இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இலக்கம் அறுநூற்றறுபத்தாரும் பணமும்!!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
இலக்கம் அறுநூற்றறுபத்தாரும் பணமும்!!
Permalink  
 


அன்பு சகோதரர்களே!


வெளிப்படுத்தின விசேஷம் 13ம் அதிகாரத்தில் இப்படி சொல்லப்பட்டுள்ளது:

16.அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும்,
17. அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.
18. இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்; அது மனுஷருடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.

இந்த "இலக்கம் அறுநூற்றறுபத்தாறு." சம்பந்தமாக வேத பண்டிதர்களிடைய பலவிதமான கருத்துக்கள் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே!. ஆகினும் வேதத்தை நன்றாக ஆராய்ந்து பார்க்கும் போது இந்த "இலக்கம் அறுநூற்றறுபத்தாறு." என்பது பணம் மற்றும் உலக பொருளையே குறிக்கிறது என்பது புலனாகின்றது. அதற்கு ஆதாரமாக கீழ்க்கண்ட வசனங்களை முன்வைக்க விரும்புகிறேன்:


1. வேத புத்தகத்தில் இந்த அறுநூற்றறுபத்தாறு என்ற வார்த்தை மொத்தம் இரண்டு இடத்தில்தான் வருகிறது ஒன்று இங்கு, இன்னொன்று 2நாளாகமம் 9:13ல் சாலமொனுக்கும் வந்த பொன்னின் அளவை குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது:

            13. வியாபாரிகளும் வர்த்தகரும் கொண்டுவரும் பொன்னைத்தவிர, சாலொமோனுக்கு ஒவ்வொரு வருஷத்திலும் வந்த பொன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து நிறையாயிருந்தது. இதன் மூலம் நாம் "அறுநூற்றறுபத்தாறு" என்பது பணம் அல்லது உலக பொருளை குறிக்கிறது என்பதை அறியலாம்.

2. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்த்து இரண்டு எஜமானுக்கு ஊளியம் செய்ய முடியாது என்று சொல்லும் போது தேவனுக்கும் சாத்தனுக்கும் என்று குறிப்பிடாமல் சாத்தானை "உலக பொருள்" என்று குறிப்பிட்டுள்ளதை நாம் ஆராய்ந்தால் உலக பொருள்மேல் உள்ள பற்றுதான் சாத்தான் என்று உணர்ந்துகொள்ளலாம்.

3. வேதத்தில் என்னென்னவோ பாவம் செய்தவர்களுக்கு எல்லாம் கர்த்தர் மன்னிப்பு கொடுத்தார். தாவீது கொடிய பாவம் செய்தான் ஆனால் மன்னிப்பு பெற்றான். அது போல் இஸ்ரவேலின் ராஜாக்கள் பலபேர் பலவிதமான தவறுகள் செய்து மீண்டும் மன்னிப்பு பெற்றுள்ளனர் ஆனால் வேதத்தில் மன்னிப்பை பெறாதவர்கள் வரிசையில் முதலில் நிற்பவர்கள் பணம் மற்றும் உலகபொருள் ஆசை உடையவர்களே என்று பார்க்க முடியும்.


a. நமதாண்டவரை பணத்துக்காக கட்டிகொடுத்த யூதாஸ் (பின்பு குற்றமற்ற இரத்தத்தை காட்டிக்கொடுத்தேன் என்று மனஸ்தாபப்பட்டும் பயனில்லை)

b. எலிசாவின் வேலைக்காரன் கேயாசி - எலிசாவை போல பெரிய தேவ மனிதனாக மாறவேண்டிய அவன் சாதாரண உலகப்பொருள் மேல் உள்ள ஆசையால் குஸ்டரோகியாக மாறி மன்னிப்பை பெறாமல் போனான்.

c. அமலேக்கியரின் கொள்ளையின் மேல் பரந்த சவுல், அதை கர்த்தருக்கு பலியிடத்தான் கொண்டுவந்தேன் என்று எவ்வளவோ மழுப்பி பார்த்தும் பின்பு பாவம் செய்தேன் என்று புலம்பியும் கர்த்தரால் ஆகதவன் என்று தள்ளப்பட்டு போனான்.

மேற்கண்ட உதாரணங்கள் எல்லாம் உலகபொருள் மீது பற்றுள்ளவர்கள் கர்த்தரிடம் மன்னிப்பை பெறமுடியாது என்பதற்கு திருஷ்டான்திரமாக உள்ளன.

இப்பொழுது நான் குறிப்பிட்ட வசனத்தை சற்று ஆராய்வோம்

"16 அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும்"

இதில் வலது கை என்பது நம்மிடம் சேர்த்து வைக்கப்பட்டுள்ள பணம் மற்றும் பொருள் (Possession) மேலுள்ள நம்பிக்கையையும் நெற்றி என்பது சேர்க்க வேண்டும் என்ற சிந்தனையில் உள்ள பணம் அல்லது பொருளையும் குறிக்கிறது. சிறியோர் பெரியோர் எல்லோரும் இதில் எதாவது ஒன்றை கண்டிப்பாக கொண்டிருக்கவேண்டும்.

17. அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது சேர்த்து வைக்கப்பட்ட பணமோ, அல்லது எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையோ இல்லாத எவனும் கொள்ளவும் விற்கவும் முடியாது (இது முற்றிலும் உண்மைதான்.

எப்படியெனில் கையில் பணமோ அல்லது பணம் சம்பாதிக்கும் ஆசையோ இல்லாதவன் ஒரு பொருளும் வாங்கமுடியாது.)

18. இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்; அது மனுஷருடைய இலக்கமாயிருக்கிறது;

உலகத்தில் கணக்கு பார்க்கபடுவதில் மிக முக்கியமானது பணம் தான். படித்தவன் படிக்காதவன் எல்லோரும் பணத்தை கண்டிப்பாக கணக்கு பார்த்தே தீருவான்.

அடுத்து அது மனிதனின் இலக்கமாயிருக்கிறது என்பது மிக தேவ்ளிவாக பணம் என்பதை காட்டுகிறது. பணம் என்பது மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டு உபயோகப்படுத்தப்படும் ஒரு பொருள்தான்.

இவற்றை எல்லாம் பார்க்கும் போது இந்த உலகத்தில் மிகப்பெரிய சாத்தான் பணம் மற்றும் உலகபொருள்தான் என்பது தெளிவாக தெரிகிறது. எனவேதான் நமதாண்டவராகிய இயேசுகிறிஸ்த்து பூமியில் வாழ்ந்த காலங்களில் பணத்தை கையால் தொட்டதாக கூட தெரியவில்லை. ஒரே ஒரு முறை ராயனுக்கு வரி கொடுப்பது பற்றி விளக்கும்போது கூட "ஒரு பணத்தை எனக்குக் காண்பியுங்கள்" என்றுதான் சொல்லியுள்ளார் அதை கையில் கூட வாங்கவில்லை எனவே யாராவது வந்து இலக்கம் போடுவார்கள் என்று நினைத்துகொண்டிருக்க வேண்டாம் சகோதரர்களே! பணத்தின் மேலும் உலகபோருளின் மேலும் நம்பிக்கை வைப்பவன் இலக்கம் அறுநூற்றறுபத்தாறு உடையவன் ஆவான் என்பது எனது கருத்து.

 



-- Edited by SUNDAR on Friday 18th of June 2010 03:24:01 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

பணம் என்பது பயங்கரமானதொரு சக்தியாகவும் பாஸ்டர்களில் இருந்து பரதேசிகள் வரை  அனைத்து மக்களையும்   ஆட்டிபடைக்கும் முதல் கருவியாக இன்று உலகில் இருக்கிறது. "காசேதான் கடவுளடா" என்று சொல்லும் அளவுக்கு பணம் அனைத்து மனிதர்களையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதை இன்று காணமுடிகிறது.  உலகில் நடக்கும் அனேக முக்கிய பாவங்களாகிய கொலை, கொள்ளை,  திருட்டு  அனைத்துக்கு காரணம் பணமே!       
 
"பணம் எல்லாவற்றுக்கும் உதவும்" என்று வேதம் சொல்வதால் "பணத்தை சம்பாதித்து சேர்ப்பதில் தவறல்ல, பணத்தின் மேல்  ஆசை இருப்பதுதான் தவறு" என்று பலர் வாதிடுகின்றனர். அனால் பணம் சேர்ப்பதற்கும், பண ஆசைக்கும் இடையேயான தூரத்தை யாராலும் சரியாக அளவிட முடியாது என்பதை அறிய வேண்டும். இரண்டுக்கும் உள்ள இடைவெளி மிக குறுகியது. எனக்கு பணத்தின்மேல் ஆசையில்லை என்று சொல்லிக்கொண்டே அதன்மேல் ஆசையோடு ஒருவரால் இருக்கமுடியும்.
 
என்னை பொறுத்த வரை நமது வாழ்க்கையின் அடிப்படை தேவையாகிய "உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க ஏதாவது ஒரு இடம்(வாடகையோ அல்லது சொந்தமோ)" போன்ற முக்கிய காரியங்களை தவிர வேறு எந்த காரியத்துக்கு பணம் வேண்டும் என்று ஆசைபட்டாலும் அது பண ஆசையில் வந்துவிடும் என்றே கருதுகிறேன்.  
 
பணம் உலகப்பொருள் இவற்றினால் ஈர்க்கப்பட்டு ஆவிக்குரியவர்கள் கூட செய்யும் பாவங்களை இங்கு பட்டியலிட்டு அதை மேற்கொள்ள வழியையும் சொல்வது உண்மையை  அறிந்து அவரவர்  தங்களை திருத்திக் கொள்ள  பிரயோஜனமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

1.முதலில் பணத்தையும் பணக்காரர்களையும் அதிகம்  மதிக்காமல் இருக்க கற்றுக் கொள்ளவேண்டும். (ஒரு சகமனிதன் என்ற முறையில் நாம் மரியாதை கொடுக்கலாம்) மனிதன் பணத்தினாலோ அப்பத்தினாலோ  அல்ல தேவனின் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்ற எண்ணத்தை  மனதில் வளர்த்து தேவன் எந்நிலையிலும் நம்மை காக்க வல்லவர் என்று தேவனின் வல்லமைமேல் விசுவாசம் வைக்கவேண்டும்.  மற்றபடி நாம்  சொந்த வீட்டின் மேலோ, பிள்ளைகள் மேலோ அல்லது தங்க நகைகள் மீதோ கணவன் /மனைவி மீதோ வைக்கும் நம்பிக்கைகூட நமக்கு கண்ணியாகவே அமையும் என்பதை அறியவேண்டும்.    
 
2. உன்னிடத்தில் கேட்பவனுக்கு கொடு உன்னிடத்தில் கடன்வாங்க விரும்புகிறவனுக்கு மனம் கோணாதே என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப, யாராவது நம்மிடம் அவசர தேவயிநிமித்த்ம் கடன் கேட்கும் போது நம்மிடம் பணம் இருக்குமாயின் எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் அது திரும்ப கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என்ற நோக்கில் கொடுக்கும் மனபக்குவம் வரவேண்டும் .
 
3. பணத்துக்காக  எவ்விதத்திலாகிலும்  தேவனின்  கட்டளையை மீறுவதற்கு சற்றும் துணியாமல்,  மிக பரிசுத்தமாக ஆசாரிக்க வேண்டிய ஒய்வு நாளில் வேலைக்கு போவதை தவிர்ப்பது நல்லது.   

4. தேவன் கட்டளையிட்டுள்ள  தசமபாகத்தை எவ்விதத்திலும் வஞ்சித்து எடுத்துக் கொள்ள வகை பார்க்காமல் தேவனுக்குள்ளதை தேவனுக்கு செலுத்துவதில் உண்மையாய்  இருக்கவேண்டும்.

5..இந்து முதலாளிகள் நிரந்த தேசத்தில் வேலை போய்விடும் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு போய்விடும்  என்ற பயத்தில் பிறமத பூஜைகளில் கலந்துகொள்வது விக்கிரகங்களுக்கு  பூ /போட்டு வைப்பது  போன்ற எந்த வேலையையும் நிச்சயம் தவிர்க்கவேண்டும்.
 
6. ஆண்டவருக்காக  செய்யும் காரியத்தில் எந்த  சுய ஆதாயமும்  தேடாமல்
உண்மையாக முழு உள்ளத்தோடு ஆண்டவருக்கான
பணியை காலம் நேரம்
பார்க்காமல் அன்பினிமித்தம் செய்ய வேண்டும். கூலிக்காக அல்லது பிழைப்புக்காக ஊழியம் என்பது
கூடாது.  

7. கடன் வாங்குவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது (கடன் அட்டை உட்பட) ஏனெனில் கடன் வாங்கியவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை என்று நீதி மொழிகள் சொல்கிறது. மனிதனுக்கு அடிமையாக இருக்கும் வரை நாம் தேவனின் திட்டத்தை நிறைவேற்ற முடியாது

8..அவசர தேவைக்கு  திருடவும், பிறர் பொருளை அபகரிக்கவும் அடுத்தவரை ஏமாற்றவும் பணம் வகை செய்கிறது. சிறு சிறு விஷயங்களை "இது தவறல்ல" என்ற எண்ணத்தில் பிறர்  பொருட்களையோ பணத்தையோ அனுமதியின்றி பயன்படுத்துவது கூடபாவமே.  இவ்விஷயத்தில் மிகவும் விழிப்பாக இருந்து நம்மை தர்க்காத்துகொள்வது அவசியம்.   

9.பணத்தை வட்டிக்கு கொடுக்க கூடாது (எசே 18) என்ற இறைவனின் கட்டளையை மீறி பணத்தை வட்டிக்கு கொடுக்க பணம் தூண்டுகிறது. இவ்விஷயத்திலும் நாம் விழிப்பாக இருந்து பணத்தை எவ்விடத்திலும் வட்டிக்கு கொடுப்பதை நிறுத்துவது அவசியம்.  

10 .பணத்தை எப்படி சம்பாதிக்கலாம் எங்கு சேர்த்து வைக்கலாம் என்ற காரியங்களில் அதிக நேரம் செலவு செய்து ஆண்டவரை மறக்க பணம் காரணமாகிறது. பணத்தின்மேல் பற்றில்லாத நிலை வந்தால் மட்டுமே இதை தவிர்க்க முடியும்.

11. வாங்கும் வருமானத்தில் திருப்தி அடையாமல் பரிதானம் வாங்கக்கூடாது என்ற ஆண்டவரின் கட்டளையை மீறி லஞ்சம் வாங்க பணம் தூண்டுகிறது. பரிதானம் வாங்கி பிழைப்பவன் எவ்விதத்திலும் ஆண்டவருக்கு பிரியமாக இருக்கவே முடியாது

12. பணம் வந்தால் தேவனுக்கு பிடிக்காத பெருமை அகங்காரம் கீழ்படியாமை தானாக வந்துவிடுகிறது, எனவே பணத்தின்மேல் எவ்வித சிறு நம்பிக்கைகூட வைக்காமல் தேவன்மேல் நம்பிக்கை  வைக்கவேண்டியது மிக அவசியமாகிறது.


-- Edited by SUNDAR on Friday 18th of June 2010 03:32:50 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

பணம்  பற்றி  நான்  அறிந்துகொண்ட  மேலும்  சில  உண்மைகள் !
 
நாம் நியாயமான காரியத்துக்காக மட்டுமே பணம் வேண்டும் பணம் சேர்க்க வேண்டும் நியாயமான முறையிலேயே பணம் சேர்க்க வேண்டும்  என்று கருதலாம் ஆனாலும் அதுகூட ஆண்டவர் பார்வைக்கு தவறாகவே தெரிகிறது என்பதை  நான் அறிந்து கொண்டேன். 
 
அவரவரை எந்த நிலையில் வைக்க வேண்டுமோ அந்த நிலையில் ஆண்டவர் சரியாக வைத்திருக்கிறார்! எனவே  ஒருவர் என்ன நிலையில் இருக்கிறாரோ அந்த நிலையில் மனரம்யமாக இருக்க பழகவேண்டும். அந்த நிலையிலேயே ஆண்டவருக்கு நன்றி செலுத்த வேண்டும். அந்த நிலைக்குள்ளேயே சந்தோசமாக வாழ பழகவேண்டும். இல்லையேல், உங்களுக்கு எவ்வளவு பணமோ பொருளோ கிடைத்தாலும் உங்களால் திருப்தியாக இருக்கவே முடியாது.        
 
உதாரணமாக இன்று தங்க இடமில்லாமல் இருந்தால் ஒரு தங்க ஒரு இடம் கிடைத்தால் போதும் என்று இருக்கும்.  தங்க இடம் கிடைத்தால் ஒரு நல்ல வாடகை வீடாவது இருந்தால் போதும் என்ற எண்ணம் வரும், வாடகை வீட்டில் இருக்கும் ஒருவர் ஒரே ஒரு சொந்த வீடு மட்டும் இருந்தால் எனக்கு போதும் என்று எண்ண  தோன்றும். சொந்த வீடு வந்தபின் சொகுசு வாழ்க்கைக்கு தேவைனான கார், A/c  எல்லாம் கேட்கும் இவ்வாறு மனிதனின் ஆசைஎன்பது ஒரு நாளும முடிவடையாது. ஆயிரம் ரூபாயில் திருப்தியடையாத மனது ஐம்பதாயிரம் ரூபாயிலும் திருப்தியடையாது.
 
மேலும் ஒருவர் மனதில் பணத்தின் மேல் ஒரு துளியளவு பற்று இருந்தால் கூட அது  சாத்தனுக்கு சாதகமான ஒரு நிலையையே அது எற்ப்படுத்து.  அந்த துளி அளவு  வழி வழியாக  சுலபமாக ஒருவர் மனதுள்  சாத்தான்  புகுந்து அவனது கிரியைகளை  செய்ய ஆரம்பித்து விடுவான், அதன்  மூலம்  பெரிய கெடுதல்களை சாதித்துவிடுவான்!    
 
உதாரணமாக ஒரு பெண்ணுக்கு சொந்த வீடு வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்து தன் கணவனின் சம்பாத்தியம் போதாத காரணத்தால்  அவர்களால் அந்த ஆசையை நிறைவேற்ற முடியாமல் இருந்தால். அந்த குறையை தீ மூட்டி பெரிய
குறையாக காண்பித்து அதனால் கணவன்மேல் வெறுப்பும் சொந்த வீட்டுகாரர்கள் மேல் ஒரு பற்று பாசமும் வரவைத்து,  குடும்பத்தையே நாசமாக்கிவிடுவான்.
 
 வேதபுத்தகத்தில் அகப் ராஜாவை பற்றி படித்திருக்கிறோம். 
 
I இராஜாக்கள் 21:2 ஆகாப் நாபோத்தோடே பேசி: உன் திராட்சத்தோட்டம் என் வீட்டிற்கு அடுத்திருக்கிறபடியால், அதைக் கீரைக்கொல்லையாக்கும்படி எனக்குக் கொடு

3.
நாபோத் ஆகாபை நோக்கி: நான் என் பிதாக்களின் சுதந்தரத்தை உமக்குக் கொடாதபடி கர்த்தர் என்னைக் காப்பாராக என்றான்.

இப்படி கீரை கொல்லையாக்குவதற்கு ஒரு சிறு இடத்தின்மேல் ஆசைபட்டு ஆரம்பித்த ஒரு காரியம்,   அது கிடைக்காமல் போகவே இறுதியில் நாபோத்தை கொலைசெய்யும் நிலைக்கு வளர்ந்து  மிகவும் கேடான ஒரு பெயரை வாங்கி கட்டிகொண்டவன்.அந்த ஆகப்  
 
I இராஜாக்கள் 2125. தன் மனைவியாகிய யேசபேல் தூண்டிவிட்டபடியே, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய, தன்னை விற்றுப்போட்ட ஆகாபைப்போல ஒருவனுமில்லை
 
எனவே நமக்கு என்ன கிடைத்திருக்கிறதோ, எதை நமக்கு ஆண்டவர் இன்று  கையில் கொடுத்திருக்கிராரோ  அதில் முழு திருப்தியோடு சந்தோசமாக  இருப்பது ஒன்றே இந்த பணம் என்னும் பாழும் பேயிடமிருந்து நம்மை பாதுகாக்கும், மற்றபடி மனதை அலைபாய விட்டால் வாழ்வே ஆட்டம்கண்டுபோகும் அது ஆண்டவரிடமும் அவப்பெயரை பெற்றுத்தரும்
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

ஒரு சிலர் 666  அறுபத்தாறு  அது ஒரு  முத்திதிரை மட்டும் தான் என்று அநேகர் எண்ணி கொண்டு இருக்கின்றார்கள்

ஆனால் சகோ : சுந்தர் கூறுவது போல அது பணம் என்று இப்பொழுதுஎல்லா இடங்களில் தெளிவாய் தெருகின்றது

பணத்தை வட்டிக்கு  குடுக்க  கூடாது என்று வேதத்தில் கூறி இருந்தும்  ஆலயத்திலே (போதகர்கள் ) வட்டி விடும் அளவுக்கு மோசமாகிவிட்டது

அதுவும் சில போதகர்கள் பிரசங்க நேரத்தில் விசுவாசிகளிடம் இந்த சர்ச்சியில் இவ்வளவு பணம் கொடுத்தால் நமக்கு அதிகமான பணம் தருவார்கள் அதை  நாம் கொஞ்ச கொஞ்ச மாக வட்டியோடு சேர்த்து திரும்பவும் செலுத்த வேண்டியது தான் என்று கூறுகின்றார்கள்

இதன் பொருள் என்ன வேனில் இயேசு கிறிஸ்துவின் வருகையில் ஒருவரும் மீட்கப்பட கூடாது என்று எண்ணி பிசாசானவன் இந்த பணத்தை கொண்டு வந்து விட்டான் அதுவும் போதகர்களிடம்

சகோதர சகோதரிகளே:

ஒரு பேப்பரில் உங்களுடைய கையளுத்தை போட்டு பணத்தை வாங்கினாலும் அதிலும் முத்திரை பதிப்பார்கள் என்பதை  மறந்து விடாதீர்கள்

ஏனென்றால் இன்று உலகில் பணமா கடவுளா என்று கேட்டால் யோசிக்காமல் பணம் தான் என்று கூறுகின்ற அநேகரை நான் பார்த்து இருக்கின்றேன் வாதாடி இருக்கின்றேன்

புரிந்து  கொள்ள : சிறு குழந்தை கூட  இவ்வளவு ரூபாய் கொடுத்தால்  தான்  அந்த பணத்தை வாங்குகின்றது  இல்லை என்றால் அடம் பிடிக்கின்றது    



-- Edited by EDWIN SUDHAKAR on Tuesday 25th of January 2011 07:01:09 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

"666" என்ற முத்திரையோடு யாரவது வருவார்கள் என்று எதிர்பார்த்து ஏமாந்து போகவேண்டாம். 666 என்பது பணம் மற்றும் உலக பொருட்களைத்தான் குறிக்கிறது என்பதை தெளிவாக விளக்கியுள்ள இந்த திரியை மீண்டும் ஒருமுறை படிக்கவும்.

"இந்த  முத்திரை ஏற்கெனவே அநேகருக்கு குத்தப்பட்டாகி விட்டது" இந்த முத்திரை குத்தபட்டவர்கள் பணத்தின் பிடியில் இருந்து தப்பிக்கவே முடியாது.

இப்படி நாம்  எதையோ நினைத்து போய்கொண்டு இருக்க, உண்மை வேறு ஒன்றாக இருக்கும் என்பதை அறியவேண்டும். நமக்கு சரியாக புரியாத ஒரு குறிப்பிட்ட வேத பகுதியை எடுத்துகொண்டு கடுமையாக ஜெபித்து குழம்பி அழுது ஆண்டவரிடம் கேட்டால் மட்டுமே அதன் உண்மை பொருளை அறிய முடியும்.

மேலும், வெளிப்படுத்தின விசேஷத்தில் உள்ள தேவ வார்த்தைகள் அப்படியே மாம்சத்தில்/ மாம்ச கண்களுக்கு தெரியும் விதத்தில்  நிறைவேறும் என்றும் எண்ணிக்கொண்டு இன்னும் ஆண்டவர் வர நாட்கள் ஆகும் என்று எண்ணிக்கொண்டு இருக்கவேண்டாம் என்று அன்புடன் கேட்டுகொள்கிறேன்.

யோவான் ஆவிக்குள்ளாகிதான் அந்த புத்தகத்தில் உள்ளவைகளை தரிசித்ததாக வேத வசனம் சொல்கிறது

வெளி 1:10. கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன்.

எனவே வெளிப்படுத்தின விசேஷத்தில் அனேக காரியங்கள் ஆவியின் நிறைவேருதல்களும்  குறியீடாக சொல்லபட்டதும்  ஆகும்.  

எந்நேரமும் ஆண்டவரின் வருகை இருக்கலாம். 

எசேக்கியேல் 30:3 நாள் சமீபமாயிருக்கிறது; ஆம், கர்த்தருடைய நாள் சமீபமாயிருக்கிறது

ஏசாயா 13:6 அலறுங்கள், கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது, அது சர்வவல்லவரிடத்திலிருந்து மகா சங்காரமாய் வரும்.



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

சகோதரரே,.

Bro.sundar//"666" என்ற முத்திரையோடு யாரவது வருவார்கள் என்று எதிர்பார்த்து ஏமாந்து போகவேண்டாம். 666 என்பது பணம் மற்றும் உலக பொருட்களைத்தான் குறிக்கிறது என்பதை தெளிவாக விளக்கியுள்ள இந்த திரியை மீண்டும் ஒருமுறை படிக்கவும். //

பணம் என்பது தான் அந்த முத்திரை என்பது மாற்றுகருத்து நிறைந்தது என நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன். ஒருவேளை அனைவரின் பக்தி விருத்திகேற்றபடி நீங்கள் கருத்துக்களை சுருக்கி பணம் என்று ஒருவார்த்தையில் கருதுவதாக நான் எடுத்துக்கொள்ளலாமா?

Bro.sundar//"இந்த  முத்திரை ஏற்கெனவே அநேகருக்கு குத்தப்பட்டாகி விட்டது" இந்த முத்திரை குத்தபட்டவர்கள் பணத்தின் பிடியில் இருந்து தப்பிக்கவே முடியாது.//

பத்திரம்,முத்திரை,காசு,பணம் ஆகியவைகள் பழைய ஏற்பாட்டு காலத்தில் இருந்தே பணம் பயன்படுத்தபட்டு வழங்கிவந்திருக்க,கேயாசி,யூதாஸ் போன்றவர்களும்,மற்ற அனேக பணப்பிரியாயர்களும், திருப்பதி கொள்ளாசெல்வந்தர்களையும் வேதம் எடுத்துரைக்கிறபடி பார்த்தால், பணத்தாசை எல்லா தீமைக்கும் வேறாய் இருப்பதில் மாற்று கருத்தில்லை. அந்தி கிறிஸ்து தோன்றுவதற்கு முன்பே இருக்கிற அனக அந்திகிரிச்துக்களில் ஒன்று தான் இந்த கரன்சியின் காரியம் எனக்  கூறலாம்.  

I யோவான் 2:18 பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்.

அநேகரை படுகொலை செய்த வரலாறில் மறைக்க பட்ட கொடுங்கோலர்களும், ராஜியங்களும்,கர்த்தரின் பிள்ளைகளை கொலை செய்த ராஜ்யங்களும்,அதிபதிகளும், கால நியமங்களை மாற்றி போட்டு இன்னும் வழங்க காரணமான பிந்தி போன போப்புகளும், எல்லா கள்ள போதகர்களும், உலகமயமாதலை திணிக்கிறவர்களும், ஆவிக்குரிய இஸ்ரவேலருக்கு விரோதமாய் போரிடுகிற,எழும்புகிற யாவரும் மேல் உள்ள வசனத்தில் உள்ள அந்திகிறிஸ்த்துக்களே. மற்றபடி பணம் என்பது எந்த உலக ராஜ்ஜியதிருக்கும் அச்சாரமாய் இருப்பதை பார்க்கிலும் பிசாசின் (அந்தி கிறிஸ்த்துவின் )ராஜ்ஜியத்தில் அதிகமாகவே இருக்கும் என்பதை கூறி தான் யாருக்கும் தெரியவேண்டும் என்பதில்லை. 


கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக!!

கர்த்தரின் ராஜ்ஜியம் விரைவில் வருவதாக !!!



-- Edited by JOHN12 on Tuesday 18th of December 2012 02:22:35 PM

__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard