இந்து மதம் மிகவும் பழமை வாய்ந்த ஓன்று. பல கோடி மக்களால் தெய்வம் என்று வழிபடும் சாமிகளை நாம் பொய் என்று சொல்லி சாதாரணமாக ஒதுக்குவது சரியல்ல என்றே நான் கருதுகிறேன்!
உதாரணமாக வையார் பற்றி அனைவரும் அறிவோம் அவர் இந்து சாமிகளுடன் நேரடியாக பேசியதாக கதைகள் கூறுகின்றன. அவர் இருந்தார் என்பதற்கு அவர் எழுதிய ஆத்திசூடி ஆதாரமாக இருக்கிறது. அதுபோல் சரித்திரத்தில் உள்ள பல மன்னர்கள் இந்து சாமிகளின் கதையுடன் தொடர்புள்ளவர்களாக இருக்கின்றனர்
மேலும் இந்து புராணங்களை ஆராய்ந்த போது அதில் பல கருத்துக்கள் நடைமுறை வாழ்வோடு ஒத்து வருவதை அறியமுடிந்தது!
மகாபாரதத்தில் உள்ள கருத்துக்கள் மற்றும் சம்பவங்கள் அப்படியே உண்மை தன்மை வாய்ந்தவையாக இருப்பதை அறியமுடிகிறது.
ஆனால் இந்து மதம் பற்றி சரியாக அறியாத அனேக இந்து நண்பர்களே புராணங்களை வெறும் கதைகள் என்று கூறி அதை நம்ப மறுக்கின்றனர். பலர் இறைவனே இல்லை என்னும் கொள்கைக்கு மாறிவருகின்றனர்
இந்நிலையில் இந்து புராணங்கள் உண்மையா?
பதில் தெரிந்த சகோதரர்கள் தங்கள் கருத்துக்களை ஆதாரத்துடன் தெரிவிக்கலாமே!
பண்டைய திராவிடர்கள் பின்பற்றிய மார்க்கம் (இந்து) மதம் அல்ல..
பிராமணர்களாய் மாறிய ஆரியர்களால் (மாயையாக) உருவாக்கப்பட்டதே இந்து மதம்.
கிறிஸ்தவம் இந்தியாவில் பரவியது கி.பி. 54ல்
இந்திய துணை கண்டத்தில் . நிச்சயமாக சொல்லக்கூடிய நிலையான குடியேற்றங்கள் 9000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததாக ஆதாரங்கள் இருக்கின்றன. இந்த ஆதாரங்கள் தற்கால மத்திய பிரதேசத்தில், ராக் ஷேல்டேர்ஸ் ஆப பீம்பெட்கா என்ற இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டன. தடையங்கள் காம்பட் வளைகுடாவில் மூழ்கி இருந்தாலும், அதனையும் கண்டு பிடித்துள்ளனர். ரேடியோ கார்பன் முறை இதனை கி.மு. 7500 ஆண்டு என்று கணக்கிட்டுள்ளது.[7] புதிய கற்காலம் முடிவுக்கு வரம் காலத்தில் இருந்த பண்பாடு கி.மு. 6000-2000 ஆண்டுகளில் இந்து சமவெளி நாகரிகத்தில் இருந்தது .
நன்றி விக்கிபீடியா
மேலேயுள்ள ஆய்வின்படி புதையுண்ட இந்து சமவெளி நாகரீகம் கிமு 6000-2000 ௦ வரை இருந்திருக்கிறது.
இந்த சிந்து சமவெளி திராவிடர்கள் பசுபதி நாதன் என்னும் சிவனை வழிபட்டிருகின்ற்றனர்
Mohanjadaro and the Indus Civilization - Vol-1 P-VIII) இதன்மூலம் சிந்து சமவெளி மக்கள் தமிழர்கள் என்றும் தமிழர்களின் முழு முதற்கடவுள் சிவபெருமானே ஆகும். ஆரியர்கள் வருகையால் சிந்து சமவெளி நாகரீகம் அழிக்கப்பட்டது
அதாவது ஆரியர்களின் வரவுக்கு முன்னமே சிந்துசமவெளி மக்கள் சிவனை வழிபட்டிருக்கின்றனர் என்று அகழ்வாராச்சி கூறுகிறது.
எனவே இந்துமதம் தொன்மையானது என்றே நான் கருதுகிறேன்.
"தேடுவாய் புலத்தியனே நன்றாய் கேளு;தீக்கிடங்கை; தேடாதே தெரியச் சொன்னேன் பாடுவார் பதினெட்டுப் புராணங்கட்கும் பாரதமும் கட்டப்பா பரிகாசங்கள் நாடதனில் பிராமணர்கள் பிழைக்கச் செய்த நவகிரகக் கட்டப்பா; நம்ப வேண்டாம்; ஒருவர் அருள் பூசை செய்து உத்தமனே கண்ணீரால் கழுவுவாயே;"
- அகத்தியர் 27வது பாடல்
அகத்திய முனிவர் ஒரு வார்த்தையை சொன்னால் அது ஆண்டவரின் வார்த்தைகள் என எடுத்துகொள்ள முடியாது.
கண்ணதாசன் ஒரு வார்த்தையை சொன்னால் அது கடவுளின் காரத்தை என்று எடுத்து கொள்ள முடியுமா?
கீழ்க்கண்ட வசனம் சொல்வதை பாருங்கள்:
I கொரிந்தியர் 8:5 வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும்,
இந்த "அனேக தேவர்களும்" "அனேக கர்த்தாக்களும்" என்ற பதத்தில் இந்து தேவர்களும் அடங்குவர் என்றே நான் கருதுறேன். அனேக பிறமத தேவர்களை குறித்து வேதவசனம் இருப்பதால், தேவர்கள் என்றொரு கூட்டம் இந்த உலகில் இருக்கிறது என்பதை அறிய முடிகிறது. இந்த தேவர்களின் குமாரர்கள்தான்
மனுஷகுமாரத்திகளுடன் கூடி பிள்ளை பெற்றார்கள் என்றும் வசனம் சொல்கிறது என்று நான் கருதுகிறேன்
ஆதியாகமம் 6:2தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.
ஆதியாகமம் 6:4அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர் பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.
இதுபற்றி தங்களுக்கு மாற்று விளக்கம் எதுவும் இருக்குமாயின் பதிவிடவும்.
அந்த பாட்டுக்கு விளக்கமும் எழுதியிருக்க வேண்டும்; மறந்து விட்டேன்.
வேறு தேவர்கள் இருக்கிறார்கள் அல்லது இல்லை என்பது பற்றியோ, அல்லது அகத்தியர் சுட்டிக் காட்டும் இறைவனைப் பற்றியோ இங்கு நான் குறிப்பிடவில்லை.
இந்து புராணங்களை நம்புகிறவர்கள் அகத்தியரையும் முனிவர் (அ) என சித்தர் என ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்களுடைய நம்பிக்கையின்படி, சித்தர்கள் முக்காலமும் அறிந்தவர்கள்; அவர்களுக்கு விளங்காத மறைபொருள் இல்லை.
எனவே புராணங்களைக் குறித்து இப்படிப்பவர்களுடைய கருத்தைச் சொன்னால் பொருத்தமாக இருக்கும் என்பதாலேயே அவ்வாறு செய்தேன்.
பதினெட்டுப் புராணங்களும் மகாபாரதமும் கட்டுக் கதைகள். பரிகாசங்கள் நிறைந்த்தவை. இவைகள் நாட்டில் பிழைக்க வந்த பிராமணர்களின்(ஆரியர்களின்) திட்டமிட்ட கட்டுக்கதைகள்; அவற்றை நம்ப வேண்டாம்
//
அகத்திய முனிவர் ஒரு வார்த்தையை சொன்னால் அது ஆண்டவரின் வார்த்தைகள் என எடுத்துகொள்ள முடியாது.
கண்ணதாசன் ஒரு வார்த்தையை சொன்னால் அது கடவுளின் காரத்தை என்று எடுத்து கொள்ள முடியுமா?//
அகத்தியருடைய வார்த்தைகளையோ, கண்ணதாசனுடைய வார்த்தைகளையோ தாங்கள் பொருட்படுத்தப் போவதில்லை சரி.இந்து புராணங்கள் உண்மையாய் இருந்தால் மட்டும் அதை ஏற்றுக்கொள்வீர்களா?,..
சித்தர்களுடைய ஒரு சில பாடல்கள் இவற்றிற்கு விதிவிலக்கு. தாங்கள் ஆராய்ச்சி செய்ய விரும்பினால் சித்தர்களுடைய பாடல்கள் இந்துக்களின் ஆதார வேதங்கள் (ரிக், யசூர், சாம, அதர்வனம்) போன்றவற்றில் செய்யலாம்.
புராணங்கள் கட்டுக்கதைகள் அதில் நேரத்தை வீணாக்க வேண்டாம்.
புராணங்கள் கட்டுக்கதைகள் அதில் நேரத்தை வீணாக்க வேண்டாம்.
சரியான கருத்து என்றே கருதுகிறேன்.
ஏனெனில் புராணங்கள் உண்மை என்று அத்தாட்சியோடு சொல்வதற்கு இந்துக்களே தயங்குகின்றனர். காரணம், அதில் அனேக ஆபாசகாரியங்கள் மற்றும் நம்பமுடியாத பொய்கள் மலிந்து கிடக்கின்றன.
சாமிகள் என்று சொல்லப்பட்டவர்களே சாத்தான் போல செயல்பட்ட அனேக சம்பவங்களை புராணங்களிலிருந்து அறியமுடிகிறது.
இந்நிலையில் அதை ஆராய்வதால் நமக்கு எந்தபயனும் நிச்சயமாக இல்லை!