இந்த உலகில் ஆண்டவரால் படைக்கப்பட்ட எந்தொரு உயிரியானாலும் பொருளானாலும் தேவையில்லாமல் அர்த்தமற்றதாக படைக்கப்படவில்லை என்று நான் கருதுகிறேன். அதனால் யாருக்காவது ஒரு பயன்பாடு நிச்சயம் இருக்கத்தான் செய்யும். அந்த பயன்பாட்டை நாம் வேண்டுமானால் அறியாமல் இருக்கலாம்.
ஒன்றுக்கு மேற்ற்ப்பட்ட பல்வேறு பயன்பாடுகளை கொண்ட அனேக பொருட்களும் இந்த உலகில் உண்டு! உதாரணமாக நீர் காற்று மரங்கள் போன்றவற்றை எடுத்துக்கொண்டால் அதனால் அனேக பயன்பாடுகள் உண்டு. இப்படி ஒரு பொருளால் பல்வேறு பயன்பாடுகள் இருந்தாலும் அவற்றால் மிக முக்கியமான் பயன்பாடு என்று ஓன்று நிச்சயம் இருக்கத்தான் செய்யும். உதாரணமாக நீரை எடுத்துக்கொண்டால் அதன் முக்கிய பயன்பாடு என்று உயிர்வாழ தேவையான குடிநீரை எடுத்துக்கொள்ளலாம்.
அதுபோல் இந்த உலகில் மனிதனால் படைக்கப்பட்ட பல்வேறு பொருட்கள் உள்ளன அவை ஒன்வ்வொன்றும் ஏதாவது ஒரு பயன்பாட்டுக்காக படைக்கப்படுகின்றன. தேவையற்ற பயன்பாடற்ற பொருட்களை மனிதன் பொதுவாக உருவாக்கப்படுவது இல்லை.
இப்படி மனிதனால் உருவாக்கப்பட்ட பொருட்களிலும் பல பொருட்கள் பல் நோக்கு அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன உதாரணமாக தற்காலத்து செல்போல், கணினி போன்றவை. பல்நோக்கு பயன்பாட்டோடு ஒரு பொருள் உருவாக்கப்பட்டாலும் அதன் முக்கிய பயன்பாடு என்று ஓன்று எல்லா பொருளுக்கும் நிச்சயம் இருக்கும். உதாரணமாக ஒரு செல்போனினால் பம்,கேமரா,வீடயோ, நெட் வசதி போன்ற பல பயன்பாடு இருந்தாலும் அதன் உருவாக்கப்பட்டதன் முக்கிய நோக்கம் தொலை தொடர்பு. மற்ற எல்லா சேவைகளையும் திறம்பட செய்யும் அதற்கேற்று உருவாக்கப்பட்ட தனி தனி கருவிகள் உள்ளன!
சரி இப்பொழுது நம் கருத்துக்கு வருவோம்.
இப்படி உலகில் உள்ள ஒவ்வொன்றும் எதாவது உன்னத நோக்கத்தோடு உருவாக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், எல்லாவற்றிக்கும் மேலான ஞானத்தோடும் அறிவோடும் படைக்கப்பட்டுள்ள, உலகில் வாழும் மனிதர்களிடம் உங்கள் வாழ்க்கையின் நோக்கம் என்னவென்று கேட்டால் "ஏன் பிறந்தேன் என்றே தெரியவில்லை" என்பதில் ஆரம்பித்து "எல்லா இன்பத்தையும் அனுபவிக்கவே பிறந்தேன்" என்பது வரை பல பதில்களை பெறமுடியும்.
சிலர் பொது சேவை செய்து அடுத்தவருக்கு உதவவே ஆண்டவர் என்னை படைத்தார் என்று சொல்லி திருப்தி அடைகின்றனர் சிலர் சினிமாவில் நடித்து எல்லோருக்கும் கலை சேவை செய்யவே என்னை இறைவன் படைத்தார் என்று பேட்டி கொடுக்கின்றனர் சிலர் எந்த சிந்தனையும் இல்லாமல் தண்ணியில் மூழ்கி தள்ளாடி காலம் கழித்து அதனால் திருப்தியடைகின்றனர் இப்படி ஒவ்வௌருவரும் தங்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி காலம் களித்துவந்தாலும், இந்த உலகில் ஒரு மனிதரை கூட ஆண்டவர் விளையாட்டுக்க்காகவோ அல்லது வேலைஇல்லாமலோ படைக்கப்படவில்லை என்பது மட்டும் சர்வ நிச்சயம்!
ஒவ்வொரு மனிதனையும் ஆண்டவர் ஒருவரை படைததர்க்கான ஒரு உன்னத நோக்கம் நிச்சயம் உண்டு! அந்த நோக்கத்தை ஆண்டவரிடம் அமர்ந்து மன்றாடி கேட்டு அறிந்து அதன்படி செயல்படாதவரை, நம் வாழ்ந்த வாழ்க்கை ஒரு நாளும் முற்றுபெராமல் எந்த அருத்தமும் இல்லாத ஒரு முழுமையற்ற வாழ்க்கையாகவே அமையும் என்பதில் எந்த ஐயமுமில்லை!