இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவனுடைய ஆலயத்தில் நாட்டப்பட்டவர்கள் என்பதன் அர்த்தம் என்ன?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
தேவனுடைய ஆலயத்தில் நாட்டப்பட்டவர்கள் என்பதன் அர்த்தம் என்ன?
Permalink  
 


 

சங்கீதம் 92:13

கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள்.

 

தேவனுடைய ஆலயத்தில் நாட்டப்பட்டவர்கள் என்பதன் அர்த்தம் என்ன? 



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
RE: தேவனுடைய ஆலயத்தில் நாட்டப்பட்டவர்கள் என்பதன் அர்த்தம் என்ன?
Permalink  
 


Answer



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

வேத ஆதாரத்தோடு விளக்கவும் அண்ணா



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

Debora wrote:  
"தேவனுடைய ஆலயத்தில் நாட்டப்பட்டவர்கள் என்பதன் அர்த்தம் என்ன? "  
 
உங்கள் கேள்வியே வசனம் சொல்வதற்கு மாறாக இருக்கிறது. 
 
"கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள்" என்று தான் வசனம் சொல்கிறது   
 
சிஸ்ட்டர்  இங்கு "கர்த்தருடைய ஆலயம்" "தேவனுடைய பிரகாரம்" என்று இரண்டு வேறுபட இடங்களை வசனம் சொல்கிறது 
 
இந்த வசனத்தின் பொருள் புரிய வேண்டுமென்றால் 
 
நீங்கள் கர்த்தர் எனப்படும் கர்த்தருடைய ஆவியானவரும் 
 
தேவன் எனப்படும் தேவ ஆவியானவரும்  இரண்டு வெவ்வேறு ஆளத்துவம் என்ற உண்மையை புரிய வேண்டும்.
 
அதை  அனுபவமாக புரியவில்லை என்றால் நான் சொல்வது உங்களுக்கு புரியாது.
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
தேவனுடைய ஆலயத்தில் நாட்டப்பட்டவர்கள் என்பதன் அர்த்தம் என்ன?
Permalink  
 


கர்த்தர் எனப்படும் கர்த்தருடைய ஆவியானவரும்

தேவன் எனப்படும் தேவ ஆவியானவரும் இரண்டு வெவ்வேறு ஆளத்துவம் என்று வேதம் சொல்கிறதா? எந்த வசனம் என்று சொல்லுங்கள் அண்ணா

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

தேவன் திரித்துவமானவர் என்பதற்கு எப்படி நேரடி வசன ஆதாரம் கிடையாதோ அதுபோல் இதற்கும் நேரடி வசன ஆதாரம் சொல்ல முடியாது ஆனால் சில பல வசனங்கள் மூலம் புரிய முடியும்.
 
திரித்துவம் - 1 வது ஆள்த்துவம் 
 
பிதாவாகிய தேவன் - தேவ ஆவியானவர் - (தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். 
 ஆதி 1:2)
I சாமுவேல்10:10  அப்பொழுது தேவனுடைய ஆவிஅவன்மேல் இறங்கினதினால், அவனும் அவர்களுக்குள்ளே தீர்க்கதரிசனம் சொன்னான்.  
 
திரித்துவம் - 2 வது ஆளத்துவம் =  தேவனாகிய கர்த்தர் - கர்த்தருடைய ஆவியானவர் - பரிசுத்த ஆவியானவர் 
அந்நாள்முதற்கொண்டு, கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார் (1 சாமு 16:13) (1 சாமு 16:13) 
 
அவரே  பரிசுத்த ஆவியானவர்   
II கொரிந்தியர் 3:17 கர்த்தரே ஆவியானவர்;  
 
அப்போஸ்தலர் 5:9 பேதுரு அவளை நோக்கி: கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனப்பட்டதென்ன?  
 
 
திரித்துவம் - 3 வது ஆளத்துவம்  =   கர்த்தராகிய இயேசு  - கிரிஸ்த்துவின் ஆவி-  
I பேதுரு 1:11 தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும்,  
ரோமர் 8:9 கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல  
 
 
திரித்துவம் 
பிதா - பிதாவாகிய தேவன் 
குமாரன் - ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து 
பரிசுத்த ஆவியானவர் - கர்த்தராகிய தேவன் 
(வசன ஆதாரம் II கொரிந்தியர் 3:17 கர்த்தரே ஆவியானவர்)
 
வசனம் இவ்வாறு சொல்கிறது 
சங்கீதம் 110:1 கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.  
 
 
இதில் கர்த்தர் என்பது கர்த்தராகிய தேவன் / ஆண்டவர் என்பது ஆண்டவராகிய இயேசு 
 
கர்த்தராகிய தேவன் ஆண்டவராகிய இயேசுவை நோக்கி, "நான் உம்முடைய சத்துருக்களை பாதப்படியாகி  போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்."  
 
அவ்வசனபடியே இயேசு பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார் என்று வேதம் சொல்கிறது 
 
அவ்வாறிருக்க பூமியில் சந்துருவை பாதப்படியாக்கிப்போடும் செயலை தற்போது செய்துகொண்டிருக்கும் பரிசுத்த ஆவியானவரே கர்த்தராகிய தேவன்.   
 
புரித்தால் எடுத்துகொள்ளுங்கள் இதற்குமேல் என்னிடம் விளக்கம் இல்லை சிஸ்ட்டர் அனுபவ அறிவுதான் உண்டு. 
 


-- Edited by SUNDAR on Friday 28th of June 2019 07:49:16 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
RE: தேவனுடைய ஆலயத்தில் நாட்டப்பட்டவர்கள் என்பதன் அர்த்தம் என்ன?
Permalink  
 


மேலே நீங்கள் குறிப்பிட்டுள்ள வசனமே மிக தெளிவாக கர்த்தரையும் தேவனையும் தனித்துவம் பண்ணி சொல்வதை அறியலாம்.
 
கர்த்தருடைய (யெகோவா தேவனின்) ஆலயத்தில் நாடடபடடவர்கள்     
 
தேவனுடைய பிரகாரங்களில் செழித்திருப்பார்கள் 
 
அதாவது 
 
கர்த்தருடைய ஆலயம்  = தேவனுடைய பிரகாரம்.
 
தேவனின் ஆள்த்துவங்கள்  
1 . பிதாவாகிய  தேவன்       - தேவ ஆவியானவர் 
2.  தேவனாகிய கர்த்தர்        - கர்த்தருடைய ஆவியானவர்  
3.  கர்த்தராகிய இயேசுகிறிஸ்த்து - கிருஸ்த்துவின் ஆவி 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard