"அதாவது யகோவா தேவன் என்னும் தேவன் ஒன்றுமில்லாததில் இருந்து இயேசு என்னும் ஒரு தேவனை படைத்தார்" என்பது உங்கள் கருத்து அப்படித்தானே? நல்லது!"
அவரின் ஒரு வல்லமையை தான் இயேசு கிறிஸ்துவாக படைத்தார் என்று வேதம் எங்கு சொல்லவில்லையே!!
"அப்படி ஏன் இருக்ககூடாது? " "இன்று உலகத்தில் அன்றாடம் செத்து பிழைக்கும் அனேக நரர் படும் அவஸ்த்தையை பார்க்கும் போது அது அன்பின் வெளிப்பாடு என்று சொல்ல எனக்கு தோன்றவில்லை! "
யூகங்களின் பேரில் வாதம் வேண்டாம். கொலோ.1ம் அதிகாரம் 15 முதல் வாசித்து பாருங்கள். மற்ற எந்த ஒரு படைப்புக்கும் முன்னதாக அவர் இயேசு கிறிஸ்துவை படைத்தார். அதன் பின் படைக்கப்பட்டது எல்லாம் இயேசு கிறிஸ்துவால் (லோகோஸ் (வார்த்தை)). ஆகவே தான் இந்த இரு நபர்களையும் சேர்த்து தான் பழைய ஏற்பாடு ஏலோஹிம் என்கிறது, அதை திருத்துவவாதிகள் அவர்களுக்கு சாதகமாக மூவர் என்று மாற்றி விட்டார்கள். சரி போகட்டும். ஒரு கட்டிடம் முடிவடையாத நிலையில் இருக்கும் போது அந்த கட்டிடத்தின் முடிவு தெரியாமல் அதை வியாக்கியானம் செய்வது தவறாகும். அப்படியே தான் யெகோவா தேவனின் திட்டங்கள் முடிவு பெறாத நிலையை வைத்து யூகிப்பது சரி இல்லை என்றே நினைக்கிறேன்.
"அது எப்படி சகோதரரே சரியாக வரும்?. அப்படிஎன்றால் இயேசுவை படைக்கும் முன் தேவனுக்கு வாத்தைகள் பேசும் வல்லமை இல்லையா? இயேசுவை படைத்து அவர் மூலம்தான் பேசவேண்டுமா? அதன் அடிப்படை என்ன? "
என்ன இப்படி சொல்லீட்டீங்க!! யெகோவா தேவனின் தன்மையினால் அவர் மனிதர்களிடம் நேரடியாக வந்து பேச வர மாட்டார், ஆகவே தான் இயேசு கிறிஸ்து என்னும் வார்த்தை. இங்ங்கு எழுதியது மாதிரி, யெகோவா தேவனை ஒரு போதும் ஒரு மனுஷனும் கண்டதில்லை என்கிறது வேதம், அப்படி இருக்க தேவனின் வார்த்தைகள் அந்த மனிதர்களிடம் எப்படி வரும்? ஆகவே லோகோஸ் என்கிற இயேசு கிறிஸ்துவின் படைப்பு. மனிதனை இரட்சிக்க யெகோவா தேவ்னால் மரிக்க முடியாது, ஏனென்றால் அவர் ஒருவரே சாகாமை உள்ளவராக இருக்கிறவர். ஆகவே இயேசு கிறிஸ்துவின் படைப்பு.
"ஸ்திரியின் வித்தில் வருபவர் உன்தலையை நசுக்குவார்" என்ற தேவனின் வார்த்தைக்கு இனங்கள் இயேசு மனிதனைப்போல மாமிசமானார் அதனால் அவருக்கு மரணம் வந்தது. மற்றபடி அவர் ஆபிரகாமுக்கு முன்னேயே இருந்தவர் வர் அடிமைரூபம் எடுத்து ஆதாமின் பாவத்தை ஏற்க்கவிடால் அவருக்கு மரணம் ஏது? "
முந்திய கேள்விக்கு உள்ள விளக்கம் தான் இதற்கும் பொருந்தும். ஆகவே தான் இயேசு கிறிஸ்துவின் படைப்பு, "உலக தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர்" என்கிறது வேதம்.
"எல்லாம் அவர் மூலமாக அவருக்காக உண்டானது என்ற வார்த்தை எப்படி சரியாகும்? "
அப்படி என்றால் பைபிள் தப்பா? நாம் புரிந்துக்கொள்ளும் விதமாக பைபிள் இல்லை, பைபிள் இருக்கிற விதமாக தான் நாம் அதை புரிந்துக்கொள்ள வேண்டும்.
"அப்பொழுது இயேசு எங்கிருந்தார்?"
வாசியுங்கள் நீதி. 8:22 முதல். ஒரு சின்ன விளக்கம். 22ம் வசனம், "கர்த்தர் தமது கிரியைகளுக்குமுன் பூர்வமுதல் என்னை தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார்"
அதாவது, தேவனின் திட்டங்களின் தொடக்கமே (ஆதி) இயேசு கிறிஸ்து தான். ஆகவே தான் யோவான் 1:1ல் "ஆதியில்" வார்த்தை. எதன் ஆதியில் என்றால், தேவனின் திட்டங்களின் (வழிகளின்) தொடக்கம் தான் அந்த ஆதி!!
"கர்த்தரின் மகிமைதான் மாமிசமான யாவும் காணும்படி வெளியரங்கமாகும்"
இதை தானே நானும் சொல்ல முயற்சித்து கொண்டிருக்கிறேன். ஆனால் நீங்களோ, அனைவரும் நரகத்திற்கு என்றென்றும் அக்கினிக்கு இரையாக போய் விடுவார்கள் என்கிறீர்கள். இன்னும் இந்த உலகத்தில் தேவனின் மகிமையை காணாதவர்கள் (உண்மையை சொல்ல போனால் கிறிஸ்தவர்கள் உட்பட தான்) எத்துனை கோடி ஜனங்கள் மரித்து போய் விட்டார்கள். தேவனின் எழுத்து அனைத்தும் நடந்தே தீர்மும். இந்த உலகத்தின் மாம்சத்தில் மீண்டும் உயிர்த்தெழும் ஜனங்கள் தான் அந்த மகிமையை காண்பார்கள் என்பதில் எந்த அளவிற்கு சந்தேகம் கொல்ள வேண்டாம்.
// மற்ற எந்த ஒரு படைப்புக்கும் முன்னதாக அவர் இயேசுகிறிஸ்துவை படைத்தார் //
இறைவனைக் குறித்து ஆராய்கிறோம் என்று துவங்கிய இந்த தளம் கொஞ்சம் கொஞ்சமாக "யேகோவா சாட்சிகள்" எனும் துருபதேசக் கூட்டத்தாரின் தளமாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு மேற்கண்ட வரிகளே சாட்சியாகும்;
யெகோவாவின் சாட்சிகளே, உங்களுக்கென்று புது வேதாகமத்தையே எழுதி அதையும் தப்பும் தவறுமாக அர்த்தம் கற்பித்து போதித்து முழு விசுவாசக் குடும்பத்தையும் கவிழ்த்து வருகிறீர்களே,அது போதாதா;
இஸ்லாமியருக்கும் மற்றவருக்கும் திருத்தப்பட்டதாகவும் தவறாக மொழி பெயர்க்கப்பட்டதாகவும் முத்திரையிடப்பட்டதாக்வும் தோன்றும் இந்த வேதத்தை விட்டுவிடுங்கள்; எங்கள் வேத நாயகனான இயேசுகிறிஸ்துவைக் குறித்துப் பேசுவதையும் நிறுத்திவிட்டு உங்கள் நம்பிக்கையை வெளிப்படையாகப் பேசி உங்கள் நேர்மையை காட்டுங்கள்; சுற்றிவளைத்து சோப்புப் போடவேண்டாம்;
பழைய ஏற்பாட்டில் இயேசு யாராக இருந்தார் என்றோ இல்லாமலே இருந்து பிதாவாகிய தேவனால் விசேஷித்த நோக்கத்துடன் சிருஷ்டிக்கப்பட்டார் என்றோ நீங்கள் விவாதிக்கும் அதே நேரத்தில் இயேசுவானவர் இந்த உலகத்துக்கு வந்த நோக்கத்தைக் குறித்து வலியுறுத்தி ஆதாயம் செய்ய வேண்டிய கோடிக்கணக்கான ஆத்துமாக்கள் பாதாளத்துக்கு விரைந்துக் கொண்டிருக்கிறது என்று நான் சொன்னால் பாதாளமே சாதாரண கல்லறைக் குழிதான்; ஆத்துமா என்ற ஒன்று இல்லை என்பீர்கள்;
ஆக இந்த தளத்தின் மீதே எனக்கு சந்தேகமாக இருக்கிறது; ஏனெனில் அவரும் (இறைநேசன் ) இந்த துஷடர்களுடன் சேர்ந்துகொண்டு "இயேசு தம்மை பிதா என்று சொல்லவில்லையே" என்கிறார்;
வாசகர்கள் கவனிக்கவும்;இயேசுகிறிஸ்துவின் நாமமே நாம் இரட்சிக்கப்படும்படி தேவனால் கட்டளையிடப்பட்டது;அவர் மூலம் பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தைப் பெற்றுள்ளோம்;எனவே இயேசுகிறிஸ்துவே ஆராதனைக்குரியவர்;அவரே பாத்திரர் என்று தூதர்களும் புகழ்ந்தனர்;இதுவே பிதாவுக்குப் பிரியமானது;
"இயேசு தம்மை பிதா என்று சொல்லவில்லையே" என்று சொல்லுவோர் கவனிக்க:
இயேசு தம்மை பிதா இல்லையென்றும் சொல்லவில்லையே: தம்மை விழுந்து தொழுத யாரையும் தடுக்கவுமில்லையே;
இயேசுவை சாதாரண ஏவல் சக்திபோலவும் குட்டிச்சாத்தான் போலவும் சித்தரிக்க முயற்சித்தால் வீணாக உதைபடுவீர்கள்,ஜாக்கிரதை..!
உங்கள் எழுத்தை வைத்து நீங்களே யார் என்பதை உலகுக்கு மட்டுமல்ல வலைத்தளம் முழுவதும் பிரபலப்படுத்துகிறீர்கள். கிறிஸ்த்தவர்களுக்கு அவப்பெயரை ஏற்ப்படுத்துகிறீர்கள். நாங்கள் அறைவாங்கி சாக தயார் அன்பரே! வந்து அடியுங்கள் எனது இன்னொரு கன்னத்தையும் திருப்பி தருகிறேன்!
ஒரு கிறிஸ்தவன் எதெல்லாம் எழுதக்கூடாது அதெல்லாம் எழுதி உங்கள் "தாதா" தன்மையால் "என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்பவன் பரலோகத்தில் பிரவேசிப்பதில்லை" என்று தெளிவாக சொல்லிவிட்ட இயேசுவை ஒரேதேவன் என்று நிலைநாட்ட விரும்புகிறீர்கள் என்று கருதுகிறேன்.
அன்பையும் தாழ்மையையும் ஒருவருடைய கால்களை மற்றவர் கழுவுங்கள் என்று சொன்ன இயேசு இதையா உங்களுக்கு சொல்லிகொடுத்தார்? யோபுவின் போருமைபற்றி பேசும் உங்களுக்கு உங்கள் பொறுமையை காக்க தெரியவில்லையே. கருத்துக்களை சொல்லும்போது அத்தோடு முடித்துவிடுங்கள் கூடுதல் "பில்ட் அப்" சேர்க்காதீர்கள் அது நல்ல கிறிஸ்த்தவனுக்கு அழகல்ல! எல்லா விவாதத்தையும் திசை திருப்புவதே உங்கள் நோக்கமா?
உங்கள் எழுத்துக்களே நீங்கள் அறியவேண்டியவைகளை சரியாக அறியவில்லை என்றும் ஆண்டவரின் குணாதிசயத்தை பெறவில்லை என்றும காட்டுகிறதே!
-- Edited by இறைநேசன் on Friday 22nd of January 2010 11:01:10 AM
இங்கு கிறித்தவர்கள் மட்டுமே எழுதணும் என்று நீங்கள் எங்குமே சொல்லவில்லை;அத்துடன் நானும் என்னை கிறித்தவன் என்று சொல்லிக்கொள்ளவில்லை;நான் உங்களை அடிப்பேன் என்றும் சொல்லவில்லை;சரியா..? வசனத்தைத் திரித்து தந்திரமாக துருபதேசத்தைத் திணிப்பவர்களுக்கு நான் மரியாதை கொடுப்பதில்லை;அப்படிப்பட்டவனிடமிருந்து அப்பாவிகளைக் காப்பாற்றவே சற்று முயற்சிக்கிறேன்;மற்றபடி உங்களிடம் எனக்கு எந்த வேலையுமில்லை;எனது தனி பதிவுகளைப் பார்த்தால் நான் உண்மையில் எப்படிப்பட்டவன் என்பது உங்களுக்குத் தெரியவரலாம்;
// இயேசுவை ஒரே தேவன் என்று நிலைநாட்ட விரும்புகிறீர்கள் //
ஆம்,அதிலென்ன தவறு? நீங்கள் யாரை தேவன் என்று நிரூபிக்க பாடுபடுகிறீர்கள்?
sundar wrotes: ///"அதாவது யகோவா தேவன் என்னும் தேவன் ஒன்றுமில்லாததில் இருந்து இயேசு என்னும் ஒரு தேவனை படைத்தார்" என்பது உங்கள் கருத்து அப்படித்தானே? vedamaanavan wrote அவரின் ஒரு வல்லமையை தான் இயேசு கிறிஸ்துவாக படைத்தார் என்று வேதம் எங்கு சொல்லவில்லையே!!////
இப்பொழுது யோவான் முதல் வசனத்தை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.
1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. 2 அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். 3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று
இந்த வசனத்தில் இரண்டு காரியங்களை பார்க்கிறோம் .
1.ஆதியிலே (தொடக்கத்திலேயே) வார்த்தை என்பது இருந்தது
2.ஆதியிலே (தொடக்கத்திலேயே) (வார்த்தை என்பது) தேவனோடு இருந்தது
இதன் பொருள்: ஓன்று தொடக்கத்திலேயே அவர் தேவனோடு சேர்ந்தே உருவாயிருக்க வேண்டும் அல்லது அவர் தேவனின் எதாவது ஒரு தன்மையாக அவரோடு கூட இருந்திருக்க வேண்டும் என்ற கருத்துதான் வருமேயன்றி ஆதியிலே தேவன் இயேசுவை படைத்தார் என்று எவ்விதத்திலும் பொருள் கொள்ள முடியாது.
உதாரணமாக.
"தொடக்கத்திலேயே தலை இருந்தது அது என்னிடத்தில் இருந்தது அது நானாய் இருந்தது"
என்று சொல்வோமானால் அதற்க்கு எப்படி பொருள் கொள்ள முடியும்? நான் தலையை படைத்தேன் என்றா பொருள் கொள்ள முடியும்? அது தொடக்கத்தில் இருந்தே அதாவது நான் பிறக்கும் போதில் இருந்தே அது என்னிடம் இருந்தது என்றுதான் பொருள் கொள்ள முடியும்.
அதுபோல் தேவன் தோன்றியபோதே அவரோடு சேர்ந்துதான் அந்த வார்த்தை தோன்றியிருக்கும் என்பதே பொருள்படும்.
இரண்டாவதாக முதல் இரண்டு வரியில் அந்த வார்த்தையை பற்றி குறிப்பிடும் போது "இருந்தது" "இருந்தது" என்று ஒரு பொருளையோ வல்லமயையோ குறிக்கும் சொல்லாகவே வருகிறது அதற்க்கு பிறகு வரும் வசனத்தில் அது "இருந்தார்" என்று ஒரு உயர்திணை மனிதனை குறிக்கும் சொல்லாக மாறுகிறது. எனவே வார்த்தை என்னும் வல்லமையாக தேவனோடு இருந்த இயேசு மாமிசமானார் என்றே பொருள் கொள்ள முடியுமேயன்றி, நீங்கள் சொல்வதுபோல் தேவன் முதலில் இயேசுவை படைத்தார் என்று எவ்விதத்திலும் பொருள் கொள்ளமுடியாது!
இதற்க்கு முதலில் சரியான விளக்கம் தாருங்கள் பிறகு அடுத்த வார்த்தைகளை ஆராயலாம்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
யெகோவா தேவன் அநாதியானவர் என்கிறது வேதம், அநாதி என்றால் என்ன என்பதை தாங்கள் அறிவீர்கள் என்று நினைக்கிறேன். ஆதி என்றால் ஒரு தொடக்கம் என்று தாங்களே எழுதியிருக்கிறீர்கள். அப்படி என்றால், அநாதியும் ஆதியும் ஒன்றா, அல்லது சமமாக இருக்க முடியுமா.
இப்படி தேவன் வேறு இயேசு கிறிஸ்து வேறு என்று சொல்வதினால் இயேசு கிறிஸ்துவை பிற மதத்தினர் "தூதர்" என்கிற ஸ்தானத்தில் வைப்பது போல் நான் சொல்லவில்லை, ஆனால் நிச்சயமாக இயேசு கிறிஸ்து சொன்னது போல், "என் பிதா என்னிலும் பெரியவராக இருக்கிறார்" தமிழில் "என்னிலும்" என்கிற வார்த்தை குழப்பமாக இருந்தால், ஆங்கிளத்தில் "My Father is greater than I" என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது.
மேலும், ஆதியிலே (தொடக்கத்திலேயே) என்பது எப்படி சரியாகும், அது ஆதியிலே (தொடக்கதிலே) என்று தான் வரும். தொடக்கதிலேயே என்றால் அந்த தொடக்கத்திற்கு தேவையில்லாத அழுத்தம் கொடுத்து சொல்லுவது போல் இருக்கிறது.
பிதா ஒருவர் குமாரன் மற்றொருவராக தான் இருக்க முடியுமே தவிர, அவரே பிதாவும், அவரே குமாரன் என்றால் அதை எப்படி புரிந்துக்கொள்வது!! படைப்பவரோ, அல்லது உருவாக்குபவரோ, பிதா ஆகிறார், அவரின் படைப்பு குமாரன் (கிறிஸ்துவின் ஆவி இருப்பதினால் தான் நாமும் தைரியமாக பழை ஏற்பாடு ஆட்கள் மாதிரி வெறும் தேவனே என்று சொல்லாமல், "பிதாவே" என்று சொல்லும் தைரியம் பெறுகிறோம்)
நீங்கள் கொடுத்த அந்த எதுக்காட்டில், நீங்கள் பிறக்கும் போது தலை உங்களுடன் இருந்தது, சரி, ஏனென்றால் நீங்கள் இருவரும் ஒன்றாக வந்தவர்கள். ஆனால் பிதாவாகிய தேவன் அநாதியாக இருக்கிறார் என்றும், அவரின் வழிகளின் ஆதியாக கிறிஸ்து இருக்கிறார் என்றால் எப்படி இரண்டு பேரும் ஒரே காலம் உள்ளவர்களாவார்கள்?
"நானும் பிதாவும் ஒருவரே" என்று சொல்லாமல் "நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம்" என்று இயேசு கிறிஸ்து சொல்லுவதால், எப்படி இருவரும் ஒரே நபர் என்று எடுத்துக்கொள்ள முடியும்?
தேவனின் நாமமான யெகோவா தேவன் என்று ஒருவன் சொல்லுவதால் அவன் யெகோவா சாட்சியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ரோமன் கத்தோலிக்கர்களும், பெந்தகோஸ்தே சபையினருக்கும் அநேக சபை கோட்பாடுகள் ஒன்றாக இருக்கலாம், அதற்காக இருவரும் ஒரே சபையினர் என்று சொல்லுவீர்களா!!
யெகோவா சாட்சிகள் வேறு, வேத மாணவர்கள் வேறு, இவர்கள் இருவரையும் புரியாதவர்கள் வேறு. அனைவருக்கும் பொதுவான விக்கிபீடியா என்சைக்லோபீடியா எடுத்து யெகோவா சாட்சிகள் யார், அவர்கள் எப்பொழுது வந்தார்கள், வேத மாணவர்கள் யார், அவர்கள் எப்பொழுது வந்தார்கள் என்று எந்த ஒரு சமயத்தையோ, சபையையோ சாராத பதில் கிடைக்கும். நிச்சயமாக அதை நம்பலாம்.
ரோமன் கத்தோலிக்கர்கள் என்று ஒரு சபை தான் இருந்தது, அதிலிருந்து ப்ரொடெஸ்டண்ட் சபை பிரிந்தது, அதற்காக அந்த பிரிந்த சபையும் ரோமன் கத்தோலிக்க சபையும் ஒன்றா? அப்படி தான் யெகோவா சாட்சிகளையும், வேத மாணவர்களையும் ஒன்று என்று கேள்வி ஞானத்தை வைத்து பல கிறிஸ்தவர்கள் சொல்லி வருகிறார்கள்!! வேதனை.
நான் இந்த இரு கூட்டத்தாரையும் சேர்ந்தவன் இல்லை. நான் வைத்து கொண்ட தள பெயர் "வேதமாணவன்" என்பதால் நான் வேத மாணவர்கள் என்கிற அந்த சபையின் அங்கத்தினரோ, அல்லது அந்த கூட்டத்தை சேர்ந்தவன் கிடையாது. நாங்கள் ஒரு சிறு கூட்டமாக இந்த வேதத்தை ஆறாய தேவ வழிநடத்துதலுடன் முயற்சிக்கிறோம், அவ்வளவே.
மேலும் தேவன் வேறு இயேசு கிறிஸ்து வேறு என்றவுடன், இயேசு கிறிஸ்துவை தூக்கி எரிந்து விட்டு நான் பேசவில்லை. தேவனுக்கு உரிய கனம் அவருக்கு செலுத்த வேண்டும், இயேசு கிறிஸ்துவிற்கு உரிய கனம் அவருக்கும் செலுத்த வேண்டும்.
"இரண்டாவதாக முதல் இரண்டு வரியில் அந்த வார்த்தையை பற்றி குறிப்பிடும் போது "இருந்தது" "இருந்தது" என்று ஒரு பொருளையோ வல்லமயையோ குறிக்கும் சொல்லாகவே வருகிறது அதற்க்கு பிறகு வரும் வசனத்தில் அது "இருந்தார்"
மொழிப்பெயர்ப்பினால் வந்த பிரச்சனை இது. ஆஙிளத்தில் வாசித்தோமென்றால் உங்களின் இந்த விளக்கம் ஒத்து போகாது.
"எனவே வார்த்தை என்னும் வல்லமையாக தேவனோடு இருந்த இயேசு மாமிசமானார் என்றே பொருள் கொள்ள முடியுமேயன்றி, நீங்கள் சொல்வதுபோல் தேவன் முதலில் இயேசுவை படைத்தார் என்று எவ்விதத்திலும் பொருள் கொள்ளமுடியாது!"
நீங்கள் கொடுத்திருக்கும் வசனத்திற்கு இந்த விளக்க்ம் சரியாக வராது!! வார்த்தை எனும் வல்லமை எல்லாம் நீங்களே சேர்த்துக்கொண்டதாகும். மேலும் 1 வசனத்தில் மாம்சமான இயேசு கிறிஸ்துவை பற்றியே பேசவில்லையே!!
இயேசுவின் தேய்வீகத்தை குறைப்பதாக வேத மாணவர்கள் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. வேத மாணவர்களை போல் இயேசு கிறிஸ்துவின் தேய்வீகத்தை புரிந்துக்கொண்டவர்கள் வேறு எவரும் இருக்க முடியாது என்பது என் வாதம். நான் பெயர் தான் வேத மாணவன் என்று வைத்துள்ளேன் ஆனால் நான் அந்த வேத மாணவர்கள் என்கிற சபை அல்லது ஒழுங்கை சேர்ந்தவன் அல்ல என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன்.
சரி இயேசு கிறிஸ்து தான் அந்த மகா உன்னதமான தேவன் அல்லது யெகோவா தேவன் என்று சொல்லுபவர்கள் இந்த இரண்டு வசனங்களை விளக்குவார்களாக:
I தீமோத்தேயு 6:15,16 அந்தப் பிரசன்னமாகுதலை தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார், அவரே நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும்;. ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்
இந்த வசனம் யாரை குறித்து சொல்லுகிறது. யெகோவா தேவனை பற்றியா அல்லது இயேசு கிறிஸ்துவை பற்றியா?
ஒருவர் மற்றோருவருக்கு கீழ்ப்பட்டிருப்பார் என்கிறது வேதம் ஆனால் கிறிஸ்தவர்களோ, இல்லை இல்லை, இருவரும் ஒருவரே தான் என்று? எது சரி.
சகோ சுந்தரின் "ஆதியை" குறித்தான விளக்கம்:
ஆதியில் வார்த்தை என்றவுடன் அவரும் ஏகோவா தேவனும் ஒன்றாக வந்தவர்கள் என்று வாதிட்டீர்களே,அப்படி என்றால் கீழ் காணும்வசனங்களையும் அப்படியே எடுத்துக்கொள்ளலாமா:
அதாவது அந்த அப்போஸ்தலர்களையும் இயேசு கிறிஸ்துவுடனையே யெகோவா தேவன் தோன்றும் போதே வந்து விட்டார்களோ!!
இப்படியாக ஆதி என்றால் ஒரு தொடக்கத்தை குறிக்கும் வார்த்தையை நீங்கள் "அநாதி" தேவனாகிய யெகோவாவுடன் ஒப்பீட்டு பேசுவது தவறு என்று சொல்லுகிறேன். ஆனால் பெரும்பாலுமான கிறிஸ்தவம் இந்த நம்பிக்கையில் தான் இருக்கிறது.
VEDAMANAVAN wrotes ///யெகோவா தேவன் அநாதியானவர் என்கிறது வேதம், அநாதி என்றால் என்ன என்பதை தாங்கள் அறிவீர்கள் என்று நினைக்கிறேன். ஆதி என்றால் ஒரு தொடக்கம் என்று தாங்களே எழுதியிருக்கிறீர்கள். அப்படி என்றால், அநாதியும் ஆதியும் ஒன்றா, அல்லது சமமாக இருக்க முடியுமா.
வித்தியாசத்தை நீங்களே பாருங்கள், அநாதி Vs ஆதி.///
சகோதரரே!
"அநாதி' என்பது தொடக்கம் முடிவு இல்லாதது என்றும் "ஆதி" என்பது தொடக்கம் என்றும் இருவேறு அருத்தம் கொண்டது என்பது புரிகிறது!
தேவன் அனாதியாக இருக்கிறார் என்றால் அவரோடு சேர்ந்து இருக்கும் வார்த்தையையும் சேர்த்துதான் அது குறிக்கும். ஒவ்வொன்றையும் தனித்தனியாக "தேவன் அநாதி அவர் வார்த்தை அநாதி" என்றா குறிப்பிட முடியும்?
அனாதியாய் இருக்கும் தேவன் எப்பொழுது தன் வார்த்தையால் சிருஷ்டிப்பை ஆரம்பித்தாரோ அதைத்தான் ஆதி என்று வேதம் குறிப்பிடுகிறது. ஏனெனில் அதுதானே நம்மெல்லோருக்கும் தொடக்கம். இதில் என்ன பெரிய வேறுபாடு என்று புரியவில்லை.
அதற்காக அநாதியான தேவன், இயேசுவை ஒரு சப் தேவனாக படைத்து அவரில் இருந்து தனது படைப்பை தொடங்கினார் என்று எப்படி பொருள் கொள்ள முடியும்? அப்படிஎன்றால் தேவன் இரண்டு என்று ஆகிவிடுகிறதே.
அனாதியாக இருந்த தேவன் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வார்த்தை மூலம் எல்லாவற்றையும் சிருஷ்டித்தார் அந்த தொடக்கம்தான் ஆதி. தன் படைப்பு எல்லாவற்றிக்கும் அவர் வார்த்தையே பயன்படுத்தினார் அந்த வார்த்தைதான் இயேசு கிறிஸ்த்து!
உங்கள் கருத்துபோல் அநாதி தேவனாகிய யகோவாவானவர் தன்னிடத்திலிருந்து எந்த சத்துவத்தையும் கொடுக்காமல் இயேசு என்று இன்னொரு தேவனை படைத்தார் என்ற கருத்து ஏற்றுக்கொண்டால், அவர் அதை போல பத்து இயேசு கிறிஸ்த்துவை படைத்து வைத்துகொண்டு, மனிதன் பாவம் செய்யும் போதெல்லாம் ஒரு இயேசுவை அனுப்பி கொண்டே இருக்கலாமே!
அனால் இங்கு "ஒரே பலி இயேசு" என்றும் "செலுத்த இன்னொரு பலி இல்லை" என்றல்லவா வேதம் சொல்கிறது. அதன் மூலம் நாம் சுலபமாக இயேசு ஒரு தூதன் அல்ல என்பதும் அவர் தேவனின் தர்சொரூபம் என்றும் அவருக்கு வேறு ஒரு இணை இல்லை என்பதையும் அறிந்துகொள்ள முடியும்.
மரணம் என்பது உலகில் நடக்கும் மாமிசம் மரிப்பதைதான் குறிப்பிடுகிறது அதைதான் இயேசுவும் சந்தித்தார். பாவ உலகுக்கும பாவ மாமிசமாக யார் வந்தாலும் மரிக்கத்தான் வேண்டும் (இயேசுவின் மீட்புக்கு முன் வரை). தேவனை சாகமை உள்ளவர் என்று வேதம் சொல்வது அது இந்த சாதாரண மாமிசமரணத்தை குறித்தல்ல அவருக்கு மாமிசமே கிடையாதே அவர் ஆவியாக அல்லவா இருக்கிறார் எனவே அது நித்யமரணம் அவருக்கு இல்லை என்பதையே குறிக்கிறது.
இந்த மாமிசமரணம் என்பது ஒரு டெம்ரவரி அமைப்புதான். எனவேதான் "மரணத்தை ஜெயமாக விழுங்குவார்" என்ற வார்த்தைப்படி ஒரு நாளில் அது இல்லாமல் போய்விடும் என்று வேதம் சொல்கிறது.
VEDAMANAVAN wrotes
///பிதா ஒருவர் குமாரன் மற்றொருவராக தான் இருக்க முடியுமே தவிர, அவரே பிதாவும், அவரே குமாரன் என்றால் அதை எப்படி புரிந்துக்கொள்வது!!
"நானும் பிதாவும் ஒருவரே" என்று சொல்லாமல் "நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம்" என்று இயேசு கிறிஸ்து சொல்லுவதால், எப்படி இருவரும் ஒரே நபர் என்று எடுத்துக்கொள்ள முடியும்?///
பிதாவும் குமாரனும் ஒருவர் என்பது எனது வாதம் அல்ல. நான் இருக்கிறேன் அதே நேரத்தில் எனது சத்துவத்தில் உருவான எனது பிள்ளை எனக்கு இல்லையா? அது போன்றதுதான் இங்கும். தேவனின் வார்த்தை என்னும் சத்துவத்தில் கர்த்தரின் மகிமையும் சேர்ந்து மாமிசமானது அதுதான் மனுஷ குமாரனாகிய இயேசு.
/// sundar wrotes: "யோவான் முதல் இரண்டு வரியில் அந்த வார்த்தையை பற்றி குறிப்பிடும் போது "இருந்தது" "இருந்தது" என்று ஒரு பொருளையோ வல்லமயையோ குறிக்கும் சொல்லாகவே வருகிறது அதற்க்கு பிறகு வரும் வசனத்தில் அது "இருந்தார்" என மாறுகிறது எனவே வார்த்தையாக இருந்தது மாமிசமானார் என்பதுதான் சரியாக பொருந்தும்
VEDAMANAVAN wrotes மொழிப்பெயர்ப்பினால் வந்த பிரச்சனை இது. ஆஙிளத்தில் வாசித்தோமென்றால் உங்களின் இந்த விளக்கம் ஒத்து போகாது.
ஒரு கருத்து நமக்கு ஒத்து வரவில்லை என்றால் ஆங்கிலத்தில் வாசித்து விடவேண்டும் அல்லது எபிரேய மொழிக்கு போய்விட வேண்டும். ஆங்கிலம் என்பது ஒரு மரியாதை தெரியாத மொழி அதில் எப்படி எழுதுவார்கள். நீ என்பதற்கும் you தான் நீங்கள் என்பதற்கும் you தான்
VEDAMANAVAN wrotes //மேலும் 1 வசனத்தில் மாம்சமான இயேசு கிறிஸ்துவை பற்றியே பேசவில்லையே!!///
14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்;
தேவனிடம் இருந்த அந்த வார்த்தைதான் மாம்சமானது என்று தொடர்ந்து வரும் வசனங்கள் சொல்லும் பட்சத்தில் அந்த வசனம் இயேசுவை பற்றியே பேசவில்லை என்று சொல்வதற்கு என்ன பொருள் என்று புரியவில்லை.
ஒரு சிறு காரியத்தில் கூட உண்மையை ஒத்துக்கொள்ளாத உங்களுக்கு புரியவைப்பது மிக மிக கடினம் என்பதை அறியமுடிகிறது.
ஆகினும் இயேசு தேவனின் வார்த்தைதான் அவரும் தேவன்தான் என்பதை உணர்த்த கீழ்க்கண்ட இரண்டு வசனங்களை சற்று ஆராயவும்.
8 நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்
என்று தெளிவாக சொன்ன கர்த்தர்
ஏசாயா 40:5 கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று.
என்ற வசனத்தின்படி,மாமிசமான யாவரும் காணும்படி வெளியரங்கமானது அதுதான் இயேசு எனவேதான்
23 அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.
இயேசு என்பதற்கு "தேவன் நம்மோடு இருக்கிறார்' என்று பொருள் கூறப்பட்டுள்ளது.
இதுவும் புரியவில்லைஎன்றால் மிக தெளிவாக சொல்லும் கீழ்கண்ட வசனங்களை பாருங்கள்:
வெளி:
12அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலையைப்போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது. 13 இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே. 16 ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.
மேல்கண்ட வசனங்கள் மனுஷகுமாரனாக வந்த இயேசு "தேவனுடைய வார்த்தை" என்பதை தெளிவாக விளக்குவதோடு அவர் ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்றும் நமக்கு உணர்த்துகிறது.
-- Edited by SUNDAR on Monday 25th of January 2010 05:09:10 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)