உண்மையில் இதற்க்கு முன் இந்த உலகம் எத்தனையோ முறை அழித்து அழிந்து பிறகு உருவாகியிருப்பது என்பது அறிவியாலார் கூறும் உண்மை! ஒருவர் ஒத்துக்கொல்வதாலோ இல்லை என்று மறுப்பதாலோ எதுவும் நடந்துவிடாமல் போய்விடுவது இல்லை. சாகும் வரை ஒருவன் "நான் சாகவே மாட்டேன்" என்று சொல்லிவிட்டு கடைசியில் செத்துவிட்டால் அவரை யார் என்ன கேள்வி கேட்க முடியும்?
நோவா என்ற நீதிமான் வாழ்ந்த காலத்தில் அவன் அழிவு வரப்போகிறது என்று சுமார் நூறு வருடங்கள் பிரசங்கித்தான். ஆனால் எல்லோரும் உண்பதிலும் உடுப்பதிலும் பெண் கொள்வதிலும் பணம் சேர்ப்பதிலும் அக்கறையாய் இருந்தார்களே தவிர அவனின் எச்சரிப்பை சட்டை செய்யவில்லை கடைசியில் ஒருநாள் பெருவெள்ளம் வந்து எல்லோரும் அழிந்து போனார்கள் அது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இயேசு தனது வாக்கியத்தில் குறிப்பிடும்போது கடைசி காலத்திலும் அப்படியே நடக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார் இன்று அதேபோல் நடந்துகொண்டு இருப்பது எல்லோரும் அறிந்ததே!
பைபிள் வார்த்தைகளின்படி மாயன் 2012 உலக அழிவு தீர்க்கதரிசனத்துக்கு சம்பந்தம் இருக்கிறதா என்று பார்த்தால், ஒரு அனுமானத்தின் அடிப்படையில் இருக்கலாம் என்றே பதில் சொல்ல முடியுமேயன்றி, ஆம் என்ற உறுதியான பதில்சொல்ல முடியாது! ஏனெனில் பைபிள் சொன்ன அனேக தீர்க்கதரிசனங்கள் முக்கியமாக இஸ்ரவேல் தேசம் நிர்மாணிக்கபடுத்தல் போன்றவை நிறைவேறி அனேக ஆண்டுகள் ஆகிவிட்டன! இனி முடிவு எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் ஆனால் எந்த ஒரு ஆண்டையும் பற்றி உறுதியாக சொல்லப்படவில்லை!
பைபிள் என்னும் வேத புத்தகத்தில் எசாயா, ஜெரேமியா, எசேக்கியேல், தானியேல் போன்ற பல்வேறு பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் உலக முடிவையும் தேவனின் நியாயதீர்ப்பையும் பற்றி பேசினாலும் முக்கியமாக பாபிலோனில் தொங்கும் தோட்டத்தை அமைத்த நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோனிய ராஜாவின் கீழ் பிரதனியாக பணியாற்றிய தானியேல் என்ற யூத தீரிக்கதரிசிக்குதான் உலகமுடிவு எப்பொழுது என்பது பற்றி பல்வேறு இன்டிகேசன் தேவன் கொடுத்துள்ளார் அதில் முக்கியமானது இயேசு மேற்க்கோள் காட்டிய "பாழாக்கும் அருவருப்பு நிற்கதகாத இடத்தில் நிற்கும்" என்பதுதான்!
இது குறித்து, பரிசுத்த நகரமாகிய ஜெருசலேமில் மசூதி கட்டப்படும் என்பது போன்று பல்வேறு கருத்து கூறப்பட்டாலும் எனது கருத்துப்படி தேவனின் ஆலயம்/சபை என்று சொல்லப்படும் பரிசுத்த இடங்களில் தவறான செயல்கள் நடக்க ஆரம்பிக்கும் என்பதுதான்! எனவேதான் இறைவன் "தேவனின் நியாயதீர்ப்பு முதல் முதலில் தேவனுடய வீட்டிலிருந்தே துவங்கும்" என்றும் "சன்மார்க்கர் துன்மார்க்கள் எல்லோரும் சங்கரிக்கப்படுவார்கள்" என்றும் எசேக்கியேல் தீர்க்கதரிசி மூலம் சொல்லியுள்ளார்.
இன்று சபைகளிலும் ஆலயங்களிலும் பாவங்கள் பெருத்துவிட்டத்தை கண்கூடாட காணமுடிகிறது பாதிரியார்களில் வெறி செயல்களும் ஆயர்களின் அதிகார போட்டிகளையும் REV களின் மோசடிகளையும் அடிக்கடி பத்திரிக்கைகளில் பார்க்க முடிகிறது. ( இந்து வேதமும் உலகில் அநியாயம் பெருகும்போது அவதாரம் எடுத்து அழிக்க போவதாக குறிப்பிட்டுள்ளது)
அதற்குப்பின் சுமார் 400௦ ஆண்டுகளுக்கு பிறகு இயேசு தனது போதனையின் போது தன்னை பற்றிய சுவிசேஷம் சாட்சியாக பூலோகம் எங்கும் அறிவிக்கப்படும் அப்பொழுது முடிவு வரும். என்று குறிப்பிட்டுள்ளார்
அதுபோல் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு சுவிசேஷம் வானொலி, தொலைக்கட்ட்சி, மெஷிநெரி, மற்றும் வலைத்தளங்கள் மூலம் மிக வேகமாக உலகம் முழுவதும் அறிவிக்கப்பட்டு வருவதை அறிய முடியும்!
அடுத்ததாக அதன் பின் சுமார் கி பி 90 ஆண்டு வாக்கில் இயேசு தன சீஷர்களுள் ஒருவரான யோவானுக்கு உலக முடிவுபற்றி கொடுத்த தரிசனங்கள் வெளிப்படுத்திய விசேஷம் என்ற புத்தகத்தில் மிக விரிவாக உள்ளது அதில் மிக முக்கியமானது 666 என்னும் முத்திரை அது பற்றி வேதம் குறிப்பிடுகையில்
16. அது (சாத்தான்) சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், 17. அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது. 18. இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்; அது மனுஷருடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.
இந்த அறுநூற்றறுபத்தாறு. என்று இன்டிகேசனில் குறிப்பிடப்பட்டுள்ள முத்திரை எல்லோர் மேலும் பதிக்கும்படி நிற்பந்திக்கப்படுவார்களாம். இது இல்லாமல் யாரும் பொருகள் வாங்கவோ விற்கவோ முடியாது எனவே எல்லோரும் இதை பெற்றுக்கொள்வர் ஆனால் இப்படி முத்திரை பெற்றவர்கள் அழிவில் இருந்து தப்பிக்க முடியாது என்று இறைவன் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த முத்திரை என்பது உடலில் பதிக்கப்படும் ஒருவித லேசர் கோட், என்றும் கிரிடிட் காட், ஸ்மார்ட் காட் என்பது போன்று பலரால் பலவிதமாக குறிப்பிடப்பட்டாலும் எனக்கு தேவன் தெரிவித்தப்படி இது ஒரு பொருள் அல்ல எல்லோரும் அறியும்படி குத்தப்படும் ஒரு அடையாளமும் அல்ல என்றே நான் கருதுகிறேன்
வேதத்தை நன்றாக ஆராய்ந்து பார்க்கும் போது இந்த "இலக்கம் அறுநூற்றறுபத்தாறு." என்பது பணம் மற்றும் உலக பொருளையே குறிக்கிறது என்பது புலனாகின்றது!
இன்று உலகத்தில் இன்று இறைவனுக்கு இணையாக அல்லது இறைவனுக்கு மேலாக அநேகரால் கருதப்படுவது பணம் தான் இயேசுவும் தன போதனையின் பொது இரண்டு எஜமானுக்கு ஊளியம் செய்ய முடியாது என்று சொல்லும் போது தேவனுக்கும் சாத்தனுக்கும் என்று குறிப்பிடாமல் சாத்தானை "உலக பொருள்" என்று குறிப்பிட்டுள்ளதை நாம் ஆராய்ந்தால் உலக பொருள்மேல் உள்ள பற்றுதான் சாத்தான் என்று உணர்ந்துகொள்ளலாம். எனவே பணம் மற்றும் உலக பொருட்கள்மேல் அதிக பற்றுள்ளவர்கள் மேல் இந்த முத்திரையை ஏற்க்கெனவே குத்த்தப்படடகிவிடடாது எனவே அதுவும் நிறைவேறிவிட்டது என்றே நான் கருதுகிறேன்