ஒருநாள் ஒரு பெண்ணின் சகோதரர் அந்த பெண்ணுடன் நடந்து போய்க்கொண்டு இருந்தார் அப்பொழுது ஒரு இடத்தில் கூட்டமாக பலர் சேர்ந்து ஒரு மனிதனை அடித்துக்கொண்டு இருந்தார்கள். உடனே இந்த சகோதரனும் ஏன் எதற்கு என்று கூட சற்றும் விசாரிக்காமல் அவரும் சேர்ந்து அடிக்க ஓடினார்"
அவரை அணுகி அந்த மனிதனை ஏன் அடித்தீர் என்று கேட்டால் "எல்லோரும் அடிக்கிறார்கள் நானும் அடிக்கிறேன்" என்பதே பதில்!
எப்படிபட்ட மனிதர்கள் பார்த்தீர்களா?
"கூட்ட மோகம்" என்றொரு மோகம் இன்றைய நாட்களில் அனேக மனிதனை ஆட்டிப்படைப்பதை பார்க்க முடியும். பலர் ஒரு காரியத்தை செய்வதை பார்த்து அது என்னவென்று அறியாமலே நாமும் அதை செய்ய விரும்பும் மனபக்குவம் எல்லா மனிதர்களுக்குள்ளும் மூழ்கி கிடக்கிறது.
கூட்டம் கூடும் கடையில் பயங்கர கும்பல், ஆளில்லா கடையில் ஆளே வருவது இல்லை! எல்லோரும் ஓடினால் நம்மை அறியாமலே நாமும் சேர்ந்து ஓடும் ஒரு நிலையில் அநேகர் வாழ்கின்றனர் ஆகினும் சில நேரங்களும் அப்படி ஓடுவது தான் நல்லது போலவும் தெரிகிறது. ஏன் எதற்கு என்று கேட்டுக்கொண்டு நின்றால் குண்டு வெடிப்பில் மாட்டிக்கொள்ள நேரிடலாம்!
ஏன்? எதற்கு? என்று கேட்டு முழு உண்மையை அறியாமல் எல்லோரும் செய்கிறார்கள் அதனால் நானும் செய்கிறேன் என்று ஆரம்பித்த பல காரியங்கள் இன்று உலகில் கலாச்ச்சாரமாகவும் மாறியிருக்கிறது
அது ஒரு சரியான செயலா? நண்பர்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கலாமே!
-- Edited by SUNDAR on Wednesday 13th of January 2010 02:06:24 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
"ஏன்? எதற்கு? என்று கேட்டு முழு உண்மையை அறியாமல் எல்லோரும் செய்கிறார்கள் அதனால் நானும் செய்கிறேன் என்று ஆரம்பித்த பல காரியங்கள் இன்று உலகில் கலாச்ச்சாரமாகவும் மாறியிருக்கிறது "
இதே அக்கறையை வேதத்தில் காட்ட சொன்னால் "சொறப அறிவு" உள்ள மனிதர்கள் என்று சொல்லி தட்டி கழித்து விடுகிறீர்களே!!