உருவ வழிபாடு என்பது காலம் காலம் தொட்டு வரும் பழமையான ஓன்று ஏதாவது ஒரு உருவத்தை உருவாக்கி வணங்குவது என்பது மனிதனுக்கு கைவந்த கலை. இந்து மதத்தை பொருத்தவரை உருவ வழிபாடு அருவ வழிப்பாடு இரண்டையுமே ஏற்றுக்கொள்கிறது
ஆகினும் உருவவழிபாட்டை ஆதரிக்கும் இந்துமதத்தில் "கண்ட கோவில்களையும் பார்த்து கை எடுக்காதே" என்று நாராயணன் சொல்வதாக முத்து குட்டி என்று தீர்க்கதரிசி ஒருவர் கூறியுள்ளார். அதுபோல் எங்கள் ஊரில் உள்ள நாராயண சாமிக்கு எந்த சிலையும் கிடையாது. "நட்ட கல்லும் பேசுமோ நாதன் (உன்)உள் இருக்கையில்" என்று சித்தரும் பாடியுள்ளனர். இறைவன் நம்முள் இருக்கையில் நட்டு வைக்கப்பட்ட சிலை என்னும் கல்லால் பயனில்லை என்று சித்தர்கள் சொல்கின்றனர்
ஒன்றுமில்லாததை ஒற்றை வழிபடுவதைவிட ஏதாவது ஒரு உருவத்தை வழிபடுவது என்பது பலருக்கு இறைவனை சுலபமான வழிபட அல்லது இனம் காட்ட அல்லது மனதை ஒருநிலைப்படுத்த ஒரு சிறந்த முறையாக இருந்தாலும் இஸ்லாம் மற்றும் கிறிஸ்த்தவத்தில் இறைவன் உருவ வழிபாட்டை கடுமையாக கண்டித்துள்ளார். இறைவன் செய்யவேண்டாம் என்று மறுக்கும் எல்லா செயலுக்கும் எதாவது ஒரு முக்கிய காரணம் இருக்கும் என்பதை நாம் முதலில் அறியவேண்டும்! .
மந்திரங்களும் தந்திரங்களும் பெருத்துவிட்ட இக்கால கட்டங்களில் ஒருவரின் பெயரை வைத்தே அவரின் ஜாதகத்தை கூறும் அளவுக்கு குறிசொல்லும் ஆவிகள் கிரியை செய்கின்றன. கையை பார்த்தவுடன் கடந்த காலத்தை கதையாக சொல்லி காசு வாங்கும் மேதைகள் பலர் உலகில் உண்டு!
மேலும் இன்று கிராமங்களில் செய்வினை செய்வது என்பது மிக சாதாரண காரியமாக இன்று மாறிப்போய்விட்டது. செயவினைகளால் ஆண் வாரிசுகள் எல்லோரும் மரித்துபோக அனேக விதவைகள் மட்டும் வாழ்ந்துகொண்டு இருக்கும் குடுமபம் பலஉண்டு! நன்றாக வாட்ட சாட்டமாக இருபவனை கூட நாளே நாளில் மடக்க வைக்கும் மந்திர தந்திரங்களும் உண்டு! மனதிடம் உள்ளவர்களை மந்திரம் ஒன்றும் செய்யாது என்றாலும் ஏதாவது ஒரு காரியத்துக்கு பயப்படாத மனிதன் யாருமே இருக்கமுடியாது!
ஒருவரை மந்திரத்தால் முடக்கவேண்டுமேன்றால் அவன் வணங்கும் தெய்வம் எதுவென்று தெரிந்துவிட்டால் போதும் அந்த தெய்வத்தின் உருவத்தை வைத்து மந்திரங்கள் செய்வதன் மூலம் அதன் சக்தியை ஓரளவு கட்டுக்கு கொண்டு வந்து, பின்பு அவரின்மேல் கெட்ட சக்திகளை ஏவி விடுவதன் மூலம் சுலபமாக ஒரு நபரையோ அல்லது குடும்பத்தையோ கட்டுக்குள் கொண்டுவர முடிந்துவிடுகிறத(மந்திரம் செய்து புரோகிதர்கள் சிவனின் சக்தியை ஒரு பானைக்குள் அடைத்ததாக கூட புராண கதை உண்டு)
ஒரு மந்திரம் செய்யும் மந்திரக்காரர் வீட்டில் ஏறக்குறைய எல்லசாமி படங்களும் வைத்திருப்பதை பார்க்க முடியும். நாம் வணங்கும் சாமியின் உருவம் எது என்று தெரியாத பட்சத்தில் அவர்களால் நம்மை காக்கும் சக்தியை செயலிழக்க பண்ணுவது முடியாத காரியம். எனவேதான் இறைவன் இந்த கலியுகத்தில் உருவமே இல்லாத ஒரே இறைவனை வழிபடும்படி கட்டளையிட்டுள்ளார்! எல்லாம் நமது நன்மைக்குத்தான்!
இறைவனை தொழுபவர்கள் தங்கள் முழு பலத்தோடும் முழு மனத்தோடும் உண்மையாக தொழுதுகொள்ள வேண்டும்". ஒருசில குறிப்பிட்ட தினங்களில் மட்டும் எதோ கடமைக்காக கோவிலுக்கு போய் ஒரே ஒரு நிமிடம் மட்டும் தொளுவதல்லை தொழுகை என்பது! எங்கிருந்து தொழுதாலும் இறைவனை நோக்கி கண்ணீர் விட்டு கதறி அழ வேண்டும். தீமைகள் நிறைந்த இவ்வுலகில் நம்மை நல்வழி நடத்தவும் இன்னும் பிறருக்கு பிரயோஜனம் உள்ளவனாக மாறவும், இன்னும் நமது வாழ்க்கையில் பரிசுத்தம் அடையவேண்டி மன்றாட வேண்டும் அதுவே உண்மையான தொழுகை!
மாறாக ஐந்து ரூபாய் தேங்காய் ஒன்றை அடித்து உடைத்துவிட்டு அக்கறையோடு தீபாராதனை ஒன்றை ஆட்டி காட்டிவிட்டு கடமை முடிந்தது என்று கடந்துபோவோர் கடவுளை கண்டறிவது கடியம்!
ஆகினும் நாம் ஒரு காரியத்தை நோக்க வேண்டும். தன்னை மனிதன் வேறு ஒரு உருவத்துக்கு ஒப்பிட்டு வணங்குகிறான் என்ற ஒரே காரணத்துக்காக சிலையை வணங்குவது பாவம் என்று இறைவன் தண்டிப்பாரானால் அது ஒரு சுய மேன்மை விரும்பியாகவே இறைவனை காட்டும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இறைவன் ஒரு சுய மேன்மை விரும்பியோ அல்லது தர்ப்புகழை நாடி ஒருவனை படைத்ததற்காக அவன் தன்ன போற்றிக்கொண்டே புகழ்ந்து இருக்கவேண்டும் என்று விரும்புபவரோ அல்ல என்றே நான் கருதுகிறேன்.
நமது உலக தப்பனையே எடுத்துகொண்டாலும் எந்த தகப்பனாவது "நான் என் மகனை பெற்றேன் எனவே அவன் என்னை எப்பொழுதும் புகழ்ந்துகொண்டே இருக்கவேண்டும்" என்று நினைப்பது இல்லை. அதுபோல் தன்னை மதிப்பது போல வேறொரு பெரியவரை மதித்துவிட்டால் "நான்தான் பெற்ற அப்பன் என்னை விட்டு வேறொருவனை மதிக்கிறான்" என்று சொல்லி அவனை வெறுப்பதும் இல்லை.
ஒன்றுமே இல்லாத ஒன்றை கும்பிடுவதற்கு ஏதாவது ஒரு உருவத்தை வைத்து கும்பிடுவதன் மூலம் மனிதனுக்கு ஒரு மனப்பாடு ஏற்ப்ப்படுமானால் அதை செய்வதற்காக "என்னை குறைத்து மதிப்பிட்டுவிட்டாய் நான் பெரியவன்" என்று தண்டனை கொடுத்துவிடுபவரல்ல இறைவன். அப்படி அந்த ஒரே காரணத்துக்காக இறைவன் தண்டிப்பாரானால் அவருக்கு மனிதனுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.
எனவே இங்கு இறைவன் உருவவழிபாடு கூடாதுஎன்று கண்டிப்புடன் சொல்வதற்கு அது முக்கிய காரணம் அல்ல என்றே நான் கருதுகிறேன். இறைவன் ஒன்றை செய்யாதே என்று சொன்னால் அது நமது நன்மைக்குதாநேயன்றே வேறு எதற்காகவும் அல்ல! அவர் தான் படைத்த மனிதனின் நன்மையையும் அவன் என்றும் சுகமாக வாழ்வதைதான் விரும்பிகிறார் எனவே நான் சொன்ன காரியங்கள் இதற்க்கு முற்றிலும் பொருந்தும் என்றே நான் கருதுகிறேன்!
-- Edited by SUNDAR on Wednesday 6th of October 2010 02:54:24 PM
-- Edited by SUNDAR on Wednesday 6th of October 2010 02:55:50 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
நம்முடைய நன்மைகளை கருத்தில் கொண்டே இறைவன் எந்த ஒரு கட்டளையையும் கொடுக்கிறார் என்பதை நாம் முதலில் தெரிந்துகொள்வது அவசியம். அவ்வாறு அறியாமல் அவரையே திரும்ப திரும்ப கேள்விகள் கேட்பதால் பலன் எதுவும் இருக்கபோவது இல்லை.
தேவனின் கட்டளைகள் மனுஷர்களை எச்சரிப்பது போல் இருந்தாலும் அவைகளை கைகொள்ளுவதால்
9. கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது.
11அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு.
எனவே விக்கிரகங்களை வணங்ககூடாது என்று தேவன் கட்டளையிட்டால் அதற்க்கு எதிர் கேள்வி எதுவும் கேட்காமல் விக்கிரகங்களை தூர விலக்குவதே சிறந்தது. மாறாக நான் "மாதாவை வணங்குகிறேன்,மிகாவேலை வணங்குகிறேன் என்று" சொல்லி மாறுபட்ட ரூபத்தில் உருவ வழிபாடாகிய விக்கிரக ஆராதனை செய்தாலும் விக்கிரகஆராதனை காரர்களுக்கு கிடைக்கும் பலனே அவர்களுக்கும் கிடைக்கும்.
I கொரிந்தியர் 10:14ஆகையால் எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்.
வெளி 22:15நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்.