இன்று உலகில் அநேகர் மிகசாதாரணமாக கருத்துவது "எதோ நாலுபேருக்கு நல்லதை செய்தால் நாம் செய்த தீமைக்கு எல்லாம் பிராயசித்தம் உண்டாகிவிடும்" என்பது. இந்த கருத்து மிக மிக தவறான ஓன்று.
நீங்கள் நல்லது செய்யுங்கள் அதற்க்கு தகுந்த பலன் நிச்சயம் உண்டு! ஆனால் தீமைக்கு பிராயசித்தமாக நன்மையை கருதுவது ஏற்றதல்ல! இது குற்றங்கள் பெருகத்தான் வழி செய்யுமேயன்றி குற்றங்களை குறைக்க பயன்படாது.
உதாரணமாக ஒருபெண்ணுடைய கணவனை கொன்ற ஒருவன் இன்னொரு பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தாலோ அல்லது இன்னொரு பெண்ணை காலம் முழுவதும் பாதுகாத்தாலும்கூட, முந்தய பெண்ணுக்கு செய்த துரோகத்தின் மூலம் அவள் அடைந்த துன்பங்களை இவனால் சரி செய்யவே முடியாது!
உங்களிடம் கடன்பட்ட ஒருவர் அந்த கடன் பணத்தை இன்னொருவரிடம் கொடுத்துவிட்டு, "நான் வாங்கிய கடன் முடிந்துவிட்டது" என்று சொன்னால் எப்படி ஏற்க்க முடியாதோ அதேபோல் ஒருவருக்கு செய்த தீமையானது இன்னொருவருக்கு நன்மை செய்வதால் முடிவுக்கு வராது!
அதுபோல் உங்களிடம் திருடிய ஒருவர் அந்த பணத்தை இன்னொருவருக்கு இனாமாக கொடுத்து விட்டால் நாம் அதை சரி என்று ஏற்றுக்கொள்ள முடியாது.
மனிதன் செய்யும் பாவங்களின் விளைவுகள் என்பது எளிதில் சரி செய்யமுடியாத ஓன்று! எனவே தீமைகள் மற்றும் குற்றங்களை செய்யும்முன் விழித்துக் கொண்டு செய்யாமல் தவிர்ப்பதே சிறந்தது. தவறி குற்றங்களை செய்துவிட்டால், அவன் செய்யும் வேறு எந்த ஒரு நல்லசெயலும் அந்த குற்றத்தை சமன் செய்யவே முடியாது! அந்த குற்றத்துக்கான தண்டனை என்றென்றும் அவனை பின்தொடரும்.
இது போன்ற தொடரும் பாவங்கள் / சாபங்களுக்கு நிரந்தர விடுதலை ஆண்டவராகிய இயேசுவின் இரத்தத்தின் மூலம் மட்டுமே பெற முடியும்!
-- Edited by இறைநேசன் on Friday 24th of December 2010 03:20:06 PM