இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அறிமுகம் சுந்தர்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
அறிமுகம் சுந்தர்!
Permalink  
 


முழுப்பெயர்  :  சுந்தரராஜ் 
வசிப்பிடம்     :   சென்னை 
சொந்த ஊர்   :   தூத்துக்குடி 
பணி              :   வலைதள/கைபிரதி  ஊழியம் மற்றும்
                          தனியார் கம்பனியில் தலைமை கணக்கர்!    
தகுதி             :   இறைவனை அறிந்துகொண்டது!
 
என்னைப்பற்றி ஒருசில வரிகள்:  

பூர்வீக   இந்து மதத்தை சார்ந்த நான் 1992 ம் வருடம்  மும்பை பட்டணத்தில் 
இருந்தபோது இறைவனால் அதிசயமாக தொடப்பட்டவன்.   அதுபற்றிய விளக்கம் அறிய கீழ்க்கண்ட தொடுப்பை சொடுக்கவும்.



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இனியவர்

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

அற்புதமான அனுபவங்களை சந்தித்த உங்களுடன் வலை தளத்தின் மூலம் உரையாடும் வாய்ப்பைக் கொடுத்த தேவாதி தேவனை துதிக்கிறேன்.

தாங்கள் ஆதி நாட்களில் மாத்திரமல்ல இப்போதும் தேவனோடு online-ல் இருக்கிறீர்கள் என்பதை உங்கள் எழுத்துக்கள் காண்பிக்கின்றன.

கர்த்தர் உங்களை இன்னும் அனேகருக்கு பயனுள்ள பாத்திரமாக உயர்த்துவாராக!... நன்றி..

-- Edited by timothy_tni on Wednesday 24th of March 2010 08:03:49 PM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

timothy_tni wrote:
///அற்புதமான அனுபவங்களை சந்தித்த உங்களுடன் வலை தளத்தின் மூலம் உரையாடும் வாய்ப்பைக் கொடுத்த தேவாதி தேவனை துதிக்கிறேன்////
 
மிக்க நன்றி சகோதரர் அவர்களே, என் வாழ்வில் நடந்த சம்பவங்களில் பதிவில் இருப்பது ஒரு சிறு பகுதி மட்டுமே.  இன்னும் அனேக அறிவுக்கெட்டாத அதிசய காரியங்கள் இருக்கின்றன. அனால்   பல  கிறிஸ்த்தவர்களே  நடந்த  காரியங்களை  நம்ப மறுப்பதாலும் என்னை தவறான கண்ணோட்டத்தில் விமர்சிப்பதாலும்  பல பாகங்களை நான் வெளியிடவில்லை.   
 
நாம் எல்லோரும் ஒரு நாள் (வெகு விரைவில்) ஆண்டவரின் ராஜ்யத்தில்  சந்திக்க போகிறோம் அப்பொழுது அனைவருக்கும் உண்மைகள் அனைத்தும் வெளியரங்கமாகும்.      
 
timothy_tni wrote:
///தாங்கள் ஆதி நாட்களில் மாத்திரமல்ல இப்போதும் தேவனோடு online-ல் இருக்கிறீர்கள் என்பதை உங்கள் எழுத்துக்கள் காண்பிக்கின்றன.////
 
நான் மட்டுமல்ல சகோதரர் அவர்களே, ஒவ்வொரு கிரிஸ்தவனும் நிச்சயம் தேவனுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்பது தேவனின் அவா!.    அதற்குதான் ஆவியானவர் என்னும் அச்சாரத்தை தேவன்  நமக்கு அருளியிருக்கிறார். தேவனிடம் நேரடி தொடர்பு  இல்லாதது என்பது  நெட் கனக்சன் இல்லாத கணினி போன்றது. அதில்  அப்டேட்கள் எதுவும் டவுன்லோட்  ஆகாததால்,  தேவனின் இருதய நிலைகளை சரியாக அறிய முடியாமல்  போய்விடுகிறது. வேதபுத்தகம் எல்லோருக்கும் பொதுவான நீதியை சொல்லகூடியது. அதில் இல்லாத அனேக சிறியபெரிய காரியங்களை நாம் வாழ்வில் சந்திக்கிறோம்.  அவற்றில் நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை  அறிந்துகொள்ள  தேவனிடம் அனுதின தொடர்பு அவசியமாகிறது.        
 
மோசேயின் நாட்களில்
 
லேவியராகமம் 24:11 அப்பொழுது இஸ்ரவேல் ஜாதியான அந்த ஸ்திரீயின் மகன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்துத் தூஷித்தான். அவனை மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள். 
 
இந்த காரியம் குறித்து கர்த்தரின் கட்டளை எதுவும் இல்லாத காரணத்தால் ஆண்டவரிடமிருந்து கட்டளைவரும் வரை அவர்கள் பொறுத்திருந்து பின்னர் தேவனின் வழிகாட்டுதலுக்கு இணங்க  

லேவியராகமம் 24:14 தூஷித்தவனைப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோ; கேட்டவர்கள் எல்லாரும் தங்கள் கைகளை அவன் தலையின்மேல் வைப்பார்களாக;  பின்பு சபையார் எல்லாரும் அவனைக் கல்லெறியக்கடவர்கள்.

என்ற கட்டளையை நிறைவேற்றினார்கள். அதேபோல் நமக்கு சரியான  பதில் தெரியாத காரியங்களின் இறைவனின் வழி நடத்துதலை அறிந்துகொள்ள எப்பொழுதும் தேவனுடன் நேரடி தொடர்பில் இருப்பது அவசியமாகிறது. 
 
தேவன் வேதபுத்தகத்தில் எங்கும் நான் மோசேயுடன் மட்டும்தான் பேசுவேன் என்றோ அப்போச்தலர்களுடன் மட்டும்தான் பேசுவேன் என்றோ சொல்லவில்லை.  கடின ஜெபத்தால் கர்த்தரை தேடி, அவர் வார்த்தையை கேட்கமுடியாத  பலர், தங்களின் இயலாமையை மறைக்க, தேவன் அப்போஸ்தலர்களிடம் மடும்தான் பேசுவார் மற்றவர்களிடம் பெசமாடார் என்று வேதத்துக்கும் புறம்பான கருத்துக்களை சொல்லி வருவதை பார்க்க முடியும்.  ஆனால்  தேவனோ      
எரேமியா 33:3 என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.
என்று மிக தெளிவாக சொல்லிவைத்திருக்கிறார். எனவே எனக்கு புரியாத கருத்துக்கள்  எனது பார்வைக்கு வரும்போது நான் ஓடுவது தேவனிடம் விசாரிக்கத்தான். அதற்க்கான  சரியான  பதில்  தெரியும்வரை நான் தேவனை விடுவதில்லை.  
 
timothy_tni wrote:
 ///கர்த்தர் உங்களை இன்னும் அனேகருக்கு பயனுள்ள பாத்திரமாக உயர்த்துவாராக!... நன்றி.///
 
தங்கள் வாழ்த்துதலுக்கு மிக்கநன்றி! ஆகினும் இனி வரும்காலம் மிக குறுகியதாக
இருப்பதால் எல்லோருக்கும் எல்லா காரியங்களையும் தெரிவிக்க தேவன் சித்தம் கொண்டிருக்கவில்லை.  சிலருக்கு அருளப்பட்டது சிலருக்கு அருளப்படவில்லை. இந்நிலையில் ஆண்டவர் செய்த அதிசய செயல்களை எழுதிவைப்பது அதற்கேற்ற  அழைப்பு மற்றும் தரிசனம் உள்ளவர்களுக்கு நிச்சயம்  பயன்தரும் என்பதில் ஐயமில்லை.    




__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

சுந்தர் எழுதியது  
----------------------------------------------------------------------------------------------------------
மிக்க நன்றி சகோதரர் அவர்களே, என் வாழ்வில் நடந்த சம்பவங்களில் பதிவில் இருப்பது ஒரு சிறு பகுதி மட்டுமே.  இன்னும் அனேக அறிவுக்கெட்டாத அதிசய காரியங்கள் இருக்கின்றன. அனால்   பல  கிறிஸ்த்தவர்களே  நடந்த  காரியங்களை  நம்ப மறுப்பதாலும் என்னை தவறான கண்ணோட்டத்தில் விமர்சிப்பதாலும்  பல பாகங்களை நான் வெளியிடவில்லை.   
--------------------------------------------------------------------------------------------------------
குறை சொல்கின்றவர்களும் விமர்சனம் பன்னுகின்றவர்களும் எப்பொழுதும் இருப்பார்கள் சுந்தர்
அதனால் அறிய விரும்பும் காரியங்களை எங்களுக்கு நீங்கள் சொன்னால் நாங்கள் அறிந்து
கொள்ளவும் தேவனுடைய சித்தம் என்ன என்று தெரிந்து கொள்ளவும் ப்ரோஜனமாய் இருக்கும் அல்லவா
நீங்கள் இந்த தளத்தி பதிவிட முடிய வில்லை என்றால் எங்கள் தனிப்பட்ட ஈமெயில்  அனுப்பலாமே
ஏனென்றால் இந்த தலத்தில் வந்து தான் நான் எல்லாவற்றையும் கற்று கொண்டு இருக்கின்றேன்
மற்றவர்களுக்கு சொல்லி கொண்டு இருக்கின்றேன்
 
தேவன் உங்களுக்கு எழுத வேண்டாம் என்றால் ok 
அப்படி இல்லையென்றால்  எங்கள் தனிப்பட்ட ஈமெயில் அனுப்புக்கள்
ஞானத்தில் நான் குறைவு உள்ளவன்  அறிவு இல்லாதவன்  
இந்த தளத்தில் வந்தபிறகு தான் நான் தேறி வருகின்றேன் கற்று கொண்டு வருகின்றேன்
 
புரிதலுக்கு
நன்றி


__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



இனியவர்

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

//அதில் இல்லாத அனேக சிறியபெரிய காரியங்களை நாம் வாழ்வில் சந்திக்கிறோம். //

உண்மையே ஆயினும், எல்லாவற்றிற்கும் முடிவான பதில் வேதமே..

அதனை விளங்கிக் கொள்ள உதவுபவர் பரிசுத்த ஆவியானவர்.

பரிசுத்தாவியின் அபிஷேகத்தை ஓர் அனுபவமாக மாத்திரம் பெற்றுவிட்டு, எழுதப்பட்ட தேவனுடைய வார்த்தைகளின் வழிநடத்துதல் இல்லையென்றால், அம்மனிதன், ஓடுவதற்கு தண்டவாளங்கள் இல்லாமல் நீராவியினால் நிறைந்த ஒரு நீராவி எஞ்சினைப்போலவே இருக்கிறான்!

இதைப்போலவே "தேவனுடைய வார்த்தையின் அறிவை" பரிசுத்தாவியின் அபிஷேகம் இல்லாமல் பெற்ற ஒருவன், தண்டவாளத்தில் 'நீராவி இல்லாமல் நின்று கொண்டிருக்கும் எஞ்சினைப் போல இருக்கிறான்!! இது போன்றவர்கள் கிறிஸ்தவ ஜீவியத்தில் முன்னேறிச் செல்வது ஒருக்காலும் கூடாத காரியமாகும்!


சகோதரரே தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.

//இனி வரும்காலம் மிக குறுகியதாக இருப்பதால் எல்லோருக்கும் எல்லா காரியங்களையும் தெரிவிக்க தேவன் சித்தம் கொண்டிருக்கவில்லை.//

இது போல ஒரு விஷயத்தைத் தீர்க்கமாக கூறும் முன் வேதத்தை ஆராய்தல் வேண்டும். ஒரு விஷயத்தை முடிவாக கூற வேத வசனங்களே ஆதாரம்.

எல்லோருக்கும் எல்லா காரியங்களையும் தேவன் எப்போதும் வெளிப்படுத்தவில்லை.

ஆனால், கடைசி காலங்களில் இது இன்னும் குறைந்து விடும் என்பது போல் எழுதியிருக்கிறீர்கள்.
அப்: 2-17,18; ஏசா:40-5.
ஆனால், இப்படிப்பட்ட வெளிப்பாடுகள் இன்னும் அதிகமாகும் என்பது என் கருத்து.

புரிந்துகொள்வதற்கு நன்றி..




-- Edited by timothy_tni on Saturday 27th of March 2010 07:27:26 PM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

Bro timothy_tni Wrote:

///உண்மையே ஆயினும், எல்லாவற்றிற்கும் முடிவான பதில் வேதமே..///
சகோதரர் அவர்களே முடிவான பதில் வேதம் என்பதை நானும் ஏற்கிறேன் ஆனால் சில காரியங்களை வேதவசனத்தின் அடிப்படையில் தீர்மானிக்க முடியாது என்பதை நீங்களும் சற்று அறிய வேண்டும்.
 
"நான் கம்பியுட்டரில் கணக்கர் வேலை பார்க்கிறேன்.
 
இது சரியான செயலா என்பதையும்
 
தமிழ் நாட்டில் உள்ள எல்லோரும் அரிசியால் செய்த சாதம் சாப்பிடுகிறோம்
 
அது சரியான உணவா?  
 
என்பதையும் வேத வசன ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா?
 
சுந்தர்
//இனி வரும்காலம் மிக குறுகியதாக இருப்பதால் எல்லோருக்கும் எல்லா காரியங்களையும் தெரிவிக்க தேவன் சித்தம் கொண்டிருக்கவில்லை.//
BRo: timothy_tni wrote:
இது போல ஒரு விஷயத்தைத் தீர்க்கமாக கூறும் முன் வேதத்தை ஆராய்தல் வேண்டும். ஒரு விஷயத்தை முடிவாக கூற வேத வசனங்களே ஆதாரம்.எல்லோருக்கும் எல்லா காரியங்களையும் தேவன் எப்போதும் வெளிப்படுத்தவில்லை.
ஆனால்,  கடைசி காலங்களில் இது இன்னும் குறைந்து விடும் என்பது போல் எழுதியிருக்கிறீர்கள்.///

அப்படி ஒரு  கருத்தில் நான்
எழுதவில்லை சகோதரர் அவர்களே. சில காரியங்களை சில விசுவாசிகளிடம் சொன்னால் எக்காளமாக  சிரிக்கின்றனர். அப்பொழுது ஆவியானவரே.  இவரிடம் இந்த காரியங்களி  பற்றி உன்னை பேசசொன்னது யார்? என்று கடிந்து கொண்டதை நான் அறிந்திருக்கிறேன். எனவேதான்; 
 
 மத்தேயு 13:11 அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. அவர்களுக்கோ அருளப்படவில்லை  
 
என்று இயேசு குறிப்பிட்ட வார்த்தையின் அடிப்படையில் அவ்வாறு எழுதினேன்.

BRo: timothy_tni wrote:
///ஆனால், இப்படிப்பட்ட வெளிப்பாடுகள் இன்னும் அதிகமாகும் என்பது என் கருத்து///
 
இருக்கலாம்.  
 
அப்போஸ்தலர் 2:17 கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள் 
 
என்று வசனம் சொல்கிறதே. எனவே அநேகர் தரிசனம் சொப்பனம் காண வாய்ப்பு இருக்கிறது ஆகினும் எல்லாவற்றையும் எல்லோரும் அறிய முடியாது. அவனவன் தகுத்திக்கு தகுந்த வெளிப்பாடுகள் மட்டுமே அருளப்படும் என்று நான் கருதுகிறேன்.  


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

EDWIN SUDHAKAR wrote:

 

குறை சொல்கின்றவர்களும் விமர்சனம் பன்னுகின்றவர்களும் எப்பொழுதும் இருப்பார்கள் சுந்தர்
அதனால் அறிய விரும்பும் காரியங்களை எங்களுக்கு நீங்கள் சொன்னால் நாங்கள் அறிந்து
கொள்ளவும் தேவனுடைய சித்தம் என்ன என்று தெரிந்து கொள்ளவும் ப்ரோஜனமாய் இருக்கும் அல்லவா
நீங்கள் இந்த தளத்தி பதிவிட முடிய வில்லை என்றால் எங்கள் தனிப்பட்ட ஈமெயில்  அனுப்பலாமே
ஏனென்றால் இந்த தலத்தில் வந்து தான் நான் எல்லாவற்றையும் கற்று கொண்டு இருக்கின்றேன்
மற்றவர்களுக்கு சொல்லி கொண்டு இருக்கின்றேன்
 
 
சகோதரர் எட்வின் அவர்களே.
 
நடந்த சம்பவங்களில்  இடறல் உண்டாக்கலாம் என்று நான் எண்ணும் சில சம்பவங்களை மட்டும் தவிர்த்துவிட்டு, மற்றவற்றை கொஞ்சம் கொஞ்சமாக பதிவிடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளேன்.
 
ஒரே ஒரு காரியத்தை மட்டும் இங்கு நான் தெரிவித்துகொள்ள விரும்புகிறேன்.
 
"தேவனின் வார்த்தைக்கு அப்படியே கீழ்படிந்து நடக்கும் ஒருவன் உலகத்தின் பார்வைக்கு பயித்தியகாரனாக பிசாசு பிடித்தவனாகதான்   தோன்றுவான்" 
எரேமியா எசேக்கியேல்  போன்றவர்களின் வாழ்க்கையை ஆழமாக ஆராய்ந்து படித்து பார்க்கவேண்டும். 
 
அதே நேரத்தில் "உலக ஞானம் என்பது தேவனின் பார்வைக்கு பைத்தியமாக தோன்றும்"  
 
I கொரிந்தியர் 3:19 இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது.
 
இயேசுவை பிசாசு பிடித்தவர் என்றும்,  பவுலை பயித்தியம் என்றும் உலக மக்கள் கூறியதை நினைவு கூறுகிறேன்.
 
யோவான் 10:20 அவர்களில் அநேகர்: இவன் பிசாசுபிடித்தவன், பயித்தியக்காரன்; ஏன் இவனுக்குச் செவிகொடுக்கிறீர்கள் என்றார்கள்.
  
அப்போஸ்தலர் 26:24  பெஸ்து உரத்த சத்தமாய்: பவுலே, நீ பிதற்றுகிறாய், அதிகக்கல்வி உனக்குப் பயித்தியமுண்டாக்குகிறது என்றான்.
 
நான் இவர்களுக்கு எள்ளளவும் நிகரல்ல என்றாலும், உலகத்தின் பார்வைக்கு  
அந்நாட்களில் நானும் ஒரு பயித்தியமாகதான் இருந்தேன். எனவே அதைப்பற்றி எழுதும்போது என்னை பயித்தியம் என்று  பலர்  தீர்மானிக்கலாம்.  
 
பரவாயில்லை, ஒரு சிலரது விசுவாசம் உருதிப்படவும்,  பிறமத சகோதரர்கள் பைபிள்  காட்டும் இறைவன்தான்  உண்மையானவர்  என்று நம்பவும்   நடந்த உண்மைகளை அப்படியே தலைப்பு மாற்றப்பட்டுள்ள கீழ்க்கண்ட திரியில் தொடர்ந்து எழுதுகிறேன்..
  
 
வெளிப்பாடுகள் தரிசனங்களை நம்பாதோர் தயவு செய்து இதை படிக்கவேண்டாம். 

 



-- Edited by SUNDAR on Wednesday 7th of April 2010 03:38:38 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard