இன்ப துன்பம் நிறைந்ததுதான் உலகா? அதை மாற்ற முடியாதா?
இந்த உலகத்தின் நியதி பொருட்களின் நியதி என்று ஓன்று இயற்கையாகவே இருந்தாலும் அதை மாற்றி அமைக்க முடியும் என்பதை மனிதன் பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் பல்வேறு காலகட்டங்களில் நிரூபித்திருக்கிறான்!
நியூட்டன் புவிக்கு ஈர்ர்ப்பு விசை இருக்கிறது என்பதை கண்டுபிடித்தார் அந்த விசையை எதிர்த்து எதுவும் செய்யமுடியாது என்று மனிதன் நினைத்திருந்தால் இன்று புவி ஈர்ர்ப்பு விசையை எதிர்த்து பறக்கும் விமானங்களையும் ராக்கெட்களையும் அறிந்திருக்க முடியாது. அதுபோல் ஒரு சிறு உலோக குண்டை தண்ணீரில் போட்டால் மூழ்கிவிடும், இது தண்ணீரின் இயல்பு ஆனால் மனிதன் அந்த நியதியையே மாற்றி பெரிய கப்பலையே தண்ணீரில் மிதக்க வைத்துவிட்டான்.
எனவே இன்பம் தும்பம் இரண்டும் நிறைந்ததுதான் உலகம் அதை மாற்ற முடியாது என்று கருதினால் ஒருநாளும் அதை மாற்றவே முடியாது! நான் இறைவன் துணையுடன் இன்பமும் துன்பமும் நிறைந்த இந்த உலகை மாற்றிm அன்பு மாத்திரமே நிறைந்த அருமையான உலகம் ஒன்றை அமைக்க முடியும் என்று வாஞ்சிக்கிறேன்! அதுதான் இறைவனின் எதிர்ப்பார்ப்பும் என்று கருதுகிறேன் எனவே அதற்காக அனுதினம் முயல்கிறேன்.
புத்தர், இயேசு, முகமது போன்ற தேவ மனிதர்கள் முயன்றும் செய்ய முடியாததா நாம் செய்துவிட முடியும் என்றொரு கேள்வி எல்லோருக்கும் எழலாம்!
இறைமனிதர்கள் எல்லோரும் இதற்க்காக முயற்சிக்கவில்லை என்று நாம் முடிவெடுப்பது சரியல்ல! தீமையை ஒழிப்பது என்பது ஒரே காலத்தில் ஒருவரால் செய்து முடிக்க கூடிய காரியம் அல்ல! அது பகுதி பகுதியாக பிரிக்கப்பட்டு பல்வேறு இறை மனிதர்களிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய அசைன்மென்ட்! அவரவர்கள் அவரவர் காலத்தில் தாங்கள் செய்யவேண்டியவற்றை சரியாக செய்து முடித்துவிட்டு இறைவனின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி தேவையானவைகளை போதித்து சென்றிருக்கின்றனர்.
இந்த கடைசி காலத்தில் நமக்கு ஒப்புவிக்கப்பட்டவைகளை நாம் சரியாக செய்தால் நிச்சயம் தீமை ஒழியும் என்றே நான் கருதுகிறேன்
தீமை துன்பம் நிச்சயம் ஒழியப்போகிறது! கவலை கண்ணீர் அற்ற ஒரு சமாதானமான உலகம் வெகு விரைவில் மலரத்தான் போகிறது! அதை நிச்சயம் நான் பார்ப்பேன்! அனுபவிப்பேன் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குள் கொழுத்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது!
இறைவனும் அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை என்று சொல்லி என்னை உற்சாகபடுத்திக்கொண்டே இருக்கிறார்.
எனவே அது நிச்சயம் வெகுவிரைவில் நிறைவேறும்!
தீமைகளை கண்டு கண்டு மனம் மிகவும் துவள்கிறது! எனக்காக மட்டுமல்ல எல்லோருடைய நலனுக்காகவும் அந்த நாள் விரைவில் மலர பிரார்த்தனை பண்ணுவோம்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)