இந்து சாமிகளில் யார் எல்லோரையும் விட மேலான கடவுள் யார் என்று தெரிந்து கொள்ளலாமா? கேட்டதற்கான காரணம் கீதையில் உள்ள கீழ்க்கண்ட வசனம்
ஸ்ரீ கிருஷ்ணன் சொல்லுகிறார் - 'நான் எல்லாவற்றுக்கும் பிதா, என்னிடமிருந்தே எல்லாம் இயங்குகிறது. இந்தக் கருத்துடையோரான அறிஞர் என்னை வழிபடுகிறார்கள்' (கீதை 10-ஆம் அத்தியாயம், 8-ஆம் சுலோகம்)
ஆனால் நான் கேட்ட இந்து பாடல் ஒன்றில் இறைவனை ஒன்று இரண்டு என்று வரிசை படுத்தி பாடும்போது
"ஒன்றானவன் உருவில் இரண்டானவன்" என்று சிவா சக்தியை குறிப்பிடுகிறது அதனால்தன் கேட்டேன்
சிலர் சிவன் என்கின்றனர் சிலர் பகவத்கீதைபடி கிருஷ்ணர் என்கின்றனர்.
தெரிந்தவர் கொஞ்சம் விளக்குங்களேன். உண்மையில் அறிந்துகொள்ள கேட்கிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
கடவுள்கள் என்பதே தவறு தான். கடவுள் என்பது நம்மை மீறிய ஒரு சக்தி என வைத்துக்கொண்டால் அது ஒரு சக்தி. இல்லை இல்லை கடவுள் என்பவர் ஒரு நபர் என்றால் அவர் ஒரு நபர்.இல்லை இல்லை கடவுளர்கள் பலர் உள்ளனர் என்றால் ஆம் கடவுளர்கள் பலர். நாம் எப்படி நினைத்து நம்பிக்கை வைக்கின்றோமோ அதன் படி தான் கடவுளும். கடவுள் இல்லை என்பவனும் இல்லை என்பதை நம்புகிறான். கடவுள் இருக்கிறான் என்பவனும் இருக்கிறது என்பதை நம்புகிறான். இவர்கள் எல்லாம் நம்ப வேண்டும் என்பதற்காக கடவுளாகிய நான் இருக்கிறேன் அல்லது இல்லை என்பதை என்றாவது கடவுள் ஊர்ஜிதம் செய்து இருக்கிறாரா? நீ எதுவாக இருக்க நினைக்கிறாயோ நீ அதுவாகவே ஆகிறாய். ஆகையால் கடவுள்களில் சிறியவர் பெரியவர் என்ற பாகுபாடு காண இயலாது. என்னை பொறுத்த வரையில் கடவுள் என்பது அளப்பரிய நல்ல சக்தி என்பது மட்டுமே. அவர் அனைத்து ஜீவராசிகளுக்கும் நல்லதே செய்வார் என்பது மட்டுமே.
உங்கள் கருத்துக்கள் பல எனக்கு மிகவும் பிடித்தவை. அதிலும் மிக முக்கியமாக இறைவனை மிக அதிகமாக வேண்டும்போது கண்ணீர் பெருக்கெடுக்கிறது என்று நீங்கள் ஓரிடத்தில் குறிப்பிட்ட வார்த்தை என் உள்ளத்தை மிகவும் தொட்டது நீங்கள் இறைவனை மிகவும் நெருங்கி சென்றிருக்கிறீர்கள் என்பதை எனக்கு உணர்த்தியது.
உங்களை புரிதலை / அனுபவத்தை /நல்ல கருத்துக்களை தாருங்கள்! அறிய ஆவலாக உள்ளோம்!
anna wrote: //கடவுள்கள் என்பதே தவறு தான். கடவுள் என்பது நம்மை மீறிய ஒரு சக்தி என வைத்துக்கொண்டால் அது ஒரு சக்தி. இல்லை இல்லை கடவுள் என்பவர் ஒரு நபர் என்றால் அவர் ஒரு நபர்.இல்லை இல்லை கடவுளர்கள் பலர் உள்ளனர் என்றால் ஆம் கடவுளர்கள் பலர். நாம் எப்படி நினைத்து நம்பிக்கை வைக்கின்றோமோ அதன் படி தான் கடவுளும். கடவுள் இல்லை என்பவனும் இல்லை என்பதை நம்புகிறான். கடவுள் இருக்கிறான் என்பவனும் இருக்கிறது என்பதை நம்புகிறான். இவர்கள் எல்லாம் நம்ப வேண்டும் என்பதற்காக கடவுளாகிய நான் இருக்கிறேன் அல்லது இல்லை என்பதைஎன்றாவது கடவுள் ஊர்ஜிதம் செய்து இருக்கிறாரா? நீ எதுவாக இருக்க நினைக்கிறாயோ நீ அதுவாகவே ஆகிறாய். ஆகையால் கடவுள்களில் சிறியவர் பெரியவர் என்ற பாகுபாடு காண இயலாது.///
அன்பர் அன்ன அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்!
தங்கள் கருத்துபோல் அவனவன் எதை விசுவாசிக்கிரானோ அதுதான் நடக்கும் என்பது சரியான கூற்றுதான் ஆனால் எதற்குமே சரியான உண்மை என்று ஓன்று நிச்சயம் இருக்கும் அல்லவா?
கடவுள் இல்லை என்று நம்புபவனுக்கு அவர் இல்லாதவராகவே இருக்கிறார் அதனால் அவர் இல்லை என்று ஆகிவிடுமா ?
பலவிதமான கடவுள்களை வைத்து கும்பிடுகிறார்கள் என்றால் அதில் நிச்சயம் ஏதோ ஒரு உண்மை இருக்கிறது என்பதே எனது கருத்து அவர்களை பற்றிய பல புராணங்களும் உண்டே! அதன் அடிப்படையில்தான் இக்கேள்வி எழுப்பினேன்.
anna wrote: ///என்னை பொறுத்த வரையில் கடவுள் என்பது அளப்பரிய நல்ல சக்தி என்பது மட்டுமே. அவர் அனைத்து ஜீவராசிகளுக்கும் நல்லதே செய்வார் என்பது மட்டுமே.////
உங்கள் கருத்து சரியானதாக இருந்தாலும் இறைவன் நல்லவர் என்று நம்பும் உங்கள் வாழ்வில் எல்லாமே நல்லதாகவே நடக்கிறதா? நீங்கள் நம்புவதற்கு எதிராக பல தீமைகளும் நடக்கிறதல்லவா?
அப்படியிருக்கு அவரவர் நம்புவதுதான் நடக்கும் என்று எப்படி கூற முடியும்?
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
தங்கள் கருத்துபோல் அவனவன் எதை விசுவாசிக்கிரானோ அதுதான் நடக்கும் என்பது சரியான கூற்றுதான் ஆனால் எதற்குமே சரியான உண்மை என்று ஓன்று நிச்சயம் இருக்கும் அல்லவா?
கடவுள் இல்லை என்று நம்புபவனுக்கு அவர் இல்லாதவராகவே இருக்கிறார் அதனால் அவர் இல்லை என்று ஆகிவிடுமா ?
பலவிதமான கடவுள்களை வைத்து கும்பிடுகிறார்கள் என்றால் அதில் நிச்சயம் ஏதோ ஒரு உண்மை இருக்கிறது என்பதே எனது கருத்து அவர்களை பற்றிய பல புராணங்களும் உண்டே! அதன் அடிப்படையில்தான் இக்கேள்வி எழுப்பினேன்.
சரியான உண்மை என எதை சொல்கிறீர்கள் என்பது தான் எனக்கு புரியவில்லை. இறைவனிடம் இருந்து நமக்கு வரும் எல்லாமே சரியானது தான். கடவுள் இல்லை என்பதை நம்புவனுக்கு கடவுள் இல்லை என்று சொன்னால், என்ன அர்த்தம்? அவனிடம் உள்ள இல்லை எனற நம்பிக்கைத்தான் அவனுக்கு கடவுள்.அதற்காக கடவுள் வந்து நான் தான் கடவுள் இங்கு தான் இருக்கிறேன் என ஊர்ஜிதப்படுத்த வேண்டும் என்பது கடவுளுக்கு தேவை இல்லை. பலவிதமான கடவுள் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். அதுவும் நம்பிக்கை பொறுத்த விஷயம் தான். ஆனால் இறைநம்பிக்கை ஒன்று தான்.
உங்கள் கருத்து சரியானதாக இருந்தாலும் இறைவன் நல்லவர் என்று நம்பும் உங்கள் வாழ்வில் எல்லாமே நல்லதாகவே நடக்கிறதா? நீங்கள் நம்புவதற்கு எதிராக பல தீமைகளும் நடக்கிறதல்லவா?
அப்படியிருக்கு அவரவர் நம்புவதுதான் நடக்கும் என்று எப்படி கூற முடியும்?
இறைவன் நல்லவர் என நம்பும் போதே நமக்கு அவர் நல்லது மட்டுமே செய்வார் என இறைவனிடம் சரணாகதி ஆகி விட்டால் இந்த கேள்விக்கே இடம் இல்லை.
எனக்கு தீமை வந்தாலும் நன்மை வந்தாலும் எல்லாம் உன் செயல் என நான் அந்த தீமைகளையும் நன்மைகளையும் எல்லாம் வல்ல இறைவனிடம் கொடுத்து விட்டால் அதன்பிறகு என்ன இருக்கிறது நம்மிடம்.
இறைவன் நல்லவர் என நம்பும் போதே நமக்கு அவர் நல்லது மட்டுமே செய்வார் என இறைவனிடம் சரணாகதி ஆகி விட்டால் இந்த கேள்விக்கே இடம் இல்லை.
எனக்கு தீமை வந்தாலும் நன்மை வந்தாலும் எல்லாம் உன் செயல் என நான் அந்த தீமைகளையும் நன்மைகளையும் எல்லாம் வல்ல இறைவனிடம் கொடுத்து விட்டால் அதன்பிறகு என்ன இருக்கிறது நம்மிடம்.
இறைவனிடம் சரணாகதி அடைதல் என்பது ஒரு மேலான நிலை. அதிலும் இன்ப துன்பம் இரண்டையும் ஒன்றுபோல் பாவிப்பது என்பது புத்தர் வள்ளலார் போன்ற மிக உயர்த்த நிலையை அடைந்தவர்களாலேயே சாத்தியம் என்று கருதுகிறேன்.
உங்கள் கருத்துக்கள் மற்றும் அனுபவங்களை தனி கட்டுரை வடிவில் தாருங்கள் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன்!
குழந்தை ஏசுவும், சிலுவையில் மரித்தவரும்... ஒருவரே அன்றோ.
பத்தாவது அத்யாயம் பகவத்கீதா படியுங்கள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனது உடலைக் குறிப்பிட இல்லை. பெயர், வடிவைக் குறிப்பிட இல்லை என்பதை எல்லாம் அறிவீர்கள். மேலும் இது போன்ற கருத்துகள் ஏழாவது அத்யாயம், ஒன்பது போன்ற பிற அத்யாயங்களில் பரவி இருப்பதைக் காணலாம்.
மேலும் இத்தளத்திலேயே உள்ள சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகளையும் அதிக தெளிவுக்குப் படிக்கவும்.
அன்பான சகோதரர் அவர்களே தங்கள் வருகைக்கும் தங்கள் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
தங்களுடன் விவாதிக்க என்னிடம் அனேக எதிர் கருத்துக்கள் உள்ளது ஆகினும் நேரமின்மையால் அதை செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன்.
இந்து மதம் பழமையானது என்பதும் அதில் உள்ள கருத்துக்கள் உண்மை என்பதும் எனக்கும் தெரியும். ஆனாலும் அதன் காலங்கள் முடிந்து போய்விட்டது. எப்பொழுது ஆண்டவராகிய இயேசு மனுஷனாக பிறந்து பாவங்களுக்கு மரித்தாரோ அப்பொழுதே இந்து மதம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.
பாவத்தினாலும் கர்ம வியானையினாலும் எல்லையில்லா சுழற்ச்சி முறையில் போய்கொண்டிருக்கும் ஜீவன்களின் மறுபிறப்பு நிலையை ஒரு முடிவுக்கு கொண்டுவரவே இயேசு பாவங்களுக்காக மரித்து ஒரு முடிவை உண்டாக்கினார்.
இயேசுவின் இரத்தம் ஒன்றே மனுஷனின் கர்ம வினைகளை போக்கி அவன் இறைவனுடன் ஒப்புரவாக்கும்.
மீண்டும் இந்து என்னும் பழைய கொள்கைகளை நிலைநிறுத்த முயலாமல் பாவ மன்னிப்பை பெற்று கர்ம வினையில் இருந்து பெற்று கடவுளின் ராஜ்ஜியம் சென்றடையும் வழியை நாடுவதுதான் சிறந்தது.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
உண்மை காலத்துக்கு ஏற்ப மாறுவது என்னும் அரிய உண்மையைத் தங்களிடம்தான் தெரிந்துகொண்டேன். தங்களைப் போன்றவர்களிடம் மட்டும்தான் தொரிந்துகொள்ளவும் முடியும்.
நாங்கள் எக்காலத்துக்கும் மாறாத ஒன்றையே உண்மை என்று கொள்பவர்கள்.
ஏசுவுக்குப் பிறகு நபி வந்திருக்கிறாரே. அதன்பிறகுதானே ஜெஹோவா குடும்பக்கட்டுப்பாடு செய்துகொண்டார்.
ஆகவே நாம் ஐஎஸ்ஐஎஸ்ஸில் தான் சேரவேண்டும். நபி தான் இறுதி, கடைசி இறைத்தூதராம்.
எனக்கும் தங்களைப் போன்றவர்களிடம் பேசி வீணடிக்க நேரம் இல்லைதான். ஆனாலும் நான் ஏன் கிறித்தவனாக இல்லை என்பதற்கு என்னிடமுள்ள இதுவரை யாரும் தீர்காகாத ஐயங்களே காரணம்.
பாவம் என்பது என்ன
பாவங்களுக்கு ஏசு முடிவை உண்டாக்கி ஆயிற்று என்றால், என்னுடைய வினைகளும், பாபங்களும் - இரண்டும் வேறா - முடிவு ஆயிற்று அல்லவா. பிறகு ஏன் நீங்கள் என்னைப் போன்றவர்களைப் பற்றிக் கவலைப் படுகிறீர்கள்.
மனித உடல் எடுத்த என்னை அறிவிலிகள் அறிவதில்லை - கண்ணன் கீதையில்.
நான் ஏன் கிறித்தவனாக இல்லை என்பதற்கு என்னிடமுள்ள இதுவரை யாரும் தீர்காகாத ஐயங்களே காரணம். பாவம் என்பது என்ன பாவங்களுக்கு ஏசு முடிவை உண்டாக்கி ஆயிற்று என்றால், என்னுடைய வினைகளும், பாபங்களும் - இரண்டும் வேறா - முடிவு ஆயிற்று அல்லவா. பிறகு ஏன் நீங்கள் என்னைப் போன்றவர்களைப் பற்றிக் கவலைப் படுகிறீர்கள்.
அன்பான சகோதரரே நமது அரசாங்கம் இந்தியா முழுவதற்கும் ஒரு இலவச திட்டத்தை அறிமுகபடுத்தினாலும் நாம் அதை அசட்டை செய்து, அதில் நம்முடிய பெயரை பதிவு செய்ய விருப்பமில்லாமல் இருந்தால் அதனால் நமக்கு எந்த பயனும் கிடைக்காது.
எல்லோருக்கும் வெள்ள நிவாரண நிதி கொடுக்கிறார்கள் என்று வைத்துகொள்வோம். நான் பெயரை பதிவு செய்ய விரும்பாமல் இருந்துகொண்டு வீட்டுக்கு வந்து பதிவு செய்வோரையும் அசட்டை செய்தால் அந்த நிதி எனக்கு கிடைக்காது.
அதேபோல்தான் இயேசு தரும் இரட்சிப்பும். அவர் எல்லோருடைய பாவங்களுக்காகவும் மரித்துவிட்டார் ஆனால் அதை விரும்பி ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் இருக்கிறது.
ரோமர் 10:9கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
ஒருவர் நம் வாயில் அமுதத்தை கொண்டுவந்து புகட்டினாலும் அதை நாம் விழுங்க மனதில்லாமல் துப்பினால் அதனால கிடைக்கும் நன்மையை நாம் இழந்து போவோம் அல்லவா?
அதேபோல்தான் இயேசு தரும் இரட்சிப்பு. தாங்கள் போன்றவர்கள் அதை நிராகரிப்பதால் அதன் மேன்மையை அறிந்த நாங்கள் திரும்ப திரும்ப அதைப்பற்றி சொல்லி வருகிறோம்.
I கொரிந்தியர் 1:18சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
சுந்தர் அண்ணா தங்களின் இந்த கேள்வி என்னை வியப்பில் ஆழ்த்துகிறது? ஆண்டவரின் ஆழங்களை தெளிவாக விளக்கும் நீங்கள் மற்றைய தெய்வங்கள் இருப்பதாகவும் விசுவாசிக்கிண்றீர்களா?
சிஸ்டர் இந்த திரி "anna" என்ற ஒரு இந்து சகோதரருக்கு கிறிஸ்த்துதான் மெய்யான தெய்வம் என்பதை அறிவிப்பதற்காக அவரை வேறு ஒரு தளத்தில் இருந்து அழைத்து வந்து இந்த திரியில் விவாதிக்க வைத்தேன். ஆனால் அது சரியாக ஒர்க் பண்ணவில்லை
மேலும் நம் கர்த்தரே மெய்யான தெய்வம் அப்படியெனில் வேறு பொய்யான தெய்வங்கழும் இருந்தன என்பதை வேத வசனங்கள் மூலமே அறிய முடியும்.
எரேமியா 10:11 வானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள், பூமியிலும் இந்த வானத்தின்கீழும் இராதபடிக்கு அழிந்துபோகும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள்.
II நாளாகமம் 28:23 எப்படியென்றால்: சீரியா ராஜாக்களின் தெய்வங்கள் அவர்களுக்குத் துணைசெய்கிறபடியினால், அவர்கள் எனக்கும் துணைசெய்ய அவர்களுக்குப் பலியிடுவேன் என்று சொல்லி, தன்னை முறிய அடித்த தமஸ்குவின் தெய்வங்களுக்கு அவன் பலியிட்டான்;
மீகா 4:5 சகல ஜனங்களும் தங்கள் தங்கள் தேவனுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு நடப்பார்கள்; நாங்களும் எங்கள் தேவனாகிய கர்த்தருடையநாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம்.
மேலும்
I கொரிந்தியர் 8:5 வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும்,
6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.
-- Edited by SUNDAR on Saturday 8th of October 2016 12:21:30 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
///எரேமியா 10:11 வானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள், பூமியிலும் இந்த வானத்தின்கீழும் இராதபடிக்கு அழிந்துபோகும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள்.///
இவ்வசனத்தின்படி வானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள் ஓர் நாளில் இல்லாமல் அழிந்துபோகும் என்று சொல்ளப்பட்டுள்ளதே. அப்படியெனில் அப்படிபடட தெய்வங்களும் இருக்கிறது என்றுதானே பொருள்படுகிறது.
-- Edited by SUNDAR on Saturday 8th of October 2016 12:40:17 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)