இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அனேக அன்பனின் ஆன்மீக நிலை!


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
அனேக அன்பனின் ஆன்மீக நிலை!
Permalink  
 


எண்ணில்லா கோவில்கள் எங்குமுண்டு இந்நாட்டில்
எங்குமே இறைவனை நான் கண்டதில்லை இந்நாள்வரையில்!

ஆலயங்கள் ஆயிரமாம் ஆங்காங்கே இந்நாட்டில்
அத்தனையும் சுற்றினாலும் அறியவில்லை இறைவனையே!

எத்தனையோ புராணம் உண்டு இறைவா உம்புகழ் சொல்ல
அத்தனையும் படித்தாலும் அறியவில்லை உம் மேன்மைதனை!

பூஜையுண்டு புனஸ்காரமுண்டு பூவினால் அலங்காரமுண்டு
பூஜிப்பது யாரை என்று புரியவில்லை இந்நாள்வரையில்!

தேவாலயம் பலவுண்டு தேசமெங்கும் இவ்வுலகில்
தேவன் தங்க இடமும் இல்லை தேடி செல்ல வழியும் இல்லை!

கட்டிடங்கள் பலஉண்டு கர்த்தரவர் நாமத்திலே
விட்டுவிட்டோம் உம்மை மட்டும் விலகிவிட்டோம் தூரத்திலே

பண்டிகைகள் பல உண்டு பாங்காக கொண்டாட
படைத்தவனை அறியவில்லை பண்போடு ஒழுகவில்லை

வேதம் உண்டு தியானம் உண்டு காலை தோறும் தொழுகை உண்டு
பாவம் இன்றி வாழ மட்டும் பழகவில்லை இந்நாள்வரையில்

ஆன்மீகத்தின் நிலை இதுவே அன்பர்களே கேட்டிடுவீர்
அறிந்ததை நான் உறைத்துவிட்டேன் தவறிருந்தால் திருத்திடுவீர்!

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard