இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஊழியமா? உண்மையா? எதை தேவன் எதிர்பார்க்கிறார்?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
ஊழியமா? உண்மையா? எதை தேவன் எதிர்பார்க்கிறார்?
Permalink  
 


எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் ஒரு கிறிஸ்த்தவ குடும்பம் இருந்தது. அவர் மார்க்கெட்டில் காய்கறி கடை வைத்திருந்தார். ஆண்டவருக்காக பல ஊழியங்களை செய்து வந்தார். அதில் ஓன்று மாதம் தோறும் அவர்கள் வீட்டில் ஜெப கூடடம் வைத்து அங்கு வரும் எல்லோருக்கும் சாப்பாடு போட்டு ஒரு ஊழியரை அழைத்து தேவ செய்தி கொடுப்பது.
 
எத்தனையோ பிரச்சனைகளை வந்தாலும் கொஞ்சமும் சோர்ந்து போகாமல் ஆண்டவருக்காக சிரத்தையுடன் இப்படி ஊழியங்களை குடும்பமாக செய்து வந்தார்கள்.
 
அனால் ஒருநாள் அவர் நண்பருடன் பைக்கில் பின்னால் அமர்ந்து போகும்போது வண்டி விபத்துக்குள்ளாகி அவரது வலது கையில் உள்ளங்கை  பகுதியில் காரின் டயர் ஏறி சென்றதால் அவரின் உள்ளங்கை முழுவதும் அப்படியே நசுங்கி போனது. உள்ளங்கையில் சதையே இல்லாமல் போய் தொடை பகுதியில் இருந்து சதையை எடுத்து அங்கு ஓட்டுப்போட்டு வைத்தார்கள். அந்த கையால் எந்த வேலையும் செய்ய முடியாமல் போனது.
 
அவரை ஆஸ்பத்திரிக்கு சென்று பார்க்க போன எனக்கு மிகுந்த வேதனையாக இருந்தது ஆண்டவருக்காக இப்படி வைராக்கியமாக ஊழியம் செய்யும் இப்படிபடடவர்களுக்கு இதுபோல் சோதனை வந்தால் எவ்வளவு கஸ்டமாக இருக்கும்.    ஏன் ஆண்டவரே இப்படியெல்லாம் நடக்க அனுமதிக்கிறீர் என்று கேட்டுக்கொண்டே இருந்தேன். 
 
அதற்க்கான பதில் சீக்கிரத்தில் கிடைத்தது.
 
என் மனைவி அவர் கடையில் காய்கறி வாங்க முன்பு அடிக்கடி செல்வது உண்டாம்.  அவர் எடை போடும் விதத்தில் எப்படியோ ஏமாற்றி அந்த பொருளின் அளவை குறைத்துவிடுவாராம் அதனால் அங்கு போவதை நிறுத்திவிடடளாம்.
 
இப்படி வியாபாரத்தில் எடையை குறைப்பது வழக்கமாக இருந்ததாலே அதே கையில் அந்த தண்டனை அவருக்கு கிடைத்ததாக என்னால் அறியமுடிந்தது.   
 
அன்பான தேவ பிள்ளையே!
 
அருவருப்பான பாத்திரத்தில் அமிழ்தத்தையே வைத்தாலும் ஆண்டவர் ஒருநாளும் ஏற்க மாடடான். கர்த்தர் முன்னாள் நிற்க தகுதியுள்ளவராக இருக்க முதலில் நம் உள்புறத்தை சுத்தமாக்க வேண்டியது மிகவும் அவசியம். 
 
ஒருவர்   ஊழியம் செய்வதால் பிதா அவரை காணப்படுத்துவர் என்புது உண்மை ஆனால் அதற்காக தேவன் தன நீதியை ஒருபோதும்  அடஜஸ்ட் பண்ணிக்கொண்டு போகமாடடார். .  
 
கர்த்தர் கண்டிப்பானவர்! 
 
ஊழியம் செய்வதும்  - அவர் வார்த்தையை கைக்கொள்வதும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றது.
 
மத்தேயு 28:19 நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்
 
சிலரிடம் ஏன் இப்படி ஏமாற்றுகிறீர்கள் என்று கேடடால் "தொழில் வேறு ஊழியம் வேறு" என்கிறார்கள்.
 
உத்தமமான உன் வாழ்க்கையே ஆண்டவருக்கு செய்யும் முதல் ஊழியம் என்பதை மறக்க வேண்டாம். கர்த்தர் எதிர்பார்ப்பது உண்மையுடன் கூடிய ஒரு ஊழியத்தையே! 
 
ஏசாயா 61:8 ர்த்தராகிய நான் நியாயத்தை விரும்பி, கொள்ளைப்பொருளினால் இடப்பட்ட தகனபலியை வெறுக்கிறேன்

 



-- Edited by SUNDAR on Friday 12th of January 2018 08:09:52 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

Superb

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
RE: ஊழியமா? உண்மையா? எதை தேவன் எதிர்பார்க்கிறார்?
Permalink  
 


God bless u anna



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard