வேஷம் போட வைக்கின்ற நீசப்பேய் கண்டேன் பாச நேசம் பார்க்காத மோசப்பேய் கண்டேன்
குடும்பங்களை பிரித்து வைக்கும் கூவபேய் கண்டேன் இடும்பு செய்து அழியவைக்கும் உடும்புபேய் கண்டேன் வரிப்பணத்தை எய்க்க சொல்லும் வஞ்சகப்பேய் கண்டேன் நரித்தனமாய் ஏமாற்றும் நாசப்பேய் கண்டேன் திருடுவதற்கு வழி சொல்லும் தீயபேய் கண்டேன் இடறிவிழுந்து அழியவைக்கும் கொடிய பேய் கண்டேன் தந்தை தாயை தள்ள சொல்லும் கள்ளபேய் கண்டேன் எந்த நாளும் பிடித்து ஆட்டும் வல்லப்பெய் கண்டேன் யூதாஸை பிடித்துக்கொண்ட மோச பேய் அதுவே கேயாசியை கவிழ்த்துபோட்ட ஆசை பேய் அதுவே ஆண்டவர் பணியில் ஆதாயம்தேடும் அற்பபேய் அதுவே வேண்டுவோரின் எண்ணமெல்லாம் நிற்கும் பேயும் அதுவே உலகம் தான்னை ஆட்டிவைக்கும் உண்மை பேய் ஒன்றே பணம் பணம் பணம் என்னும் பாழும் பேய் அன்றோ!