தமிழ் கிறிஸ்த்தவ தளத்தில் சுத்தர் எழுதிய கவிதை மீள்பதிவு மனமதை திருப்புங்களேன் பரலோக ராஜ்யம் தேடுங்களேன் அட நெஞ்சே நீ கலங்குவதேனோ தினம் நீயும் மயங்குவதேனோ உன் தேவன் அண்டை ஓடிவா அவர் நாமம் நாளும் பாடிவா (மனமதை)
பாவ சேற்றில் நான் விழுந்து பாவம் செய்த நாட்களும் மாயை வாழ்வில் நான் மிதந்து மகிழ்ந்திருந்த நாட்களும் இயேசு தந்த வாழ்வின் முன்னே தூசு போல தோன்றுதே நெஞ்சம் எங்கும் இன்ப வெள்ளம் அணை இல்லாமல் ஓடுதே
அவர் என்னை கண்டார், புது ஜீவன் தந்தார் அவர் அன்பே நாளும் தான் வாழ்வில் நானும் தேடும் பாக்கியம் அது தேவன் தந்த வாக்கியம் (மனமதை)
கண்கள் இரண்டும் இல்லை என்றால் கட்டழகு ஏதம்மா கடவுள் தந்த வாழ்க்கை தானே நமக்கு கிடைத்த ஈவம்மா பாவம் செய்து வாழ்வதெல்லாம் வாழ்க்கை என்று ஆகுமா கோடி பணம் சேர்த்துவைத்தால் மனம் நிறைத்து போகுமா
உன் தேவன் இயேசு அவரோடு பேசு அவர் அன்பே நாளும் தான் வாழ்வின் நானும் தேடும் பாக்கியம் அது தேவன் தந்த வாக்கியம் (மனமதை)