இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பிதாக்களின் அக்கிரமம் பிள்ளைகளிடம் விசாரிக்கப்படுமா?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
பிதாக்களின் அக்கிரமம் பிள்ளைகளிடம் விசாரிக்கப்படுமா?
Permalink  
 


வேதபுத்தகத்தில் ஒரே ஒரு கருத்தை  மாற்றி மாற்றி சொல்வதுபோல் தெரியும்   வசனங்கள் பல இருக்கிறது என்பதை நாம் அறிய வேண்டும. அதேபோல் சில எதிர்மறையான கருத்துக்களை சொல்வதுபோல் தெரியும்  வசனங்கள்கூட  இருக்கிறது. இவற்றின் உண்மை தன்மையை நாம் அறியாவிடில் நாம் தவரான வழிக்கு திருபபடுவது நிச்சயம்.   

உதாரணமாக கீழ்கண்ட வசனத்தை எடுத்துகொள்ளுவோம் 

யாத் 20:5 பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.

இவ்வசனம் பிதாக்கள் செய்யும் அக்கிரமம் பிள்ளைகளை தொடரும் என்பதை வலியுறுத்தும் வசனம்   

இதற்க்கு எதிரான  பிதாக்களின் அக்கிரமம் பிள்ளையை கொல்லாது என்பதை வலியுறுத்தும் வசனம்.  
 
உபா 24:16 பிள்ளைகளுக்காகப் பிதாக்களும், பிதாக்களுக்காகப் பிள்ளைகளும் கொலைசெய்யப்படவேண்டாம்; அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலைசெய்யப்படவேண்டும்.

எரேமியாதீர்க்கதரிசி சொல்லிய பிதாக்களின் அக்கிரமம் பிள்ளைகளை தொடரும் என்று வலியுறுத்தும் வசனம்
 
எரே 32:18  பிதாக்களுடைய அக்கிரமத்தை அவர்களுடைய பின்னடியார் பிள்ளைகளின் மடியிலே சரிக்கட்டுகிறவருமாகிய சேனைகளின் கர்த்தர்,  
 
எசேக்கியேல் சொன்ன பிதாக்களின் அக்கிரமம் பிள்ளைகளை தொடராது என்று குறிப்பிடும் வசனம் 
 
எசே18:௨௦  குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் ராஜாவினுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல்தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்
 
இயேசு கிறிஸ்த்து  சொன்ன பிதாக்களின் அக்கிரமம் சந்ததிகளிடம் கேட்கப்படும் என்பதை வலியுறுத்தும் வசனம்
 
லூக் 11 50. , உலகத்தோற்ற முதற்கொண்டு சிந்தப்பட்ட சகலதீர்க்கதரிசி களுடைய இரத்தப்பழியும் இந்தச் சந்ததியினிடத்தில் கேட்கப்படத்தக்கதாக அப்படிச் செய்வார்கள் என்று சொல்லுகிறது. 51. நிச்சயமாகவே இந்த சந்ததியினிடத்தில் அது கேட்கப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

இப்படி வேத வசனம்  மாறி மாறி வருவதால் கர்த்தர் மாற்றி மாற்றி பேசுகிறார் என்பது பொருளல்ல! வேதத்தில் உள்ள எந்த வசனமும் தன்னில் தானே வல்லமை இல்லாதது அல்ல. அது அது சொல்லப் பட்ட நோக்கத்தை அதுஅது நிறைவேற்றிக்கொண்டேதான் இருக்கும்.  
 
ஏசா 55:10 மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ
11. அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும், அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.

ஆகினும் இது போன்ற வசனங்களின் உண்மை தன்மை என்னவென்பதை ஆண்டவரின் பாதத்தில் அமர்ந்து ஜெபிபதன் மூலமே அறிய முடியும். நாமாக ஒருபுறமாக ஒரு முடிவேடுத்து கொண்டால் அது தவறான ஒரு நிலையில் கொண்டு விட்டுவிடும்.

மேலேக்குறிப்பிட்டுள்ள வசனங்களுக்கு ஏற்ற பதில் சேக்கியேல் 18ம் அதிகாரத்திலேயே உள்ளது.

எசே 18 14. பின்னும், இதோ, அவனுக்கு ஒரு குமாரன் பிறந்து, அவன் தன் தகப்பன்செய்த எல்லாப் பாவங்களையும் கண்டு, தான் அவைகளின்படி செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து,17. சிறுமையானவனுக்கு நோவுண்டாக்காதபடித் தன் கையை விலக்கி, வட்டியும் பொலிசையும் வாங்காமலிருந்து தன் நியாயங்களின்படி செய்து, என் கட்டளைகளில் நடந்தால், அவன் தன் தகப்பனுடைய அக்கிரமத்தினிமித்தம் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான்.
எசே 18:19
இதெப்படி, குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமக்கிறதில்லையா என்று நீங்கள் கேட்டால், குமாரன் நியாயத்தையும் நீதியையும் செய்து, என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ததினால், அவன் பிழைக்கவே பிழைப்பான்.
எசே 18: 21. துன்மார்க்கன் தான் செய்த எல்லாப் பாவங்களையும் விட்டுத் திரும்பி, என் கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை.

பழைய பிரமாணத்தின்படி  இங்கு முக்கியமாக தேவன் ஒரு மனிதனிடம் எதிர்பார்ப்பது  "மனம் திரும்புதல்" மற்றும் "அவரது கற்ப்பனைகளின்படி  நடத்தல்"  என்பதை அறியமுடியும். ஒருவன் என்னதான் பாவம் செய்தவனாக இருந்தாலும் ஒருநாளில் தனது பாவ வாழ்க்கையை நினைத்து வருந்தி, மனம்திரும்பி  தேவனுடய கட்டளைகளின்படி  நடந்தால் அவனது எல்லாவித பாவங்களும் மன்னிக்கப்படும்

அதாவது ஒரு துரோகம் செய்யும் தகப்பனுக்கு மகனாக பிறப்பவன் தேவனை அறிந்து கொண்டு "தன் தகப்பன் செய்தது தவறு நான் அதுபோல் செய்ய மாட்டேன்" என்று  நேர்மையாக நடந்து தேவனின் ஜீவபிரமாணங்கள்படி வாழ்ந்தால் தகப்பனின் அக்கிரமங்கள் மகனை ஒன்றும் செய்யாது.

அதே நேரத்தில் ஒருமகன் தன் தகப்பன் செய்த அக்கிரமத்தை விட்டு விலகாமல் தானும் அதே தீய வழியில் தொடரும்போது தகப்பன் அக்கிரமமும் அவன் அக்கிரமும் சேர்ந்து அவனை பல தலைமுறைவரை  தொடர்ந்து தாக்கும் என்பதாகும்.

அடுத்து புதிய உடன்படிக்கையின்படி:

I யோ 1:7  அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
கொரிர் 5:17
இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டி யாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.

ஒருவன் ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டு மனம்திரும்பும்போது அவருடைய இரத்தம் சகல பாவத்தையும் கழுவிவிடுகிறது. இந்த சகல பாவம் என்பதில் பிதாக்களின் அக்கிரமத்தால் தொடரும் பாவமும் அடங்கி விடுகிறது. மேலும் அவன் கிறிஸ்த்துவுக்குள்  மறுபடி பிறந்து புது சிருஷ்ட்டி ஆவதால்தகப்பனின் எந்த அக்கிரமமும் அவனை தொடர முடியாது.

ஆனால் அவ்வாறு இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்து மனம்திரும்பாமல் வாழ்பவர்களுக்கோகளுக்கோ அவர்களின் தகப்பனின் அக்கிரமம பல தலை முறைகள் அவர்களை  தொடர்ந்து வந்துகொண்டே தான் இருக்கும் என்பதே இதன் பொருள்.

எனவே தேவனால் சொல்லப்பட்ட இரண்டு வசனங்களுமே  இன்றும் நடைமுறையில் இருக்கத்தான் செய்கிறது எதை நாம் தேர்வு செய்துகொள்ள வேண்டும் என்பது நமது கரத்திலேயே இருக்கிறது.

இங்கு யார் அக்கிரமம் என்பது பெரிதல்ல, இறைவனை அறிந்துகொண்டு நல்வழி நடப்பவர் யாராய் இருந்தாலும் அவர்கள் முன் தலைமுறையினர் செய்த அக்கிரமம் அவர்களை ஒன்றும் செய்யாதுதேவனை அறிவதே முக்கியம் ஆகும்.

இப்படி எந்த முரண்பாதான  வசனமானாலும்  அதற்க்கு சரியான விளக்கம் ஆண்டவரிடம் மட்டுமே உண்டு. இந்த வசனங்களை நாம் புரிவதற்கு தேவஞானம் வேண்டும். மனித ஞானத்தால் மனித அறிவால் இதை புரிந்துகொள்ள முடியாது. இறைவன் இப்படி இப்படித்தான் வேதம் தரவேண்டும் என்று அவருக்கு யாரும் கட்டளை இடமுடியாது.  அதுபோல் மிகவும்  தெளிவாக புரிவதற்கு ஏற்றதாக இருப்பது எல்லாம் வேதமாகிவிடவும் முடியாது.

ஒரு உதாரணத்துக்கு:

நமது வீட்டுக்கு வரும் நல்லவர் ஒருவருக்கு  சரியான முகவரியை நாம் எழுதி  கொடுத்தால், அந்த முகவரி பலர் கைமாறும்போது அதைவைத்து தேவையில்லாத திருடன் கூட நமது வீட்டுக்கு வந்துவிடுவான். அதற்க்கு பதில் நமது வீட்டுக்கு வர விரும்புபவருக்கு "நீ இந்த குறிப்பிட்ட இடம் வரை வா,  அங்கிருந்து நான் உன்னை அழைத்துசெல்வேன்" என்று கூறினால் இதுபோன்ற  தேவையற்றவர்கள் வருவதை தவிர்க்கமுடியும்.

இதைதான் இறைவனும்  செய்துள்ளார்.

வேதவசனம் இருபுறமும் பேசுவது! நாம் என்னதான் வேதத்தை ஆராய்ந்து அதன்படி நடந்தாலும்,  ஒரு நிலையில் தேவன் வந்து நமது கரத்தை பற்றி தெளிவுபடுத்தினாலன்றி  உண்மையை உணர்ந்து கொள்வது அரிது. வஞ்சகனும் மோசமானவனும், திருடனும், புறம்சொல்பவனும், பொறாமைக்காரனும், பெருமைக்காரனும் அகங்காரிகளும் தங்கள் தந்திரமான வழியில் காரியங்களை சாதித்து தேவ ராஜயத்துக்குள் நுழைவதை தடுக்கவே தேவன் இதுபோன்ற மாற்று வசனங்களை கொடுத்து "உண்மையை தன்னிடம் வைத்துள்ளார்" என்றே நான் கருதுகிறேன்.

மத்தேயு 7:23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
 

 

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
RE: பிதாக்களின் அக்கிரமம் பிள்ளைகளிடம் விசாரிக்கப்படுமா?
Permalink  
 


"இருபுறமும் கருக்குள்ள"அனேக  வேத வசனங்களின் உண்மை தன்மைகளை தேவனின் பாதத்தில் அமர்ந்தே அறியமுடியும் என்பதை விளக்கும் இந்தகட்டுரை பலருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன்.

தேவன் உண்மையை உணர்த்துவார் என்ற விசுவாசத்தில் தொடர்ந்து வாஞ்சையோடு ஜெபித்தால் அவர் நமக்கு உத்தரவு கொடுத்து தேவ ஞானத்தால் எழுதிகொடுகப்பட்ட  தனது வார்த்தையின் உண்மைகளை நிச்சயம் புரியவைப்பார்.
 
யோ 6:63  நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.
 
இவ்வாறு ஆவியையும் ஜீவனையும் இருக்கும் வசனங்களை ஆவியானவரே விளக்கி போதிக்க முடியும். அவரது துணையை  நிராகரித்து,  "நான் எனக்குள்ள 
மனித ஞானத்தால் மட்டும் ஆராயந்து நானே உண்மையை அறிந்துகொள்கிறேன் எனக்கு அதுபோதும்" என்று ஒருவர் கருதினால் அவர்களிடத்தில் போராடி தேவன் தனது கருத்தை திணிப்பது இல்லை. ஆனால் அவர்கள் உண்மை வழியை அறிவது கடினம்!


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard