இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இறந்தவர்களின் ஆவி மீண்டும் வருவது பற்றி!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
இறந்தவர்களின் ஆவி மீண்டும் வருவது பற்றி!
Permalink  
 


நீண்ட காலமாக பலருக்கு புரியாத புதிராக இருந்துவரும் நிகழ்வுகளில் இதுவும் ஓன்று.

கிறிஸ்த்தவ ஊழியர் ஒருவர் நடத்திய கூட்டம் ஒன்றின் முடிவில் எல்லோருக்காகவும் தனித்தனியே ஜெபிக்க அழைத்தார். அப்பொழுது ஜெபிபதர்க்காக  வந்த சுமார் 22 வயது நிரம்பிய பெண் ஒருவர் அவர் கை வைத்து ஜெபிக்க ஆரம்பித்ததும்  சத்தம்போட்டு கதற ஆரம்பித்தார். அதிக ஆவேசத்துடன் அந்த ஊழியரை அடிப்பதற்கு முற்படவே பலர் சேர்ந்து அந்த பெண்ணை
பிடித்துகொண்டனர்.

பிறகு அந்த ஊழியக்காரர் அந்த பெண்ணின் தலைமேல் கைவைத்து  நன்றாக
ஜெபித்துவிட்டு அவர் கேட்ட கேள்விகளும் அந்த பெண் சொன்ன பதில்களும்

இதோ:

ஊழியர்         :   நீ யார்?
அந்த பெண் :  நான்  ரமேஸ் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது)

ஊழியர் : உன் வீடு எங்கே உள்ளது? :
பெண்    : இந்த பெண்ணின் வீட்டுக்கு பக்கத்து தெருவில்

ஊழியர் : ன் இந்த பெண்ணை பிடித்துள்ளாய்? -
பெண்    : எனக்கு இவளை ரொம்ப பிடிக்கும் அதனால் பிடித்துள்ளேன்

ஊழியர் : எவ்வளவு நான் இந்த பெண்ணுள் இருக்கிறாய்?
பெண்    : நான் மரித்தபின் சில வருடங்களாய்

ஊழியர் : இவளை விட்டு போய்விடு
பெண்    : போக மாட்டேன்

ஊழியர் : உனக்கு இயேசுவை  தெரியுமா?
பெண்    : இயேசப்பாதானே "ஒ தெரியுமே"

ஊழியர் : அந்த இயேசுவின் நாமத்தில் சொல்கிறேன் நீ உடனே போய்விடு
பெண்    : நீ யார் நாமத்தில் சொன்னாலும் நான் போக மாட்டேன்!

சிறிது நேரம் தனியாக ஜெபித்த அந்த ஊழியர், அந்த பெண்ணின் கணவனை
அழைத்து அவரின் கண்ணை தனது கரத்தால் பொத்தினார். அவ்வளவுதான் அந்தப்பெண் தரையில் விழுந்து புரண்டுகொண்டு எனது கண்ணை ஏன் மூடுகிறாய்உடனே கையை எடு இல்லை உன்னை கொன்று விடுவேன் என்று ஆவேசமாக பாய,  நீ  உடனே இவளைவிட்டு போ என்று  அந்த ஊழியர் செம்பில் கொஞ்சம் தண்ணீர் எடுத்து ஜெபித்து அந்த பெண்ணின் தலையில் மேல் தெளிக்க, அந்த பெண் அவர் கையிலிருந்த செம்பைபிடுங்கி அவரை அடிக்க முற்ப்பட கடைசியில் எப்படியோ ஒரு வார்த்தை சொல்லி அந்த பெண்ணை தரையில் மொத்தென்று விழ வைத்தார் அந்த ஊழியர்.

சிறிது நேரம் கழித்து எழுந்த அந்தப்பெண் தன ஆடையை எல்லாம் சரிசெய்துகொண்டு ஒன்றுமே நடக்காததுபோல் எழுந்து நின்றது.

அந்த ஊழியர் யார்என்றே தெரியாத எனக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒருவருக்கும்
இதுபோல் நடந்ததால் அவர் செட்டப் செய்து நடத்துகிறார் என்று சொல்ல
முடியவில்லை.

இறந்தவரின் ஆவி இன்னொருவருக்கும் வந்து பேசுவதை பலரும் வாழ்வில்
பார்த்திருக்கலாம். அது எவ்வளவு தூரம் உண்மை?

அனுபவம் உள்ளவர்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கவும்.



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 38
Date:
Permalink  
 

deleted by vedamanavan



-- Edited by vedamanavan on Monday 25th of January 2010 09:29:43 PM

__________________

"உம்முடைய‌ வசனமே சத்தியம்." யோவான் 17:17



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

vedamanavan wrote:

குறி கேட்ப்பவர்களிடம் போக கூடாது என்று இஸ்ராயேல் மக்கள்ளுக்கு கட்டளை இருந்தும் ராஜாவான சவுல் அதை மீறுவதினால், தேவன் அந்த குறிக்காரியிடம் இப்படி ஒரு சம்பவத்தை அனுமதிக்கிறார், ஆனால் அது நிச்சயமாக சாமுவேலின் ஆவி கிடையாது, ஏனென்றால் கேட்ட குரல் தான் சாமுவேலை போல் இருந்ததே தவிர பார்பதற்கு அல்ல. இந்த ஒரு "ஆவிக்குறிய" சம்பவத்தை வைத்துக்கொண்டு செத்து போனவர்களின் ஆவி செயல் படுகிறது என்பது அபத்தம் மாத்திரம் அல்ல், ஆபத்தான கோட்பாடும் கூட!! மற்றபடி அவர்‍அவர் விசுவாசம்


அப்படிஎன்றால்  சவுல்  பேசியது   சாமுவேலின்  ஆவியுடன்  இல்லைஎன்று  கூறுகிறீர்களா?
 
வேதம் எவ்வளவு தெளிவாக சொல்கிறது பாருங்கள்:
  
16. அதற்குச் சாமுவேல்: கர்த்தர் உன்னைவிட்டு விலகி, உனக்குச் சத்துருவாய் இருக்கும்போது, நீ என்னிடத்தில் கேட்பானேன்?
17. கர்த்தர் என்னைக்கொண்டு சொன்னபடியே செய்து முடித்து, ராஜ்யத்தை உன் கையிலிருந்து பறித்து, அதை உன் தோழனாகிய தாவீதுக்குக் கொடுத்துவிட்டார்.
18. நீ கர்த்தருடைய சொற்கேளாமலும், அமலேக்கின்மேல் அவருக்கு இருந்த கோபத்தின் உக்கிரத்தைத் தீர்க்காமலும் போனபடியினால், கர்த்தர் இன்றைய தினம் உனக்கு இந்தப் பிரகாரமாகச் செய்தார்.
19. கர்த்தர் உன்னுடைய ஜனமாகிய இஸ்ரவேலரையும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுப்பார்; நாளைக்கு நீயும் உன் குமாரரும் என்னோடிருப்பீர்கள்; இஸ்ரவேலின் பாளயத்தையும் கர்த்தர் பெலிஸ்தரின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.

வேதம் சொல்கிறது  "சாமுவேல் இவ்வாறு  சொன்னான்"  என்று சாமுவேல்போல் இருந்தவர் சொன்னான் என்று சொல்லவில்லை. வேத புத்தகம் பொய் சொல்லுகிறதா? 
 
இரண்டாவதாக சாமுவேல் சொன்ன எல்லா ரியமும்  அப்படியே   நடந்துவிட்டது அப்படியிருக்க  அதை  சாமுவேலின் உண்மை வார்த்தை இல்லை என்று எப்படி சொல்லமுடியும்?   
 
செத்தவனிடத்தில் குறிகேட்க வேண்டாம் என்றுதான் கர்த்தர் கட்டளையிட்டுள்ளார் அதற்காக செத்தவனிடம் பேசமுடியாது என்று பொருள் கொள்ள முடியாதல்லவா?
 
"கர்த்தர் கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும் பண்ணுகிறவர்.(I சாமு 2:6)
 
என்று வசனம் சொல்வதால் இறந்த ஒருவனை பாதாளத்தில் இருந்து  ஏறிவரப்பண்ண  கர்த்தரால்  முடியும் என்றே நான் கருதுகிறேன்.
 
சவுலுக்கு தீர்க்கதரிசனம் சொல்வதற்காக சாமுவேலை அவர் ஏறி வரபண்ணியிருக்கலாம் அல்லவா?   
  

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard