திருக்குர்ரான் வசனப்படி சாத்தான் என்னும் தீயசக்தி உருவான காரணம் வலிமை வாய்ந்ததாக இல்லை.
திருக்குர்ரான் 15ம் அதிகாரம் 31லிருந்து 39முடிய பார்க்கும்போது இப்லிஸ் என்னும் அக்கினியால் படைக்கப்பட்ட தேவ தூதனிடம் இறைவன் மண்ணால் படைக்கப்பட்ட மனிதனை சிரம் பணிய சொன்னபோது பெருமையின் காரணமாக சிரம்பணிய மறுத்துவிடான், அகவே அவன் சாத்தானாக மாறியதாகவும் பின்பு இறைவனிடம் மனிதர்களை கெடுத்து காட்டுகிறேன் என்று அவகாசம் கேட்டு மனிதர்களை கெடுத்து வருவதாகவும் வசனங்கள் கூறுகின்றன. . இந்த வசனங்களை கூர்மையாக ஆராய்ந்தால் கீழ்க்கண்ட கேள்விகள் எழும்புகின்றன
கொலைகாரன் என்று ஒரு நீதிபதியால் தீர்க்கப்பட்ட ஒரு கொலை குற்றவாளி அதே நீதிபதியிடம் எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் நான் எல்லோரையும் கொலைகாரனாக மாற்றி காட்டுகிறேன் என்று சொன்னால் அனுமதி கொடுப்பாரா?
ஆனால் இங்கு இறைவன் தான் படைத்த மனிதனை சோதிப்பதற்கு தானே ஒரு மோசமனவனுக்கு அனுமதி கொடுத்துவிட்டார். இதன் மூலம் தீமையை உலகினுள் கொண்டுவர இறைவனே காரணமாகிவிட்டார். இப்படி காரணமாகி விட்டு பிறகு நீ இதை செய்யாதே அதை செய்யாதே செய்தால் நரகம் பொய் விடுவாய் என்று சொல்வதில் என்ன நியாயம்.
இப்படி ஒரு நியாயமற்ற செயலை இறைவன் செய்வாரா?
சோதிப்பதில் தவறில்லை என எடுத்துக்கொண்டாலும், சோதனையின் முடிவை பாருங்கள் " நரக அக்கினி". இன்று இந்த உலகில் நான் பாவமே செய்யாத பரிசுத்தவான் என்று யாரால் சொல்ல முடியும்? அப்படிஎன்றால் யார் நரக அக்கினிக்கு தப்ப முடியும்?
நாம் பெற்ற நமது பிள்ளைகளை இதுபோல் சோதிப்போமா? பிள்ளையை பெற்று அதை ஒரு தீயவனை வைத்து சோதித்து, தோற்றால் அக்கினியில் தூக்கி போடுவோமா? மனிதனாகிய நாமே அப்படி செய்வதில்லை ஆனால் நீதியுள்ள இறைவன் அப்படி செய்வாரா?
நான் இறைவனிடம் போய் என்னை படையுங்கள் நான் சாத்தானின் சொல்லுக்கு கீழ்படியாமல் ஜெயித்துவிடுவேன் என்று சொல்லவில்லை. என் அனுமதி இன்றி படைக்கப்பட்டேன். பிறகு என்னை சோதித்து அக்கினியில் போடுவதெல்லாம் கொஞ்சம் கூட நியாயமற்ற செயல். இதை இறைவன் ஒருபோதும் செய்பவரல்ல. இந்த வார்த்தைகள் இறைவனின் நீதி தன்மையையே இழிவு படுத்துகிறது.
நன்மை எது தீமை எது என்று இறைவன் தெரிவித்திருப்பது உண்மைதான். ஆனால், இந்து உலகில் எது அதிகம் பெருகியுள்ளது? மனிதனையும், மனதையும் கெடுக்கும் ஆபாசமும், பழிக்கு பழி வாங்கும் கொடூரமும், போட்டியும், பொறாமையும். வஞ்சகமும், ஏமாற்றும், தீவிரவாதமும் தான் மிக அதிகமாக பெருகியுள்ளது. இறைவனையும் அவருடைய மேன்மையையும் பற்றி பேசுவதை விட ஒரு சினிமா நடிகையை பற்றியோ அல்லது அரசியலை பற்றியோ பேசினால் அநேகர் கேட்க தயாராக உள்ளனர். நல்லவனாக இருப்பவன் கூட இந்த உலகில் உள்ளவர்களின் ஏமாற்று செயலால் தீயவனாக மாறிவிடுகிறார்கள். இப்படி ஒரு நிலைமையை நோக்கி மொத்த மனித கூட்டமும் போகும் பட்சத்தில் யார் நரக அக்கினிக்கு தப்ப முடியும்?
மனதை அதிகம் கவர்வது எது? இறை செய்தியா? ஆபாச செய்தியா?
நான் குற்றமற்றவன் பரிசுத்தவான் என்று நெஞ்சை தொட்டு யாரும் சொல்ல முடியாத பட்சத்தில் நரக அக்கினிக்கு எப்படி தப்புவது?
ஏன் இந்த விபரீத சோதனையை இறைவன் அனுமதித்தார்? எல்லோரையும் நரகத்தில் போட்டு வேடிக்கை பார்க்கவா?
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)