இந்த கேள்வி கிறிஸ்தவ உலகில் பரவலாக எல்லோராலும் கேட்கபடுகிறது!
வேத புத்தகத்தில் யோபு சன்மார்க்கன் தேவனுக்கு பயந்தவன் என்று தேவனே சாட்சி கொடுக்கிறார் ஆகினும் யோபுவுக்கு கடுமையான வேதனை மற்றும் சோதனை வருகிறது அப்படி இருக்கையில் நல்லவனுக்கு மிகுந்த துன்பம் வரும் எனபது நிச்சயம் நிச்சயம் ஆகிறது. இதை சாக்காக வைத்து துன்பபடுகிரவர்கள் எல்லோரும் தங்கள் செய்த தவறு என்னவென்று ஆராயாமல், யோபுபோல அவர்கள் பெரிய நீதிமானாக இருப்பதாகவும் அதனால் தங்களுக்கு துன்பம் வருவதாகவும் கற்பனை செய்துகொள்கின்றனர்!
எனவே முதலில் யோபுவின் பாடுகளுக்கு காரணம் என்னவென்பதை ஆராய்வது நல்லது என்று கருதுகிறேன்!
யோபுவுக்கு ஏன் துன்பம் என்று பார்க்கும்முன், துன்பம் என்பது எதனால் உலகில் முதல் முதலில் வந்தது என்றும், இன்பமாய் வாழவும் துன்பத்தை விலக்கவும் கர்த்தர் வேதம் மூலம் என்னென்ன வழி சொல்கிறார் என்பதையும் நாம் சற்று கவனிக்க வேண்டும்
ஆதாம் ஏவாள் இருவரும் படைக்கப்பட்ட போது துன்பமற்ற இன்பமான நிலையிலேயே இருந்தனர். எப்பொழுது அவர்கள் தேவனின் வார்த்தையை மீறி பாவம் செய்தார்களோ அன்றுதான் துன்பம் என்பதை அவர்களை அனுபவிக்க நேர்ந்தது.
நன்மை தீமை அறியாத நிலையில் "பழத்தை சாப்பிடாதே" என்று இருந்த ஒரே கட்டளையானது நன்மை தீமை அறிந்தபிறகு பத்து கட்டளை மற்றும் நீதி நியாயங்கள் என்று அனேக கட்டளைகளாக மாறிப்போனது.
நமது மனசாட்சியில் இறைவனின் நீதி நியாயங்கள் எழுதப்பட்டிருந்தபோதிலும் மனசாட்சியை நம்மால் சுலபமாக சமாதானம் செய்துவிட முடியும். எனவே எது நன்மை? ஏது தீமை? எதற்கு தண்டனை உண்டு? எதற்கு தண்டனை இல்லை? என்பது தெரியாமல் மனிதர்கள் எல்லோரும் அவதிப்படட பொழுது, தேவன் தனக்கென்று ஒரு ஜாதியை பிரித்தெடுத்து அவர்களுக்கு மிக தெளிவான பிரமாணங்களை கொடுத்தார். அதில் மிக தெளிவாக எது தவறு எது சரி என்று விளக்கப்பட்டதொடு அதை கைகொண்டு வாழ்ந்தால் துன்பத்தை தவிர்க்க முடியும் என்பதை தேவனே கூறுகிறார்
உபாகமம் 28:1இன்றுநான்உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்.
உபாகமம் 28:14இன்றுநான்உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளை கைக்கொள்ளவும் அவைகளின்படி நடக்கவும் அவைகளுக்குச் செவிகொடுத்துவந்தால், கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய்.
அதே நேரத்தில் அதை கைகொள்ளவில்லை என்றால் தீமை வரும் என்றும் நிச்சயமாக எச்சரித்துள்ளார்!
உபாகமம் 28:15இன்றுநான்உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்திற்குச் செவிகொடாதேபோவாயாகில், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து, உனக்குப் பலிக்கும்.
என்றி சொல்லை அதற்க்கு சாட்சியாக வானத்தையும் கூறுகிறார்
உபாகமம் 30:19நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சிவைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு,
இது இஸ்ரவேலருக்காக மட்டும் கொடுக்கப்பட்டது அல்ல அது எல்லோருக்கும் பொருந்தும் என்பதை கீழ்க்கண்ட வசனம் சொல்கிறேது!
எசேக்கியேல் 20:21 என் கட்டளைகளின்படியே மனுஷன் செய்தால் அவைகளால் பிழைப்பானே;
என்னை பொறுத்தவரை இந்த உலகின் நியதி என்ன? எதை செய்தால் எது கிடைக்கும்? எதை செய்தால் தண்டனை கிடைக்கும் என்பதை வரி விடாமல் தேவன் மனிதனுக்கு விளக்கி கொடுத்துவிட்டார். அதற்க்கு மீறி ஒரு வார்த்தை இல்லை. ஆனால் பவுல் சொல்வதை தவறாக புரிந்துகொண்ட கிறிஸ்த்தவர்கள் தேவனின் வார்த்தைகளை அன்னியமாக எண்ணுவதால்தான் இன்று கிறிஸ்த்தவர், இஸ்லாமியர், இந்து என்று பாகுபாடு இல்லாமல் எல்லோருக்கும் துன்பம் வருகிறது. நியாயபிரமாண சாபத்திலிருந்து இயேசு கிறிஸ்த்தவர்கள் எல்லோரையும் விடுவித்துவிட்டார் என்றால், நியாயபிரமாணம் சொல்லும் சாபமாகிய ஈளையும் காய்ச்சலும் கிறிஸ்த்தவர்களுக்கு ஏன் வருகிறது என்று தெரியவில்லை!
நியாயபிரமாணம் கொடுக்கப்படும் முன் மனிதர்கள் அடைந்த துன்பங்கள் எல்லாவற்றிகும் காரணம், "நியாயம்" "அநியாயம்" என்னவென்பதை அறியாமல் அவர்கள் செய்த பாவங்களே!
யோபு உத்தமன்தான் சன்மார்க்கந்தான் ஆனால் சன்மார்க்கம் என்பது வேறு, தேவனின் பிரமாணத்தின்படி நடப்பதென்பது வேறு. இவ்வகையில் யோபுவை பிசாசு தேவனின் அனுமதியுடன் சோதித்திருந்தாலும், ஒருவன் (சன்மார்க்கமாக அல்ல) தேவனின் கட்டளைப்படி சரியாக நடந்தால் எந்த சாத்தானும் நெருங்க முடியாது என்பதை என்னால் அறுதியிட்டு சொல்ல முடியும்! காரணம் அவரே தனது கட்டளையை கைகொள்பவன் ஆச்சீர்வதிக்கப்பட்வான் என்று சொன்ன பிறகு அவர் வார்த்தையை அவரால் பாதுகாக்க முடியும் எனவே அவர் சாத்தானை நம்மிடம் நெருங்க விடமாட்டார் என்று நான் நம்புகிறேன்!
யோபுவை பொறுத்தவரை அது நியாயபிரமாணத்தை அறியாத காலத்தல் நடந்த நிகழ்ச்சி! எனவே தேவனின் கட்டளைகளை அவன் சரியாக கைகொண்டிருக்க வாய்ப்பில்லாததால் தண்டனையை அனுபவிக்க நேர்ந்தது என்றே நான் கருதுகிறேன்!
கர்த்தரின் வசனத்தின் அடிப்படையிலேயே உலகில் எல்லாம் நடப்பதால் அவரின் வசனங்ககளை கைகொண்டு நடப்போருக்கு எத்துன்பமும் இல்லை! அதற்க்கு நான் அல்ல கர்த்தரே வேதத்தில் கேரண்டி கொடுத்துள்ளார்!
எனவே யோபுவின் துன்பத்துக்கு அவன்தான் போருப்பேயன்றி தேவன் அல்ல!
-- Edited by இறைநேசன் on Friday 22nd of January 2010 10:33:36 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
sundar wrote: //யோபுவை பொறுத்தவரை அது நியாயபிரமாணத்தை அறியாத காலத்தல் நடந்த நிகழ்ச்சி! எனவே தேவனின் கட்டளைகளை அவன் சரியாக கைகொண்டிருக்க வாய்ப்பில்லாததால் தண்டனையை அனுபவிக்க நேர்ந்தது என்றே நான் கருதுகிறேன்!//
தேவனின் கட்டளைகளை யோபு சரியாகக் கைக்கொண்டிருக்க வாய்ப்பில்லை என்கிறீர்கள். நல்லது சகோதரரே! யோபு கைக்கொண்டிருக்கமாட்டார் என நீங்கள் கருதக்கூடிய ஏதேனும் ஒரு தேவகட்டளையை கூறும்படி வேண்டுகிறேன்.
sundar wrote: //யோபுவை பொறுத்தவரை அது நியாயபிரமாணத்தை அறியாத காலத்தல் நடந்த நிகழ்ச்சி! எனவே தேவனின் கட்டளைகளை அவன் சரியாக கைகொண்டிருக்க வாய்ப்பில்லாததால் தண்டனையை அனுபவிக்க நேர்ந்தது என்றே நான் கருதுகிறேன்!//
தேவனின் கட்டளைகளை யோபு சரியாகக் கைக்கொண்டிருக்க வாய்ப்பில்லை என்கிறீர்கள். நல்லது சகோதரரே! யோபு கைக்கொண்டிருக்கமாட்டார் என நீங்கள் கருதக்கூடிய ஏதேனும் ஒரு தேவகட்டளையை கூறும்படி வேண்டுகிறேன்.
யோபு 31ம் அதிகாரத்தை படித்தல் அவன் மிகுந்த சன்மார்க்கன் என்பதை அறிய முடிகிறது
அதே நேரத்தில்
1:5. விருந்துசெய்கிற அவரவருடைய நாள்முறை முடிகிறபோது, யோபு: ஒருவேளை என் குமாரர் பாவஞ்செய்து தேவனைத் தங்கள் இருதயத்திலே தூஷித்திருப்பார்கள் என்று சொல்லி, அவர்களை அழைத்தனுப்பி, பரிசுத்தப்படுத்தி, அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படியேயும் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவான்; இந்தப்பிரகாரமாக அந்நாட்களிலெல்லாம் செய்துவருவான். என்ற வசனம் பலிகளை செலுத்துவதில் அவன் தவறவில்லை என்பதையும் குறிப்பிடுகிறது.
ஆகினும் அவன் ஓய்வு நாளை ஆசாரித்தல் மற்றும் தசமபாகம் செலுத்துதல் போன்ற கட்டளைகளை கைகொண்டதர்க்காக எந்த ஆதாரமும் இல்லை!
கர்த்தர் யோபுவைபற்றி குறிப்பிடும்போது:
1:8. கர்த்தர் சாத்தானை நோக்கி: என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார்.
உத்தமன் சன்மார்க்கன் தேவனுக்கு பயப்படுபவன் என்றுதான் குரிப்பிடுகிராறேயனற்றி, என் வார்த்தையின்படி வாழ்பவன் என்றோ எனது கற்பனைகளை சரியாக கைகொள்பவன் என்றோ குறிப்பிடவில்லை.
எனவே அவன் ஓய்வு நாளை ஆசாரித்தல் மற்றும் தசமபாகம் செலுத்துதல் போன்ற கட்டளைகளை கடைபிடிக்காமல் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது!
ஏனெனில் அந்நாட்களில் நியா யபிரமானம கொடுக்கப்பட்டிருக்கவில்லை என்றே நான் கருதுகிறேன்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம் என 1 யோவான் 3:4 கூறுகிறது. அதாவது, ஏற்கனவே கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தை மீறுவதுதான் பாவம். நியாயப்பிரமாணம் இல்லாவிட்டால் மீறுதலுமில்லை என ரோமர் 4:15-ல் பவுல் கூறுகிறார். எனவே நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டபின்னர்தான், ஒருவன் அதை மீறுகிறானா இல்லையா என்பதைச் சொல்லமுடியும்.
ஆயினும், நியாயப்பிரமாணம் இல்லாமலேயே, ஒருவன் நியாயப்பிரமாணத்துக்கேற்ற நீதிகளைச் செய்யமுடியும் என்பதற்கு ரோமர் 2:14 ஆதாரமாயிருக்கிறது. அதாவது ரோமர் 2:15 கூறுகிறபடி, ஒருவன் தன் மனச்சாட்சியின் மூலமாகவே எது குற்றம் எது குற்றமில்லை என்பதை தீர்மானித்து அதன்படி நடக்கமுடியும். அந்த மனச்சாட்சிப்படிதான் யோபுவும் நடந்து, தேவனுக்கு முன்பாக உத்தமனாகவும் சன்மார்க்கனாகவும் காணப்பட்டார்.
ஓய்வுநாள் கட்டளை, தசமபாகக் கட்டளை போன்றவையெல்லாம், நீதி நியாயத்திற்கடுத்த கட்டளைகள் எனக் கூறமுடியாது. அவையெல்லாம் குறிப்பிட்ட சில நோக்கத்திற்காக தேவனால் கற்பிக்கப்பட்ட கட்டளைகளைகள். அவற்றைக்குறித்த அறிவு, மனச்சாட்சிப்படி தோன்றுவதற்கு சற்றும் வாய்ப்பு கிடையாது. எனவே, அக்கட்டளைகள் கொடுக்கப்படாத காலத்தில், ஒருவன் ஓய்வுநாளை ஆசரிக்கவில்லை என்றோ தசமபாகம் கொடுக்கவில்லையென்றோ சொல்லி, அவனை எப்படி தேவன் குற்றவாளியாகத் தீர்ப்பார்? அப்படி அவர் தீர்த்தால் அது ஓர் அதீதியாக அல்லவா இருக்கும்?
ஒருவன் மாடிவீடு கட்டினால், மாடியிலிருந்து யாரும் விழுந்துவிடாதாபடி கைப்பிடிச்சுவரையும் கட்டவேண்டும் என உபாகமம் 22:8-ல் தேவன் கட்டளையிட்டுள்ளார். இக்கட்டளையின் பின்னே உள்ள நீதியை ஒருவன் தன் மனச்சாட்டியின் மூலமாகவே அறிந்து கொள்ளமுடியும். அதாவது, மாடிவீட்டிற்கு கைப்பிடிச்சுவர் கட்டாவிடில், மாடியிலிருந்து யாராவது தவறிகீழேவிழுந்து தன்னை இரத்தப்பழிக்கு ஆளாக்க நேரிடும் என்பதை ஒருவன் தானாகவே அறியமுடியும். எனவே இவ்வித நீதி நியாயங்கள் நியாயப்பிரமாணத்தில் கொடுக்கப்படுவதற்கு முன்பாகவே, தன் மனச்சாட்சி மூலம் ஒருவன் அவற்றை அறிந்து செயல்படுத்த முடியும்.
ஆனால், ஓய்வுநாள் ஆசரிப்பதைக்குறித்து, ஒருவன் தன் மனச்சாட்சியின் மூலம் அறிய சற்றும் வாய்ப்பில்லையே! தசமபாகம் கொடுத்தல் பற்றி ஒருவன் தன் மனச்சாட்சியின் மூலம் அறிய சற்றும் வாய்ப்பில்லையே! எனவே, ஓய்வுநாளை ஆசரித்தல், தசமபாகம் கொடுத்தால் போன்றவற்றைச் செய்யாததற்காக யோவுவைக் குற்றவாளி என தேவன் நிச்சயமாகத் தீர்த்திருக்கமாட்டார்.
யோபு உத்தமனும் சன்மார்க்கனும் தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான் என தேவன் சொன்னது சொன்னதுதான். அக்கூற்றின்படி தேவனுக்கு முன்பாக யோபு எந்தக் குற்றமும் இல்லாதவராகத்தான் இருந்தார். மீகா 6:8-ன்படி, நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதைத்தான் மனிதனிடமிருந்து தேவன் எதிர்பார்க்கிறார். தேவனின் இந்த எதிர்பார்ப்புக்கேற்றவாறுதான் யோபு வாழ்ந்தார். ஏசாயா 58:6-8 வசனங்களில் கூறப்பட்டுள்ள தேவனுக்கு உகந்த உபவாசத்தை யோபு நிச்சயமாகச் செய்தார்.
எனவே சகோ.சுந்தர் கூறுகிறபடி, தேவனின் தண்டனைக்கு ஆளாகக்கூடிய ஏதேனும் செயலை யோபு செய்திருப்பார் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம்.
சகோதரர் அன்பு அவர்களே! நமது அறிவை வைத்து ஆராய்து தேவன் இதற்காகத்தான் இந்த கட்டளையை கொடுத்துள்ளார் என்று தீர்மானிப்பது சற்றும் சரியானதல்ல என்றே நான் கருதுகிறேன்!
நமது பார்வைக்கு ஒரு கட்டளை கொடுப்பப்பட்டதன் காரணம் ஒருவிதமாக தோன்றலாம் ஆனால் தேவன் அந்த கட்டளையை கொடுக்க காரணம் என்ன என்பது தேவனுக்கே தெரியும் எனவே கேள்வி கேட்காமல் கீழ்படிவதுதான் நலமானது.
உதாரணமாக ஓய்வுநாளை ஆசாரிப்பது மனிதனுக்கு ஓய்வு கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தான் கொடுக்கப்பட்டது என்பது நமது அறிவுக்கு எட்டியது ஆனால் தேவன் என்ன சொல்கிறார் பாருங்கள்
எசேக்கியேல் 20:12நான் தங்களைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர்என்று அவர்கள் அறியும்படிக்கு, எனக்கும் அவர்களுக்கும் அடையாளமாய் இருப்பதற்கான என்ஓய்வுநாட்களையும் அவர்களுக்குக் கட்டளையிட்டேன்.
தங்களை பரிசுத்தம் பண்ணுகிறவர் கர்த்தர் என்று அறியும்படிக்கு அடையாளமாக ஓய்வுநாளை கட்டளையிட்டேன் என்றுதான் கூறுகிறார். தேவன் சொன்ன கட்டளைகளுக்கு சாதாரணமாக ஒரு அருத்தம் இருந்தாலும் அதற்க்கு அடிப்படை காரணம் வேறு என்றே நான் கருதுகிறேன் அதனால்தான் அவர் சொல்லும் வார்த்தை கைகொள்ளப்படாத போது அவர்கடும்கொபம் கொள்கிறார்.
மற்றபடி கர்த்தர் பெட்டியை மாட்டு வண்டியில் கொண்டுவந்தது என்ன பெரிய குற்றமா? அதற்க்கு ஏன் ஊசாவை அடித்து கொல்லவேண்டும்
மோசே கன்மலையை அடித்தது பெரிய குற்றமா? அதற்காக ஏன் கானானில் பிரவேசிக்காமல் சாகவேண்டும்?
இவற்றிக்கெல்லாம் அடிப்படை காரணம் வேறு உண்டு! அது ஒரு வேளை நமக்கு தெரியாமல் இருக்கலாம். அப்படிப்பட்ட நேரங்களில் ஓன்று அவரிடம் அமர்ந்து விசாரிக்க வேண்டும் அல்லது கண்ணை மூடிக்கொண்டு அவர் சொன்னவற்றை கைகொள்ள வேண்டும் என்பதே எனது கருத்து! நமக்காக ஜீவனையே கொடுக்க தனது குமாரனை அர்ப்பணித்த தேவன் தேவையில்லாத கஷ்டமான கட்டளைகளை கைகொள்ள சொல்லி நம்மை நிர்பந்திக்கமாட்டார் என்பதே எனது விசுவாசம்.
இரண்டாவதாக.
யோபுவைபற்றி நான் தியானிப்பது அவனுக்கு துன்பங்கள் ஏன் என்பதற்காகத்தான் மற்றபடி அவன் நல்லவனா தீயவனா என்பதற்காக அல்ல!
கர்த்தருக்கு நிலத்தின் பலன்களை காணிக்கையாக கொண்டுபோன காயீனுக்கு அது கர்த்தருக்கு ஏற்றதல்ல என்பது சொல்லப்படவில்லை அல்லது அவன் அறியவில்லை அல்லது அவனின் செயலில் தவறு இருப்பதுபோல் நமது கண்களுக்கு புலப்படவில்லை ஆயினும் தேவன் அவன் காணிக்கையை அங்கீகரிக்கவில்லை எனவே அவர் நீதியற்றவர் ஆகிவிடாது.
எப்பொழுது ஆதாம் பழத்தை பறித்து புசித்தானோ அப்பொழுதே ஒரே கட்டளை அனேக கட்டளையாக மாறிப்போனது. அவை எவை எவை என்று எழுதி கொடுக்கப்பட்டது வேண்டுமானால் தாமதமாக இருக்கலாம் ஆனால் அது நன்மை தீமை அறிந்த நாளில் இருந்தே வெலை செய்ய ஆரம்பித்தது.
இரண்டு ஆண்கள் விருப்பபட்டு ஆண்புனர்ச்சி காரர்களாக இருப்பதால் யாருக்கும் எந்த நட்டமும் இல்லை ஆனால் அது தேவனின் பார்வையில் பெரிய பாவமாக கருதப்பட்டு சோதோம் கொமரா அழிய காரணமானது. அவர்களுக்கு அது பாவம் என்று சொல்லப்பட்டதாக எங்கும் வசனம் இல்லை ஆனால் அது தவறு என்று நியயபிரமானத்தில்தான் கூறப்பட்டுள்ளது.
அதுபோல் எவை எவை பாவம் என்பதை நியாயபிரமாணம் சொன்னாலும் அவைகள் சொல்லப்படுவதற்கு முன்பும்கூட அவைகள் பாவமாகத்தான் இருந்தன. அவற்றை தேவனுடன் சரியான தொடர்பு வைத்திருப்பதன் மூலம் மட்டுமே எவை பாவம் என்பதி சரியாக அறியமுடியும்.
கர்த்தரை அறிந்திருந்த சன்மார்க்கனாக வாழ விளைந்த யோபு ஒரு ஆபிரகாம் போல தேவனுடன் சரியான தொடர்பு ஐக்கியம் வைத்திருந்தான் என்று எங்கும் சொல்லப்படவில்லை. அதனால் துன்பத்துக்கு காரணமாகும் சில கட்டளைகளை அறியமுடியாமல் போனது என்று கருதமுடியும்.
மற்றபடி வேத கருத்துப்படி
ஒரு சிறிய துன்பம் வருவதற்கும் காரணம் தேவனின் ஒரு சிறிய கட்டளையை மீறுவதே என்றே நான் கருதுகிறேன் தேவனின் கட்டளைகளின் படி சரியாக நடப்பவனுக்கு துன்பம் வராது என்பதை தேவன்தானே தனது வசனம் மூலம் கேரண்டி கொடுக்கிறார் அதன் அடிப்படையில்தான் நான் இவற்றை எழுதுகிறேன். உலகில் உள்ள அனேக மனிதர்களே தாங்கள் கொடுத்த கேரண்டியை நிறைவேற்றும்போது தேவன் தான் கொடுத்த கேரண்டியை நிறைவேற்ற முடியாதவர் அல்ல! அதற்க்கு மிஞ்சி ஒரு துன்பமும் வருவதும் அல்ல!
பிலேயாமை சபிக்க அழைத்த போது அவன் பாலாக்கிடம் இவர்களை ஒன்றுமே செய்ய முடியாது என்று கூறிவிட்டான் ஆனாலும் அவர்களை தேவனின் வார்த்தைகளை மீறவைத்து பாவம் செய்ய வைப்பதுதான் அவர்களை தண்டனைக்குட்படுத்த ஒரே வழி என்று அறிந்துகொண்டு செயல்பட்டதையும் அறியமுடியும்.
ரோமர் 2:12 எவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் கெட்டுப்போவார்கள்
என்ற வசனப்படி நியாயபிரமாணம் இல்லாமல் பாவம் செய்தவர்களும் கெட்டுத்தான் போவார்கள் என்றே கருதுகிறேன்!
-- Edited by SUNDAR on Friday 15th of January 2010 02:13:45 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
sundar wrote: //நமது அறிவை வைத்து ஆராய்து தேவன் இதற்காகத்தான் இந்த கட்டளையை கொடுத்துள்ளார் என்று தீர்மானிப்பது சற்றும் சரியானதல்ல என்றே நான் கருதுகிறேன்!//
சகோ.சுந்தர் அவர்களே! நம் விவாதம்: தேவன் ஒரு கட்டளையை ஏன் கொடுத்தார் என்பதைத் தீர்மானிப்பது பற்றியல்ல. ஒருவன் தேவனுடைய கட்டளைப்படி நடக்கவேண்டுமெனில், 1. அக்கட்டளையை அவன் அறிந்திருக்க வேண்டும், அல்லது 2. அவனது மனச்சாட்சியின் மூலமாவது அக்கட்டளை குறித்து அறியும் வாய்ப்பு இருக்கவேண்டும். ஆனால், ஓய்வுநாள் ஆசரித்தல், தசமபாகம் கொடுத்தல் ஆகியவை பற்றிய கட்டளைகளை யோபு அறியவுமில்லை, அவரது மனச்சாட்சியின் மூலம் அவற்றை அறியக்கூடிய வாய்ப்பும் இல்லை. அவர் அறியாததும் தேவனால் சொல்லப்படாததுமான கட்டளைக்கு அவர் எப்படி கீழ்ப்பட்டிய முடியும்?
அரசாங்கம் ஒரு சட்டம் போடுகிறதென்றால், அச்சட்டத்தைப் போட்டபின்புதானே ஜனங்கள் அதன்படி நடப்பதைப்பற்றி பேசமுடியும்! ஒரு சட்டம் போடுவதற்கு முன்பாகவே அதன்படி ஜனங்கள் நடந்திருக்க வேண்டும் என எப்படிச் சொல்லமுடியும்?
சமீபத்தில், பொது இடத்தில் புகை பிடிக்கக்கூடாது என அரசாங்கம் சட்டம் போட்டதை அறிவோம். சமீபத்தில் போட்ட இச்சட்டத்திற்கு, 1980-வருடம் ஒருவர் கீழ்ப்படியவில்லை எனச் சொல்லி அவர்மீது நடவடிக்கை எடுக்கமுடியுமா? அதற்காக அவரைத் தண்டிக்கமுடியுமா?
அதுபோலத்தான் நியாயப்பிரமாணச் சட்டங்கள் கூறப்படாத காலத்தில் வாழ்ந்த யோபு, நியாயப்பிரமாணத்தின்படி நடக்கவில்லை என்று சொல்லி, அவருக்கு எப்படி தண்டனை கொடுக்கமுடியும்?
ஒரு கட்டளை கொடுக்கப்பட்ட பின்னர்தானே, அதற்குக் கீழ்ப்படிவதைப் பற்றி பேசமுடியும்?
தேவகட்டளை கொடுக்கப்படாத காலத்தில், அதாவது நியாயப்பிரமாணம் கொடுக்கப்படாத காலத்தில் வாழ்ந்த யோபு, தன் மனச்சாட்சி கூறுகிற நீதி நியாயங்களை மட்டுந்தான் செய்யமுடியுமேயன்றி, பின்னாளில் தேவன் கொடுக்கப்போகிற கட்டளைகளின்படி எவ்வாறு நடக்கமுடியும்?
sundar wrote: //கர்த்தரின் பெட்டியை மாட்டு வண்டியில் கொண்டுவந்தது என்ன பெரிய குற்றமா? அதற்க்கு ஏன் ஊசாவை அடித்து கொல்லவேண்டும் மோசே கன்மலையை அடித்தது பெரிய குற்றமா? அதற்காக ஏன் கானானில் பிரவேசிக்காமல் சாகவேண்டும்?//
இவ்விரு செயல்களும், தேவகட்டளையை மீறின செயல்கள்தான். கர்த்தரின் பெட்டியை லேவியர்கள் சுமந்து செல்லவேண்டுமென்பதே தேவகட்டளை. இதற்கு மாறாக, மாட்டு வண்டியில் பெட்டியைக் கொண்டு சென்றால் அது குற்றம்தான். கன்மலையிடம் பேசு என தேவன் சொல்லியிருக்கும்போது, கன்மலையை அடித்தால் அதுவும் தேவகட்டளையை மீறின செயல்தான்.
sundar wrote: //கர்த்தரின் பெட்டியை மாட்டு வண்டியில் கொண்டுவந்தது என்ன பெரிய குற்றமா? அதற்க்கு ஏன் ஊசாவை அடித்து கொல்லவேண்டும் மோசே கன்மலையை அடித்தது பெரிய குற்றமா? அதற்காக ஏன் கானானில் பிரவேசிக்காமல் சாகவேண்டும்?
இவற்றிக்கெல்லாம் அடிப்படை காரணம் வேறு உண்டு! அது ஒரு வேளை நமக்கு தெரியாமல் இருக்கலாம். அப்படிப்பட்ட நேரங்களில் ஓன்று அவரிடம் அமர்ந்து விசாரிக்க வேண்டும் அல்லது கண்ணை மூடிக்கொண்டு அவர் சொன்னவற்றை கைகொள்ள வேண்டும் என்பதே எனது கருத்து! நமக்காக ஜீவனையே கொடுக்க தனது குமாரனை அர்ப்பணித்த தேவன் தேவையில்லாத கஷ்டமான கட்டளைகளை கைகொள்ள சொல்லி நம்மை நிர்பந்திக்கமாட்டார் என்பதே எனது விசுவாசம்.//
இந்த வாதத்திற்கும், ஓய்வுநாளை ஆசரித்தல் தசமபாகம் கொடுத்தல் ஆகியவற்றை யோபு செய்யாததற்கும் என்ன சம்பந்தம் சகோ.சுந்தர் அவர்களே? இக்கட்டளைகள் கொடுக்கப்படாத காலத்தில் வாழ்ந்த யோபு, அவற்றின்படி எவ்வாறு நடக்க முடியும் என்பதே என் கேள்வி.
sundar wrote: //கர்த்தருக்கு நிலத்தின் பலன்களை காணிக்கையாக கொண்டுபோன காயீனுக்கு அது கர்த்தருக்கு ஏற்றதல்ல என்பது சொல்லப்படவில்லை அல்லது அவன் அறியவில்லை அல்லது அவனின் செயலில் தவறு இருப்பதுபோல் நமது கண்களுக்கு புலப்படவில்லை ஆயினும் தேவன் அவன் காணிக்கையை அங்கீகரிக்கவில்லை எனவே அவர் நீதியற்றவர் ஆகிவிடாது.//
காயீனின் பலியை தேவன் ஏன் அங்கீகரிக்கவில்லை என்பதற்கான காரணத்தை பின்வரும் வசனங்களில் தேவன் தெளிவாகக் கூறுகிறார்.
ஆதியாகமம் 4:6,7 அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது? நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார்.
நன்மை தீமை அறியத்தக்க அறிவைப் பெற்றிருந்த காயீன், நன்மையைச் செய்யவில்லை. அதனால்தான் அவனது காணிக்கை அங்கீகரிக்கப்படுகிற மேன்மையை அவன் பெறவில்லை.
காணிக்கை கொடுப்பதும் பலியிடுவதும் பெரிதல்ல, நன்மை செய்வதுதான் முக்கியம் என்பதை காயீனும் அறியவில்லை; இந்நாட்களில் நம்மில் பலரும் அறியவில்லை.
sundar wrote: //இரண்டு ஆண்கள் விருப்பபட்டு ஆண்புனர்ச்சி காரர்களாக இருப்பதால் யாருக்கும் எந்த நட்டமும் இல்லை ஆனால் அது தேவனின் பார்வையில் பெரிய பாவமாக கருதப்பட்டு சோதோம் கொமரா அழிய காரணமானது. அவர்களுக்கு அது பாவம் என்று சொல்லப்பட்டதாக எங்கும் வசனம் இல்லை ஆனால் அது தவறு என்று நியயபிரமானத்தில்தான் கூறப்பட்டுள்ளது.//
ஆம், ஆண்புணர்ச்சி பாவம் என லோத்துவுக்குந்தான் சொல்லப்படவில்லை. ஆனால் அது ஓர் அக்கிரமம் என்பது (ஆதி. 19:7) அவருக்கு மட்டும் எப்படி தெரிந்தது? லோத்துவின் மனச்சாட்சியால் ஆண்புணர்ச்சி ஓர் அக்கிரமம் என்பதை அறிய முடிந்தது. ஏனெனில் அவர் ஒரு நீதிமான். ஆனால் சோதொம் பட்டணத்தாரின் மனச்சாட்சியால் ஆண்புணர்ச்சி அக்கிரம் என்பதை அறியமுடியவில்லை. ஏனெனில் அவர்கள் அக்கிரமக்காரர். ஆண்புணர்ச்சி மட்டும் அவர்களின் அக்கிரமமல்ல. பின்வரும் வசனத்தைப் படியுங்கள்.
எசேக்கியேல் 16:49 இதோ, கெர்வமும், ஆகாரத் திரட்சியும், நிர்விசாரமான சாங்கோபாங்கமுமாகிய இவைகளே உன் சகோதரியான சோதோமின் அக்கிரமம்; இவைகளே அவளிடத்திலும் அவள் குமாரத்திகளிடத்திலும் இருந்தன; சிறுமையும் எளிமையுமானவனுடைய கையை அவள் பலப்படுத்தவில்லை.
தேவன் சொல்கிற இந்த அக்கிரமங்கள் எல்லாம் மனச்சாட்சியால் அறியப்படக்கூடியவைகளே. ஆனால் அதை சோதோமியரும் அறியவில்லை, இந்நாட்களில் நம்மில் பலரும் அறியவில்லை.
துன்மார்க்கருக்கு மட்டுந்தான் துன்பம் வரும் என்கிறீர்கள். ஆனால் நீதிமான்களுக்கு வரும் துன்பம் அநேகமாயிருக்கும் என்றல்லவா சங்கீதம் சங்கீதம் 34:19 கூறுகிறது?
தமது மெய்யான தாசர்கள் நன்மையைப் பெறுகிற காலங்களில் மட்டுமின்றி, துன்பங்களைப் பெறுகிற காலங்களிலும் உத்தமர்களாக இருப்பார்கள் என்பதை சாத்தானுக்கு உணர்த்துவதற்காக, அவர்களுக்கு அநேக துன்பங்களை தேவன் அனுமதிக்கக்கூடும் என்பதே உண்மை. இதன்படிதான் நீதிமானாகிய யோபுவுக்கும் துன்பங்கள் நேர்ந்தன.
உண்மையில், யோபுவின் துன்பங்களுக்குக் காரணம் சாத்தான் என்றுதான் சொல்லவேண்டும். யோபுவுக்கு துன்பங்களைக் கொடுத்தால் அவர் வீழ்ந்துவிடுவார் என சாத்தான் நினைத்தான். சாத்தானின் இந்த எண்ணத்திற்கு அப்பாற்பட்டவனாக யோபு விளங்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் யோபுவைத் துன்பத்திற்குள்ளாக்கும்படிக்கு தேவன் சாத்தானுக்கு அனுமதியளித்தார்.
ஆனாலும் இறுதியில் என்ன நடந்தது என்பதை நாம் அறிவோமல்லவா? ஆம், பின்வரும் வசனங்கள் கூறுகிறபடியே யோபுவுக்கு நிகழ்ந்தது.
சங்கீதம் 34:19 நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார். ரோமர் 8:28 அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
நம்மைப் பொறுத்தவரை, யோபுவைப்போல் இம்மையிலேயே நம் துன்பங்கள் நீக்கப்பட்டு ஆசீர்வாதங்கள் கிடைத்துவிடும் என நினைக்கக்கூடாது. நம் மரணபரியந்தம் நாம் துன்பங்களை அனுபவிக்கக்கூடுந்தான். ஆனால், இத்துன்பங்கள் யாவும் மறுமையில் நமக்கு நிச்சயமாக நன்மைகளைக் கொண்டுவரும் என்பதே உண்மை.
/////சட்டங்கள் கூறப்படாத காலத்தில் வாழ்ந்த யோபு, நியாயப்பிரமாணத்தின்படி நடக்கவில்லை என்று சொல்லி, அவருக்கு எப்படி தண்டனை கொடுக்கமுடியும்?
ஒரு கட்டளை கொடுக்கப்பட்ட பின்னர்தானே, அதற்குக் கீழ்ப்படிவதைப் பற்றி பேசமுடியும்?
தேவகட்டளை கொடுக்கப்படாத காலத்தில், அதாவது நியாயப்பிரமாணம் கொடுக்கப்படாத காலத்தில் வாழ்ந்த யோபு, தன் மனச்சாட்சி கூறுகிற நீதி நியாயங்களை மட்டுந்தான் செய்யமுடியுமேயன்றி, பின்னாளில் தேவன் கொடுக்கப்போகிற கட்டளைகளின்படி எவ்வாறு நடக்கமுடியும்?////
ஒரு வெளிநாட்டுகாரன் இந்திய பிரஜை ஆனால் அவர் இந்திய சட்டதிட்டங்களை எல்லாம் படித்து அறிந்துகொண்டாலும் கொள்ளாவிட்டாலும் அவர் இந்திய சட்ட திட்டங்களுக்கு உட்படுவிடுகிறார். அதுபோல ஆதமின் மீருதலால் பாவத்துக்குள் விழுந்த நாம் எல்லோருமே நியாயபிரமாணம் என்ற சட்டதிட்டங்களுக்கு தானாக உட்பட்டுவிடுகிறோம். அதை அறிகிரோமா இல்லையா என்பது அடுத்த கேள்வி.
கொலை செய்யாதே என்ற கட்டளை நியாயபிரமானத்தில்தான் உள்ளது ஆனால் காயீன் கொலை செய்ததற்காக தண்டிக்கப்பட்டான்.
ஆனால் தசமபாகம் பற்றிய கட்டளைவரும் முன்னே ஆபிரகாம் தசமபாகம் கொடுத்தான் எப்படி? தேவனுடன் அவன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால் தேவன் அதை அவனுக்கு தெரியப்படுத்தியிருக்கலாம். நாம் எந்த காலத்தில் எந்த நாட்டில் இருக்கிறோம் என்பதைவிட தேவனிடம் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோமா என்பதுதான் முக்கியம். இங்கு யோபு சன்மார்க்கனாக நடந்தானே தவிர தேவனுடன் நெருங்கிய தொடர்பில் இல்லை என்பது அவன் "நான் பயந்த காரியம் எனக்கு நேர்ந்தது" என்று சொல்லும் வார்த்தை மூலம் அறிய முடியும்.
சகோதரர் அவர்களே! மீறுதல் என்பது தெரிந்து செய்தாலும் தெரியாது செய்தாலும் அது பாவம்தான் என்பதை லேவியராகமத்தில் தேவன் தெளிவாக குறிப்பிடுகிறார்.
சோதோம் கொமரா மக்களுக்கு தேவன் மனசாட்சியில் அந்த பாவத்தை உணர்த்தினார் என்று வசனம் எதுவும் இல்லை ஒருவேளை அப்படி உணர்த்தியிருந்தார் என்று எடுத்துகொண்டால் யோபுவுக்கும் தேவன் தனது கட்டளைகள் பற்றி மனசாட்சியில் உணர்த்தியிருக்கலாம் என்று எடுத்துகொள்ளலாம் அல்லவா? அல்லது சோதோம் கொமாரா மக்கள் தேவனுடன் நெருங்கிய தொடர்பில்லாமல் இருந்தார்கள் எனவே பாவத்தில் விழுந்தார்கள் என்று எடுத்துகொண்டால் யோபுவும் தேவனிடமிருந்து அவர் சித்தத்தை அறிய முற்படாமல் ஏதாவது பாவம் செய்திருக்கலாம் அல்லவா?
சரி சகோதரரே! உங்கள் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன் அனால் தேவன் எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் அதாவது தவறு எதுவும் செய்யாத ஒரு நல்லவனை சாத்தான் கையில் அப்படியொரு கொடூர சோதனைக்கு ஒப்புகொடுக்க மாட்டார் என்ற கருத்தின் அடிப்படையிலேயே நான் பேசுகிறான்!
யாக்கோபு 1:13 சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. அவ னவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
பிறர் பாவத்துக்காக மரித்த இயேசுவைத் தவிர அவரவர் செய்யும் பாவத்துக்குதான் அவரவர் தண்டனையை அனுபவிக்கின்றனர்! அவன் எவ்விதத்தில் தேவனின் கட்டளைகளை கைகொள்ளவில்லை என்று வேதம் குறிப்பிடாவிட்டாலும் அவன் தேவன் தனக்கு தவறாக துன்பத்தை கொடுத்துவிட்டார் என்றொரு கருத்தில் அவனுடைய பிரசங்கம் இருந்தது என்பது தேவனை அவன் அறியும் விதமாக அறியவில்லை என்றே உணர்த்துகிறது!
//////துன்மார்க்கருக்கு மட்டுந்தான் துன்பம் வரும் என்கிறீர்கள். ஆனால் நீதிமான்களுக்கு வரும் துன்பம் அநேகமாயிருக்கும் என்றல்லவா சங்கீதம் சங்கீதம் 34:19 கூறுகிறது?////
"நீதிமான்" என்பது வேறு நியாயபிரமாணத்தின்படி நடப்பது என்பது வேறு என்றே நான் கருதுகிறேன். நியாயபிரமாணத்தின் படிசெய்தால் தீமை உங்களைஅணுகாது ஈளை காய்ச்சல் நோய் நொடி வராது பகைஞர் யாரும் உருகாவமாடார்கள் என்று சொல்வது தேவன்தான். 'கற்பனையை கைகொள்பவன் ஒரு தீங்கையும் அறியான்" என்று சொல்வதும் வேத வார்த்தைதான்.
////தமது மெய்யான தாசர்கள் நன்மையைப் பெறுகிற காலங்களில் மட்டுமின்றி, துன்பங்களைப் பெறுகிற காலங்களிலும் உத்தமர்களாக இருப்பார்கள் என்பதை சாத்தானுக்கு உணர்த்துவதற்காக, அவர்களுக்கு அநேக துன்பங்களை தேவன் அனுமதிக்கக்கூடும் என்பதே உண்மை. இதன்படிதான் நீதிமானாகிய யோபுவுக்கும் துன்பங்கள் நேர்ந்தன.////
இருக்கலாம்! ஆனால் முகாந்திரம் இல்லாமல் ஒரு தீமையும் செய்யாத ஒருவனை தேவன் சாத்தான் கையில் வேதனையான சோதனைக்கு ஒப்புகொடுக்கமாடார் என்றே கருதுகிறேன்!
சாத்தான் ஒருவனை சோதிக்கவேண்டும் என்றால் தேவனிடம் அனுமதி கேட்கிறார். சாத்தானுக்கு பிடித்தமான ஏதாவது ஒரு காரியம் நம்மிடம் இருந்தால் மட்டுமே தேவன் அனுமதிப்பாறேயன்றி தன்னை முழுமையாக தேவனுக்கு அர்ப்பணித்து வாழ்பவனை அவர் நிச்சயம் அனுமதிக்க மாட்டார்!
இங்கு யோபு உலக ஆச்சீர்வாத்தில் திளைத்து வாழ்த்தான் எனவே அது அவனிடமிருந்து பிடுங்கப்பட்டு சில சோதனைக்கு பின் திருப்பி கொடுக்கப்பட்டது!
///உண்மையில், யோபுவின் துன்பங்களுக்குக் காரணம் சாத்தான் என்றுதான் சொல்லவேண்டும். யோபுவுக்கு துன்பங்களைக் கொடுத்தால் அவர் வீழ்ந்துவிடுவார் என சாத்தான் நினைத்தான். சாத்தானின் இந்த எண்ணத்திற்கு அப்பாற்பட்டவனாக யோபு விளங்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் யோபுவைத் துன்பத்திற்குள்ளாக்கும்படிக்கு தேவன் சாத்தானுக்கு அனுமதியளித்தார்.////
யோபுவின் துன்பம் மட்டுமல்ல எல்லோருடைய துன்பத்துக்கும் சாத்தான்தான் காரணம் அனால் அதற்க்கு ஆண்டவர் ஏன் அனுமதி கொடுக்கிறார் என்பதில்தான் முக்கியத்துவம் இருக்கிறது. அனுமதி அளிக்கப்பட்டு ஜெயிப்பது ஒரு மேன்மை என்றாலும் எல்லோருக்கும் தேவன் அனுமதி அளிப்பது இல்லை!
பூமியில் வாழும்போதே எந்த ஒரு உலக காரியத்தின்மேலும் பற்றில்லாமல் வாழ்பவனை சோதித்துதான் உண்மை அறியவேண்டும் என்ற அவசியம் தேவனுக்கோ சாத்தனுக்கோ இல்லை. ஆனால் தடுமாற்றத்துடன் இருக்கும் சிலரை சோதித்துதான் உண்மை அறியவேண்டும். அப்படிபட்டவர்களுக்குதான் அவர்கள் நீதிமானாக இருந்தாலும் சோதனை வரும்!
///நம்மைப் பொறுத்தவரை, யோபுவைப்போல் இம்மையிலேயே நம் துன்பங்கள் நீக்கப்பட்டு ஆசீர்வாதங்கள் கிடைத்துவிடும் என நினைக்கக்கூடாது. நம் மரணபரியந்தம் நாம் துன்பங்களை அனுபவிக்கக்கூடுந்தான். ஆனால், இத்துன்பங்கள் யாவும் மறுமையில் நமக்கு நிச்சயமாக நன்மைகளைக் கொண்டுவரும் என்பதே உண்மை.////
இந்த கூற்றை என்னால் ஏற்க்க முடியாது ஐயா! மனிதன் மறுமையில் மட்டுமல்ல இம்மையிலும் ஆசீர்வாதமாக இருக்கவேண்டும் என்பதே தேவனின் நோக்கம்.
ஆதியாகமம் 12:2 நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். II கொரிந்தியர் 1:20 எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம்என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே.
தேவனுடைய கட்டளைகள் என்பது மறுமைக்கு மட்டுமல்ல இம்மைக்கும் பொருந்தக்கூடியது. பாவம் செய்து தண்டனையை அனுபவித்துக்கொண்டு அந்த பழியை தேவன் என்னை சோதிக்கிறார் என்று அவர்மேல் போடுவது சரியானது அல்ல!
எதுவும் சொல்லாமல் விட்டதன் காரணத்தை கொஞ்சம் தெரிவித்தால் நலமாயிருக்கும் என்று கருதுகிறேன். இது தேவையற்ற விவாதம் என்று கருதுகிறீர்களா?
நான் யோபுவின் பாடுகள் பற்றி விவாதம் ஆரம்பித்ததன் முக்கிய நோக்கம் இன்று பல தேவ ஊழியர்கள் மற்றும் விசுவாசிகள் அநேகர் பல்வேறு செயல்களில் தவறான ஒரு வாழ்க்கை வாழ்ந்துகொண்டு துன்பம் நோய் நொடி என்று வரும்போது தங்கள் செயகளைகளை சீர் செய்யாமல் யோபுவின் பாடுகள் போல் எங்களுக்கும் பாடுகள் என்று கூறி யோபுவைபோல அவர்கள் பரிசுத்தராகவும், தேவன் சோதனை என்ற பெயரில் பாடுகளை அவர்களுக்கு முகாந்திரமில்லாமல் கொடுப்பதுபோலவும் ஒரு நினைப்பில் இருக்கின்றனர்.
பூமியில் மனிதன் அனுபவிக்கும் தண்டனைகளில் ௯௯% பாவத்துக்கு வரும் தண்டனைதான் என்றே நான் கருதுகிறேன்.
தன்னை நீதிமான் போலவும் தேவன் தன்னை முகந்திரமில்லாமல் தண்டித்துவிட்டது போலவும் பேசிய யோபுவுக்கு கர்த்தர் இறுதியாக சொன்ன பதில் :
1. பின்னும் கர்த்தர் யோபுக்கு உத்தரவாக: 2. சர்வவல்லவரோடே வழக்காடி அவருக்குப் புத்தி படிப்பிக்கிறவன் யார்? தேவன்பேரில் குற்றம் பிடிக்கிறவன் இவைகளுக்கு உத்தரவு சொல்லக்கடவன் என்றார்
8. நீ என் நியாயத்தை அவமாக்குவாயோ? நீ உன்னை நீதிமானாக்கிக்கொள்ளும்படிக்கு என்மேல் குற்றஞ்சுமத்துவாயோ?
என்றே கேட்கிறார்
தேவன் மகா நீதிபரர்! அவர் காரணமின்றி சோதனைக்காக யாரையும் சாத்தானின் கையில் ஒப்பு கொடுப்பதோ வேதனையான சோதனைகளை கொண்டு மனிதனை சொதிப்பதோ நிச்சயமாக இல்லை என்பதே எனது கருத்து!
சாத்தான் என்பவன் தேவனால் சோதனைக்கு படைக்கப்பட்ட ஒரு கருவி என்று எடுத்துகொண்டால் அவன் மூலம் மக்களை எல்லோரையும் பல்வேறு வழிகளில் சோதிப்பது நியாயம். ஆனால் இங்கு சாத்தான் என்பவன் தேவனின் எதிரி என்றே கருதுகிறேன். எவரும் தான் பெற்ற பிள்ளையை நல்லவன் என்று நிரூபிக்க எந்த ஒரு காரணமும் இன்றி எதிரி கையில் சோதனைக்கு ஒப்பு கொடுக்க விரும்புவது இல்லை.
தேவன் மனபூர்வமாக யாருக்கும் துன்பம் வர அனுமதிப்பது இல்லை என்பத புலம்பல் புஸ்தகம் சொல்கிறது. சில நிர்பதமான நிலைகளில் தனது நீதி நியாயத்துக்கு இழுக்கு வரக்கூடாது என்றுதான் சில நேரங்களில் தனது பிள்ளைகளுக்கு தேவன் பல சோதனைகளையும் துன்பங்களையும் அனுமதிக்கிறார் என்றே நான் கருதுகிறேன்.
மற்றவர்களுக்கு எப்படியோ ஆனால் என்னை பொறுத்தவரை தேவன் மஹா இரக்கம் உள்ளவர்! அவர் சரியான காரணமின்றி யாருக்கும் ஒரு சிறு துன்பத்தை கூட அனுமதிக்க மாட்டார் என்றே கருதுகிறேன். என் வாழ்வில் வரும் ஒரு சிறு தலை வலிக்கு கூட என்னுடைய சிறிய மீருதல்தான் காரணம் அது மட்டுமல்ல என்னை ஒரு கொசு கடிப்பது கூட என் சிறிய மீறுதல் என்றே கருதி தேவனின் வார்த்தை என்னும் வெளிச்சத்தில் என்னை மீண்டும் மீண்டும் ஆராய்து பரிசுத்தபடுத்த விளைகிறேன் அதன் அடிப்படையில்தான் இதை எழுதியுள்ளேன்! மற்றபடி பிடிவாதமான விவாதத்துக்கு அல்ல!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
sundar wrote: //எதுவும் சொல்லாமல் விட்டதன் காரணத்தை கொஞ்சம் தெரிவித்தால் நலமாயிருக்கும் என்று கருதுகிறேன். இது தேவையற்ற விவாதம் என்று கருதுகிறீர்களா?//
இது தேவையற்ற விவாதம் என நான் கருதவில்லை சகோதரரே! நேரமின்மையால்தான் உடனுக்குடன் பதில் தரை இயலவில்லை.
sundar wrote: //நான் யோபுவின் பாடுகள் பற்றி விவாதம் ஆரம்பித்ததன் முக்கிய நோக்கம் இன்று பல தேவ ஊழியர்கள் மற்றும் விசுவாசிகள் அநேகர் பல்வேறு செயல்களில் தவறான ஒரு வாழ்க்கை வாழ்ந்துகொண்டு துன்பம் நோய் நொடி என்று வரும்போது தங்கள் செயகளைகளை சீர் செய்யாமல் யோபுவின் பாடுகள் போல் எங்களுக்கும் பாடுகள் என்று கூறி யோபுவைபோல அவர்கள் பரிசுத்தராகவும், தேவன் சோதனை என்ற பெயரில் பாடுகளை அவர்களுக்கு முகாந்திரமில்லாமல் கொடுப்பதுபோலவும் ஒரு நினைப்பில் இருக்கின்றனர்.//
உங்கள் நோக்கத்தில் தவறில்லை சகோதரரே! ஆனால் உங்கள் கருத்தில்தான் தவறுள்ளது. இன்றைய விசுவாசிகளும் ஊழியர்களும் தங்களை யோபுவைப் போல் உத்தமரென எண்ணிக்கொண்டு, யோபுவுக்கு துன்பங்கள் நேர்ந்ததைப் போலவே தங்களுக்கும் துன்பங்கள் நேரிடுகின்றன என்று சொல்லி தங்களை யோபுவுடன் ஒப்பிடுகின்றனர் என்கிற ஒரே காரணத்திற்காக: ‘யோபுவும் பாவம் செய்தார், அதன் விளைவாகவே அவருக்குத் துன்பங்கள் வந்தன’ என நீங்கள் நிலைநாட்ட முற்படுவது சரியல்ல சகோதரரே!
யோபுவுக்கு நேர்ந்த துன்பங்களுக்குக் காரணம் சாத்தானே என்பது யோபு 1,2 அதிகாரங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. உபாகமம் 28,30-ம் அதிகாரங்களில் கூறப்பட்டுள்ளதை மட்டும் அடிப்படையாக வைத்து, தேவகற்பனைகளின்படி நடந்தால் (உலக) ஆசீர்வாதம் என்றும், தேவகற்பனைகளில் ஏதேனும் ஒன்றை மீறினால்கூட துன்பம் நேரும் என்றும் ஒரே வரியில் கூறுகிற நீங்கள் பின்வரும் வசனங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
சங்கீதம் 73:3-10 துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள்மேல் பொறாமைகொண்டேன். மரணபரியந்தம் அவர்களுக்கு இடுக்கண்களில்லை; அவர்களுடைய பெலன் உறுதியாயிருக்கிறது. நரர் படும் வருத்தத்தில் அகப்படார்கள்; மனுஷர் அடையும் உபாதியை அடையார்கள். ஆகையால் பெருமை சரப்பணியைப்போல் அவர்களைச் சுற்றிக்கொள்ளும், கொடுமை ஆடையைப்போல் அவர்களை மூடிக்கொள்ளும். அவர்கள் கண்கள் கொழுப்பினால் எடுப்பாய்ப் பார்க்கிறது; அவர்கள் இருதயம் விரும்புவதிலும் அதிகமாய் நடந்தேறுகிறது. அவர்கள் சீர்கெட்டுப்போய், அகந்தையாய்க் கொடுமைபேசுகிறார்கள்; இறுமாப்பாய்ப் பேசுகிறார்கள். தங்கள் வாய் வானமட்டும் எட்டப்பேசுகிறார்கள்; அவர்கள் நாவு பூமியெங்கும் உலாவுகிறது. ஆகையால் அவருடைய ஜனங்கள் இந்த வழியாகவே திரும்புகிறார்கள்; தண்ணீர்கள் அவர்களுக்குப் பரிபூரணமாய்ச் சுரந்துவரும்.
பிரசங்கி 1:13 வானத்தின்கீழ் நடப்பதையெல்லாம் ஞானமாய் விசாரித்து ஆராய்ச்சி செய்கிறதற்கு என் மனதைப் பிரயோகம்பண்ணினேன்; மனுபுத்திரர் இந்தக் கடுந்தொல்லையில் அடிபடும்படிக்குத் தேவன் அதை அவர்களுக்கு நியமித்திருக்கிறார்.
பிரசங்கி 8:14 பூமியின்மேல் நடக்கிற வேறொரு மாயையான காரியமுமுண்டு; அதாவது, துன்மார்க்கரின் கிரியைக்கு வருவதுபோல, நீதிமான்களுக்கும் வரும்; நீதிமான்களின் கிரியைக்கு வருவதுபோல, துன்மார்க்கருக்கும் வரும்; இதுவும் மாயை என்றேன்.
பிரசங்கி 3:9,10 வருத்தப்பட்டுப் பிரயாசப்படுகிறவனுக்கு அதினால் பலன் என்ன? மனுபுத்திரர் பாடுபடும்படி தேவன் அவர்களுக்கு நியமித்த தொல்லையைக் கண்டேன்.
இவ்வசனங்கள் யாவும் உபாகமம் 28-ம் அதிகாரத்திற்கு முரண்பாடாக இருப்பதைப்போலல்லவா உள்ளன? ஆனால் வேதவசனங்களில் முரண்பாடு நிச்சயமாகக் கிடையாது. வசனங்களை நாம் புரிந்துகொள்வதில் உள்ள தவறினால்தான் வேதவசனங்களில் முரண்பாடு இருப்பதைப்போல் நமக்குத் தோன்றுகிறது. பிரசங்கி 3:1-8 வசனங்களைப் படித்துப் பாருங்கள். ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு என அவை கூறுகின்றன. ஒருகாலத்தில் நீதிமான்களுக்கு நற்பலன்களும் துன்மார்க்கருக்கு தீய பலன்களும் நேர்ந்திருக்கலாம்தான். ஆனால், பிரசங்கியின் காலத்தில் எல்லோருக்கும் ஒரேவிதமாகச் சம்பவித்ததாக பிரசங்கி கூறுகிறார். இந்நிலைகூட ஒருகாலத்தில் மாறிப்போகும் என பின்வரும் வசனங்கள் கூறுகின்றன.
மல்கியா 3:17,18 என் சம்பத்தை நான் சேர்க்கும் நாளிலே அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; ... அப்பொழுது நீங்கள் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கு ஊழியஞ்செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தைத் திரும்பவும் காண்பீர்கள்.
பிரசங்கியின் பின்வரும் வசனங்களையும் படித்துப்பாருங்கள்.
பிரசங்கி 3:17 சகல எண்ணங்களையும் சகல செய்கைகளையும் நியாயந்தீர்க்குங்காலம் இனி இருக்கிறபடியால் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்ப்பார் என்று என் உள்ளத்தில் எண்ணினேன். பிரசங்கி 8:16,17 நான் ஞானத்தை அறியவும், மனுஷன் இரவும் பகலும் கண்ணுறக்கமில்லாமல் பூமியிலே செய்யும் வேலைகளைப் பார்க்கவும் என் மனதைச் செலுத்தினபோது, தேவன் செய்யும் சகல கிரியைகளையும் நான் கவனித்துப்பார்த்து, சூரியனுக்குக்கீழே செய்யப்படும் கிரியையை மனுஷன் கண்டுபிடிக்கக்கூடாதென்று கண்டேன். அதை அறியும்படி மனுஷன் பிரயாசப்பட்டாலும் அறியமாட்டான்; அதை அறியலாம் என்று ஞானி எண்ணினாலும் அவனும் அதை அறிந்துகொள்ளமாட்டான்.
ஆம், தேவன் யார் யாருக்கு என்னென்ன செய்கிறாரோ அதற்கான காரணங்களை முழுமையாக நாம் அறியமுடியாது என்பதே உண்மை. யோபுவைப் பொறுத்தவரை, சாத்தான் யோபுவின்மீது கண் வைத்த காரணத்தால்தான் அவருக்கு துன்பங்கள் நேர்ந்தன என வேதாகமம் தெளிவாகக் கூறுகிறது. இதற்கும் மேலாக, யோபு தேவவார்த்தையை மீறியதால்தான் அவருக்குத் துன்பங்கள் நேர்ந்தன என (வேதாகமத்தில் இல்லாத ஒரு கருத்தை) நாம் கூறுவது நிச்சயமாக சரியல்ல.
அதுவும், யோபுவின் காலத்தில் கூறப்படாத கற்பனைகளான ஓய்வு நாள் ஆசரித்தல் தசமபாகம் கொடுத்தல் ஆகியவற்றின்படி அவர் நடவாததால்தான் அவருக்கு துன்பங்கள் நேர்ந்ததாகக் கூறுவது நிச்சயமாகச் சரியல்ல.
நியாயப்பிரமாணத்தில் கூறப்பட்ட தசமபாகக் கட்டளைப்படி வார்த்தைக்கு வார்த்தை நடக்கவேண்டுமெனில், தசமபாகத்தை தேவன் தெரிந்துகொள்ளும் ஸ்தலத்தில் (இன்றைய நிலவரப்படி எருசலேம் தேவாலயத்தில்) லேவியரிடம்தான் செலுத்தவேண்டும். யோபுவின் காலத்தில் தேவன் தெரிந்துகொண்ட ஸ்தலம் எனும் எந்த ஸ்தலமும் கிடையாது. அவ்வாறெனில், தசமபாகத்தை யோபு எங்கு சென்று செலுத்தியிருக்க முடியும்?
நியாயப்பிரமணம் இல்லாத காலத்தில் வாழ்ந்த யோபு, ரோமர் 2:14-ன்படி, தனக்குத்தானே நியாயப்பிரமாணமாயிருந்து, அப்பிரமாணத்தின்படி நடந்திருப்பார். அதன் அடிப்படையில்தான் உத்தமர், சன்மார்க்கர், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகியவர் என தேவனால் நற்சாட்சி பெற்றார்.
தேவனால் நற்சாட்சி பெற்ற அவருக்கு துன்பங்கள் நேர்ந்ததைக் காரணமாகச் சொல்லி, அவர் தேவகட்டளைப்படி நடக்கவில்லை எனக் கூறுவது சரியல்ல. யோபு தேவகட்டளைப்படி நடக்கவில்லை என நீங்கள் சொல்வதாக இருந்தால், யோபுவின் காலத்தில் கூறப்பட்டிருந்த தேவகட்டளைகளில் ஏதேனும் ஒன்றின்படி அவர் நடக்காததைக் கூறுவதுதான் நியாயம். அதைவிடுத்து, அவரது காலத்திற்குப் பிறகு எப்போதோ கொடுக்கப்படப் போகிற நியாயப்பிரமாணக் கட்டளைப்படி அவர் நடக்கவில்லை என வாதிடுவது சரியல்ல.
sundar wrote: //ஒரு வெளிநாட்டுகாரன் இந்திய பிரஜை ஆனால் அவர் இந்திய சட்டதிட்டங்களை எல்லாம் படித்து அறிந்துகொண்டாலும் கொள்ளாவிட்டாலும் அவர் இந்திய சட்ட திட்டங்களுக்கு உட்படுவிடுகிறார். அதுபோல ஆதமின் மீருதலால் பாவத்துக்குள் விழுந்த நாம் எல்லோருமே நியாயபிரமாணம் என்ற சட்டதிட்டங்களுக்கு தானாக உட்பட்டுவிடுகிறோம். அதை அறிகிரோமா இல்லையா என்பது அடுத்த கேள்வி.//
நியாயப்பிரமாணம் கொடுக்கப்படாத காலத்தில் வாழ்ந்த யோபுவையும், ஏற்கனவே சட்டங்கள் போடப்பட்டுள்ள இந்தியாவின் பிரஜையான ஓர் அயல்நாட்டுக்காரரையும் எப்படி சகோதரரே ஒப்பிடுகிறீர்கள்?
ஆதாமின் மீறுதலால் பாவத்துக்குள் விழுந்த நாம், (நியாயப்பிரமாணம் கொடுக்கப்படும்வரை) நம் மனச்சாட்சியின் பிரமாணத்திற்குத்தான் உட்பட்டோமேயன்றி, நியாயப்பிரமாணத்திற்கு உட்படவில்லை. நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்ட பின்னர்கூட, நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்ட இஸ்ரவேலரைத்தான் அது கட்டுப்படுத்துமேயன்றி புறஜாதியினரை அல்ல.
புறஜாதியினரான நீங்களும் நானும், வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டு நம் கையில் கொடுக்கப்பட்டதால்தான் நியாயப்பிரமாணத்தையும் கிறிஸ்துவின் பிரமாணத்தையும் அறியமுடிந்தது. ஆகிலும் நாமுங்கூட கிறிஸ்துவின் பிரமாணத்திற்கே கட்டுப்பட்டவர்களேயன்றி, நியாயப்பிரமாணத்திற்குக் கட்டுப்பட்டவர்களல்ல.
நியாயப்பிரமாணம், கிறிஸ்துவின் பிரமாணம் ஆகியவற்றை யார் அறிந்தாலும் அறியாவிட்டாலும், மனச்சாட்சியின் பிரமாணத்திற்கு அனைவரும் கட்டுப்பட்டவர்கள். நன்மை தீமை அறியத்தக்க கனியை ஆதாம் புசித்துவிட்டதால் அவரது சந்ததியாராகிய நாம் அனைவரும் நன்மை தீமை அறியத்தக்க மனச்சாட்சியை உடையவர்களாக இருக்கிறோம். அந்த மனச்சாட்சியின் பிரமாணம்தான் காயீனுக்கும், ஆபேலுக்கும், யோபுவுக்குக்கும், லோத்துவுக்கும், சோதோம் பட்டணத்தாருக்கும் இருந்தது.
அந்தப் பிரமாணத்தின்படி, ஆபேல் நன்மைசெய்து நீதிமான் எனும் பேரைப் பெற்றார்; காயீனோ நன்மைசெய்யாதிருந்ததோடு ‘கொலை’ எனும் தீமையையும் செய்து அக்கிரமக்காரன் ஆனான். யோபு, தன் மனச்சாட்சிப் பிரமாணத்தின்படி தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகி நன்மைசெய்ததால் உத்தமன் என அழைக்கப்பட்டார்.
லோத்து நீதிமானாக இருந்ததால் அவரது மனச்சாட்சியின் பிரமாணம், ஆண்புணர்ச்சி ஓர் அக்கிரமம் என அவரிடம் எடுத்துரைத்தது (2 பேதுரு 2:8); ஆனல் சோதோம் பட்டணத்தார் அக்கிரமக்காரர்களாக இருந்ததால், அவர்களின் மனச்சாட்சியின் பிரமாணம், ஆண்புணர்ச்சி ஓர் அக்கிரமம் என அவர்களிடம் எடுத்துரைக்கவில்லை.
இன்றைய ஊழியர்களும் விசுவாசிகளும் உத்தமனாகிய யோபுவுக்கு நேரிட்ட துன்பங்களுக்கு சாத்தான் காரணமாயிருந்ததைப்போல, உத்தமர்களாகிய தங்களுக்கு நேரிடுகிற துன்பங்களுக்கும் சாத்தானே காரணம் எனச் சொல்வதில் தவறு எதுவுமில்லை. ஆனால் யோபுவின் புத்தகத்தை முழுமையாகப் படித்துப் பார்த்து, யோபுவைப் போல அவர்களும் உத்தமர்களாக நடக்கிறார்களா என்பதை அவர்கள் உறுதிசெய்வது அவசியம்.
-- Edited by anbu57 on Friday 22nd of January 2010 02:44:37 PM
chillsam wrote: //அன்பான நண்பரே வேதம் தெளிவாகச் சொல்லுகிறது, "பக்திவிருத்திக்கேதுவானதையே" பேசவும் சிந்திக்கவும் வேண்டுமென;// //சமுதாயம்,வாழ்வியல்,ஒழுக்கநெறிகள்,கிறிஸ்தவர்களின் இன்றைய நிலை சம்பந்தமாக நாம் எதையும் விவாதிக்கலாம்; அதற்கும்கூட வரையறைகளுண்டு; ஆனால் தெய்வத்துவம் சம்பந்தமான காரியங்களில் "பன்றிக்கு முன் முத்தைப் போடாதே" எனும் வார்த்தையினை நினைவில் கொள்ளுங்கள்..!//
யோபுவின் பாடுகளுக்கு யார் பொறுப்பு எனத் தியானிப்பது ‘பக்திவிருத்திக்கேதுவானதல்ல’ எனக் கூறுகிற சகோ.சில்சாம் அவர்களே! தங்கள் acativeboard-ல் கோவில் கருவறைக்குள் என்ற தலைப்பில் விவாதிப்பதும், கிறிஸ்தவர்கள் கருக்கலைப்பு செய்யலாமா, விவாகரத்து செய்யலாமா எனக் கேள்வி கேட்டு விவாதிப்பதும் ‘பக்திவிருத்திக்கேதுவானவைகள் அல்ல’ என நான் சொன்னால் அதை ஏற்றுக் கொள்வீர்களா?
எது பக்திவிருத்திக்கேதுவானது எது பக்திவிருத்திக்கேதுவானதல்ல என்பதை, ஒரு தளத்தினுள் வருகிற ஒவ்வொருவரும் கூறுவதைக் கேட்டு தளநிர்வாகி செயல்பட்டால்: இத்தளம், உங்கள் தளம், அல்லது வேறெந்த தளத்திலும் எந்த விவாதத்தையும் தொடரமுடியாது.
விபசார காரணத்தைத் தவிர வேறெந்தக் காரணத்திற்காகவும் விவாகரத்து செய்வது கூடாது என இயேசு தெளிவாகப் போதித்திருக்கும்போது, கிறிஸ்தவர்கள் விவாகரத்து செய்யலாமா என்ற கேள்வி எதற்கு? இப்படி ஒரு கேள்வி கேட்டு, அதற்கு ஒருவர் விவாகரத்து செய்வதற்கு ஆதரவான கருத்தைத் தெரிவித்தால் அது இயேசுவின் போதனைக்கு மிஞ்சினதாக அல்லவா இருக்கும்?
கிறிஸ்தவர்கள் விவாகரத்து செய்யலாமா எனும் கேள்வி, விவாகரத்து பற்றி இயேசு சொன்னது சரியா தவறா என்ற கேள்விக்குச் சமமானதாகும்.
இயேசு சொன்னதை எடுத்துக்கூறி விசுவாசிகளை எச்சரிப்பதை விட்டுவிட்டு, இயேசு சொன்னது சரியா தவறா என்ற விவாதத்திற்கு அழைப்பது பக்திவிருத்திக்கேதுவானதாக இருக்காது என்பதோடு மட்டுமின்றி அது இயேசுவின் கூற்றை விமர்சித்து அவமதிப்பதாகவும் ஆகிவிடும்.
உங்கள் தளத்தினுள் நீங்கள் எதையும் விவாதித்துக் கொள்வது உங்கள் உரிமை, அதில் நான் தலையிடவில்லை. ஆனால் பிற தளங்களில் விவாதிக்கிற காரியங்கள் பக்திவிருத்திக்கேதுவானதா இல்லையா என்பதை வேதவசன அடிப்படையில் முதலாவது தெளிவுபடுத்திவிட்டு, அதற்குப் பிறகு அவற்றை விவாதிப்பதைக் குறித்த உங்கள் ஆலோசனையைத் தெரிவியுங்கள். மாறாக, வசன அடிப்படை ஏதுமின்றி உங்கள் சுயஞானத்தின் அடிப்படையில், இது பக்திவிருத்திக்கேதுவானதல்ல எனத் தீர்மானித்து, அத்தீர்மானத்தின் அடிப்படையில் பிற தளத்தினர் நடக்கவேண்டுமென எதிர்பார்க்காதிருங்கள், ஆலோசனை கூறாதீர்கள்.
Truth Seeker தளத்தில் நீங்கள் பதித்த விஷயங்கள் யாவும், குறிப்பாக, இலைமறை காயான விஷயங்களை நான்காம்தர மக்களைப்போல் தரக்குறைவான வார்த்தைகளில் நீங்கள் எழுதினவையெல்லாம் பக்திவிருத்திக்கேதுவானவைகளாகத்தான் இருந்ததா என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.
பன்றிக்கு முன் முத்தைப் போடாதே எனும் வசனத்தைக் குறிப்பிடும் சகோதரரே! பொதுவானதொரு விவாதமேடை தளம் என்றால் அங்கு முத்துக்களை கால்களால் மிதித்து முத்துக்களைப் போட்டவரை பீறிப்போடுகிற பன்றிகளும் வரும், பரிசுத்தமானதைப் பெறுவதற்கு தகுதியற்ற நாய்களும் வரும், கள்ளத்தீர்க்கதரிசிகளான ஓநாய்களும் வரும், வசன தாகமுள்ள ஆடுகளும் வரும். தளநிர்வாகிகள், வசன தாகமுள்ள ஆடுகளை மனதில் வைத்து அவைகளுக்காகத்தான் இப்படிப்பட்ட தளங்களை நடத்துவார்களேயன்றி, பன்றிகளுக்காகவும் நாய்களுக்காகவும் ஓநாய்களுக்காகவும் தளத்தை நடத்துவதில்லை.
எனவே இத்தளத்தினுள் பன்றிகள் வருகிறதென்பதற்காக முத்துக்களை போடாமலிருக்க வேண்டியதில்லை.
முத்துக்களைப் போட்டவர்களுக்கெதிராக பன்றிகள் திரும்பி அவர்களைப் பீறிப்போட முயலத்தான் செய்யும். அப்பன்றிகளை இத்தளத்தினுள் மேயவிடாதபடி தடுக்கும் உரிமையையுடைய தளநிர்வாகி, தக்க சமயத்தில் தனது உரிமையைப் பயன்படுத்தி அப்பன்றிகளைத் தடுத்துவிட்டால், யாருக்கும் எந்த பாதிப்பும் நேராது.
////அன்புக்குரிய எனது நண்பருக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்: உங்கள் தலைப்புகள் ஆண்டவரை மகிமைப்படுத்துவதாக இருக்கட்டும்; அவரை சிறுமைப்படுத்தி- பெருமைப்படுத்த எண்ணாதிருங்கள்;////
தங்களின் இந்த பதிவுக்கு எனக்கு சரியாக அருத்தம் புரியவில்லை சகோதரரே!
யோபுவின் பாடுகளுக்கு யார் பொறுப்பு? என்பது தலைப்பு
எனது கருத்துப்படி தேவன் மிகுந்த இரக்கம் உள்ளவர் யாருடைய துன்பங்களுக்கும் பாடுகளுக்கும் அவர பொறுப்பல்ல அவனவன் செய்த நன்மை தீமைக்கு தகுந்த பலனை அவனவன் அனுபவிக்கிறான் என்பதுதான். (இதில் எனது பதிவு எவ்விதத்தில் தேவனை சிறுமை படுத்துகிறது என்று எனக்கு புரியவில்லை) உங்கள் அளவுக்கு புரியும் ஞானம் எனக்கு (பலருக்கு ) இல்லை கொஞ்சம் விளக்கமாக சொல்லவும்
சகோதரர் அன்பு அவர்கள் சொல்கிறார்கள்
இல்லை யோபுவின் பாடுகளுக்கு சாத்தான்தான் பொறுப்பு அவன் நல்லவர்கள் எல்லோரையும் இதுபோல்தான் சோதிப்பான் என்று வசனஆதாரத்தோடு விளக்கியுள்ளார்கள்
இப்பொழுது சாத்தானே பொறுப்பானாலும் அவனுக்கு அனுமதி கொடுத்த தேவன்தான் அதற்க்கு பொறுப்பு என்பது மறைமுகமாக அது தேவனையே வந்து சார்கிறது.
ஆனால் நான், தேவன் நீதியுள்ளவர் அவர் முகாந்திரம் இல்லாமல் ஒரு நல்லவனை இவ்வளவு பாட்களுகுட்படுத்தி சோதிக்கமாட்டார் என்ற கருத்தில்தான் யோபு எதோ பாவம் செய்திருக்கலாம், அதனால் தேவன் அவனை பாடுகளுக்குட்படுத்தி இருக்கலாம் என்று வாதிடுகிறேன். யோபு பாவம் செய்ததற்கான அதாரம் எதுவும் இல்லைதான் ஆனால் மனிதன் பிறக்கும்போதே பாவியாகத்தான் பிறக்கிறான் மேலும் "ஒரு பாவமும் செய்யாத நீதிமான் ஒருவனும் இல்லை" என்று வேதம் சொல்வதால் தசமபாகம் ஓய்வுநாள் இல்லை என்றாலும் ஏதாவது பாவத்தின் அடிப்படையிலேயே தேவன் சோதனைக்கு ஒப்புகொடுத்திருக்கலாம் என்பதே எனது கருத்து.
இங்கு தேவனை எள்ளளவும் நான் குறைத்து கூறவில்லை! "நீ என் நியாயத்தை அவமாக்குவாயோ? நீ உன்னை நீதிமானாக்கிக்கொள்ளும்படிக்கு என்மேல் குற்றஞ்சுமத்துவாயோ? தேவன் யோபுவை கேட்கும் பட்சத்தில் தேவனிடம் ஏதாவது சரியான நியாயம் இருக்கும் இல்லையென்றால் ஒரு நல்லவனை அவர் சாத்தான் கையில் இவ்வளவு சோதனைக்கு கொடுக்க மாட்டார் என்ற கருத்தில் நான் பேசுகிறேன்.
இதில் தேவனை நான் எங்கும் குறைத்து கூறியதுபோல் தெரியவில்லையே தவறு எங்கே என்று சற்று விளக்கவும்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
அன்பான நண்பரே வேதம் தெளிவாகச் சொல்லுகிறது, "பக்திவிருத்திக்கேதுவானதையே" பேசவும் சிந்திக்கவும் வேண்டுமென; சமுதாயம்,வாழ்வியல்,ஒழுக்கநெறிகள்,கிறிஸ்தவர்களின் இன்றைய நிலை சம்பந்தமாக நாம் எதையும் விவாதிக்கலாம்; அதற்கும்கூட வரையறைகளுண்டு; ஆனால் தெய்வத்துவம் சம்பந்தமான காரியங்களில் "பன்றிக்கு முன் முத்தைப் போடாதே" எனும் வார்த்தையினை நினைவில் கொள்ளுங்கள்..!
சகோதரர் சில்சாம் அவர்களே!
சகோதரர் அன்பு அவர்கள் சொல்லும் கருத்தை சற்று ஆராயுங்கள். இணையதளத்தை பொறுத்தவரை அது யாராவது சிலருக்கு பயனுள்ளதாக அமையும் என்பதே எனது கருத்து.
எதைப்பற்றி விவாதிப்பது என்பது அவரவர் மனநிலையை பொருத்தது.
உங்களுக்கு தேவையில்லாதது எனக்கு தேவையாக இருக்கலாம் எனக்கு தேவையில்லாத விவாதம் உங்களுக்கு தேவையானதாக இருக்கலாம்.
தேவையற்ற கடவுள் சம்பந்தப்படாத எந்த விவாதமும் இங்கு அனுமதிக்கபடாது. மற்றபடி இறைவன் சம்பந்தப்பட்ட மற்றும் விவிலியம், திருக்குர்ஆன், மற்றும் மகாபாரதம் போன்ற எந்த
ஆன்மீக புத்தகத்தில் உள்ள கருத்துக்களையும் தடையின்றி இங்கு விவாதிக்கலாம் என்றே கருதுகிறேன்.
யோபுவுக்கு நேர்ந்த துன்பங்களுக்குக் காரணம் சாத்தானே என்பது யோபு 1,2 அதிகாரங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. உபாகமம் 28,30-ம் அதிகாரங்களில் கூறப்பட்டுள்ளதை மட்டும் அடிப்படையாக வைத்து, தேவகற்பனைகளின்படி நடந்தால் (உலக) ஆசீர்வாதம் என்றும், தேவகற்பனைகளில் ஏதேனும் ஒன்றை மீறினால்கூட துன்பம் நேரும் என்றும் ஒரே வரியில் கூறுகிற நீங்கள் பின்வரும் வசனங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
சங்கீதம் 73:3-10 துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள்மேல் பொறாமைகொண்டேன். மரணபரியந்தம் அவர்களுக்கு இடுக்கண்களில்லை;////
துன்மார்க்கனை பொறுத்தவரை அவன் அனேக ஆசீர்வததை அனுபவித்து வாழ்ந்து கணப்பொழுதில் பாதாளத்தில் இரங்கபோகிறவன். அவனுடன் ஆண்டவரால் வழிநடத்தப்பட்டு நித்ய வாழ்வுக்கு நியமிக்கப்பட்டிருக்கும் நம்மை ஒப்பிட்டு பார்ப்பது ஏற்றதல்ல!
சகோதரர் அன்பு அவர்களின் தேவனை பற்றிய தங்கள் அடிப்படை புரிதலில் நான் தலையிட விரும்பவில்லை. அடிப்படை புரிதலே அனைத்து அடுத்த காரியங்களையும் தீர்மானிக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. தாங்கள் உத்தமனையும் நல்லவனையும் தேவன் சாத்தான் கையில் சோதனைக்கு ஒப்புகொடுக்கிறார் என்று கருதுகிறீர்கள் ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை!
என்னை பொறுத்தவரை
"செம்மையாக நடப்பவனுக்கு என் வார்த்தை நன்மை செய்யாதோ"
"உத்தமனுக்கு கர்த்தர் துணை"
என்று வேதம் சொல்லும் பட்சத்தில் பல ஊழியர்களின் கருத்துபோல் தேவன் நல்லவனையும் அவர் வார்த்தைப்படி வாழ்பவனையும் எந்த முகாந்திரமும் இல்லாமல் சாத்தான் கையில் தீமைக்கு ஒப்புகொடுத்து சோதித்து நல்லவனையும் தீயவனையும் சமமாகத்தான் நடத்துவார் என்ற கருத்தை ஏற்றால்
என்ற ஆபிரகாமின் வார்த்தையை கெட்டு லோத்துவை இக்கட்டிலிருந்து விடுவித்திருக்கமாடார் என்ற கருத்திலேயே பேசுகிறேன்.
நாம் என்னதான் வேதத்தை ஆராய்ந்து பார்த்து நடந்தாலும் ஒரு பாவமும் செய்யாமல் சுத்தமாக வாழ்வது என்பது முடியாத காரியம். இந்நிலையில் சோதனை ஏது பாவத்துக்கு வரும் தண்டனை ஏது என்று பிரித்து பார்த்து ஆராய்ந்து திருந்த முடியாத ஒருநிலையில் மனிதன் இருப்பதுபோல் தெரிகிறது.
நாம் வாழ்வில் வரும் ஒரு சிறு துன்பம் கூட தேவன் அனுமதித்த சோதனையால் வருவது அல்ல. அதுபோல் நல்லவரையும் தீயவரையும் சாத்தான் கையில் ஒப்புகொடுத்து சோதித்துதான் ஆகவேண்டும் என்ற அளவுக்கு சாத்தான் பெரியவனும் அல்ல! நம்மிடம் சாத்தனுக்கு பிடித்த ஏதாவது ஒரு குணமோ அல்லது செயலோ இருக்கும்வரை அவன் நம்மை சோதிக்காமல் விடப்போவதும் இல்லை.
எனவே சோதிக்கப்படுபவர்கள் எல்லோரும் தேவனால் (தேவன் கொடுத்த அனுமதியால்) சோதிக்கப்படுகிறோம் என்று சொல்லும் கூற்று தேவன்தான் துன்பங்கள் வருவதற்கு காரணம் என்பதுபோல் இருக்கிறது.
உலகத்தில் சோதனையும் துன்பங்களும் உண்டு! சோதனையில் ஜெயித்தால் நிச்சயம் முன்னேற்றம் உண்டு ஆனால் எந்த சோதனையும் வேதனையை தரும் சோதனையாக இருக்காது. உங்களின் உத்தமத்தை வேதவசனத்தின் அடிப்படையில் பரிசொதிப்பதுதான் சாத்தனின் வேலை.
இயேசுவை சாத்தான் சோதித்தபோது அவர் பரிசுத்தராக இருந்ததால் அவருக்கு எந்த துன்பமும் கொடுக்கவில்லை மாறாக வசனங்களை மீறும்படி மட்டும் ஏவினான். அவர் மீறியிருந்தால் அவர் நிச்சயம் தண்டிக்கப்பட்டிருப்பர். அவர் சிறிதும் மீறவில்லை எனவே அவர் பிறர் பாவத்துக்காக ஒப்பு கொடுக்கப்படும் நாள்வரை அவரை யாராலும் ஒன்றும் செய்யமுடியவில்லை!
எனவே சோதனை வரலாம் ஆனால் துன்பம் வருவதற்கு காரணம் பாவம் என்றே நான் கருதுகிறேன். . உங்களுக்கு வரும் எந்த ஒரு துன்பமோ மனவேதனையோ எதுவானாலும் தூக்கத்தை தவிர்த்து ஆண்டவர் சமூகத்தில் அமர்ந்து உண்மையான மன பரத்தோடு விசாரித்தால் நிச்சயம் அதற்க்கான காரணத்தை ஆண்டவர் வெளிப்படுத்துவார். அதை சரிசெய்த மறுகணமே வந்ததுன்பம் எங்கு போகிறது என்பதே தெரியாமல் போய்விடுவதை நான் எத்தனையோ முறை ஏன் அனுபவித்தில் பார்த்துவிட்டேன் இன்றும் அப்படித்தான் இருக்கிறேன்.
(சில நாட்களுக்கு முன் வருமான வரி அலுவலகத்தில் இருந்து மிக பெரிய பிரச்சனை ஒன்று உருவானது. மீண்டும் மீண்டும் அங்குபோய் லஞ்சம் கேட்கும் ஒருவரை பார்க்கவேண்டிய சூழ்நிலை உண்டானது.
மிகவும் மனமடிவாகி ஆண்டவரிடம் ஏன் என்று விசாரித்தபோது நீ தீபாவளிக்கு வாங்கிய போனசுக்கு சரியான வரமான வரி செலுத்தவில்லை என்றார். நானும் யோசித்து பார்த்ததில் தவறிருப்பது புரிந்து அந்த பணத்தை கட்டினேன். ஆச்சர்யமாக அதன் பிறகு அந்த ஆள் முகத்தை கூட பார்க்க ஆண்டவர் என்னை அனுமதிக்கவில்லை.)
நான் வரியை காட்டமால் ஏமாற்ற விரும்பவில்லை பின்னால் கட்டிக்கொள்ளலாம் என்றுதான் விட்டிருந்தேன் அனால் அது ஆண்டவர் பார்வைக்கு தவறாக இருந்தது. வாங்கும் முன் காட்டிவிட்டு வாங்கவேண்டும் என்று உணர்த்துகிறார்.
இரண்டுபுறமும் பேசும் வேத வசனங்கள் அநேகம் வேதத்தில் இருக்கின்றன அதில் மேன்மையானது ஏது என்று அதை நாம் விசுவாசிக்க வேண்டும் என்பதே எனது கருத்து.
துன்மார்க்கரின் கிரியைக்கு வருவதுபோல, நீதிமான்களுக்கும் வரும்; நீதிமான்களின் கிரியைக்கு வருவதுபோல, துன்மார்க்கருக்கும் வரும்;என்று சொல்லும் வேதமே "கற்பனையை கைகொள்பவன் ஒரு தீங்கையும் அறியான்" என்று சொல்கிறது.
மனுபுத்திரர் இந்தக் கடுந்தொல்லையில் அடிபடும்படிக்குத் தேவன் அதை அவர்களுக்கு நியமித்திருக்கிறார். என்று சொல்லும் வேதமே "உன்னை தொடுகிறவன் ஏன் கண்மணியை தொடுகிறான்" என்றும் சொல்கிறது.
இங்கு நீங்கள் எந்த வாக்குத்தத்தத்தை சுதந்தரிக்க விரும்புகிறீர்கள் என்பதுதான் ஆண்டவரின் கேள்வி.
நான் தேவனை உயர்த்தி அவர் கண்மணியை போன்ற என்னை யாரையும் காரணமின்றி தொடவிடமாடடார் என்று கருதுகிறேன் நீங்கள் சாத்தானின் மூலம் சோதனை என்பது எல்லோருக்கும் வரும் அதை தவிர்க்க முடியாது என்று விசுவாசிக்கிறீர்கள்.
"நீ விசுவாசத்தின்படியே உனக்கு ஆகக்கடவது" என்ற வார்த்தைப்படி அவரவர் விசுவாசித்தபடியே அவரவருக்கு பலன் கிடைக்கும்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
////தேவன் பயங்கரமானவர் என்று வேதம் அவருடைய மகத்துவங்களைக் கூறும்போது அதனை மறுத்து "இல்லையில்லை அவர் ரொம்ப நல்லவர், யாரையும் அழிக்கவோ சோதிக்கவோ மாட்டார்,மனிதனுடைய பாவமும் மீறுதலுமே துன்பத்துக்கும் காரணம்" என பொத்தாம்பொதுவில் கூறுவது தேவனைப் பெருமைப்படுத்தி சிறுமைப்படுத்துவதாகும்;///
அன்பு சகோதரர் சில்சாம் அவர்களே! "தேவனை பெருமை படுத்தி சிறுமை படுத்துவது" என்ற கருத்துக்கு நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கம் நன்றாகவே இருக்கிறது.
"கர்த்தர் நல்லவர்" "தேவன் அன்பாகவே இருக்கிறார்" என்றும் வேதம்தான் சொல்கிறது மேலும்
யாக்கோபு 1:13 சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்
என்று வசனம் தெளிவாக சொல்கிறது அதைதான் நான் சொல்கிறேன். இந்த வசனம் தேவனை நல்லவர்போல் கட்டுகிறதே! எனவே யாக்கோபு தேவனை பெருமைபடுத்தி சிறுமைபடுத்துகிறாரா? அப்படி நீங்கள் கருதினால் நானும் இந்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்கிறேன்.
இக்காலத்தில் தேவனுடைய வார்த்தைகளின்படி அவருக்கு கீழ்படிந்து வாழும் ஒரு விசுவாசியயோ அல்லது ஊளியக்கரரையோ பார்ப்பது என்பது மிக அறிதாகிவிடாது. எல்லா இடங்களிலும் பாவம் பணஆசை மற்றும் மாய்மாலம் பெருத்துவிடது
மிகப்பெரிய ஊழியர்களுக்கு எல்லாம் எலும்பு புற்றுநோய், சுகர், அது இது என்று இல்லாத வியாதியே இல்லை. கஷ்டப்பட்டு சம்பாதித்து ஜனங்கள் போகும் கணிகையின் ஒருபகுதி மருந்து மாத்திரை ஆஸ்பத்திரி ஆப்பரேஷன் என்று தேவையற்ற செலவாகி வீணாகிறது. அதற்க்கு அவர்கள் சொல்லும் காரணம்
"யோபுவை போல எங்களுக்கு பாடு" என்பதுதான் அதன் பொருள் அவர்கள் மிக மிக பரிசுத்தர் ஆனால் தேவன் சோதனை என்ற பெயரில் சாத்தனை அனுமதித்து அவர்களுக்கு முகந்திரமில்லாத துன்பங்களை கொடுக்கிராரர் என்று தேவனை குற்றவாளிபோல் தீர்ப்பதாக உள்ளது அது எனக்கு மிகவும் வருத்தத்தை தருவதால் இந்த விவாதத்தை தொடர்ந்தேன்
chillsam wrotes:
////இதுபோல பல உதாரணங்களைக் குறிப்பிடமுடியும்;இறுதியாக நான் சொல்லவிரும்புவது என்னவென்றால் தெய்வத்துவம் சம்பந்தமான காரியங்களில் இறுதித் தீர்ப்பாக எதையும் நிறுவ முயற்சிக்கவேண்டாம்;ஏனெனில் மனிதனுடைய புரிதலின் வேகம் மாறிக் கொண்டே இருக்கிறதே;////
இங்கு யாரும் இறுதி தீர்ப்பை நிர்ணயிக்க முடியாது நாங்கள் நிர்ணயிக்கபோவதும் இல்லை அது இறைவன் கையில்தான் இருக்கிறது எனபது எனக்கு தெரியும் அதைப்பற்றி நான் தனியாக ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அதற்க்கு கிறிஸ்த்தவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து "அப்படியெல்லாம் சொல்லமுடியாது இயேசுவை ஏற்றுக்கொண்ட காரணத்துக்காக தேவன் எங்களை கண்டிப்பாக மீட்டே ஆகவேண்டும்" என்பதுபோல் கருத்து தெரிவித்திருந்தனர். அனால் நான் இன்றும் சொல்கிறேன் ஒரே ஒரு வசனத்தை காட்டி என்னை தேவன் நீ தகுதியற்றவன் என்று தீர்க்கமுடியும் என்றே நான் கருதி என்னை சுத்திகரிக்க முயல்கிறேன்.
chillsam wrotes: //// கிறிஸ்தவக் குடும்பங்களில் வரதட்சிணைக் கொடுமையும் ஜாதிக் கொடுமையும் விவாகரத்தும் தலைவிரித்தாடுகிறது; பள்ளிகளில் கிறிஸ்தவக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளே அதிக பிரச்சினைக்குரியவர்களாக அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள்; எனவே பக்திவிருத்திக்காக இல்லாவிட்டாலும் தன்னைத் தான் சோதித்தறிய இந்த பொருளைத் தற்கால உடனடி தேவை என்ற எண்ணத்தில் நான் அலச விரும்புகிறேன்; ஏனெனில் இது நான் எனது ஊழியத்தில் (ஊழியம் என்றாலே நகைப்பு வருகிறதோ..?)அன்றாடம் சந்திக்கும் பிரச்சினையாகும்;////
உங்கள் பிரச்னைக்கு தகுந்த விவாதங்களை நீங்கள் தேர்ந்தேடுப்பதுபோல எங்கள் பிரச்னைக்கு தகுந்த விவாதங்களை நாங்கள் தேர்ந்தெடுகிறோம். அது உங்களுக்கு தேவையில்லை என்றால் விட்டுவிடுங்கள் அது தேவையற்றது என்று ஏன் கருத்து கூறுகிறீர்கள் . நீங்கள் ஆரம்பித்திருக்கும் விவாதம் எவ்விதத்தில் பக்தியை விருத்திசெய்யும் என்பது புரியவில்லை . ஆனால் இந்த விவாதத்தின் அடிப்படையாகிய தேவனின் வார்த்தைகளின்படி ஒருவன் நடந்தால் உங்கள் வரதட்சணை பிரச்சனை எல்லாம் தானாக தீர்ந்துவிடும். அடிப்படை எங்கு இருக்கிறது என்று பார்த்து அதை சரிசெயுங்கள் மாறாக முள் மரத்தை மேல்பகுதியை மட்டும் வெட்டினால் அது உடனே தளிர்த்துவிடும் !
-- Edited by SUNDAR on Thursday 21st of January 2010 11:01:12 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
chillsam wrote: //அதிலும் "பன்றிக்கு முன் முத்தைப் போடாதே" எனும் வரிகள் நண்பரை ரொம்ப பாதித்துவிட்டது போலும்;
"பன்றி" என்பது மறுதலித்துப் போனவர்களுக்கான வேதத்தின் குறியீடாகும்;
அப்படியானால் ஆரோக்கிய உபதேசத்துக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தொடர்ந்து விவாதித்து குழப்பம் விளைவிப்பவர்களையா "அன்பு" பன்றி என்று குறிப்பிடுகிறார்?//
நான் யாரையும் பன்றி எனக் குறிப்பிடவில்லை. “பன்றிக்கு முன் முத்தைப் போடாதே” எனும் உங்கள் கூற்றுதான் இத்தளத்தினுள் வருகிற சிலரை பன்றியெனக் குறிப்பிடுவதாயுள்ளது. உங்கள் கூற்றைப் பின்பற்றித்தான் நானும் சில வரிகளை எழுதினேன். பொதுப்படையில் யாரையும் பன்றி, ஆடு, மாடு என எழுதும் வழக்கம் எனக்குக் கிடையாது. முத்துக்களைப் போடுவோர் மீது பாய்ந்து பீறிப்போடுகிற பன்றிகளையும் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு வரும் கள்ளத்தீர்க்கதரிசிகளான ஓநாய்களையும் வேதவசனம் கூறுவதன் அடிப்படையில் நேரடியாகக் கோடிட்டுக் காட்டுவதுதான் என் வழக்கம்.
chillsam wrote: //எனது தளத்தின் பொருள் சம்பந்தமான விவாதங்களுக்கு இங்கே பதில் தருவது "அன்பு" அவர்களைப் போன்ற அனுபவமுள்ளோருக்கு தகுதியானதல்ல;இதிலிருந்தே அவர் ஏதோ ஒரு தனிப்பட்ட கசப்புடன் என்னைத் தவிர்ப்பது புரிகிறது;//
உங்கள் தளத்தின் விவாதங்களுக்கு பதில் தருவது எனது நோக்கமல்ல. ஒரு விஷயத்தில் பிறருக்கு ஆலோசனை வழங்கும் நீங்கள், அதே விஷயத்தில் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்பதை உங்களுக்கு உணர்த்துவதே என் நோக்கம்.
உங்கள் தளத்தின் விவாதத்திற்கு நான் இங்கு பதிலளித்தது எனக்குத் தகுதியானதல்ல எனக் கூறுகிற சகோதரரே, Truth Seekars-ல் நான் எழுதியதைத் தவறாகப் புரிந்துகொண்டு, அதன் அடிப்படையில் மார்ஸ் மேடை விவாதத்தில், “நியாயப்பிரமாணத்தை யாரிடம் விற்கப்போகிறீர்கள்” என என்னிடம் நீங்கள் கேள்வி கேட்டதையும், Truth Seekers-ல் நான் எழுதின மேலும் பல விஷயங்களின் அடிப்படையில் மார்ஸ் மேடையில் நீங்கள் என்னுடன் விவாதித்ததையும் மறந்துவிட்டீர்களா?
என்னைப் பொறுத்தவரை, எனது பத்திரிகை இணையதளம் போன்ற எந்த ஊடகத்தில் நான் எழுதியதானாலும், எந்த விவாத மேடையில் எழுதியதானாலும், எந்த இடத்தில் நான் பேசியதானாலும் அதிலுள்ள எந்த விஷயம் பற்றியும் எந்த இடத்தில்/ஊடகத்தில் கேள்வி கேட்டாலும் விமர்சித்தாலும் அதற்கு நான் பதிலளிக்கத் தயாராக உள்ளேன்.
இடம்/ஊடகம் வேறுபட்டாலென்ன? எழுதியது/பேசியது நானாக இருக்கையில், அதைக் குறித்த கேள்விகளையும் விமர்சனங்களையும் எந்த இடத்திலும் எதிர்கொள்வதுதானே நியாயம்?
உங்களை நான் தவிர்ப்பது உண்மை. ஆனால் உங்கள்மீது எனக்குத் தனிப்பட்ட கசப்பு கிடையாது. உங்களை நான் தவிர்ப்பதற்கான காரணத்தை ஏற்கனவே கூறியுள்ளேன். மீண்டும் இப்போது சொல்கிறேன். உங்கள் எழுத்தில் நாகரீகக் குறைவு, பரியாசம் அதிகமாக உள்ளது. பரியாசத்தை வேதாகமம் அதிகமாக வெறுக்கிறது, நானும் வெறுக்கிறேன். விவாதத்திற்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களையும் அடிக்கடி எழுதி, விவாதம் திசைதிரும்பக் காரணமாகிவிடுகிறீர்கள்.
விவாதத்திற்கு சம்பந்தமில்லாத உங்களின் பல பதிவுகளுக்கு பதில் கூறிக்கொண்டே போகலாம். ஆனால் நேரம்தான் விரயமாகும். எனவே இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.
-- Edited by anbu57 on Thursday 21st of January 2010 01:14:55 PM