I கொரிந்தியர் 8:5 வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும்,
இந்த "அனேக தேவர்களும்" "அனேக கர்த்தாக்களும்" என்ற பதம் யாரை குறிப்பிடுகிறது?
"தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால்" என்ற வசனத்தில் வரும் "தேவ குமாரன்" யார்?
யோபு 2:1 பின்னொரு நாளிலே தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றஎன்ற வசனத்திலும் கர்த்தருடைய சந்நிதி வரை வந்து நின்ற தேவபுத்போது திரரும்
யோபு 38:7 அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே.
என்ற வசனத்தில் குறிப்பிடும் உலகம் தோன்றும்போதே இருந்த தேவ புத்திரரும் யார்?
ரோமர் 8:19 மேலும் தேவனுடையபுத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது
இயேசுவை பற்றி வேதம் குறிப்பிடும் பொது அவரை "தேவகுமாரன்" "மனுஷ குமாரன்" என்றுதான் குறிப்பிடுகிறது ஆனால் இந்த வசனத்தில் எந்த" தேவனுடைபுத்திரர்" வெளிப்பட சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது என்று பவுல் குறிப்பிடுகிறார்?
போன்ற கேள்விகளுக்கு சரியான விடை தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்குங்கள்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
vedamanavan wrote: //ரோமர் 8:19ல் சொல்லப்பட்ட ஒரு காரியம், இன்று கிறிஸ்துவை போல் பாடு படுபவர்கள் நாளை பெற்றுக்கொள்ள போகும் "தேவனின் குமாரர்கள்" என்கிற அந்தஸ்தை குறிக்கிறது.தேவனின் குமாரர்கள் மனிதர்களாக அல்லாமல், தேவ தூதர்களை போல், ஆவிகளாக தான் இருப்பார்கள். கிறிஸ்து இன்று இருக்கும் நிலைக்கு உயர்த்தப்படுவதே இந்த வசனத்தின் அர்த்தம் ஆகும்.//
சகோ.வேதமாணவன் அவர்களின் விளக்கம் பொருத்தமானதாகவே உள்ளது. 1 கொரி. 15:23,51 வசனங்களில் கூறப்பட்டுள்ள உயிர்த்தெழுபவர்கள் மற்றும் மறுரூபமடைவர்களையே தேவனுடை புத்திரர் என ரோமர் 8:19-ல் பவுல் கூறுவதாக நான் கருதுகிறேன்.
கிறிஸ்துவின் 2-ம் வருகையின்போது அவர்கள் வெளிப்படப்போவதையே பவுல் குறிப்பிடுவதாக நான் கருதுகிறேன்.
-- Edited by anbu57 on Friday 22nd of January 2010 06:10:07 AM
vedamanavan wrote: //////"I கொரிந்தியர் 8:5 வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும்,"
இதில் கொடுக்கப்பட்ட தேவர்கள் (தேவன்) என்பதற்கும், யோவான்1ல் சொல்லப்பட்ட தேவன் எபதற்கும் ஒரே கிரேக்க பதம் "தியோஸ்" என்பது தான். ஆனால் இதை சொன்னால் இந்த கிறிஸ்தவ சமூதாயம் ஒத்துக்கொள்ளாதே. தேவன் என்பதற்கு பல அர்த்தங்கள் உண்டு. அதை புறிந்துக்கொள்ள தான் மனிதனுக்கு தேவன் சற்றே உயர்ந்த அறிவை தந்திருக்கிறார் ஆனால் அந்த அறிவை தான் நீங்கள் சொல்லும் போது எல்லாம் அற்ப அறிவு என்கிறீர்கள். பிதாவாகிய தேவன் தொடங்கி இயேசு கிறிஸ்து, சாத்தான், பிரதானிகள், நியாயாதிபதிகள் வல்லவர்களுக்கும் "தியோஸ்" என்கிற வார்த்தையே பயன்ப்படுத்தப்பட்டிருக்கிறது. தண்ணீர் என்றவுடன், கடல் என்றாலும் சரி, ஏறி என்றாலும் சரி எல்லாவர்றிலும் இருக்கிறது, ஆனால் ஒவ்வொரு நீருக்கும் வித்தியாசம் இருக்கிறது."தியோஸ்" என்பது அப்படியே ஆகும். பிதாவாகிய தேவனுக்கு மாத்திரம் தியோஸிற்கு முன்பாக "ஹோ" என்கிற ஒரு ஆர்டிகல் போடப்பட்டு நமக்கு வேற் படுத்துகிறது. மற்றப்படி தியோஸ் என்கிற பதத்திற்கு நிறைய அர்த்தங்கள் இருக்கிறது, அதை மேலே தந்திருக்கிறேன்.//////
தங்களின் இந்த கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். தேவர்கள் என்பது யாரை வேண்டுமானாலும் குறிக்கலாம். நல்லது.
இந்த மூன்று இடங்களிலும் தேவ புத்திரர்கள் என்பதற்கு ஒரே எபிரேய பதம் தான் பயன் படுத்ப்பட்டிருக்கிறது. குமாரர்கள் என்பதற்கு "H1121 ben bane" என்றும், தேவன் என்பதற்கு "H430 'elohiym el-o-heem'".////
இங்குதான் எனக்கு பெரிய சந்தேகமே இருக்கிறது இந்த தேவ குமாரர்கள்/ புத்திரர்கள் என்பது யார். அதாவது எலோஹீம் எனப்படும் ஒன்றான மெய் தெய்வத்தின் குமாரர்கள் அல்லது புத்திரர் என்று பன்மையில் குறிப்பிடப்பட்டிருக்கும் இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதுதான் எனது கேள்வி? இவர்கள் மனுஷ குமாரதிகளுடன் கூடினார்கள் என்று மனிஷர்களை தனியாக பிரிப்பதால் மற்றும் உலகத்தை தேவன் உருவாக்கும்போதே இவர்கள் கேம்பீரித்தார்கள் என்று யோபு புத்தகம் சொல்வதாலும் இவர்கள் உலகம் தோன்றும் முன்னே இருந்திருக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன்.
vedamanavan wrote: /////ரோமர் 8:19ல் சொல்லப்பட்ட ஒரு காரியம், இன்று கிறிஸ்துவை போல் பாடு படுபவர்கள் நாளை பெற்றுக்கொள்ள போகும் "தேவனின் குமாரர்கள்" என்கிற அந்தஸ்தை குறிக்கிறது.தேவனின் குமாரர்கள் மனிதர்களாக அல்லாமல், தேவ தூதர்களை போல், ஆவிகளாக தான் இருப்பார்கள். கிறிஸ்து இன்று இருக்கும் நிலைக்கு உயர்த்தப்படுவதே இந்த வசனத்தின் அர்த்தம் ஆகும்.///
இதையும் என்னால் ஏற்க்கமுடியாது ஏனெனில் நாளை பெற்றுக்கொள்ளப்போகும் தேவ குமாரர்கள் என்ற அந்தஸ்த்துக்கும். கீழ்க்கண்ட வசனத்துக்கும் பொருத்தம் இல்லை.
ரோமர் 8:19 மேலும் தேவனுடையபுத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது
யாரோ ஒரு தேவபுத்திரர் வெளிப்பட சிருஷ்டியானது மற்றுமல்ல "ஆவியின் முதல்பேரை பெற்ற நாமும் கூட காத்துகொண்டிருக்கிறது" என்று பவுல் குறிப்பிடுகிறார் இது பின்னால் வரப்போகும் மகிமை பற்றியது அல்ல என்பதை நிச்சயமாக உணர முடியும்.
முதலில் உள்ள தேவபுத்திரர் யார் என்று அறிந்தால் பின்னால எந்த தேவபுத்திரருக்காக சிருஷ்டி ஆவலோடு காத்துகொண்டிருக்கிறது என்பதற்கு பதில் தெரியவரும் என்றே நான் கருதுகிறேன்!
-- Edited by SUNDAR on Monday 18th of January 2010 11:01:12 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)