கன்றாக இருக்கும் காட்டெருமையை கண்முன்னே கடித்து
அம்மா என்று அலரவிடாமல் அடித்து கொல்லும் சிங்கத்தை
சலனமற்று பார்த்து, அழத்தேரியாமல் ஏங்கும்
அன்னையின் நிலை என்னை தவிக்க வைக்கிறது!
உயிரோடுள்ள ஆட்டை உடம்பை ஒருவர் பிடிக்க தலையை ஒருவர் தயக்க்மிற்றி பிடிக்க
குரல்வளையை அறுக்கும் போது, குற்றுயிராய் துடிக்கும் அந்த இடத்தில்
அடியேன் இருந்தால் என்னிலைமை எப்படி இருக்குமென்று கற்ப்பனைபண்ணி கதறுகிறேன்
ஆம்!
அதுவும் ஒரு ஆண்டவரின் படைப்புதானே! ஆடு அலறும் அறியாத பாஷை அவர்களுக்கு புரிவதில்லை
"ஐயோ என்னை விட்டுவிடுங்களேன்" என்று அலறினாலும்
சத்தம் போட்டு கதறினாலும் நமக்கு கேட்பது ம்மே.....ம்மே..... தான்
அதுவும் அக்கம் பக்கம் கேட்டுவிடாதபடி அருத்துவிடுவோம் அதன் கழுத்தை!
எங்கெங்கிலும் தினம் நடக்கும் எல்லையில்லா கொடூரங்களை
நித்தம் நித்தம் பார்த்து செத்து செத்து பிழைக்கும் மக்கள் கூட்டத்தையும்,
சாவதர்க்கென்றே பிறக்கும் சகலவித உயிரினங்களையும் சற்றுநேரம் நினைத்தால்
நெஞ்செல்லாம் நெகிழ்கிறதே! கண்கள் கண்ணீர் சொரிகிறதே!!
இறைவனால் படைக்கப்பட்ட எனக்கே இத்தனை இரக்கம் இருக்குமானால்
என்னையே படைத்த இறைவன் எத்தனை இரக்கம் உள்ளவராக இருப்பாரென்று சிறிதேனும் சிந்திக்காமல்,
இதற்க்கெல்லாம் காரணம் இறைவனே தானென்றும்
கருணையின் கடலான அன்பின் உருவான அவரின் திருவிளையாடலென்றும்
அறியாமல் இயம்பும் ஆன்மீக அன்பர்களே!
இறைவன் இப்படியா விளையாடி இன்பம் ஈட்டிக்கொண்டு இருக்கிறார்?
அல்லது இப்படிப்பட்டவரை இறைவன் என்று இயம்புவதுதான் இவ்வுலகுக்கு தகுமா? இல்லவே இல்லை! ஆண்டவரை அறியாதவர் அகம்பும் அர்த்தமற்ற அறிவுரைகள் அவை.
பொல்லாங்கினால் யாரையும் சோதிக்க விரும்பாத பொன்னான தேவனை,
போற்ற விரும்பாத பொல்லாதோர் பிதற்றும் போக்கற்ற யோசனைகள் அவை!
இன்னல்களுக்கு காரணம் இறைவன் இல்லையென்றால் இத்தனைக்கும் காரணம் என்ன?
என்கின்ற எண்ணம் எல்லோருக்கும் இங்கு எழலாம்!
ஆதியிலிருந்தே ஆண்டவருக்கு இணையாக தோன்றி
ஆண்டவருக்கு அடங்காமல் ஆதியிலே அகன்றுபோய்
அடியோடு அழியப்போகும் அசுத்த ஆவிகளே அத்தனைக்கும் காரணம்!
இன்றுவரை இறைவனோடு இரக்கமின்றி போராடி
அக்கினிக்கடலில் அமிளப்போகும் அடங்காத சாத்தானே அத்தனைக்கும் காரணம்!
சாத்தானின் சகதிகளைவிட்டு சடுதியாய் அகலவும் சர்வ வல்லவரை சரிவர அறியவும்
வீழ்ந்துபோன மனிதனுக்கு விலையில்லா அறிவை ஆண்டவர் அளித்தார்!
அந்த அறிவே அகங்காரமாகி ஆண்டவரைவிட்டு அகன்று
தீமையின் பிடியில் சிக்கி, தன் இனத்தை தானே தாக்கி
தினம்தோறும் அழிகிறான் குண்டு வைத்து குற்றுயிராக்குகிறான்!
எவர் எப்படி போனாலென்ன எனக்கில்லை ஏதொரு கவலையென்று என்னால் ஓதுங்கி ஓட முடியவில்லையெனவே
எல்லா கொடூரங்களுக்கும் ஏற்ற்பான முடிவுவர எதாகிலும் வழி உண்டோவென்று என் தேவனை நோக்கி எந்நாளும் அழுது புலம்புகிறேன்!
எவரும் இறைவனென்று இங்கில்லை என்று வாழ்ந்தத காலம் வரை,
எப்படியோ தோன்றிய உலகத்தில் எங்கேயோ கோளாறாகிப்போனதால்
எல்லாமே எப்படியோ நடக்கிறது என்றெண்ணி
எல்லாவற்றிக்கும் முடிவுண்டென்ற எண்ணமற்றிருந்தேன்!
ஆனால் என்றொரு நாள் சாத்தானின் கிரியையை அழிக்க சர்வ வல்லவர் வந்தாரென்றும்
பாவத்தில் இருந்து மீட்க பரிசுத்தர் வந்தாரென்றும் அறிந்து கொண்டேனோ அன்று
தீமைக்கெல்லாம் தீர்வு தீர்க்கமாய் உண்டென்றும்,
துயரத்துக்கும் துன்பத்துக்கும் முடிவு தூரத்தில் இல்லையென்றும் அறிந்துகொண்டேன்,
உலகத்தின் உயிரினத்தை உள்ளிருந்தே கூறுபோட்டு,
சமாதானத்தையெல்லாம் சடுதியில் கெடுத்து
மனிதனின் மாட்சிமையை மரணத்தால் அழித்து
விலங்குகளுக்குள்லெல்லாம் விரோதத்தை விதைத்து
இறைவனின் படைப்பை இன்னலால் அழித்து
படைப்புகளையெல்லாம் பாழாக்கி பங்கம் விளைவிக்கும்
பயங்கரப்பேய் என்று ஒழியுமென்று எந்நாளும் ஏங்குகிறேன்!
சிங்கம் மாட்டை போல வைக்கோல் தின்னுமந்த சீரி நாளை சிக்கிரம் காண ஏங்குகிறேன்!
ஆம் அந்த நாள் நிச்சயம் உண்டு, அது மிக சமீபமே!