இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்த்தவர்களுக்கு பாடுகள் ஏன்


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
RE: யோபுவின் பாடுகளுக்கு யார் பொறுப்பு?
Permalink  
 


anbu57 wrote:
விவாதத்திற்கு சம்பந்தமில்லாத உங்களின் பல பதிவுகளுக்கு பதில் கூறிக்கொண்டே போகலாம். ஆனால் நேரம்தான் விரயமாகும். எனவே இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

-- Edited by anbu57 on Thursday 21st of January 2010 01:14:55 PM

மிக சரியான முடிவு!
 
இனி தயவுசெய்து "இந்த விவாதம் தேவையா?" என்பது குறித்து யாரும் இங்கு பதிய வேண்டாம் பதிந்தால் நீக்கப்படும்!  விரும்பினால் வேறு ஒரு தலைப்பில் விவாதம் ஆரம்பித்து அங்கு பதியவும்!
 
தேவையற்ற விவாதங்கள் இங்கு இருப்பதை நான் விரும்பவில்லை அதை பல தளங்களில் பார்த்து அலுத்துபோய் விட்டது.
 
தலைப்புக்கு ஏற்றாற்போல் தொடர்புடைய கருத்துக்களை புரியும் வண்ணம் சொல்லவிரும்பினால் சொல்லலாம் விருப்பமில்லை என்றால் விட்டுவிடலாம்.  எது தேவை எது தேவையற்றது என்பது அவரவர் முடிவு செய்யவேண்டியது. தேவையற்றதை விட்டு விலகியிருப்பதே நல்லது.
 

 



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

sundar wrote:
//"நீதிமான்" என்பது வேறு நியாயபிரமாணத்தின்படி நடப்பது என்பது வேறு என்றே நான் கருதுகிறேன். நியாயபிரமாணத்தின் படிசெய்தால் தீமை உங்களைஅணுகாது  ஈளை காய்ச்சல் நோய் நொடி வராது 

பகைஞர் யாரும் உருகாவமாடார்கள் என்று சொல்வது தேவன்தான்.  'கற்பனையை கைகொள்பவன் ஒரு தீங்கையும் அறியான்" என்று சொல்வதும் வேத வார்த்தைதான்.//


நீதிமானுக்கு வரும் துன்பம் அநேகமாயிருக்கும் எனும் வசனத்தைச் சுட்டிக்காட்டினால், நீதிமான் வேறு நியாயப்பிரமாணத்தின்படி நடப்பது வேறு என்று சொல்லி, நீதிமானுக்குத் துன்பம் வரக்கூடும்தான்,

ஆனால் நியாயப்பிரமாணத்தின்படி நடப்பவர்களுக்கு துன்பம் வராது என்கிறீர்கள். சரி சகோதரரே, உங்கள் கூற்றை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், யோபுவின் காலத்தின் நியாயப்பிரமாணம் கொடுக்கப்படவில்லையே! இதைத்தான் நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.

கொடுக்கப்படாத நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படியாததற்காக யோபுவை எப்படி தண்டிக்கமுடியும் என்பதுதான் என் கேள்வி.

sundar wrote:
//முகாந்திரம் இல்லாமல் ஒரு தீமையும் செய்யாத ஒருவனை தேவன் சாத்தான் கையில் வேதனையான சோதனைக்கு ஒப்புகொடுக்கமாடார் என்றே கருதுகிறேன்!//

யோபு ஒரு தீமையும் செய்யாதவர் என்பதோடு, அதிகமான நன்மைகளைச் செய்தவருங்கூட. நியாயப்பிரமாணத்தைக் கொடுத்த இஸ்ரவேலரிடம், தேவனும் அவரது தாசர்களும் மீண்டும் மீண்டும் கூறியது, “தீமையை வெறுத்து நன்மையைச் செய்” என்பதுதான் (சங்கீதம் 34:14; 37:27; ஏசாயா 1:16,17; ஆமோஸ் 5:14,15; மீகா 6:8).

நியாயப்பிரமாணத்தின் அனைத்துக் கற்பனைகளும், தீமையை வெறுத்தல் மற்றும் நன்மையைச் செய்தல் என்பதை அடிப்படையாகக் கொண்டவைகளே. அதனால்தான், யோபு கைக்கொண்ருக்க மாட்டார் என நீங்கள் கருதுவதான ஒரு தேவகட்டளையைக் கூறும்படி இவ்விவாதத்தின் துவக்கத்தில் நான் கேட்டிருந்தேன். நீங்களோ, ஓய்வுநாள் ஆசரித்தல், தசமபாகம் கொடுத்தல் என்கிற கட்டளைகளை யோபு கைக்கொண்டிருக்க மாட்டார் என்கிறீர்கள்.

சரி, நீங்கள் சொல்கிறபடியே அவ்விரு கட்டளைகளையும் எடுத்துக் கொள்வோமே! ஓய்வுநாள் கட்டளை என்ன சொல்கிறது? ஓய்வுநாளை பரிசுத்தமாய் ஆசரிக்கவேண்டும், அந்நாளில் வேலைக்காரர் உட்பட யாரும் வேலைசெய்யக்கூடாது என்பதுதானே (யாத். 20:8-10)? இக்கட்டளை கூறுகிற ஓய்வுநாளைக் குறித்து யோபு அறிந்திருந்தாரா என்பது வேதாகமத்தில் கூறப்படவில்லை. ஒருவேளை அறிந்திருந்தால், நிச்சயமாக அந்நாளுக்கு யோபு முக்கியத்துவம் கொடுத்திருப்பார். ஏனெனில் யோபு தேவனுக்குப் பயந்தவன் என தேவனே சாட்சி சொல்லியுள்ளார்.

ஒருவேளை ஓய்வுநாளைக் குறித்து யோபு அறியாவிட்டாலுங்கூட அக்கட்டளைப்படி யோபு நடந்திருப்பார். இது எப்படியாகும்? தேவனுக்குப் பயந்தவரான யோபு, விபசாரம் எனும் பாவத்தில் வீழ்ந்து விடாதிருக்க தன் கண்களோடு உடன்படிக்கை செய்ததாகக் கூறுகிறார் (யோபு 31:1). அதாவது ஒரு ஸ்திரீயை இச்சையுடன் பார்ப்பதுகூட விபசாரம் என பல ஆயிர வருடங்களுக்குப்பின் இயேசு கூறியதை, அந்நாளிலேயே அறிந்து அவ்விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையாயிருந்தார். இப்படிப்பட்ட யோபு பரிசுத்தத்திற்கு விரோதமான ஏதேனும் ஒரு செயலை எப்போதாவது செய்திருப்பாரா? நிச்சயமாக மாட்டார். எனவே ஓய்வுநாளான 7-ம் நாளில் மட்டுமின்றி, மற்றெல்லா நாட்களிலும் யோபு பரிசுத்தமாகத்தான் இருந்திருப்பார். ஒருவேளை யோபு தன் வாயால் சொன்னபடி, அவரது சிறுவயதில், அவர் அக்கிரமங்களைச் செய்திருப்பார் (யோபு 13:26). மற்றபடி தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிற அறிவை அவர் பெற்றபிறகு, அவர் பரிசுத்தத்திற்கு விரோதமாக நடந்திருக்கமாட்டார்.

அடுத்து, ஓய்வுநாளில் யோபுவும் அவரது குடும்பத்தாரும் வேலையாட்களும் வேலைசெய்திருப்பார்களா என்பதைப் பார்ப்போம். வாரத்திற்கு ஒரு நாள் ஓய்வெடுக்க வேண்டும் என்பதை தேவனை அறியாத ஜனங்களே அறிந்திருக்கும்போது, கடைசிநாளில் மீட்பராகிய இயேசு பூமியின்மேல் நிற்பார் என்பதை அறியுமளவு தேவஞானம் பெற்றிருந்த யோபு (யோபு 19:25), வாரமொரு நாள் ஓய்வெடுக்கவேண்டும் என்பதை நிச்சயமாக அறிந்திருப்பார். அது மட்டுமல்ல, தன் வேலைக்காரரின் நியாயத்தை அசட்டை பண்ணாத அவர் (யோபு 31:13), அவர்களுக்கும் வாரமொரு நாள் நிச்சயமாக ஓய்வு கொடுத்திருப்பார். இவ்விதமாக ஓய்வுநாள் கட்டளையின் முக்கியமான சாராம்சத்தை, யோபு நிச்சயமாக நிறைவேற்றியிருப்பார். ஒருவேளை சரியாக 7-ம் நாளில் யோபுவும் அவரோடிருந்தவர்களும் ஓய்வெடுக்காவிட்டாலும், வாரத்தின் ஏதேனும் ஒரு நாளில் அவரும் அவரோடிருந்தவர்களும் நிச்சயமாக ஓய்வெடுத்திருப்பார்கள்.

இவ்வாதத்தை ஏற்க உங்களுக்கு மனதில்லாவிட்டால், வேறொரு வாதத்தை வைக்கிறேன். ஓய்வுநாள் கட்டளையை மீறுபவன் கொலை செய்யப்படவேண்டும் என்பது தேவகட்டளையாகும் (எண். 35:2). எனவே, ஓய்வுநாளை ஆசரிக்காத யோபுவை தேவன் தண்டிக்க நினைத்திருந்தால், அவர் யோபுவைக் கொன்றிருக்கவல்லவா வேண்டும்? ஆனால், யோபுவின் உயிரை எடுக்க தேவன் சாத்தானை அனுமதிக்கவில்லையே? எனவே, தேவன் யோபுவை சாத்தானிடம் ஒப்படைத்ததற்குக் காரணம், அவர் ஓய்வுநாளை ஆசரிக்கத் தவறியதல்ல என அறிகிறோம்.

அடுத்து, தசமபாகக் கட்டளை என்ன சொல்கிறது? தேசத்தில் பங்கும் சுதந்தரம் இல்லாத லேவியரையும் திக்கற்றவரையும் விதவைகளையும் பரதேசிகளையும் தசமபாகத்தால் ஆதரிக்கவேண்டும் என்பதுதானே (உபாகமம் 14:22-29)? ஒருவேளை யோபுவின் நாட்களில் லேவியர் இருந்திருந்தால், தசமபாகத்திற்கும் அதிகமாகவே கொடுத்து யோபு அவர்களை ஆதரித்திருந்திருப்பார். ஏனெனில் தன் பகைவனின் இனத்தார்கூட திருப்தியில்லாதிருக்க யோபு இடங்கொடுக்கவில்லை (யோபு 31:29-31). அப்படிப்பட்ட அவர் லேவியரை ஆதரிக்காமல் கைவிட்டிருப்பாரா?

யோபு 29:12,16; 30:25; 31:16-22,32 வசனங்களைப் படித்துப்பார்த்தால் திக்கற்றவர்களுக்கும் விதவைகளுக்கும் பரதேசிகளுக்கும் தசமபாகத்திற்கும் அதிகமாகவே யோபு கொடுத்திருப்பார் என அறிகிறோம்.

எனவே யோபுவின் துன்பங்களுக்குக் காரணம், ஓய்வுநாள் ஆசரியாதிருத்தல் மற்றும் தசமபாகம் கொடாதிருத்தல் ஆகியவைகளாக இருக்கமுடியாது.

இன்னும் யோபுவைக் குறித்த சாட்சி வேண்டுமெனில், எசேக்கியேல் 14:14-ஐயும் படித்துப் பாருங்கள். இவ்வளவாய் சாட்சி பெற்ற யோபு, தேவகட்டளையில் ஏதாவது ஒன்றை மீறியிருப்பார் என எப்படிக் கூறமுடியும்?

கற்பனைகளைக் கைக்கொள்கிறவன் ஒரு தீங்கையும் அறியான் எனும் வசனத்தைச் சுட்டிக்காட்டினீர்கள். ஆம், கற்பனைகளைக் கைக்கொண்ட யோபுவுங்கூட ஒரு தீங்கையும் அறியவில்லை என்பதே உண்மை. யோபு 1:21; 2:10-ஐப் படித்துப் பாருங்கள். யோபு தனக்கு நேர்ந்த துன்பங்களில் எதையும் ஒரு தீங்காகவே நினைக்கவில்லை என்பதை அவ்வசனங்களிலிருந்து அறியலாம். அவரது நண்பர்கள் வந்து, அழுது துக்கித்தபின்னர்தான் யோபு கலங்கினார். அதன்பின்னர்கூட தேவனைக் குறித்த நம்பிக்கையோடுதான் அவர் இருந்தார் (யோபு 19:25-27).

நம்பிக்கையில் சந்தோஷமாயிருங்கள், உபத்திரவத்தில் பொறுமையாயிருங்கள் என பவுல் கூறியபடியே (ரோமர் 12:12), தனக்கு நேர்ந்த தீங்குகளை ஒரு பொருட்டாய் கருதாமல் யோபு பொறுமையோடுதான் இருந்தார். தன் நண்பர்களினிமித்தம் யோபு சற்று கலங்கியவராகத் தோன்றினாலும், அவரது துன்பங்கள் அவரை வெகுவாகப் பாதிக்கவில்லை என்பதற்கு யோபு 1:21; 2:10 வசனங்கள் ஆதாரமாயுள்ளன.

தேவன்மேல் மெய்யான நம்பிக்கையுள்ள விசுவாசிகள், இவ்வுலக இழப்புகளை அற்பமாகக் கருதுவார்கள் என்பதால்தான் கற்பனைகளைக் கைக்கொள்கிறவன் ஒரு தீங்கையும் அறியான் என வேதாகமம் கூறுவதாக நான் கருதுகிறேன். இன்னும் எழுத நிறைய உண்டு.


-- Edited by anbu57 on Friday 22nd of January 2010 08:25:49 AM

-- Edited by anbu57 on Friday 22nd of January 2010 09:30:22 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

யாக்கோபு 1:13-ன் மொழிபெயர்ப்பில் ஒரு தவறு இருப்பதாகத் தோன்றுகிறது. அதன் காரணமாக, அவ்வசனத்தின் கருத்தை சகோ.சுந்தர் தவறாகப் புரிந்துகொண்டதாகவும் தோன்றுகிறது.

யாக்கோபு 1:2-4; 12-14 வசனங்களில் 2 விதமான சோதனைகளை யாக்கோபு கூறுகிறார்.

1. துன்பங்களின் மூலம் விசுவாசத்தையும் பொறுமையையும் சோதிக்கிற சோதனை (யாக்கோபு 1:2-4 மற்றும் 12-ம் வசனங்களில் கூறப்பட்டுள்ள சோதனை)
2. இச்சையைத் தூண்டி பாவத்திற்குள் விழச் செய்யும் சோதனை (யாக்கோபு 1:13,14 வசனங்களில் கூறப்பட்டுள்ள சோதனை)


இவற்றில் 1-வது விதமான சோதனைக்கு peirasmos என்ற கிரேக்க வார்த்தையும், 2-வது விதமான சோதனைக்கு peirazo என்ற கிரேக்க வார்த்தையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

peirasmos என்பதின் அர்த்தம், ‘நிரூபிப்பதற்கான சோதனை’ (putting to proof (by experiment [of good], experience [of evil], solicitation, discipline or provocation); by implication, adversity) என அகராதி கூறுகிறது.

peirazo என்பதின் அர்த்தம் to test (objectively), i.e. endeavor, scrutinize, entice, discipline என அகராதி கூறுகிறது. இதன்படி, peirazo என்பதின் அர்த்தம் ‘சோதனைக்குள்ளாகுதல்’ என நான் புரிந்துகொண்டுள்ளேன்.

அதாவது peirasmos என்பதின் அர்த்தம் நம் விசுவாசம் அல்லது பொறுமை நிரூபிக்கப்படுவதற்கான சோதனை என்றாகிறது.

ஆனால், peirazo என்பதின் அர்த்தம், இச்சை போன்ற ஏதோ ஒன்றால் கவரப்பட்டு நாமாக சோதனைக்குள்ளாகுதல் என்றாகிறது.

எனவே யாக்கோபு 1:13,14 வசனங்கள் பின்வருமாறு மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் பொருத்தமாகவும், அவற்றின் சரியான கருத்தை நாம் புரிந்துகொள்வதற்கு ஏதுவானதாகவும் இருந்திருக்கும்.

யாக்கோபு 1:13,14  சோதனைக்குள்ளாகிற எவனும், தேவன் தன்னை சோதனைக்குள்ளாக்குகிறார் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதனைக்குள்ளாகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதனைக்குள்ளாக்குகிறவருமல்ல. அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதனைக்குள்ளாகிறான்.

இப்போது இவ்வசனங்களிலுள்ள கருத்துத் தெளிவை நீங்கள் எளிதில் புரிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். இதே கருத்துத் தெளிவை NIV ஆங்கில மொழிபெயர்ப்பும் தருகிறது.

James 1:13,14 When tempted, no one should say, "God is tempting me." For God cannot be tempted by evil, nor does he tempt anyone; but each one is tempted when, by his own evil desire, he is dragged away and enticed.

இவ்விதமாக 13,14 வசனங்களை மொழிபெயர்த்துள்ள NIV வேதாகமம், 12-ம் வசனத்தை மொழிபெயர்த்துள்ளதையும் சற்று படித்துப் பாருங்கள்.

James 1:12 Blessed is the man who perseveres under trial, because when he has stood the test, he will receive the crown of life that God has promised to those who love him.

இப்போது, 12-ம் வசனத்தின் சோதனைக்கும் 13-ம் வசனத்தின் சோதனைக்குமுள்ள வித்தியாசம் புரிகிறதா? நம் தமிழ் வேதாகமத்தைப் படிக்கும்போது, 12-ம் வசனமும் 13-ம் வசனமும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை போல் காணப்படுவதால்தான் யோபுவுக்கு நேர்ந்த சோதனை தேவனால் வந்ததல்ல, யோபுவால்தான் வந்தது எனும் முடிவுக்கு நீங்கள் வந்துள்ளீர்கள்.

யோபுவுக்கு வந்தது 13-ம் வசனத்தில் கூறப்பட்டுள்ள சோதனை அல்ல. ஏனெனில் யோபு இச்சைக்குள்ளாகி பாவம் செய்ய முற்பட்டதாக அவரது சரித்திரத்தின் ஒரு வசனமும் கூறவில்லை. 13-ம் வசனத்தின் சோதனைக்கும் யோபுவுக்கும் சற்றும் சம்பந்தமில்லை.

யோபுவின் சோதனை, முழுக்க முழுக்க 3,12-ம் வசனங்களில் கூறப்பட்டுள்ள சோதனையாகும். இச்சோதனையை தேவனே வருவிப்பதாக பின்வரும் வசனங்கள் கூறுகின்றன.

உபாகமம் 8:2,3,15 உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக. அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்.
உன்னுடைய பின்நாட்களில் உனக்கு நன்மை செய்யும்பொருட்டு, உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைச் சோதித்து, கொள்ளிவாய்ச் சர்ப்பங்களும் தேள்களும், தண்ணீரில்லாத வறட்சியுமுள்ள பயங்கரமான பெரிய வனாந்தரவழியாய் உன்னை அழைத்துவந்தவரும், உனக்காகப் பாறையான கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணினவரும், உன் பிதாக்கள் அறியாத மன்னாவினால் வனாந்தரத்திலே உன்னைப் போஷித்துவந்தவருமான உன் தேவனாகிய கர்த்தரை நீ மறவாமலும், என் சாமார்த்தியமும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து, உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக

உபாகமம் 4:34 உங்கள் தேவனாகிய கர்த்தர் எகிப்திலே உங்கள் கண்களுக்கு முன்பாக உங்களுக்குச் செய்தபடியெல்லாம் தேவன் அந்நிய ஜாதிகளின் நடுவிலிருந்து ஒரு ஜனத்தைச் சோதனைகளினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், யுத்தத்தினாலும், வல்லமையுள்ள கரத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரமான செயல்களினாலும், தமக்கென்று தெரிந்துகொள்ள வகைபண்ணினதுண்டோ என்று நீ விசாரித்துப்பார்.

ஆதியாகமம் 22:1; யாத்திராகமம் 15:25,26; சங்கீதம் 11:5; 26:2; 66:10; 81:7 வசனங்களையும் சற்று படித்துப் பாருங்கள். பின்னாளில் கொடுக்கப்போகிற ஒரு மேலான நன்மைக்காக, இந்நாளில் தேவன் தமது பிள்ளைகளை வருத்தத்தால் சோதிப்பார் என்பதே உண்மை. இதேவிதமாகத்தான் யோபுவையும் தேவன் சோதித்தார். ஆகிலும், யோபுவைச் சோதிக்க அவராக சித்தப்படவில்லை. சாத்தான் யோபுவின் விசுவாசத்தைக் குறித்து சந்தேகக் கேள்வி எழுப்பியதால்தான் சாத்தானிடம் யோபுவைச் சோதிக்க ஒப்புக்கொடுத்தார். எனவே யோபுவின் பாடுகளுக்குக் காரணம் சாத்தான்தான்.

ஆகிலும், இஸ்ரவேலரைத் தேவன் வருத்தத்தால் சோதித்ததாக வேதாகமம் கூறுவதால், தேவனே நேரடியாகவும் தமது பிள்ளைகளை வருத்தத்தால் சோதிப்பார் என்பது உண்மையே. தேவனின் நோக்கம் முடிவைப் பற்றியதாகவே இருப்பதால், தற்காலத்தில் தமது விசுவாசிகளுக்கு சில பாடுகளை அவர் அனுமதிக்கத்தான் செய்கிறார். தற்கால பாடுகள் இனிவரும் மகிமைக்கு ஒப்பானதல்ல என்றும், அவரோடு பாடுகளைச் சகித்தால் அவரோடு ஆளுகையும் செய்வோம் என்றும், தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கிறது என்றும் பவுல் கூறுவதை நினைவுபடுத்திக் கொள்வோம் (ரோமர் 8:18,28; 2 தீமோ. 2:12).

பாடுகளைச் சந்தித்த யோபு, இறுதியில் தனக்கு நன்மையே நேரும் என்ற நம்பிக்கையில் இருந்ததால், “அவர் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்” என உறுதியுடன் கூறினார் (யோபு 23:10).

இவ்விஷயத்தில் எழுத இன்னும் சில காரியங்கள் உண்டு.


-- Edited by anbu57 on Friday 22nd of January 2010 09:37:50 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

இந்த திரியில் யோபுவின் பாடுகளோடு கிறிஸ்த்தவர்களின் பாடுகளுக்கு காரணம்  பற்றியும் விவாதிக்கப்படுவதால்  திரியின் தலைப்பு  "கிறிஸ்த்தவர்களுக்கு பாடுகள் ஏன்" என்று மாற்றப்படுகிறது!
   


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
கிறிஸ்த்தவர்களுக்கு பாடுகள் ஏன்
Permalink  
 


ANBU WROTES:
////எனவே யோபுவின் துன்பங்களுக்குக் காரணம், ஓய்வுநாள் ஆசரியாதிருத்தல் மற்றும் தசமபாகம் கொடாதிருத்தல் ஆகியவைகளாக இருக்கமுடியாது.////
 
இந்த கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன் ஏனெனில் "சோதிக்கப்படுப்வன் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லகூடாது" என்று வசனம்  சொல்லியிருப்பதால்,   இதை ஒரு அனுமானத்தின் அடிப்படையிலேயே சொன்னேன்.   தங்களின் மொழி பெயர்ப்பு  விளக்குதலுக்கு நன்றி. 
 
ANBU WROTES:
////யோபு 29:12,16; 30:25; 31:16-22,32 வசனங்களைப் படித்துப்பார்த்தால் திக்கற்றவர்களுக்கும் விதவைகளுக்கும் பரதேசிகளுக்கும் தசமபாகத்திற்கும் அதிகமாகவே யோபு கொடுத்திருப்பார் என அறிகிறோம்.

இன்னும் யோபுவைக் குறித்த சாட்சி வேண்டுமெனில், எசேக்கியேல் 14:14-ஐயும் படித்துப் பாருங்கள். இவ்வளவாய் சாட்சி பெற்ற யோபு, தேவகட்டளையில் ஏதாவது ஒன்றை மீறியிருப்பார் என எப்படிக் கூறமுடியும்?///
 
யோபு உத்தமன் என்று தேவனே சாட்சி கொடுத்தபிறகு அவன் துன்மார்க்கன் என்று தீர்ப்பது எனது நோக்கமல்ல.  நீதிமான் என்ற பதத்துக்கு ஒரு பாவமும் செய்யாதவன் என்று பொருள் கொள்ள முடியாது என்றே கருதுகிறேன் "ஏனெனில் ஒரு பாவமும் செய்யாத நன்மை மட்டுமே செய்யும் மனிதன் யாருமே இங்கு இல்லை" என்று வேதமே சொல்கிறது.    துன்மார்க்கம் நிறைந்த உலகில் தேவனுக்கு பயந்து   ஓரளவு உத்தமனாக  நடப்பவனை தேவன் சன்மார்க்கன் அல்லது நீதிமான் என்று குறிப்பிடுகிறார். அதுபோல் யோபுவும் நீதிமானே!

ANBU WROTES
////யோபு 1:21; 2:10-ஐப் படித்துப் பாருங்கள். யோபு தனக்கு நேர்ந்த துன்பங்களில் எதையும் ஒரு தீங்காகவே நினைக்கவில்லை என்பதை அவ்வசனங்களிலிருந்து அறியலாம். அவரது நண்பர்கள் வந்து, அழுது துக்கித்தபின்னர்தான் யோபு கலங்கினார். அதன்பின்னர்கூட தேவனைக் குறித்த நம்பிக்கையோடுதான் அவர் இருந்தார் (யோபு 19:25-27)////
 
நல்லது சகோதரரே! தேவன்பேரில்  விசுவாசமுள்ள   யாருமே ஒருசில  நாட்கள் துன்பத்தை தாக்குபிடிக்கத்தான் செய்வார்கள். பல நாள் ஆகியும்  பலன் எதுவும் கிடைக்காதபோது கண்டபடி புலம்பி தவிப்பதுபோல் யோபுவும் தவித்தான். ஆனால் அவன் தவறாகவோ அல்லது தேவனுக்கு விரோதமாகவோ பேசவில்லை என்பது  உண்மை!
 
ஆனால் நான் ஆராய விரும்புவது,  யோபுவுக்கு வந்த சோதனைக்கு அடிப்படை   காரணம்  என்ன? என்பதுதான்.      
 
தேவன் சோதனைக்கு அனுமதிப்பார் என்ற கருத்தை நானும்  ஏற்றுக்கொண்டிருக்கிறேன் ஆனால் எந்த முகாந்திரமும் இல்லாமல் ஒருவனை சோதிக்க மாட்டார்!  என்ற எனது கருத்தை நிலைநிறுத்த சில  காரியங்களை  அலச விரும்பி   சாத்தான்  யோபுவை குறித்து கூறும் புகார்களை கொஞ்சம் ஆழமாக ஆராய   விரும்புகிறேன்!
 
முதலாவது சாத்தான் யோபுவை குறித்து சொல்லும் புகார்:

10நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று.
11 ஆனாலும் உம்முடைய கையை நீட்டி அவனுக்கு உண்டானவையெல்லாம் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும் என்றான்.
 
இங்கு சாத்தான் யோபுவின்மேல் கூறும்குற்றச்சாட்டு அவன் பணக்காரனாக  இருக்கிறான்  வசதியாக வாழ்கிறான் அதை நீர் பிடுங்கும் என்பதுதான்.    
 
எப்பொழுது ஆதாம் பாவம் செய்தானோ அன்றோடு தனக்கு ஆண்டவர் கொடுத்த எல்லாவற்றும்  சாத்தானிடம்  இழந்துபோனாள். உலகில்  உள்ள  எல்லாம் 
சாத்தனுக்கு சொந்தம் என்பதை கீழ்க்கண்ட வசனம் மூலம் அறியலாம்.
 
5 பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து: 6 ....., இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன்.
 
இங்கு பிசாசுக்கு சொந்தமான அனேக செல்வங்களை யோபு அனுபவித்து  சுகபோகமாக வாழ்ந்ததால்தான் சாத்தானும்  தேவனிடம்  அவனைப்பற்றி  பிராது பண்ண முடிந்தது! அவரும்  அவனை  எல்லாவற்றையும்  பிடுங்கி சோதிக்கும்படி அனுமதிக்க நேர்ந்தது.  உலக செல்வத்தை அதிகம் அனுபவித்து வாழ்வது சோதனைக்கு வழிவகுக்கும் வேதனையை கொண்டுவரும்  என்பதால்தான் ஆண்டவராகிய இயேசு  செல்வமாய்  வாழ்ந்தவன் ஒருவனிடம்  "நித்யஜீவனை அடைய நீ  கற்பனையை கைகொண்டால்  மட்டும்  போதாது எல்லாவற்றையும் விற்று தரித்திரனுக்கு   கொடுக்கவேண்டும்" என்று கட்டளையிடார்.
 
எனவே சாத்தனுக்கு சொந்தமான செல்வங்களை அதிகமாக அனுபவித்து வாழ்ந்ததே யோபுவுக்கு சோதனையை கொண்டுவந்தது.  அதுதான் யோபுவின் சோதனைக்கு முதல் காரணம்.   அதில் அவன் பொறுமையோடு ஜெயித்தான் அது அடுத்த விஷயம்.
 
இரண்டாவதாக சாத்தான் கூறும் புகார்.
 
4 சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: தோலுக்குப் பதிலாகத் தோலையும், தன் ஜீவனுக்குப் பதிலாகத் தனக்கு உண்டான எல்லாவற்றையும், மனுஷன் கொடுத்துவிடுவான். 5 ஆனாலும் நீர் உம்முடைய கையை நீட்டி, அவன் எலும்பையும் அவன் மாம்சத்தையும் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும் என்றான்.
 
ஆதாமின் பவம் காரணமாக பூமியில் பிறக்கும் எல்லோரும் பாவத்தில் பிறக்கிறோம் "என் தாய் என்னை பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்" என்று தாவீதும் "என் மாமிசத்தில் பாவம் குடிகொண்டுள்ளது" என்று பவுலும் அக்கலாய்கின்றனர்.
 
அத்தோடு ஒரே ஒரு மீறுதல் செய்த மேசேயின் சரீரத்தை கூட தனக்குத்தான் சொந்தம் என்று சொந்தம்  கொண்டாடி  சாத்தான் தூதனிடம் தர்க்கித்ததாக  வேதம் கூறுகிறது.  அப்படியெனில் இந்த பாவமாமிச உடம்பு சாத்தானுக்குதான்  சொந்தம்  என்பது எல்லோருக்கும்  புரியும்.
 
மனிதன் பிறக்கும்போதே  பாவத்தில் பிறப்பதால்தான் எந்த  பாவமும் அறியாத   பச்சிளம்  குழந்தையாக இருக்கும்போதிலிருந்தே அதற்க்கு வேதனையும் துன்பமும் வருகிறது.  அது மனிதன் செய்த பாவத்தின் விளைவேயன்றி தேவரகசியம் என்றோ  தேவன் காரணமின்றி அனுமதிக்கிறார் என்றோ கூறமுடியாது.  எனவே ஒருவருக்கு காரணம் கூறித்தான் துன்பத்தை கொடுக்கவேண்டும் என்ற கருத்து சரியானது அல்ல. பிறக்கும்போதே பாவத்தில் சாத்தனுக்கு சொந்தமான  பாவ மாமிசத்தில் பிறக்கும் நாம் அவனுக்கு சொந்தமான  பூமியில் அவனுக்கு சொந்தமான மாமிசத்தில் பிறப்பதால்,  எந்த காரணமும் சொல்லாமலா நம்மை அவன் சோதிக்க அல்லது தண்டனைக்குட்படுத்த முடியும் என்றே நான் கருதுகிறேன்.       
 
இந்நிலையில் தனக்கு சொந்தமான பணத்தில் வளர்த்த  தனக்கு சொந்தமான மாமிசத்தை கொண்டுள்ள யோபுவை சாத்தான் சோதிக்கும்படி அனுமதி கேட்கிறான்  கர்த்தர் அனுமதி கொடுக்க, முடிந்த அளவு வேதனையை கொடுத்து இறுதியில் யோபு வெற்றிபெற சாத்தான் தோற்கிறான்.
 
இங்கும் யோபு சாத்தனுக்கு சொந்தமான உலக பொருளில் தனது உடம்பை வளர்த்ததும் சாத்தனுக்கு சொந்தமான உலகில் மாமிசமாக பிறந்ததும்தான் இரண்டாவது காரணம்
 
இப்படி முகாந்திரமில்லாமல் மாமிசத்தில் வேதனையை கொடுக்கும் சாத்தானின் செயலை தேவனால் சகிக்க முடியாமல்தான் அனைவரும் அனுபவிக்க வேண்டிய தண்டனைக்காக  தானே மாமிசமாக வந்து,  நாம் ஏற்க்க வேண்டிய தண்டனையை அவர் ஏற்றார்!  சாத்தானும் தன்னிடம் உள்ள எல்லா கோபத்தையும் அவர்மேல் கொட்டி தீர்த்து அணு அணுவாக சித்ரவதை செய்து கொன்றான் ஆனால் நம்  ஆண்டவர் அனைத்தையும் சாந்தத்தோடு சகித்து ஆத்துமாவுக்கு மட்டுமல்ல  நமது மாமிசத்துக்கும் சேர்த்தே மீட்பை வாங்கி கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில்தான் தாவீது

"தேவனாகிய கர்த்தரால் மரணத்துக்கு நீங்கும் வழிகள் உண்டு" என்றும்
ஆண்டவராகிய இயேசு 
"ஒருவன் என் வார்த்தையை கைகொண்டால் என்றென்றும் மரணத்தை காண்பதில்லை" என்றும்  
பவுல் 
"இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பியவருடைய ஆவி உங்களில் வாசமாக இருந்தால் அவர் சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தையும் உயிர்ப்பிப்பார்" என்றும் உறுதியாக் கூறுகின்றனர்  
 
எனவே  யோபுவின் பாடுகளுக்கு  ஆதாமின்  மீறுதலும் அதை தொடர்ந்து அனைத்து   மனிதன் பாவத்துக்கு அடிமையானதும்தான் காரணமேயன்றி தேவன் எவ்விதத்திலும் காரணம் அல்ல! அல்ல! அல்ல!.  என்று கூறி என் வாதத்தை முடிக்கிறேன்.       
 
 


-- Edited by இறைநேசன் on Friday 22nd of January 2010 08:50:29 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

chillsam wrote:

தலைப்புக்குப் பொருத்தமான கருத்து மட்டுமே அனுமதிக்கப்படும் என்று அறிவித்த தலைவர் திடீரென த்லைப்பையே மாற்றிவிட்டால் தொண்டர்கள் என்ன செய்வர்?

அவ்வளவு உழைப்பும் வீணாகிப்போனதே..!

காற்றில் அசைந்தாடும் நாணல் ஆகாயத்தில் சிலம்பம் பண்ணப்போனதாம்..!

அதுபோல....



நண்பர் சில்சாம்!

அவசரப்படாமல் தலைப்புடன் சேர்த்து முதல் பதிவையும் சற்று படித்து பாருங்கள் அதன்பின் கருத்து கூறுங்கள்.
 

 



__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink  
 

Although, I don’t want to say anything about what is the reason for sufferings in Christians life I want to answer who is responsible for sufferings of the Job. Nothing wrong with Job. He is blameless as God said.

There is nothing wrong to ask this question and to find the answer. But this answer cannot be related with the sufferings of today Christians. how? read it to know

 

 

From my view God is responsible for Job’s sufferings.

 

 

Why and for what god allowed Job to suffer? now  i will explain.

 

 

1. God knows about everything before anything is going to happen in future. HE knows about all things and about all  persons life (it is known as unmanifest view of God). HE knows about fall of angel (satan) and fall of adam before the incidents.

2. Due to his strength and pride satan thought that he can separate human from God if God is not saving the man.  He also thought that he is the winner in human life because he already cheated adam and eve.

3. God want to show his thinking and his pride is wrong and human have the strength to win over satan

4. If one man wins over satan it indicates whole humanity won over satan. So job represents the whole humanity

5. God just allowed things to happen because everything is HIS and everything is for HIM and HE can do everything whatever HE wants. HE is not doing justice but whatever HE do that is going to be the justice (To understand this great and deep revelation is required)

6. As God knows before, Job defeated satan and it is satan's first defeat in front of man

7. Through Job whole humanity defeated satan

8. God announced the winning of humanity over satan even before the coming of Christ that means satan is going to be the very , very, very big loser after the coming of Christ.

9. One man is enough to show the victory of humanity so God never given this type of testing to any man

10. Job understood Gods reason for his suffering and he praised the God

11. Don't relate suffering of Job to any sufferings of today’s man. It is totally unique and it is arranged by God to announce the victory of humanity over satan.

12. Nobody can argue about the justice with God because whatever HE is doing that is going to be justice. Everything and everyone is for HIM and in HIM.

 

 

Now I am going to rise another question (I know the answer but I want to know other’s view) Why God became that much angry with Job?



-- Edited by SANDOSH on Saturday 23rd of January 2010 09:57:39 PM

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

விவாதத்தை திடீரென நிறுத்திக்கொண்ட சகோ.சுந்தர், விருப்பப்பட்டால் தனது முடிவை மாற்றிக்கொண்டு, இன்னும் சில பதிவுகளைத் தரலாம்.

//பிசாசுக்கு சொந்தமான அனேக செல்வங்களை யோபு அனுபவித்து  சுகபோகமாக வாழ்ந்ததால்தான் சாத்தானும்  தேவனிடம்  அவனைப்பற்றி  பிராது பண்ண முடிந்தது!//

தேவன் ஆசீர்வதித்ததால்தான் யோபுவின் சம்பத்து பெருகிற்று என யோபு 1:10-ல் சாத்தான் கூறுகிறான், தேவனும் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. தேவன் தமக்குச் சித்தமானவனுக்கு ஐசுவரியத்தைக் கொடுக்கிறார் என பிரசங்கி 5:19; 6:2; 9:11 வசனங்கள் கூறுகின்றன. எனவே யோபுவிடமிருந்த செல்வங்கள் சாத்தானுடையவை அல்ல, தேவனுடையவைகளே என்பதே எனது கருத்து.

//ஒரே ஒரு மீறுதல் செய்த மேசேயின் சரீரத்தை கூட தனக்குத்தான் சொந்தம் என்று சொந்தம்  கொண்டாடி  சாத்தான் தூதனிடம் தர்க்கித்ததாக  வேதம் கூறுகிறது.  அப்படியெனில் இந்த பாவமாமிச உடம்பு சாத்தானுக்குதான்  சொந்தம்  என்பது எல்லோருக்கும்  புரியும்.//

மோசே ஒருமுறை மீறியது உண்மை, மோசேயின் சரீரத்திற்காக சாத்தான் போராடினதும் உண்மை. ஆனால் மோசே ஒருமுறை மீறியதால்தான் சாத்தான் அவருடைய சரீரத்திற்காகப் போராடினான் என வேதாகமம் கூறவில்லை. உண்மையில், மோசேயின் சரீரம் சாத்தானுக்குச் சொந்தமானதாக இருந்தால், அந்த சரீரத்திற்காக சாத்தானோடு எப்படி மிகாவேல் போராடமுடியும்?

எனவே யோபுவின் சரீரம் சாத்தானுக்குச் சொந்தமானதல்ல என்பதே என் கருத்து. தனக்குச் சொந்தமல்லாத சரீரத்திற்காக சாத்தான்தான் மிகாவேலுடன் போராடினான், போராடி தோற்றும்போனான்.

//வேத புத்தகத்தில் யோபு சன்மார்க்கன் தேவனுக்கு பயந்தவன் என்று தேவனே சாட்சி கொடுக்கிறார் ஆகினும் யோபுவுக்கு கடுமையான  வேதனை  மற்றும் சோதனை  வருகிறது அப்படி இருக்கையில் நல்லவனுக்கு மிகுந்த  துன்பம் வரும் எனபது நிச்சயம் நிச்சயம் ஆகிறது. இதை சாக்காக வைத்து துன்பபடுகிரவர்கள் எல்லோரும் தங்கள் செய்த தவறு என்னவென்று ஆராயாமல்,  யோபுபோல அவர்கள் பெரிய நீதிமானாக இருப்பதாகவும் அதனால் தங்களுக்கு துன்பம் வருவதாகவும் கற்பனை செய்துகொள்கின்றனர்!//

விசுவாசிகளின்/ஊழியர்களின் எண்ணம் தவறு என்பதை உணர்த்துவதே சகோ.சுந்தரின் நோக்கம். ஆனால் இதைக் குறித்து எதுவும் சொல்லாமல், அவர் விவாதத்தை முடித்துக் கொண்டார்.

விசுவாசிகளும் ஊழியர்களும் மெய்யாகவே யோபுவின் ஜீவியத்தைப் போன்ற ஒரு ஜீவியத்தை நடத்தியிருந்தால், தங்களுக்குப் பாடுகள் நேரிடுகையில், அதற்குக் காரணம் சாத்தான் எனக் கூறுவதில் தவறில்லை என ஏற்கனவே கூறியிருந்தேன். இக்கூற்றை மீண்டும் உறுதிசெய்கிறேன். ஆனால், யோபுவின் பாடுகளோடு தங்களது பாடுகளை ஒப்பிடுகிற இன்றைய விசுவாசிகள் மற்றும் ஊழியர்களில் பலர் யோபுவின் ஜீவியத்தைப் போன்றதொரு ஜீவியம் ஜீவிக்கவில்லை என்பதே உண்மை.

மனிதனின் வியாதிகளுக்குக் காரணம் அவனுடைய அக்கிரமங்களே என பல வசனங்கள் கூறுகின்றன. வேதாகமத்தில் பல நல்விசுவாசிகள் மரணத்திற்கேதுவான வியாதிக்குள்ளாகிய போதிலும், யோபு ஒருவர் மட்டுமே அக்கிரமம் எதுவும் செய்யாமல் வியாதிக்குள்ளானவர் என நான் கருதுகிறேன். இவ்விஷத்தில் யோபு ஒரு விதிவிலக்காக விளங்குவதாகவும் நான் கருதுகிறேன்.

இந்நாட்களில் வியாதிக்குள்ளாகிற நாம், அதற்கான காரணம் நம் மீற்தல்களாக இருக்குமா என்ற ரீதியில் சிந்தித்துப் பார்ப்பதே சரியானது. அதைவிடுத்து, யோபுவைப் போல் நமக்குப் பாடுகள் வந்துள்ளதாக நாம் கருதினால், நம் மீறுதல்களை நாம் உணரத் தவறிவிடுவோம் என்பதை அறிவோமாக.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink  
 

I request brothers Sundar, Chillsam, Anbu and irainesan to give their view about my message atleast a yes or no.
All my messages are not either accepted or not accepted by the others who is in the thread of all forums. After some time my name is deleted from their forum.
Others are arguing with themselves but nobody answer my messages (it is the case in all messages and in all forums). I dont know why.



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

புதிய சகோதரரான சந்தோஷ் அவர்களை இத்தளத்தினுள் வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். சகோதரரின் தேவப்பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.

sandosh wrote:
//I request brothers Sundar, Chillsam, Anbu and irainesan to give their view about my message atleast a yes or no.//

சகோதரரே, யோபுவின் பாடுகளைக் குறித்த உங்கள் சிந்தனை பாராட்டுதலுக்குரியது. நீங்கள் கூறுகிறபடி யோபு சாத்தானை ஜெயித்தார் அல்லது சாத்தான் யோபுவிடம் தோற்றுப்போனான் என்பதற்கு யோபு 1:21 மற்றும் 2:9,10 ஆதாரமாயுள்ளன.

sundar wrote:
//தேவன்பேரில்  விசுவாசமுள்ள   யாருமே ஒருசில  நாட்கள் துன்பத்தை தாக்குபிடிக்கத்தான் செய்வார்கள். பல நாள் ஆகியும்  பலன் எதுவும் கிடைக்காதபோது கண்டபடி புலம்பி தவிப்பதுபோல் யோபுவும் தவித்தான்.//

சகோ.சுந்தர் அவர்களின் இக்கருத்தை நான் ஏற்கவில்லை. நல்ல விசுவாசிக்கு துன்பம் அனுபவிக்கிற காலஅளவு ஒரு பொருட்டல்ல; காலஅளவு அதிகமாகையில் விசுவாசத்தை இழப்பவன் நல்ல விசுவாசி அல்ல. யோபுவைப் பொறுத்தவரை அவர் விசுவாசத்தை இழக்கவில்லை. நண்பர்களின் குற்றச்சாட்டுதான் அவரைப் புலம்பவைத்தது. உண்மையில், யோபு விசுவாசத்தை இழந்திருந்தால், அது சாத்தானுக்கு வெற்றியாக இருப்பதோடு, தேவனுக்கும் தோல்வியாக அல்லவா இருந்திருக்கும்?

யோபு தனது விசுவாசத்தில் உறுதியாயிருப்பார் என்பதை தேவன் அறிந்திருந்ததால்தான், சாத்தானின் சோதனைக்கு தேவன் அனுமதியளித்தார் என நான் கருதுகிறேன். எனது இக்கருத்துக்கு ஒத்த கருத்தாக சகோ.சந்தோஷ் பின்வருமாறு கூறியுள்ளார்.

//As God knows before, Job defeated satan and it is satan's first defeat in front of man//

ஆனால் சகோ.சந்தோஷின் பின்வரும் கருத்தை என்னால் ஏற்க இயலவில்லை.

//God knows about everything before anything is going to happen in future. HE knows about all things and about all  persons life (it is known as unmanifest view of God). HE knows about fall of angel (satan) and fall of adam before the incidents.//

In this regard I opine that, "God has the power to know all future things which are going to happen, but He uses that power only for the things that he wishes to know. In all other things, he doesn't use His power to know them.

இது சம்பந்தமான விரிவான எனது கருத்தை அறிய பின்வரும் link-ற்குச் செல்லும்படி வேண்டுகிறேன்.

http://kovaibereans.activeboard.com/forum.spark?aBID=128972&p=3&topicID=26772939

மனிதனுக்குத் துன்பங்களைக் கொடுத்து அவனது விசுவாசத்தை தேவன் சோதிக்கிறார் என்பதற்கு பல வேதவசனங்கள் ஆதாரமாயுள்ளன. ஆனால் மனிதனின் விசுவாசத்தை சோதிப்பதற்காக வியாதியை தேவன் அனுமதிப்பதில்லை என நான் கருதுகிறேன். மனிதனின் மீறுதல்களினிமித்தமாக மட்டுமே, தேவன் அவனுக்கு வியாதியை அனுமதிக்கிறார். மீறுதல்கள் எதுவுமில்லாமல் வியாதிக்குள்ளானவர் யோபு மட்டுமே. இவ்விஷயத்தில் யோபு விதிவிலக்காகக் காணப்படுகிறார். இதற்கு என்ன காரணம் என சந்தோஷ் கூறுவது சரியாகவே தோன்றுகிறது.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


இளையவர்

Status: Offline
Posts: 38
Date:
Permalink  
 

deleted



-- Edited by vedamanavan on Monday 25th of January 2010 09:24:03 PM

__________________

"உம்முடைய‌ வசனமே சத்தியம்." யோவான் 17:17



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

SANDOSH wrote:

 

I request brothers Sundar, Chillsam, Anbu and irainesan to give their view about my message atleast a yes or no.
All my messages are not either accepted or not accepted by the others who is in the thread of all forums. After some time my name is deleted from their forum.
Others are arguing with themselves but nobody answer my messages (it is the case in all messages and in all forums). I dont know why.



சகோதரர் சந்தோஷ் அவர்களே!  
 
உங்கள் அறிமுகம் பற்றிய  திரி ஓன்று தொடங்கியாகிவிட்டது.   தயவுசெய்து  அறிமுக   பகுதியில் தங்களைப்பற்றி  ஒரு சிறிய அறிமுகம் கொடுத்துவிடுங்கள்.

எல்லாவற்றையும் முடிந்த அளவு வரிசைகிரமத்தோடும் அன்போடும் செய்வோம்.    மேலும் முடிந்த அளவு உங்கள் பதிவுகளை  தமிழில் கொடுக்க பழகுங்கள்.       
 
தங்கள் கருத்துப்படி நடப்பது  எல்லாமே முன்கூட்டியே தெரியுமா?  என்ற கேள்வி யோபு மற்றும்   கிறிஸ்த்தவர்களின் பாடுகளுடன் சம்பந்தம் உடையது  என்றாலும் அதை ஆராய தனி திரிதான் தொடங்க    வேண்டும்.  அதை முடிவெடுப்பது அவ்வளவு சுலபம் அல்ல. ஏனெனில் 
 
"பூமியில் மனிதனை படைத்தற்க்கு தேவன் மனஸ்தாபபட்டார்"

மற்றும் 

"சவுலை ராஜாவாக்கியது எனக்கு விசனமாயிருக்கிறது"

போன்ற தேவனின்  வார்த்தைகள் அவர் எதிர்பார்க்காதது எதோ  நடந்துவிட்டத்தையே    உணர்த்துகிறது .
 
நமக்கு தெரிந்தது  நமது திட்டப்படி எல்லாம்  நடக்கும்போது நாம் சந்தொசப்படுவேமே  தவிர அதற்காக விசனப்பட மாட்டோம்  எனவே இங்கு தேவன் மனஸ்தாபபடுகிறார் என்றால்  எதோ எதிர்பாராது அல்லது பிடிக்காதது நடந்துவிட்டது என்றுதான் பொருளாகும்.
 
இதை  இன்னும் ஆராயபோனால் தொடர்ந்து நீடுகோண்டே போகும். எனவே உங்கள் கருத்தை தனியாக ஒரு திரியில் பதியுங்கள் அதுபற்றி ஆராயலாம் அல்லது சகோதரர் அன்பு அவர்கள் கொடுத்த திரியில் சென்று அங்குள்ள விவாதத்தை படித்து பாருங்கள்.
 
இங்கு கிறிஸ்த்தவர்களின் பாடுகள் மற்றும் யோபுவின் பாடுகள்பற்றி மட்டும் ஆராயலாம்.  
 
  


-- Edited by இறைநேசன் on Monday 25th of January 2010 06:47:50 PM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

யோபுவுக்கு வந்த பாடு ஒரு தனித்தன்மை வாய்ந்தது என்பது ஏற்புடையதே  அதேபோல் தாவீது யோசேப்பு போன்ற எல்லோருக்கும் தனிதன்மை வாய்ந்த  சோதனைகளும் பாடுகளும் வரத்தான் செய்தது இது யோபுவை மட்டும் விசேஷமாக சோதிக்க இங்கு  என்ன இருக்கிறது?   
 
ANBU WROTES:
////தேவன் ஆசீர்வதித்ததால்தான் யோபுவின் சம்பத்து பெருகிற்று என யோபு 1:10-ல் சாத்தான் கூறுகிறான், தேவனும் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. தேவன் தமக்குச் சித்தமானவனுக்கு ஐசுவரியத்தைக் கொடுக்கிறார் என பிரசங்கி 5:19; 6:2; 9:11 வசனங்கள் கூறுகின்றன. எனவே யோபுவிடமிருந்த செல்வங்கள் சாத்தானுடையவை அல்ல, தேவனுடையவைகளே என்பதே எனது கருத்து.////

"பூமியும் அதன் நிறைவும் கர்த்தருடையது"  "வெள்ளியும் என்னுடையது பொன்னும் என்னுடையது" என்கிறார்  கர்த்தர்.  அப்படியிருக்கையில் யோபுவிடம் இருந்தது எல்லாமே தேவன் கொடுத்ததுதான் என்பதில் எனக்கு எந்த  கருத்துவேறுபாடும் இல்லை. ஆனால் இந்த உலகத்தின் அதிபதி யார்? இந்த பிரபஞ்சத்தின் தேவன் என்று வேதம் யாரை குறிப்பிடுகிறது.  

இங்கு   தேவனே ஆசீர்வதித்தாலும்  ஒரு பாவமும் செய்யாமல் பரிசுத்தவானாக இருந்தாலும்    உலகத்தில்  பணத்தை அதிகமாக சேர்த்து  மிகுந்த ஆஸ்த்தியுள்ளவனாக வாழ்வது சோதனையை கொண்டுவரும் என்பதுதான் வேதம் சொல்லும் கருத்து. அதற்காகத்தான் இயேசு  அந்த  ஐஸ்வர்ய  வாலிபன்  கற்பனைகள் எல்லாவற்றையும் கைகொண்டு  பாவியாக இல்லாதிருந்தும்   அவனை  பார்த்து எல்லாவற்றயும் விற்று தரித்திரருக்கு கொடு என்று சொன்னார் என்றும் உங்களுக்கு விளக்கிவிட்டேன். வரும் சோதனையில் வெற்றி பெறுவது இரண்டாவது  விஷயம்  இங்கு சோதனை ஏன் வந்தது என்பதுதான் கேள்வி.     சாலமோனின் செல்வம் அனைத்தும் தேவன் கொடுத்ததுதான் ஆனால் இறுதியில் அவனுக்கு அது  சோதனையை கொண்டுவந்து கர்த்தர் சொல்லியும் அசட்டைபண்ணை  அவன் விழுவதற்கே ஏதுவானது.
 
"இதோ இந்த உலகத்தின் அதிபதி வருகிறான் அவனுக்கு என்னிடத்தில்  எடுத்துகொள்ள எதுவும் இல்லை" என்று துணிந்து இயேசு சொன்னதுபோல்   சொல்லும் அளவுக்கு இந்த உலகில் உள்ள எந்த போருள்மேலும் பற்றில்லாத வாழ்க்கை இருந்தால் மட்டுமே சோதனை வராது. அதாவது சோதிக்க அல்லது பிடுங்க அவனிடம்  ஒன்றும் இருக்காது!  மற்ற  எல்லோருக்கும் சாத்தான் நிச்சயம்  சோதனையை  கொண்டுவரும் அதில் யோபுவைபோல  ஜெயிப்பதும் சாலமன் போல தோற்பதும் அடுத்த விஷயம்.   
 
அதாவது ஒருவனிடம் இருந்து என்ன பிடுங்கப்பட்டாலும் கொஞ்சமும் மனமுடையாது  விட்டுவிடும் ஒரு வாழ்வு  நிலை இருக்கவேண்டும் அனால் இங்கு  யோபு  "நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது" என்று கூறுவதை பார்த்தால்,  ஐயோ எனக்குள்ள எல்லாம் ஒருநாள் போய்விடுமோ   என்று  பயந்துகொண்டே இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறதல்லவா?  அந்த பயம்தான் சாத்தனுக்கு சாதகமாகி  சோதனையை கொண்டுவந்ததேயன்றி அதற்க்கு  தேவன் காரணம் அல்ல!      
 
ANBU WROTES:
//////யோபு தனது விசுவாசத்தில் உறுதியாயிருப்பார் என்பதை தேவன் அறிந்திருந்ததால்தான், சாத்தானின் சோதனைக்கு தேவன் அனுமதியளித்தார் என நான் கருதுகிறேன்./////
 
தேவனுக்கு யாரையும் சோதித்துதான் அறியவேண்டும் என்ற அவசியமும்  இல்லை  அல்லது சாத்தான் முன் "பார் எனது சேவல் நன்றாக சண்டைபோடும் என்று சண்டை போடவிட்டு காட்டவேண்டிய கடாயமும் இல்லை" 
 
மனிதன் சோதிக்கப்படுவது உண்மை ஆனால் அதற்க்கு தேவன் காரணமல்ல! ஆண்டவராகிய இயேசுவை தவிர   யோபுவாக இருந்தாலும் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் அவரவர்   இச்சைகளும் ஆசைகளும் பணத்தின்மேலுள்ள பற்றும்  சுய பெருமைகளும் சுயநலபோக்கும்தான் சோதனையையும் துன்பத்தையும்  கொண்டுவருமேயன்றி எந்த முகாந்திரமும் இல்லாமல்  தேவன் மனபூர்வமாக  யாரையும் சோதிக்க பாடுகளுக்குட்படுத்த சாத்தனுக்கு  அனுமதியளிப்பது இல்லை. 
   
33. அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை.
39.  அவன் தன் பாவத்துக்கு வரும் தண்டனையைக்குறித்து முறையிடுகிறதென்ன?
40. நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்.

தேவன் நம்மை சஞ்சலப்படுத்தினாலும் சோதித்தாலும் அதற்க்கு அடிப்படயான ஒரு காரணம் நிச்சயம் இருக்கும். நாம் நாளை தேவன் முன் போய் ஆண்டவரே என்னக்கு இந்த சோதனை வந்ததே அதற்க்கு காரணம் என்று கேட்டால்.
 
நான் திருவிளையாடல் செய்தேன் என்றோ.  உனது உத்தமத்தை  சாத்தனுக்கு நிரூபிக்க அவன்  கையில் சும்மா ஒப்பு கொடுத்து பார்த்தேன் என்றோ பதில் சொல்லமாட்டார். 
 
அவர் மஹாநீதிபரர்  அவரிடம் எல்லா காரியத்துக்கும் நீதியான பதில் நிச்சயம் இருக்கும்!   
      
ஆகான் பொன்பாளத்தை எடுத்து ஒழித்து வைத்திருந்தது யோசுவாவுக்கு தெரியாது. ஆயி மக்களிடம் தோற்றபோது ஏன் ஆண்டவரே என்று அவர் சமூகத்தில் பொய் விழுந்து கிடந்தான். அப்பொழுது தேவன் உண்மையை உணர்த்தினார். தாவீது நாட்களில்  மூன்று  வருட பஞ்சம் வந்தது, அது இயற்க்கை என்று தாவீது விடவில்லை கர்த்தரிடத்தில் விசாரித்தான் அதற்க்கான உண்மையை அறிந்தான். அதுபோல் நமது வாழ்வில் வரும் ஒவ்வொரு பிரச்சனை துன்பத்துக்கும் மூலகாரணம் ஒன்றுண்டு என்பதை அறியவேண்டும். 

அதை ஆண்டவரிடத்தில் அமர்ந்து விசாரித்து அறிந்து  நம்மை திருத்திக்கொள்வதே  துன்பத்தை  தவிர்க்கும் ஒரே  வழியே அன்றி ஆண்டவரையோ பிறரையோ  குற்றம் சாட்டுவது எவ்விதத்திலும் சரியானது அல்ல!           
 
 
 
   


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink  
 

Brother irainesan wrote :"பூமியில் மனிதனை படைத்தற்க்கு தேவன் மனஸ்தாபபட்டார்"

மற்றும் 

"சவுலை ராஜாவாக்கியது எனக்கு விசனமாயிருக்கிறது"

போன்ற தேவனின்  வார்த்தைகள் அவர் எதிர்பார்க்காதது எதோ  நடந்துவிட்டத்தையே    உணர்த்துகிறது .
 
நமக்கு தெரிந்தது  நமது திட்டப்படி எல்லாம்  நடக்கும்போது நாம் சந்தொசப்படுவேமே  தவிர அதற்காக விசனப்பட மாட்டோம்  எனவே இங்கு தேவன் மனஸ்தாபபடுகிறார் என்றால்  எதோ எதிர்பாராது அல்லது பிடிக்காதது நடந்துவிட்டது என்றுதான் பொருளாகும்.

To brother irainesan,
1. Everybody knows that after marriage woman should go to her husband house. But on that day are we celebrating? or weeping?

2. Consider for a patient doctors given time as he will die within six months on that day of his dying because we know it already are we celebrating?

3. An artist already knows what he is going to paint, but after painting he enjoys himself with the painting. He never thinks because i know it already there is no need to enjoy.

4. Pregnant women know that after some months they are going to give birth to a baby.

   Because they knew this are they keep quiet on that day?

5. God is nothing but ananda, bliss, full of happiness. He can keep himself in this state but out of love god identifies HIM with human beings and shares HIS emotions (before and after Christ)

6. Actually if we know already the bad future of a loving person our love will increase many fold so that our sorrow also will increase many fold. Because of HIS uncontrollable sorrow God uttered these words. 
 
Brother Anbu wrote :

//God knows about everything before anything is going to happen in future. HE knows about all things and about all  persons life (it is known as unmanifest view of God). HE knows about fall of angel (satan) and fall of adam before the incidents.//


In this regard I opine that, "God has the power to know all future things which are going to happen, but He uses that power only for the things that he wishes to know. In all other things, he doesn't use His power to know them.

To brothr anbu,

For me the word "God knows everything" is enough but because you ask i will tell in detail

1. Everybody knows Satan and adam fell down because of free will

2. That means before falling they done everything as per God's plan. They are always keep in touch with God through their thoughts, emotions and will.

3. That means they received energy from God always so God knows about his flow of energy

4. When they want different experience of their own, the flow of energy from god gets disturbed that is the initial stage of falling. As per Jesus parable it is the time the younger son asks for his share with his father. Although father knows he is going to fall, he given his share to allow him to exercise his own experience. It is the time our vehicles fuel indicator shows 'reserve' state  

5. Fall of satan or adam is not like a man who fell down on road.

6. It is the process which takes its effects to ripe more number of years (I don't know may be thousand or lakhs) After  the initial sensing itself god acted and done necessary actions, 

The following are other information 

1. Satan (Angel) is one of the creations in the 1st set, 1.e he is the morning star and many things should come out of him for further sets.

2. Because he is 1st set and he fell down, he cannot be saved. Only the effects other creatures going to face because of him only be modified. It is like beyond repair state of our machineries.

3. The below passages are "believe it or not" type if want to take it take it otherwise leave it    However questions can be asked.

 Actually the book of Genesis is the summary of million years. Before 1st verse and second verse millions of years passed. The things which happened between verses are revealed by some Christian mystics and they given information about this. One of the mystic given like this.. 

1. God created adam as man and woman with enormous power like angel and not in a material body as we are (gen 1.27)

2. Adam done whatever god says and after some time he want to know his own experience.    Now satan also in this world with great power so God felt the possibility of adam to combine with satan and become enemy to God. Out of love for humanity god taken the following precaution steps

3. God given him sleep (and the woman inside him separated from him so his power reduced by 50%)

4. God convert his angelic body into material body

5. Out of his body he taken rib and made woman from that. So adam power (again) reduced by (another) 50%

6. Then he allowed adam and eve to stay in Eden. 

If God didn't taken the above steps then with his enormous power adam combined with more enormous power of satan and they become enemy to God and his plans.

If somebody don’t want to go out of bible then eliminate the sentences given in bracket and read it.
-- Edited by SANDOSH on Tuesday 26th of January 2010 05:26:05 PM



-- Edited by SANDOSH on Tuesday 26th of January 2010 10:52:05 PM

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

sundar wrote:
//யோபுவுக்கு வந்த பாடு ஒரு தனித்தன்மை வாய்ந்தது என்பது ஏற்புடையதே  அதேபோல் தாவீது யோசேப்பு போன்ற எல்லோருக்கும் தனிதன்மை வாய்ந்த  சோதனைகளும் பாடுகளும் வரத்தான் செய்தது இது யோபுவை மட்டும் விசேஷமாக சோதிக்க இங்கு  என்ன இருக்கிறது?//

தாவீதுக்கோ யோசேப்புக்கோ அவர்களை சோதிக்கும்படியாக வியாதிகள் வந்ததாக வேதாகமம் கூறவில்லை. எனக்குத் தெரிந்தவரை யோபு மட்டுமே வியாதியால் சோதிக்கப்பட்டார். தாவீதுக்கு அவரது அக்கிரமங்களின் விளைவாகவே வியாதி வந்ததாக தாவீதே கூறியுள்ளார்.

sundar wrote:
//மனிதன் சோதிக்கப்படுவது உண்மை ஆனால் அதற்க்கு தேவன் காரணமல்ல!//

விசுவாசிகளை தேவன் உபத்திரவங்களால் சோதிப்பார் என்பதற்கான வசன ஆதாரங்களை ஏற்கனவே பதித்துள்ளேன். உங்களுக்காக சிலவற்றை மீண்டும் தருகிறேன்.

சங்கீதம் 11:5 கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார்;
சங்கீதம் 26:2 கர்த்தாவே, என்னைப் பரீட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும்; என் உள்ளிந்திரியங்களையும் என் இருதயத்தையும் புடமிட்டுப்பாரும்.
சங்கீதம் 66:10,11 தேவனே, எங்களைச் சோதித்தீர்; வெள்ளியைப் புடமிடுகிறதுபோல எங்களைப் புடமிட்டீர். எங்களை வலையில் அகப்படுத்தி, எங்கள் இடுப்புகளின்மேல் வருத்தமான பாரத்தை ஏற்றினீர்.

sundar wrote:
//இங்கு   தேவனே ஆசீர்வதித்தாலும்  ஒரு பாவமும் செய்யாமல் பரிசுத்தவானாக இருந்தாலும்    உலகத்தில்  பணத்தை அதிகமாக சேர்த்து  மிகுந்த ஆஸ்த்தியுள்ளவனாக வாழ்வது சோதனையை கொண்டுவரும் என்பதுதான் வேதம் சொல்லும் கருத்து. அதற்காகத்தான் இயேசு  அந்த  ஐஸ்வர்ய  வாலிபன்  கற்பனைகள் எல்லாவற்றையும் கைகொண்டு  பாவியாக இல்லாதிருந்தும்   அவனை  பார்த்து எல்லாவற்றயும் விற்று தரித்திரருக்கு கொடு என்று சொன்னார் என்றும் உங்களுக்கு விளக்கிவிட்டேன்.//

யோபுவைப் பொறுத்தவரை அவரது சொத்தாக வேதம் குறிப்பிடுவது அவரது மந்தையையே (யோபு 1:3). அவர் அன்றைய ஜனங்களின் நடுவில் மிகுந்த செல்வாக்குடையவராக இருந்தார் என்றும் வேதம் கூறுகிறது. யோபு 31:25-ல் யோபு கூறுகிற வாக்குமூலத்தில் காணப்படும் “ஆஸ்தி”, பொன் மற்றும் நிலங்கள் போன்ற ஆஸ்தியாகத்தான் இருக்கவேண்டுமென்பதில்லை. அதின் மூல பாஷை வார்த்தையின் அர்த்தத்தின்படி பார்த்தால் ஆட்படை பலம் எனும் அர்த்தம்தான் அதன் பிரதான அர்த்தமாக கூறப்பட்டுள்ளது. யோபுவிடம் நிறைய பணிவிடைக்காரர் இருந்தனர் என யோபு 1:3 கூறுகிறது.

எனவே ஜனங்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு பெறக்கூடிய அளவு அவரிடம் ஆட்பலமும் மந்தையும் இருந்தன என்பதாகவும் நாம் கூறலாம். தங்கத்தை தன் ஆதரவு, நம்பிக்கை எனக் கருதாத அவர், அதைச் சேர்த்துவைத்திருக்கமாட்டார் என்றே நான் கருதுகிறேன். மேலும் சாத்தானால் யோபு இழந்த பொருட்கள் எவை என்று யோபு 1:13-19 வசனங்களில் கூறப்பட்டுள்ளதைப் பாருங்கள். அவரது மந்தைகள், வேலைக்காரர், குமாரர், குமாரத்திகளை மட்டுந்தான் யோபு இழந்ததாக அந்த வேதபகுதி கூறுகிறது. பொன்னை, நிலபுலங்களை அவர் இழந்ததாக வசனம் கூறவில்லை. எனவே யோபுவிடம் பொன்னும் இல்லை மிகுந்த நிலபுலங்களும் இல்லை என நிச்சயமாகக் கூறலாம்.

தேவனுடைய ஆசீர்வாதத்தால் அவரது மந்தை பெருகியது, வேலைக்காரர்கள் பெருகினார்கள், செல்வாக்கு பெருகியது என்பதே யோபுவைக் குறித்து வேதாகமம் கூறும் தகவல். மற்றபடி அவர் மிகுந்த ஆஸ்தியை சேர்த்து வைத்திருந்தார் என்பதற்கு ஆதாரமான வசனம் எதுவும் இல்லை.

ஆனால், மத்தேயு 19-ல் கூறப்படும் ஐசுவரிய வாலிபனின் ஆஸ்தியைக் குறிக்கின்ற மூலபாஷை வார்த்தையின் அர்த்தம், estate என அகராதி கூறுகிறது. அதாவது அந்த வாலிபனின் ஆஸ்தி ஏராளமான நிலபுலங்களாகும். அந்த நிலபுலங்கள் யாருக்கும் பயன்படாத வகையில் இருந்திருக்கவேண்டும். எனவேதான் அவற்றை விற்று தரித்திரருக்குக் கொடுக்கும்படி இயேசு சொன்னார்.

யோபுவைப் பொறுத்தவரை அவர் தரித்திரர் மீது கரிசனையாயிருந்தார். தனது மந்தையின் பெருக்கத்தால் கிடைத்த பலன்கள் மூலம் அவர் தரித்திரர்களை போஷித்தார். எனவே யோபுவின் ஆஸ்தியையும் (மந்தைப் பெருக்கம்) ஐசுவரிய வாலிபனின் ஆஸ்தியையும் (நிலபுலங்கள்) ஒப்பிடுவது சரியல்ல.

தனக்கு தேவனால் கிடைத்த ஆசீர்வாதத்தின் பலன்களை எளியோருக்காக யோபு பயன்படுத்திக் கொண்டேவந்தார். யோபுவின் ஆஸ்தி சாத்தானால் வந்ததுமல்ல, அந்த ஆஸ்தியை அவர் தனக்காக ஒதுக்கி அல்லது சேர்த்து வைக்கவுமில்லை.

sundar wrote:
//யோபு  "நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது" என்று கூறுவதை பார்த்தால்,  ஐயோ எனக்குள்ள எல்லாம் ஒருநாள் போய்விடுமோ   என்று  பயந்துகொண்டே இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறதல்லவா?//

யோபு 1:21,22; 2:10 வசனங்களைப் படித்திருபீர்கள் அல்லவா? அவற்றைப் படித்த உங்களுக்கு யோபுவைக் குறித்து இவ்வாறு சொல்ல எப்படி மனம் வந்தது?

தன் குமாரர்கள் பாவம் செய்திருக்கக்கூடும் அதன் விளைவாக ஏதேனும் ஆபத்து நேரக்கூடும் என்பதே யோபுவின் பயம் (யோபு 1:4,5).

அவரது குமாரர்கள் அவனவன் நாளிலே, (அந்நாள் அவர்களின் பிறந்தநாளாக இருக்கக்கூடும் என நான் கருதுகிறேன்) விருந்து செய்து கொண்டாடினார்கள். இப்படிப்பட்ட விருந்து கொண்டாட்டங்கள் பாவத்திற்கு வழிவகுக்கும் என்பதை அந்நாளிலேயே யோபு அறிந்திருந்தார். அதானல்தான் பாவநிவாரணத்திற்காக பலிகளைச் செலுத்தினார். ஆனாலும் தன் பிள்ளைகள் பாவத்தை உணராமல், தான் பலி செலுத்துவதால் மட்டும் பலன் கிடைக்குமா எனும் எண்ணமும் அவருக்கு இருந்திருக்க வேண்டும். எனவேதான் தான் பயந்த காரியம் தனக்கு நேர்ந்ததாக அவர் கூறினார்.

விருந்து கொண்டாடல் பாவத்துக்கு வழிவகுக்கும் என அந்நாளிலேயே அறிந்த யோபு எங்கே? அவருக்குப்பின் பல்லாயிர வருடங்கள் கடந்த இந்நாட்களில் ஆடம்பரமாக பிறந்தநாள் கொண்டாடும் விசுவாசிகள் எங்கே? பெரிய ஊழியக்காரர்கள் எங்கே?

யோபுவின் ஒவ்வொரு செயலும், நீதி நியாயத்தை நிதானிக்கும் அவரது சிந்தைக்கு வலுவூட்டுவதாகத்தான் உள்ளது. ஆனால் அவற்றை அவருக்குப் பாதகமானதாக நீங்கள் கருதுகிறீர்கள்.

மனிதனின் பாவம்தான் அவனது ஒவ்வொரு துன்பத்திற்கும் காரணம் எனும் எண்ணம் உங்கள் மனதில் வலுவாகப் பதிந்துவிட்டது. எனவேதான் எப்படியாவது யோபுவின் செயலில் குற்றம்பிடிக்க முயலுகிறீர்கள்.

தேவன் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை எனும் வாக்கியத்தின் அர்த்தமென்ன? தேவன் மனிதனை சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துவது மெய்தான், ஆனால் அதை அவர் முழுமனதோடு செய்வதில்லை என்பதே.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
«First  <  1 2 3  >  Last»  | Page of 3  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard