திரித்துவம் என்றால் என்ன என்பதுபற்றி பல்வேறு தேவமனிதர்கள் பல்வேறு
கருத்துக்கள் கூறியிருந்தாலும் எளிதில் புரியும்படி சொல்வதற்கு நான் சற்று முயற்ச்சிக்கிறேன்!
தேவன் என்று ஒருவர் ஏற்கெனவே இருக்க இயேசு என்றொரு மற்றொரு தேவனா? பரிசுத்த ஆவியானவர் என்று இன்னொரு தேவனா? ஆக மூன்று தேவனா? என்ற கருத்து பலருக்கு எழலாம்.
இங்கு தேவன் மூன்றல்ல! மாறாக ஒரு தேவன் மூன்றாக பிரிந்து செயல்படுகிறார் என்பதுதான் உண்மை!
நமக்கு இரண்டு கைகள் இருக்கின்றன. ஒரே சமயத்தில் இரண்டுவேலை செய்யவேண்டுமென்றால் என்ன செய்வோம்? ஒரு கையில் டெலிபோனை பற்றிக்கொண்டு இன்னொரு கையால் எழுதுவது இல்லையா?
அதுபோல் தேவன் ஒருவர்! அந்த தேவன் இஸ்லாம் சொல்வதுபோல் எல்லா தகுதியும் உடையவர்! இஸ்லாம் சொல்வதை விட ஒரு கூடுதல் தகுதியையும் நாங்கள் தேவனுக்கு கொடுக்கிறோம். அதாவது தேவை ஏற்ப்பட்டால் தன்னை மூன்றாக பிரித்துக்கொள்ள அவரால் முடியும் என்பதே அந்த தகுதி. ஏன் மிகப்பெரியவர்/சர்வவல்லவர் என்று சொல்லப்படும் அந்த இறைவனுக்கு தன்னை மூன்றாக பிரித்துக்கொள்ள முடியாதா? அவரால் படைக்கப்பட்ட மனிதனே இரண்டு கையில் இரண்டு வேலை செய்யும் போது, அவர் தன்னை எப்படி வேண்டுமாலும் பிரித்து செயல்பட முடியும்!
இப்பொழுது தேவனுக்கு மூன்று முக்கிய வேலைகள் வந்துவிட்டது
1. உயரே இருந்து உலகமனைத்தையும் நடத்த வேண்டும் 2. பாவம் செய்த மனிதனுக்காக மரித்து பாவத்திலிருந்து அவனை மீட்க வேண்டும் 3. பாவம் செய்து தேவ உறவை விட்டுவிட்ட மனிதனுள் இருந்து அவனை சரியான பாதையில் நடத்த வேண்டும்.
இந்த மூன்று வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்வதற்காக தேவன் தன்னை மூன்றாக பிரித்துகொண்டார்.
அதற்க்கு " திரித்துவம்" என்று கிறிஸ்த்தவர்கள் பெயர் சூட்டிகொண்டனர் அவ்வளவே!
இதில் இயேசு தேவனா? பரிசுத்த ஆவியானவர் தேவனா? பிதா தேவனா? என்று தனி தனியாக வாதிட முடியாது. மூவரும் தனித்தனியாகவும் கிரியை செய்யலாம். மொத்தமாக சேர்ந்தும் கிரியை செய்யலாம்.
ஆனால் மூவரும் ஒருவரே!
மனிதன் ஆவி ஆத்துமா சரீரம் என்னும் மூன்று நிலைகளின் தொகுப்பு! . சாத்தான் மனிதனின் மூன்று நிலைகளோடும் மூன்று வித யுக்தியோடு போரிடுகிறான். ஆனால் தேவன் ஒன்றான மெய்த்தேய்வமாக இருக்கிறார்.
ரோமர் 7:14 , நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாயிருக்கிறது, நானோ பாவத்துக்குக் கீழாக விற்கப்பட்டு, மாம்சத்துக்குரியவனாயிருக்கிறேன். . இப்படி மனிதன் மாமிசத்துக்குரிய நிலையில் இருந்துகொண்டு நல்லதை செய்யவேண்டும் என்று விருப்பம் இருந்தும், தான் விரும்பாத பாவத்தை செய்துகொண்டு ஆவிக்கும் ஆத்துமாவுக்கும் விரோதமாக வரும் சாத்தானை எதிர்கொள்ள முடியாமல் தவித்துக்கொண்டு இருந்தான்.
எனவே தேவன் தனது வல்லமையை மூன்றாக பிரித்து மாமிசத்துக்கு விரோதமாக போரிடும் சாத்தனை வெல்ல தனது வார்த்தையை மாமிசமாக்கி, அவரின் மரணத்தினால் அவனை வென்றார்!
ஆவிக்கு விரோதமாக போரிடும் சாத்தானை வெல்ல பரிசுத்தஆவியாக நம்முள் வந்து தங்குகிறார் எவ்வளவு அதிகமாக தேவனை தேடுகிறோமோ அவ்வளவு அதிகமாக ஆவியில் நிறைந்து சாத்தானை எதிர்கொள்ளும் சக்தியை தருகிறார்!
ஆத்துமா என்பது அநாதி தேவனுக்கு சொந்தமானது!
எசேக்கியேல் 18:4 இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது
தேவனுடைய பிள்ளைகளின் ஆத்துமாவுக்கு விரோதமாக வரும் சாத்தானை அவரே எதிர்கொள்ளுகிறார் அல்லது அவனை மேற்கொள்ள ஆலோசனை வழங்குகிறார்!
எனவே மனிதன் மூன்று நிலையின் தொகுப்பாக இருப்பதால் தேவனும் மூன்று நிலைகளின் தொகுப்பாக மாறினார். இதற்க்கு பெயர் திரித்துவம் என்று சொல்கிறார்கள்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
திரித்துவம் பற்றி தனது கருத்துக்களைத் தந்த சகோ.சுந்தருக்கு எனது வாழ்த்துக்கள்!
என்னைக் கேட்டால், வேதாகமத்தில் இல்லாத பதமாகிய திரித்துவம் எனும் பதத்தையும் அதன் கோட்பாட்டையும் நாம் சற்றும் பொருட்படுத்த வேண்டியதில்லை என்றே கூறுவேன். திரித்துவம் எனும் பதமும் அதன் கோட்பாடும் சில வேதப்புரட்டர்கள் உருவாக்கியதேயன்றி வேறெதுவுமில்லை. புதியஏற்பாட்டு நிருப ஆக்கியோன்களான பவுலோ, பேதுருவோ, யோவானோ, யாக்கோபுவோ அந்தத் திரித்துவக் கொள்கைகளுக்கு இசைவாக எழுதியுள்ளார்களா என நிதானமாக ஆராய்ந்து பார்த்தால், நிச்சயமாக இல்லை என அறியலாம்.
திரித்துவம் எனும் கோட்பாடு கிறிஸ்தவத்தில் புகுத்தப்பட்டதன் விளைவாக, இன்றைய கிறிஸ்தவர்களில் பலர் பிதாதான் கிறிஸ்துவாக வந்தார், பிதாவும் கிறிஸ்துவும் ஒருவரே என்பது போன்ற பல தவறான எண்ணங்களைக் கொண்டுள்ளனர்.
பழைய ஏற்பாட்டில் தேவனை “கர்த்தர்” எனும் பதத்தால் குறிப்பிடுவதைப்போல, புதிய ஏற்பாட்டில் இயேசுவை “கர்த்தர்” எனும் பதத்தால் குறிப்பிட்டுள்ளதை வைத்து, பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள தேவனும் புதிய ஏற்பாட்டின் இயேசுவும் ஒருவரே என வாதிடுகிற பலர் உண்டு.
அநேக ஜனங்களை தன்பால் இழுத்துக்கொண்ட பிரபல ஊழியர் மறைந்த சகோ.தினகரன் அவர்கள், பிதாதான் மாறுவேடம் பூண்டு இயேசுவாக இப்பூமியில் அவதரித்தார் என இயேசு அழைக்கிறார் பத்திரிகையின் ஓர் இதழில் எழுதியிருந்தார்.
பிரபல ஊழியரான சகோ.மோகன் சி.லாசரஸ் நிறுவின இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனத்தின் பாளையங்கோட்டை அலுவலகத்தில், பின்வருமாறு எழுதி வைக்கப்பட்டுள்ளது.
தேவன் ஒருவரே, ... எல்லாரையும் மீட்கும்பொருளாகத் (சிலுவையில்) தம்மை ஒப்புக்கொடுத்த ... கிறிஸ்து இயேசு அவரே. - 1 தீமோ. 2:5
உண்மையில், 1 தீமோத்தேயு 2:5 வசனம் பின்வருமாறு கூறுகிறது.
தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே.
பிதாவே ஒரே தேவன் எனும் ஏகத்துவத்தை அன்றைய வேதப்புரட்டர்கள் திரித்துவமாக மாற்றியிருக்க, அந்தத் திரித்துவத்தை ஏகத்துவமாக மாற்றி, அந்த ஏகத்துவத்தின் நாயகர் கிறிஸ்து இயேசுதான் என விளங்கப்பண்ணும்படியாக, வேதவசனத்தை அறைகுறையாக வெளியிட்டு, சகோ.மோகன் சி.லாசரஸ் எத்தனை பெரிய மோசடி செய்துள்ளார் என்பதற்கு இதைவிட பெரிய சான்று தேவையில்லை.
இப்படிப்பட்ட மோசடிகளுக்கெல்லாம் மூல காரணம், திரித்துவக் கொள்கைதான். பிதாவும் தேவனே, கிறிஸ்துவும் தேவனே, ஆவியானவரும் தேவனே, மூவரும் ஒருவருக்கொருவர் சம்மானவர்களே, மூவரும் ஒருவரே என்கிறது திரித்துவம். இப்படியாக, 3 சமமான தேவர்களில் ஒருவராக எண்ணப்பட்ட இயேசு கிறிஸ்து, காலப்போக்கில் சகோ.மோகன் சி.லாசரஸ் போன்ற மோசடிப் பேர்வழிகளால், அவர் ஒருவரே தேவன் என பறைசாற்றப்படுகிறார்.
இன்றைய சுவிசேஷ அறிவிப்பாளர்கள் பலர் ஜனங்களிடம் கூறுவது என்னவெனில்: நீங்கள் நம்புகிற தெய்வங்களில் எதுவும் மெய்யான தெய்வமில்லை, இயேசுதான் மெய்யான தெய்வம் என்பதே. பிதாவை மறைத்து இயேசுவை முன்னிறுத்துகிற இப்படிப்பட்ட மோசடியான சுவிசேஷ அறிவிப்பு உருவானதற்குக் காரணம், திரித்துவக் கோட்பாடே.
இப்படிப்பட்டதான, வேதாகமத்தில் இல்லாததும் ஜனங்களை மோசம்போக்குகிறதுமான திரித்துவக் கோட்பாட்டிற்கு, விபரமறிந்தவரான சகோ.சுந்தர் போன்றவர்களும் விளக்கங்கூற முனைவது என்னை மிகவும் வருந்தச்செய்கிறது.
பின்வரும் வசனம் நமக்கு மிகமிக பரிச்சயமான ஒன்று.
மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
தம்மை முன்னிலைப்படுத்துவது முக்கியமல்ல, தமது பிதாவின் சித்தப்படி செய்வதுதான் முக்கியம் என இத்தனை தெளிவாக இயேசு கூறியிருந்தும், இயேசுவை முன்னிலைப்படுத்தும்விதமாக திரித்துவம் உருவாக்கப்பட்டு, அதை நிலைநிறுத்துவதிலேயே ஊழியர்களும் விசுவாசிகளும் தீவிரமாக இருப்பதால்தான் பிதாவின் சித்தப்படி செய்வதில் அவர்கள் தீவிரமில்லாதிருக்கின்றனர்.
திரித்துவம் பற்றி சகோ.சுந்தர் எழுதின கருத்துக்கள் அவரது சொந்தக் கருத்துக்களேயாயினும், இத்தளத்தைப் பார்வையிடுவோரை அவை பாதிக்கக்கூடும் என்பதால், அவற்றின்மீதான எனது கருத்தை வேதவசனங்களின் அடிப்படையில் கூறவிரும்புகிறேன்.
சகோ.சுந்தர் அவர்களின் விளக்கம், அவரது சொந்த கருத்தாகவே உள்ளது. இதை அவர் தனது வெளிப்பாடு எனக் கூறிக்கொள்ளலாம். ஆனால் வெளிப்பாடு என இந்நாட்களில் அநேகர் சொல்லும் விஷயங்கள் ஆளாளுக்கு வேறுபடுவதாக இருப்பதால், தங்களின் தனிப்பட்ட வெளிப்பாடுகளை உண்மை என்று சொல்லி ஜனங்கள் முன்வைப்பது சரியல்ல. அவரவரின் வெளிப்பாட்டை அவரவர் உண்மை என நம்புவது அவரவரின் தனிப்பட்ட உரிமையாகும். ஆனால் பொதுப்படையாக ஜனங்கள் முன்னே ஒரு விஷயத்தை வைக்கவேண்டுமெனில், அதற்கு தகுதியான ஆதாரம் கண்டிப்பாக தேவை.
sundar wrote: //இங்கு தேவன் மூன்றல்ல! மாறாக ஒரு தேவன் மூன்றாக பிரிந்து செயல்படுகிறார் என்பதுதான் உண்மை!//
உண்மை என்று சொல்லி சகோ.சுந்தர் அறிவித்துள்ள இவ்விஷயத்திற்கு வேதவசன ஆதாரம் இல்லை என்பதே உண்மை.
தேவனின் ஒரு பிரிவாக இயேசு இருக்கலாம்; ஆனால் இதே ரீதியில் பார்த்தால், ஆதாமுங்கூட தேவனின் ஒரு பிரிவுதான். ஆதாமுக்கும் இயேசுவுக்குமுள்ள ஒரே வித்தியாசம்: ஆதாம், தேவனுக்குக் கீழ்ப்படியவில்லை; இயேசு, தேவனுக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்தார் (பிலிப்பியர் 2:8) என்பதே.
மற்றபடி, ஆதாமுக்கு தேவனைமீறி செயல்படும் சுயாதீனம் இருந்ததைப்போல, இயேசுவுக்கும் தேவனைமீறி செயல்படும் சுயாதீனம் இருந்தது (அதனால்தான் தேவவசனத்தை மீறி செயல்படும்படி, சாத்தான் இயேசுவைத் தூண்டினான் (மத்தேயு 4:10)). ஆதாம், தேவனைவிட சிறியவராயிருந்ததைப்போல் இயேசுவும் தேவனைவிட சிறியவரே (யோவான் 14:28). ஆதாமின் சித்தம் தேவனின் சித்தத்திற்கு வேறுபட்டிருந்ததைப்போல் இயேசுவின் சித்தமும் தேவனின் சித்தத்திற்கு வேறுபட்டிருந்தது (மத்தேயு 26:39). ஆதாம் தேவனிடமிருந்து அதிகாரத்தைப் பெற்றதைப்போல், இயேசுவும் தேவனிடமிருந்து அதிகாரத்தைப் பெற்றார் (ஆதியாகமம் 1:28; மத்தேயு 28:18). ஆதாமும் மரித்தார், இயேசுவும் மரித்தார்; ஆனால் ஆதாம் தன் சுயபாவத்தால் மரித்தார், இயேசு பிறரது பாவத்தால் மரித்தார்.
தேவனிடமிருந்து பிரிந்த இயேசுவின் மூலம் தேவனே செயல்படுவதாக சுந்தர் கூறுகிறார். அவ்வாறெனில், தேவனிடமிருந்து பிரிந்த ஆதாமின் மூலமாகவும் தேவனே செயல்படுவதாகக் கூறமுடியுமா? அதை சுந்தர் ஏற்றுக்கொள்வாரா?
இன்னும் தொடரும் .....
-- Edited by anbu57 on Wednesday 13th of January 2010 12:44:42 PM
-- Edited by anbu57 on Friday 22nd of January 2010 09:03:09 AM
anbu57 wrote:இப்படிப்பட்டதான, வேதாகமத்தில் இல்லாததும் ஜனங்களை மோசம்போக்குகிறதுமான திரித்துவக் கோட்பாட்டிற்கு, விபரமறிந்தவரான சகோ.சுந்தர் போன்றவர்களும் விளக்கங்கூற முனைவது என்னை மிகவும் வருந்தச்செய்கிறது.
-- Edited by anbu57 on Wednesday 13th of January 2010 12:44:42 PM
சகோதரர் அன்பு அவர்களே முக்கியமாக வேதத்தில் இல்லாத எந்த வார்த்தைக்கும் நான் முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. அதேபோல் தான் இந்த திரித்துவம் என்ற வார்த்தைக்கும் என்னை பொறுத்தவரை எந்த முக்கியத்துவமும் இல்லை!
ஆகினும் அனேக கிறிஸ்தவர்கள் திரித்துவம் என்றொரு கருத்தை போதித்து அதற்க்கு வெவேறு விளக்கங்கள்கொடுப்பதால். சிலர் உலகம் தோன்றும் முன்னே பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் என்ற மூன்று தேவர்கள் ஒரு டிஸ்கசன் நடத்தினார்கள் என்று கூட கூறுகிறார்கள்.
இக்கருத்துக்கள் மாற்று மத சகோதரர்கள் குழப்பத்தில் ஏதேதோ கேள்விகள் கேட்கும்படி தூண்டுகிறது அதற்க்கு விளக்கம் கொடுபதர்க்காகவே இந்த பதிவு எழுதப்பட்டது என்பதை தங்களும் அறிவீர்கள்.
திரித்துவம் என்ற வார்த்தைதான் வேதத்தில் இல்லையே தவிர இறைவனை வேதம் முதலில் "தேவன்" என்றும் பிறகு "தேவனாகிய கர்த்தர்" என்றும் பிறகு இயேசுவை "கர்த்தராகிய இயேசு கிறிஸ்த்து" குறிப்பிடுவதால் இயேசுவுக்கு தேவனுடன் எதோ ஒருவகையில் தொடர்பு இருப்பதை நாம் அறியமுடியும். சில இடங்களில் இயேசுவை "கர்த்தர்" என்று தனிப்பட்ட முறையிலும் வேதம் குறிப்பிடுகிறது.
எனவே இப்பொழுது திரித்துவத்தை பற்றி அறியவேண்டுமென்றால் முதலில் இயேசு யார்? என்பதையும் ஆதாமுக்கும் இயேசுவுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்பதையும் அறியவேண்டும்
எனவே. இவ்விவாதம் அப்படியே நிற்கட்டும் நாம் முதலில் இயேசு யார் என்று ஆராய்வோம்!
மனுஷகுமாரனாக வந்த இயேசுகிறிஸ்த்து யார்? என்ற விவாதத்துக்கு கீழ்க்கண்ட தொடுப்பை சொடுக்கவும்
sundar wrote: //சகோதரர் அன்பு அவர்களே முக்கியமாக வேதத்தில் இல்லாத எந்த வார்த்தைக்கும் நான் முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. அதேபோல் தான் இந்த திரித்துவம் என்ற வார்த்தைக்கும் என்னை பொறுத்தவரை எந்த முக்கியத்துவமும் இல்லை!//
திரித்துவம் என்ற வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடாத நீங்கள், அவ்வார்த்தைக்கு விளக்கம்தர முன்வரக்கூடாது என்பதே என் கருத்து.
sundar wrote: //ஆகினும் அனேக கிறிஸ்தவர்கள் திரித்துவம் என்றொரு கருத்தை போதித்து அதற்க்கு வெவேறு விளக்கங்கள்கொடுப்பதால். சிலர் உலகம் தோன்றும் முன்னே பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் என்ற மூன்று தேவர்கள் ஒரு டிஸ்கசன் நடத்தினார்கள் என்று கூட கூறுகிறார்கள்.
இக்கருத்துக்கள் மாற்று மத சகோதரர்கள் குழப்பத்தில் ஏதேதோ கேள்விகள் கேட்கும்படி தூண்டுகிறது அதற்க்கு விளக்கம் கொடுபதர்க்காகவே இந்த பதிவு எழுதப்பட்டது என்பதை தங்களும் அறிவீர்கள்.
திரித்துவம் என்ற வார்த்தைதான் வேதத்தில் இல்லையே தவிர இறைவனை வேதம் முதலில் "தேவன்" என்றும் பிறகு "தேவனாகிய கர்த்தர்" என்றும் பிறகு இயேசுவை "கர்த்தராகிய இயேசு கிறிஸ்த்து" குறிப்பிடுவதால் இயேசுவுக்கு தேவனுடன் எதோ ஒருவகையில் தொடர்பு இருப்பதை நாம் அறியமுடியும். சில இடங்களில் இயேசுவை "கர்த்தர்" என்று தனிப்பட்ட முறையிலும் வேதம் குறிப்பிடுகிறது.//
திரித்துவம் வேதாகமத்தில் இல்லை என்றால், அதை மட்டுமே மாற்று மத சகோதரர்கள் உட்பட அனைவருக்கும் அழுத்தமாகச் சொல்ல வேண்டும். அதைவிடுத்து, எத்தனையோபேர் கொடுக்கிற விளக்கத்தைப்போல் நீங்களும் ஒரு விளக்கம் கொடுத்தால், திரித்துவத்தை நீங்களும் ஏற்றுள்ளீர்கள் என்பதோடு, உங்கள் விளக்கமும் வேதபோதனைக்கு மாறான ஒன்றாகத்தான் இருக்கும்.
வேதாகமத்தில் இல்லாத திரித்துவத்திற்கு ஆளாளுக்கு விளக்கம் கொடுக்கக் கொடுக்க குழப்பம் அதிகமாகத்தான் ஆகுமேயன்றி தெளிவு ஒருபோதும் வராது.
உங்கள் விளக்கத்தில், தேவன், தேவனாகிய கர்த்தர், (கிறிஸ்துவைக் குறிப்பிடுகிற) கர்த்தர் எனும் வார்த்தைகளுக்கிடையே ஒரு தொடர்பு இருப்பதாகச் சொல்லி, வேதாகமத்தில் திரித்துவத்திற்கு ஓர் அடிப்படை இருப்பதாகக் காட்டுகிறீர்கள். ஆனால் உண்மை என்ன?
தமிழ் வேதாகமத்தில் காணப்படும் கர்த்தர் எனும் வார்த்தை ஆங்கில வேதாகமத்தில் Lord என காணப்படுகிறது. ஆங்கில வேதாகமத்தில் Lord எனும் வார்த்தை பல வசனங்களில் தேவனைக் குறிப்பதாக இருந்தாலும், சில வசனங்களில் மனிதர்களைக் குறிப்பதாக இருப்பதையும் நாம் காணலாம். எபிரெய மொழியில் யெகோவா எனும் வார்த்தைதான் Lord/கர்த்தர் என ஆங்கில/தமிழ் வேதாகமத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. யெகோவா எனும் வார்த்தை தமிழ் வேதாகமத்தில் ஒருசில வசனங்களில் மட்டும் யெகோவா என்றே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் Kinj James ஆங்கில வேதாகமத்தில் Jehovah என ஒரு வசனத்திலும் மொழிபெயர்க்கப்படவில்லை.
புதியஏற்பாட்டில் கர்த்தர் என மொழிபெயர்க்கப்பட்டுள்ள கூரியோஸ் எனும் கிரேக்க வார்த்தை, மத்தேயு 10:24; 18:31; 25:19 அப்போஸ்தலர் 16:19; எபேசியர் 6:5 போன்ற பல வசனங்களில் எஜமானன் என்றும், மத்தேயு 27:63-ல் (பிலாத்துவை அழைக்கிற) ஆண்டவனே என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
எனவே தேவன், தேவனாகிய கர்த்தர், (கிறிஸ்துவைக் குறிப்பிடுகிற) கர்த்தர் எனும் வார்த்தைகளெல்லாம் மொழிபெயர்ப்பாளர்களின் சுயஞானத்தின் பாதிப்பால் வந்தவைகளேயன்றி தேவஞானத்தால் வந்தவைகளல்ல. அப்படிப்பட்ட அந்த வார்த்தைகளுக்கு இடையே தொடர்புள்ளதாகச் சொல்லி, அதன் அடிப்படையில் திரித்துவ கோட்பாட்டை நீங்கள் நிலைநிறுத்த முற்படுவது நிச்சயமாக சரியல்ல சகோதரரே!
sundar wrote: //இப்பொழுது திரித்துவத்தை பற்றி அறியவேண்டுமென்றால் முதலில் இயேசு யார்? என்பதையும் ஆதாமுக்கும் இயேசுவுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்பதையும் அறியவேண்டும்
எனவே. இவ்விவாதம் அப்படியே நிற்கட்டும் நாம் முதலில் இயேசு யார் என்று ஆராய்வோம்!//
உங்கள் வார்த்தையை மீறி எனது விவாதத்தை தொடர்ந்ததற்காக மன்னிப்பு வேண்டுகிறேன் சகோதரரே! ஆயினும் இத்தோடு என் விவாதத்தை நிறுத்திக் கொள்கிறேன்.
திரித்துவ கோட்பாட்டை நிலை நிறுத்தவேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை அதை நிலை நிறுத்துவதால் எனக்கு எந்த பயனும் இல்லை. திரித்துவம், திரிஎகத்துவம் என்ற கோட்பாட்டுக்கு நாம் எந்த முக்கியத்துவமும் கொடுக்கவேண்டிய தேவையில்லை ஏனெனில் அந்த வார்த்தை வேதத்தில் இல்லை.
ஆனால்
தேவன் எவ்வாறு செயல்பட்டிருக்கிறார் என்பதை ஆராயவேண்டியது
நமது கடமை. தேவனை பற்றிய முழு ஆழங்களை நாம் அறியமுடியாது என்றாலும் நமக்கு வெளிப்படுதபட்டவைகளில் இருந்து ஆவியானவரின் துணையுடன் முடிந்தவரை ஆராய்ந்து பார்ப்பதில் தவறில்லை!
திரித்துவம் என்று எதுவும் இல்லை என்று கருதிய நான் வேதத்தில் உள்ள சில கருத்துக்கள் அடிப்படையில் மற்றும் பல தேவ தாசரிகளின் கருத்துக்களை சிந்தித்து தேவன் அவ்வாறு செயல்பட்டிருக்கலாம் என்று ஏற்றுக்கொண்டேன். மேலும் மர்மமான இந்த திரித்துவ கோட்பாடு பற்றி எங்கும் சரியாக விளக்கம் மற்றும் விவாதம் இல்லை! இந்த விவாதத்தை பார்த்தாவது அவர்கள் புரிந்துகோள்ளட்டுமே!
"தேவன் " என்று ஆதியாகமம் ஒன்றாம் அதிகாரத்தில் வரும் பதம் என் இரண்டாம் அதிகாரத்தில் 'தேவனாகிய கர்த்தர்" என்று வருகிறது? தேவன் என்றே குறிப்பிட்டிருக்கலாமே எதோ சில காரியங்கள் இந்த இரண்டு அதிகாரத்துக்குள் நடந்துள்ளது என்றே நான் கருதுகிறேன்.
இதுபற்றி தங்கள் கருத்து என்ன?
இரண்டாவது இயேசு யார் என்று ஆராய்வதோடு பரிசுத்த ஆவியானவர் என்று வேதத்தில் சுமார் நாற்ப்பது முறைக்கு மேல் குறிப்பிடப்படும் அப்போஸ்தலரை வழி நடத்திய மற்றும் நம்முள் இருந்து நம்மை வழிநடத்தும் அந்த ஆவியானவர் யார் என்பதையும் நாம் ஆராயவேண்டும்?
அப்பொழுதுதான் நாம் ஒரு முடிவுக்கு வரமுடியும் என்று கருதுகிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
"மனுஷ குமாரனாக வந்த இயேசு யார்" http://lord.activeboard.com/forum.spark?aBID=134574&p=3&topicID=33403789 என்ற திரியில் இயேசு கிறிஸ்த்து "தேவனின் வார்த்தை" என்றும். தேவனின் வார்த்தை என்னும் வல்லமை கர்த்தரின் மகிமையோடு சேர்ந்து மாமிசமாக்கபட்டது என்பதையும் விரிவாக வசன ஆதாரத்தோடு ஆராய்ந்தோம். எனவே இயேசு என்பவர் தேவனின் தற்சொரூபமே!
முக்கியமாக
வெளி:
12அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலையைப்போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது. 13 இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே. 16 ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.
மேல்கண்ட வசனங்கள் மனுஷகுமாரனாக வந்த இயேசு "தேவனுடைய வார்த்தை" என்பதை தெளிவாக விளக்குவதோடு அவர் ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்றும் நமக்கு உணர்த்துகிறது.
அடுத்ததாக பரிசுத்த ஆவி எனப்படுபவர் யார் என்பதை ஆராய தனி திரி தொடங்கலாம்.
-- Edited by SUNDAR on Thursday 28th of January 2010 02:50:39 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)