இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மனம்திரும்பி பிள்ளைகளைபோல ஆகாவிட்டால்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
மனம்திரும்பி பிள்ளைகளைபோல ஆகாவிட்டால்!
Permalink  
 


நமதாண்டவராகிய இயேசு கிறிஸ்த்து இந்த பூமியில் வாழ்ந்த காலங்களில் அனேக ஜீவ வார்த்தைகளை பேசினார். பேசிய அவரே என் வார்த்தைகள் கடைசி நாளில் நியாயம் தீர்க்கும் (யோ:12:48) எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு வானமும் பூமியும் ஒளிந்து போனாலும் என் வார்த்தை ஒளிந்து போகாது (மத்: 24:35) என்று, வானத்தையும் பூமியையும் விட அவர் வார்த்தை நிலையானது, மேன்மையானது என்பதையும் தெளிவாக விளக்கி சொல்லிவிட்டார்.

ஒருவன் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பதற்கு ஆவியில் எளிமை உள்ளவனாக, இரக்கம் நிறைந்தவனாக, நீதியுள்ளவனாக, உலக பொருட்கள் மேல் பற்றில்லாதவனாக, உண்மை பேசுபவனாக, நாளையை பற்றி கவலைப்படாதவனாக, தனக்குள்ளதை விட்டுகொடுப்பவனாக, தாழ்மயுள்ளவனாக, மனதாலும் பாவம் செய்யாதவனாக இருக்கவேண்டும் போன்ற அனேக காரியங்களை சொல்லி அதற்கெல்லாம் மாதிரியாக நமக்கு வாழ்ந்து காட்டி, என்மேல் அன்பாய் இருப்பவன் என் வார்த்தைகளை கைகொள்வான் என்றும் எடுத்துரைத்தார். அனேக விசுவாசிகள் பாஸ்டர்கள் போன்றோர் அவர் வார்த்தையை கைக்கொண்டு வாழ்ந்து வருகின்றார்கள் என்று ஆண்டவருக்குள் நான் நம்புகிறேன்.
ஆனால், 'யார் பரலோக ராஜ்யம் போக முடியாது' என்பதற்கு, மூன்றே மூன்று வசனங்கள் மட்டும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதிலும் ஒன்றே ஒற்றை மட்டும் கொஞ்சம் ஆழமாக ஆராய்ந்து எழுதியுள்ளேன்.

 
நீங்கள் மனம்திரும்பி பிள்ளைகளை (LITTLE CHILD) போல ஆகாவிட்டால் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் (மத்: 18:3)

நாம் பிள்ளைகளை போல ஆகவேண்டுமென்றால், பிள்ளைகளின் தனிப்பட்ட குணம் என்னவென்பதை நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டும். இல்லையேல் அவர்களைபோல மாறுவது கடினம். மூன்று பிள்ளைகளின் தகப்பன் என்ற முறையில் பிள்ளைகளின் குணம்பற்றி கொஞ்சம் அதிகமாகவே அறிந்து கொண்டேன். அவற்றில் சிலவற்றை சற்று விளக்கி கூறுகிறேன், நம்மை அத்தோடு ஒப்பிட்டு பார்த்து உண்மை அறியலாமே!

குழந்தை நாளைக்காக கவலைப்படாது.
எந்த குழந்தையாவது எதை உடுப்பது, என்ன சாப்பிடுவது, எங்கு விளையாடுவது என்று நினைத்து கவலைப்பட்டுக்கொண்டு இருப்பதை பார்த்திருக்கிறோமா? இருக்கவே முடியாது! பொதுவாக குழந்தைகள் எதைபற்றியும் சிந்தித்து கவலைப்படாது. எல்லாவற்றையும் கவனிக்க நமது பெற்றோர் இருக்கின்றனர் என்ற தைரியத்தில் அது எப்பொழுதும் கவலையற்று இருக்கும்.

அதுபோல் நாமும் நம் தேவைகளைஎல்லாம் ஏற்ற நேரத்தில் கவனிக்க நமது பரமதகப்பன் இருக்கிறார் என்று நிம்மதியாக இருக்கலாமே! நாளைய தேவைக்காக, சொந்த வீட்டுக்காக, மகன் மகள் திருமணத்துக்காக, நல்ல வேலைக்காக, நல்ல வாழ்க்கைக்காக கவலைபட்டு கொண்டு இருக்காமல் ஸ்தோத்திரத்தொடே எல்லா வேண்டுதலையும் அவர் சமூகத்தில் வைத்துவிட்டு குழந்தையை போல கவலயற்றி வாழ முயற்சிக்கலாமே!

குழந்த்தைகள்
தனக்கென்று திட்டம் தீட்டுவது இல்லை!
எந்த குழந்தையும் தனக்கென்று ஒரு திட்டத்தையோ, அலது பட்ஜெட்டயோ தீட்டுவது இல்லை. தாய் தகப்பனின் திட்டமே அவர்களை வழிநடத்தும்! குழந்த்தைகள்தனது ல்லா தேவைக்கும் தனது தாய் தகப்பனையே நோக்கி பார்க்கும்.
அதுபோல் நாமும் நமக்கென்று திட்டங்களை தீட்டாமல், எதிர்காலம் பற்றி வரைபடம் போடாமல், பரம தகப்பனின் வழியில் நம்மை ஒப்புகொடுத்து, அவர் திட்டமே நம்முடைய திட்டமாகவும், அவர் எதிர்ப்பார்ப்பே நம்முடைய எதிர்ப்பாகவும், அவர் சித்தமே நம்முடைய சித்தமாகவும் இந்த பூமியில் ஒரு பரதேசி போலவும் வாழ முயற்சிக்கலாமே!

குழந்தை உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாது!

அதுபோல் நாமும் யாருக்கோ எதற்கோ பயந்துகொண்டு உள்ளத்திலுள்ள காரியங்களை மறக்காமல், நம் சொந்த கருத்தைகூட பிறருக்கு பயந்துகொண்டு நேர்த்தியாக சொல்ல விரும்பாமல், பிரறோடு சேர்ந்து ஒத்த வேஷம் போட முயலாமல். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல், ஒரு குழந்தையை போல, உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்ல முயற்சிக்கலாமே!

குழந்தைக்கு பண ஆசை கிடையாது!
பொதுவாக குழந்தைகளின் ஆசை வட்டம் மிக குறுகியது. ஒரு சில பொருட்கள் வாஙகி கொடுத்தாலே உடனே திருப்தியாகிவிடும். அவைகள் பணத்தையும் உலக பொருட்களையும் நோக்கி ஒடுவதுஇல்லை. இன்று அனேக மனிதர்களை மீள முடியாமல் காட்டி வைத்திருக்கம் பணத்தின் பதிப்பு குழந்தைகளைக்கு தெரியாது எனவே அவைகள் பணத்தை மதித்து அதற்க்காக எந்த தவறையும் செய்ய துணியாது.

அதுபோல் நாமும் நமது ஆசை வட்டத்தை சுருக்கலாமே! தான் இருக்கும் நிலையில் மன ரம்யமாக வாழ தெரியாதவன் எவ்வளவு அதிகமாக கிடைத்தாலும் நிம்மதியாக வாழ முடியாது என்பது எனது கருத்து. நாமும் உலக மக்களைப்போல பணத்தையே மேலாக மதித்து அதை சேர்ப்பதிலேயே குறியாக இருக்காமல், நாம் பணத்தை ஆள்கிறோமா அல்லது பணம் நம்மை ஆள்கிறதா என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்த்து ஒரு குழந்தைகளை போல நம்மை மாற்ற முயலலாமே!

குழந்தை
தான் செய்யும் செயலுக்கு ஆதாயம் தேடாது!
இன்று உலகில் எல்லோரும் தான் செய்யும் செயலுக்கு என்ன ஆதாயம் இருக்கிறது என்று ஆராய்ந்து பார்ப்பதில் மிக கவனமாக இருப்பதை பார்க்க முடியும். கடவுளை கும்பிடுவதில் கூட தனக்கு லாபம் என்ன என்பதை நோக்கமாக கொண்டே ஆண்டவரை தேடி வரும் அநேகரை பார்க்க முடியும். ஆண்டவர் பெயரை சொல்லியே தனது வாழ்க்கையை மேன்படுத்திகொண்ட பலரையும் இன்று உலகில் பார்க்க முடியும். ஆனால் குழந்தைகள் தான் செய்யும் செயலுக்கு ஆதாயம் தேடுவது இல்லை அதுபோல் நாமும் செய்யும் செயலின் பலனை எதிர்பார்க்காமல் அதை ஆண்டவருக்கென்று செய்ய முயரச்சிக்கலாமே!

குழந்தைகள் இருமாப்பாய் இராது!
ஒரு சிறு குழந்தையை எவ்வளவு கண்டித்தாலும் சிறிது நேரத்தில் எல்லாவற்றையும் மறந்துவிடும். கசப்பு, இறுமாப்பு, வஞ்சம், பொறமை, அகங்காரம் போன்ற குணங்களை சிறு பிள்ளைகளிடம் பார்ப்பது அரிது. அதுபோல், நாமும் நமக்கு தீங்கு செய்தவர்களையும் மன்னித்து, நம்மை பற்றி தீமையை பேசியவர்களை ஆசீர்வதித்து, கசப்பு, வைராக்கியம், அகம்பாவம், தற்பெருமை போன்ற சாத்தானின் குணங்களை ஒதுக்கி முடிந்த அளவு எல்லோரோடும் சமாதானமாக வாழ முயற்சிக்கலாமே!

இதனால் உலக மக்களின் மத்தியில் கிறிஸ்த்துவின் நாமம் மிக அதிகமாக மகிமைப்படும் என்பதில் எந்த ஐயமும் இல்லை
சிறு பிள்ளைகள் தங்கள் மனதில் உள்ளதை அப்படியே பெசிவிடுவதை எல்லோரும் பார்க்க முடியும். உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றும் பேசும் மாய்மால பேச்சு குழந்தைகளின்டம் கிடையாது. அப்படி அவைகளுக்கு பேசவும் தெரியாது. இதனால் பெரியவர்கள் அனேக நேரங்களில் பிரச்சனைக்குள்ளாகவும் நேரிடுவதுண்டு. வெள்ளை மனம் கள்ளமில்லாத உள்ளம் குழந்தைகளிடம் உண்டு.

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard