வானில் தோன்றும் கதிர் வராமலே போகலாம்! வேனில் காலமது இலாமலே போகலாம்! வீசும் தென்றல் காற்று மாசாகிப் போகலாம்! வாச மலர்கள் கூட மணமிழந்து போகலாம்!
பேசும் கிளிகளின் ஓசை ஒழித்து போகலாம் தேசமெல்லாம் கூட அழிந்து போகலாம் வானத்தின் கூரை வலுவிழந்து போகலாம் ஞானத்தின் வாசல்கள் அடைபட்டு போகலாம்
ஆசை கடலில் மனிதன் அமிழ்ந்து போகலாம்! அன்பு என்னும் நேசம் அறவே ஒழியலாம்! வம்பிழுக்கும் கூட்டம் பெருகிப் போகலாம்! நெஞ்ஞிருக்கும் உறுதி தளர்ந்து போகலாம்!
ஆனால் எல்லாமே இல்லாமல் போனாலும்! என்மனம் எப்போதும் துவளாது! எனென்றால் என்றாவது ஒருநாள் அவர் நிச்சயம் வருவார் எல்லாவற்றையும் எனக்காக புதுப்பிப்பார்!
பளிங்கு போன்ற புது தண்ணீரை தருவார்! பள்ளங்களையும் மேடுகளையும் பசுமை ஆக்குவார்! துள்ளித்திரியும் மான்களை உருவாக்குவர்! தூறல் போடும் மேகங்களை புதிதாக்குவர்!
வண்ண வண்ண மலர்களால் தோரணம் செய்தே மண்ணையே ஒரு சொர்க்கமாக மாற்றி தருவார்! உண்ண உண்ண தெவிட்டாத கனிகள் தந்தே உள்ளம் எல்லாம் பொங்கும் இன்பம் தருவார்!
இம்மை வாழ்வை இங்கு நான் முடிக்கும் போது எம்மை அவர் தன்னோடு சேர்த்துக்கொள்வர் அவரோடு அனுதினம் நான் களித்திடுவேன் ஆனந்த சொர்க்கத்தில் என்றும் நான் வாழ்ந்திடுவேன்!
ஆம் என் தேவன் நிச்சயம் வருவார்!
அன்புடன் இறைநேசன்
-- Edited by இறைநேசன் on Wednesday 13th of January 2010 05:50:32 PM