  உம் விருப்பப்படி நடந்துகொள்வதை தவிர எனக்கு வேறு மகிழ்ச்சி எதுவும் இல்லை எனவே  உமக்கு நான் என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள் அதன்படி அதை நான் செய்கிறேன்  என்றார்.
 
அடிப்படையில்  அவர் இறைவனை மிகவும் நேசித்தார் ஆனால்  மிகவும் ஏழ்மையான ஒரு வாழ்க்கை நிலையில் இருந்தார் அவருக்கு தாய் தந்தை கூட கிடையாது.
 
இறைவன் தன்னிடம்  ஏதாவது பக்தி பூர்வமாக கேட்பார் பக்திக்கடுத்த காரியங்களை அவர் செய்ய சொல்வார்  அதை நாம் அவருக்காக செய்யலாம் என்று கருதித் தான் அவர்  கேட்டார் . 
 
ஆனால் இறைவனோ  அந்த  மனுஷனிடம் அவர்  அதிர்சியடையும் விதம், ஒரு செயலை செய்ய சொன்னார். அதாவரது ஒரு அழுக்கான  கோணிப்பையை மூடடை ஒன்றை  கொடுத்து, “நீ எங்கெல்லாம் செல்கிராயோ அங்கெல்லாம் என் நினைவாக இதை தூக்கி கொண்டு போ  அது போதும், நான் வந்து பிரிக்கும் வரை அதனுள் என்ன இருக்கிறது என்று பிரித்து பார்க்காதே"   என்றார். .
 
வேறு எதையோ எதிர்பார்த்த அந்த மனுஷனுக்கு  கடும் அதிர்ச்சி.  அவர் இறைவனுகாக  ஏதாவது  பெரிய காரியம் செய்யலாம் என்று நினைத்து வர இறைவன் இப்படி ஒரு அழுக்கு சாக்கு மூட்டை கொடுத்து  தூக்கி அலைய சொல்வார் என்று  அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
 
வேறு என்ன செய்வது? அவர் போகும் இடங்களுக்கு எல்லாம் இறைவனின் நினைவாக அதை  தூக்கி கொண்டு நடந்தார். கொஞ்சம் கனமாக இருந்ததது. அப்படி அளவிற்கு அதனுள் அப்படி என்ன தான் இருக்கிறது என்று பார்க்க அவருக்கு ஆசை. ஆனாலும்  இறைவன் சொன்னதை நினைத்து அதை திறந்து பார்க்க விரும்பால் கடவுளின்  கட்டளைப்படி அதை தூக்கி அவர் செல்லுமிடங்கள் சுமந்து செல்கிறார். 
 
நேரம்  செல்ல செல்ல, ஒரு கட்டத்திற்கு மேல் அவரால்  அந்த மூட்டையை தூக்க முடியவில்லை. மூடடை வேறு அழுக்காக இருந்ததால் அதை சுமப்பது பெரிய பாரமாக இருந்தது. 
 
உடனே  கடவுளை பார்த்து  உமது  கட்டளையை எதிர்பார்த்து உனக்கு ஏதாவது பணி செய்ய வந்தேன் ஆனால்  நீரோ என்னடாவென்றால் சுமக்க முடியாத ஒரு அழுக்கு மூட்டையை என்னிடம் தந்து அதை சுமக்க வைத்துவிடடாயே  விட்டாயே… கருணை கடலான உமக்கு  இது அடுக்குமா??” என்று சொல்லி  கோபித்துகொள்கிறார்.
 
ஆனால் இறைவன் அவரிடம்  நான் என்ன விரும்புகிறேனோ அதை செய்ய தானே என்னிடம் வந்தாய்  “உன் பலவீனத்தில் என் பலம் அடங்கியிருக்கிறது  அதை குறித்து  கவலைப்படாதே. உன் பக்கம் நானிருக்கிறேன். தைரியமாக நான் கூறும் வரை சுமந்துவா” என்கிறார். 
 
மேலும் சில காலம் சென்றது.
 
சில இடங்களில் அவனால்  தூக்க முடியாத போது  தானும் தன் பங்கிற்கு ஒரு கை பிடித்து தூக்கி அந்த சுமையை பகிர்ந்து கொண்டார்.
 
ஒரு நாள் அவர் அதிகம் சோர்வுற்று இன்னும் அதை சுமக்க முடியாது என்ற ஒரு நிலைக்கு வந்துவிடடார். 
 
அப்பொழுது ஆண்டவரே வந்து  “போதும் நீ சுமந்தது. அந்த மூட்டையை இறக்கி வை!!” என்று  கட்டளையிட, அந்த மூட்டையை இறைவனின் சந்நிதியில்  கீழே வைக்கிறார்  அந்த பக்திமான் 
 
“மூட்டைக்குள் என்ன இருக்கிறது என்று பார்ப்போமா?” என்று இறைவன் கேட்க, அதற்காகவே காத்திருந்த அவர்  “சீக்கிரம் திறந்து காட்டுங்கள் ஆண்டவரே" 
 என்கிறார்  உரக்க.
 
மூட்டை தானே பிரிந்து கொள்கிறது. முதலில் கண்ணில் தெரிவது வைக்கோல் தான். ஆனால் வைக்கோல்களுக்கிடையே அரிய மாணிக்கங்களும் வைர வைடூரியங்களும், பொற்காசுகளும், தங்க ஆபரணங்களும் குவிந்து கிடந்தன. 
 
“இத்தனை காலம் பொறுமையுடன் நீ இதை சுமந்தமைக்காக உனக்கு என்னுடைய பரிசு இது. எடுத்துக்கொள்!!” என்றார் இறைவன் 
 
அந்த மனுஷனுக்கு ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை. அதிர்ச்சி இன்ப அதிர்ச்சியாகி கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
 
“ஆண்டவாரே …. என்னை மன்னித்துவிடு” என்று தரையில் முகங்குப்புற  விழுகிறாள்.
 
“அரும்பெரும் பொக்கிஷத்தை என்னிடம் கொடுத்திருந்தும் கூட அது தெரியாமல் இந்த பாவி இத்தனை காலம் உன்னை தவறாக நினைத்துவிட்டேன். உன்னை சந்தேகிக்காமல் உனது நோக்கத்தை புரிந்துகொண்டு நான் இருந்திருந்தால் இந்த பொக்கிஷத்தின் பாரம் எனக்கு சுமப்பதற்கு இன்பமாய் இருந்திருக்கும். புலம்பியிருக்கவோ புகார் செய்திருக்கவோ மாட்டேனே…” என்று அவன்  உருக கடவுள்  புன் சிரிப்புடன்  மறைகிறார் .
 
 
*இந்த உலக வாழ்வும் அந்த அழுக்கு மூடடை போன்றதுதான். வாழ்வில் ஒவ்வொரு சுமையும் அதை சுமப்பவர்களுக்கென்றே இறைவனால் மிகவும் கவனமாகவும் அன்புடனும் பிரத்யேகமாக செய்யப்படுகிறது.  அந்த சுமை ஒவ்வொன்றுக்கும் பின்னும் ஒரு பொக்கிஷம் நமக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளது.  அவற்றை சுமை என்று நினைத்தால் சுமை. பொக்கிஷம் என்று நினைத்தால் பொக்கிஷம். எதுவாகினும் உங்கள் கைகளில் தான் அது உள்ளது. பார்க்கும் பார்வை தான் வித்தியாசப்படுத்தி காட்டுகிறது*
 
நம்மால் எதை சுமக்க முடியும் என்று ஆண்டவனுக்கு தெரியும். அந்தஅளவு சுமை மட்டுமே கடவுள் தருவார் எனவே முழுமையாக கடவுளை நம்புங்கள் நமக்காக  கொடுக்கப்பட்டுள்ள வாழ்வை ஒரு சுமையாக கருதாமல் பொக்கிஷமாக கருதி உண்மையும் உத்தமுமாக சந்தோசத்துடன் அதை சுமந்து வாருங்கள். ஒருநாளில் சகலமும் விலையேறப்பெற்ற பொக்கிஷமாக  மாறும்.  
 
 
I கொரிந்தியர் 10:13 மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.
 
 
(REFORMED BY SUNDAR  
 
 
மேலேயுள்ள பதிவில அடங்கியிருக்கும் முக்கிய கருத்துக்கள்.  
 
1. தேவனை பிரியப்படுத்துவது நம்முடைய செயகையால் மட்டும் முடியாது அவரது விருப்பம் அறிந்து நாம் செயல்பட வேண்டும்.
2. நம் நினைவுகள் எல்லாம் தேவனின் நினைவுகள் அல்ல. நாம் செய்ய நினைப்பதைதான் அவர் செய்ய சொல்வர் என்று  எதிர்பார்க்க முடியாது.
3. சிறியதோ பெரியதோ கஷ்டமோ நஷ்டமோ நமக்கு நியமிக்கப்படத்தை நாம் சந்தோஷத்தோடு செய்யக்கடவோம். 
4. ஒவ்வொரு சுமைக்கு பின்னும் ஒரு உன்னத நோக்கம் தேவனுக்குள் வைக்கப்பட்டுள்ளது.
5. நமக்கு வரும் சோதனை நம் திராணிக்கு தக்கவே தீர்மானிக்க பட்டுள்ளது. முடியாத ஒன்றை தேவன் நம்மேல் திணிப்பது இல்லை.
6. நாம் அதிக கஷ்டப்படும் நேரங்களில் இறைவன் நமக்கு ஏதாவது ஒரு வழியில் உதவி செயகிறார்.  
7. எல்லாவற்றுக்குமே ஒருநாள் முடிவு என்பது உண்டு. ஓர் நாளில் நம் சுமைகள் யாரும் இறக்கி வைக்கப்படும்.
      


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

Good News anna

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard