இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆலோசனை தேவை!


இளையவர்

Status: Offline
Posts: 30
Date:
ஆலோசனை தேவை!
Permalink  
 


Praise the Lord. 

இன்று ஒரு சகோதரனை சந்திக்க நேர்ந்தது. 

அவரை பல முறை பார்த்திருக்கிறேன்  என்றாலும்  இன்று  தான் சந்திக்க வாய்ப்பு  கிடைத்தது 

அதாவது நான் ஒரு முறை  அவரை கடந்து போகையில் அவர்  தனது கடைக்கு  முன்பதாக சத்தமாக ஜெபித்து  கொண்டிருப்பதை பார்த்தேன். அப்போதிருந்து எனக்கு அவரிடம்  பேச வேண்டும்  என்று  தோன்றியது. 

இன்று நான் அவரோடு பேசின ஒரு சில  காரியங்களை குறித்து  உங்கள்  கருத்துக்களை  கேட்க  ஆவலாய்  உள்ளேன். 

என்னவெனில், அப்போஸ்தலர்கள் தான் நமக்கு  முற்பிதாக்கள்  என்றும், அவர்கள்  காலத்தில்  ஞானஸ்தானம், பிதா குமரன்  பரிசுத்தஆவியினால் கொடுக்கப்படவில்லை  என்றும், இயேசுவின் நாமத்தில்  மட்டுமே கொடுக்கப்பட்டதென்றும் கூறினார்.  

உண்மையில்  நான் வியந்து போனேன். இப்படிப்பட்ட உபதேசம்  இதுவரை கேட்டதில்லை. வேதத்துக்கு புறம்பானதாயும் இருப்பதால் எனக்கு மேற்கொண்டு  பேச ஒன்றும் இல்லை. அவர்  இந்த  காரியங்களை பல வருடங்களாக செய்து  வருவதாக கூறினார். 

இவருக்கு எப்படிப்பட்ட  நல் உபதேசம் தேவை? 

கர்த்தர் தாமே உதவுவாராக.

God is good. 



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

மாற்கு 9:39. அதற்கு இயேசு: அவனைத் தடுக்கவேண்டாம்; என் நாமத்தினாலே அற்புதஞ்செய்கிறவன் (ஞானஸ்தானம் பெற்றவன்)  எளிதாய் என்னைக்குறித்துத் தீங்கு சொல்லமாட்டான்.
 
40 நமக்கு விரோதமாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான்.
 
 
என்ற வார்த்தையின் படியே அவர் சொல்வது பெரிய தவறு என்றோ அல்லது அவர் பரலோகத்துக்கு பாத்திரவான் அல்ல என்றோ நமக்கு சொல்வதற்கில்லை.
 
உலகத்தில் சுமார் 2000 த்துக்கு மேற்படட கிறிஸ்த்தவ பிரிவுகள் இருப்பது  தங்களுக்கு தெரியும். சிறு சிறு உபதேச வேறுபாட்டின் அடிப்படையில் இவைகள் பிரிந்து கிடக்கின்றன இதில் யார் சரி யார் தவறு என்று சொல்வதற்கில்லை காரணம் அவரவர் செய்கைக்கு அவரவர் எதோ ஒரு வசன ஆதாரம் சொல்கின்றனர்.  அவ்வாறு இருக்கும்போது மூல உபதேசமாகிய 
 
"பாவிகளை மீட்க்க ஆண்டவராகிய இயேசு இந்த உலகத்துக்கு வந்து  சிலுவையில் ஜீவனை கொடுத்து நம்மை மீடடார்"  "பரிசுத்த ஆவியானவர் தேவனின் ஒரு ஆழ்த்துவமாக அருளப்பட்டுள்ளார்"
 
என்பது போன்ற அடிப்படை செய்தியை மாற்றுவோருக்கு மட்டுமே நாம் உண்மையை எடுத்து சொல்ல முயல்வது நல்லது மற்றபடி இதுபோன்ற காரியங்கள் எனக்கு பெரிதாக தெரியவில்லை.
 
ஆகினும் இதுபோன்ற சில மாறுபாடான கருத்துள்ளவர்கள் ஏதாவது அடிப்படை உபதேசத்திலும்  மாறியிருக்க வாய்ப்புண்டு.ONLY JESUS என்ற பிரிவை சேர்ந்தவராகவும் இருக்க வாய்ப்புண்டு.  எனவே  அவரோடு சம்பாஷித்து பாருங்கள். அடிப்படையில் தவறு இருந்தால் வசனத்தை சொல்லி சுட்டிக்காட்டலாம்.
 
மற்றபடி அப்போஸ்த்தலர்களை முர்ப்பித்தாக்கள் என்று சொல்வதையம்  "பிதா குமாரன் பரிசுத்த ஆவியை" விசுவாசித்து   இயேசு நாமத்தில் ஞானஸ்தானம் எடுத்ததை  பெரிதாக எடுக்க அவசியம் இல்லை என்றே தோன்றுகிறது. 

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard