இல்லாத ஒன்றை இல்லை என்று மறைக்க தேவை இல்லை அது இல்லை என்றால் ஆமாம் இல்லை என்று மற்றவர்கள் ஒத்துக்கொள்வார்கள் ஆனால் இருக்கும் ஓன்றை தான் இல்லை என்று சொல்லமுடியும் ஆகையால் இருக்கும் நம் தேவனை இல்லை என்று அவர்கள் சொல்லுகிறார்கள் . அதற்க்கு எத்தனையோ வழிகளை ஆராய்கிறார்கள். ஆனால் தேவன் இருக்கிறார் மனுகுலத்திற்காக தன் ஜீவனையே கொடுத்திருக்கிறார் என்று கூறிக்கொள்ளும் நாம் (நாம் என்றால் ஜீவனுள்ள தேவனை ஆராதிக்கிறவர்கள்) எப்படி நிறுபிக்கப் போகிறோம்?
அதிசயம் அற்ப்புதம் செய்வதன் மூலம் நிரூபிக்கலாம் என்றால் இன்று அனேக பிற மதத்தவர்களும் அதிசய அற்ப்புதம் செய்கிறார்கள்.
பேய்களை விரட்டுவதன் மூலம் நிரூபிக்கலாம் என்றால் கிறிஸ்த்தவர்களை விட முகம்மதியர்கள் நன்றாகவே பேய் விரட்டுகிறார்கள்.
நல்ல நடத்தைகள் மூலம் நிரூபிக்கலாம் என்றால் சில அந்தணர்கள் கிறிஸ்த்தவர்களைவிட நன்னடத்தை உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
பரிசுத்த ஆவியானவர் மூலம் நிரூபிக்கலாம் என்றால் புதியதாக பல வேற்றுமத கூட்டங்கள் பரிசுத்த ஆவி வந்ததுபோலவே ஆடுகிறார்கள் .
மற்றபடி இயேசுவை பிரதிட்ச்சயமாக கொண்டுவந்து யார் முன்னாலும் காட்டுவதற்கு நமக்கு தகுதியில்லை.
இந்நிலையில் சர்வ வல்ல தேவன் தன்னை தானே ஒருவருக்கு "இருக்கிறவராகவே இருக்கிறேன்" என்று சொல்லி நிரூபித்தாலேயன்றி வேறெதுவும் செய்து நம்மால் தேவன் இருக்கிறார் என்று நிரூபிக்க வழியில்லை என்றே கருதுகிறேன்.
ஒருவருக்கொருவர் மிகுந்த அன்போடும் தாழ்மையோடும் இருந்து தேவ அன்பை வெளிக்காடுவதன் மூலம் மட்டுமே தேவன் இருக்கிறார் என்று நிரூபிக்க முடியும் என்று கருதுகிறேன்.
I யோ 4:8அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார்.
கடவுளை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க திருஸ்டான்தபடுத்த திடமான சாட்சிகள் தேவை...
எலியா மோசே தானியல் தாவீது போன்ற பரிசுத்தவான்கள் கர்த்தரை நிரூபித்தவர்கள்..
இவர்கள் திடமான கர்த்தரின் கருவிகள்..
எலியாவை போன்று வானில் இருந்து அக்கினி இறக்கி பிசாசால் காண்பிக்க இயலுமா.. மின்னலை போல் மேலிருந்து விழ தான் முடியும்!! வெளிபடுத்தின விஷேஷதிலும் வானிலிருந்து அக்கினி இறக்குவது போல் போலி அற்புதங்கலையே அவன் வருங்காலங்களிலும் செய்வான்.
மோசேவின் கோல் பார்வோன் முன்பதாக பாம்பானபோது, பார்வோனின் மந்திரவாதிகளின் கோலும் பாம்பானது ஆனால் அப்பாம்புகள் மோசேவின் கோலால் விழுங்கபட்டன.
பாபிலோனிலும் தேவ சித்தம் செய்த தானியேல் பேல் விக்கிரங்களை பொய்யாக்கி கர்த்தரே தேவன் என அற்புத அடையாளங்களிலும்,மிகையான ஞானத்திலும் காண்பித்தார்.
தாவீது கோலியாத்தை வீழ்த்தி சேனைகளின் கர்த்தர் என்ற நாமத்தை பற்றிய பயத்தை பெலிஸ்தியரிடதிலும் ஏற்படுத்தினான்..
பாவிகளின் முன்பாகவும் அக்கிரமக்காரர் முன்பாகவும் தேவனை அறிவியல் பூர்வமாக விளக்க ஆட்கள் தேவை இல்லை.. தேவ கோபத்தின் வேளையில் அவர்களே தேவனை அறிவார்கள்..
ரோமர் 1:20 எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்லஇடமில்லை.
தேவ நாமத்தை குறித்து இன்னும் தெளிவாய் திருச்டாந்த படுத்தி அந்திகிறிஸ்துவின் ஆட்சியை இருள் பிடிக்க செய்ய வருபவர்களும் தேவனால் எழுப்பப்பட்ட இரண்டு சாட்சிகள் தான். இவர்கள் தீர்க்கதரிசிகளான தேவ சாட்சிகள்..
வெளி 11:3 என்னுடைய இரண்டுசாட்சிகளும் இரட்டு வஸ்திரமுடுத்திக்கொண்டிருக்கிறவர்களாய், ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் தீர்க்கதரிசனஞ்சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன்.
4. பூலோகத்தின் ஆண்டவருக்கு முன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு விளக்குத்தண்டுகளும் இவர்களே.
இன்றும் கூட விளம்பரமில்லாமல் சத்ருவின் கோட்டையை இருள் பிடிக்க செய்யும் தேவஊழியர்களை, தேவன் மீதியாய் வைக்காமலில்லை...
தொடரும்...
தேவனுக்கு மகிமை உண்டாகுக...
-- Edited by JOHN12 on Thursday 2nd of August 2012 04:26:02 PM